Monday, September 18, 2006
நெருடல் ?
ஆறுவருடங்களுக்கு பிறகு
ஒரு நிகழ்ச்சியில்
நடந்த எதிர்பாராத சந்திப்பில்,
அவளும் அவனும் பார்த்துக் கொண்ட போது,
எந்த கூச்சமுமின்றி,
நீ நலமா ?
நீங்கள் நலமா ?
இவள்தான் என் மனைவி !
இவர்தான் என் கணவர் !
பரஸ்பர அறிமுகம் முடிந்தது !
உனக்கு எத்தனை குழந்தை ?
இது ஒன்றுதான் !
உங்களுக்கு ?
இவர்கள் இரண்டு பேர் !
நொடிப் பொழுதில் நடந்து முடிந்த
அந்த சந்திப்பில், ஏனோ
இவர்களில் யாரோ ஒருவருடைய
பெற்றோர்கள் வீட்டில் வளரும்,
இவர்களது இரு குழந்தைகளைப்பற்றி
இவர்கள் இருவரும்,
ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை !
Subscribe to:
Post Comments (Atom)
20 : கருத்துக்கள்:
GK,
ம்ம்ம்... நல்லா சொல்லியிருக்கீங்க..
அடுத்த நம்ம இந்திய தலைமுறைப் பற்றியதா?
இங்கே இது சகஜமான விசயந்தான்!!
/// நொடிப் பொழுதில் நடந்து முடிந்த
அந்த சந்திப்பில், ஏனோ
இவர்களில் யாரோ ஒருவருடைய
பெற்றோர்கள் வீட்டில் வளரும்,
இவர்களது இரு குழந்தைகளைப்பற்றி
இவர்கள் இருவரும்,
ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை//
மனசுல சுறுக்குனு பட்டுச்சு இந்த வரிகள்
நல்லா இருக்கு
மங்கை
ஜி.கே தம்பி,
40 ஆண்டுகளுக்கு முன்பு - வெளி நாட்டில் உள்ள கலாச்சாரத்தைப் பற்றி என் தந்தை சொன்னது நினைவிற்கு வ்ருகிறது.
அது இப்போது இந்தியாவிலும் சாதாரணமாக நடக்கும் விஷயமாகி விட்டது
கணவன் கேட்டானாம்
Where is our children?
மனைவி சொன்னாளாம்
My children and your children are playing with our children!
How is it?
கோவிந்தக் கண்ணன்
பதிவைப் போட்டுவிட்டு எங்கே போய்விட்டீர்கள்?
மறுபடியும் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டதா?
இல்லை கடைவீதிக்கா?
//இவர்களது இரு குழந்தைகளைப்பற்றி
இவர்கள் இருவரும்,
ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை !
//
நல்லா சொல்லி இருக்கீங்க ,
நல்ல "வரி"கள் கோவியாரே!
நிதியமைச்சருக்கு நீங்க உறவா?
//அடுத்த நம்ம இந்திய தலைமுறைப் பற்றியதா?
//
நாம் இன்னும் இவ்வளவு தூரம் வளர்ந்து(??!) விடவில்லை.நமக்குள்ளும் அந்தக் கலாச்சாரம் வளர்ந்து விடவில்லை.எனவே அடுத்த தலைமுறையில் வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன், ஒரு வேளை அடுத்த,அடுத்த தலைமுறையில் வரலாம்,
அன்புடன்...
சரவணன்.
நல்லா இருக்கு சார்
இவர்களது இரு குழந்தைகளைப்பற்றி
இவர்கள் இருவரும்,
ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை//
அன்புடன்
த.அகிலன்
தமிழர்கள் அல்லவே
அந்த காலத்தில் பாசம் அதிகமாக இருக்கும் தமிழ் நாட்டில் அதுகுறைந்து வருகிறது தற்போது.
//Sivabalan said...
GK,
ம்ம்ம்... நல்லா சொல்லியிருக்கீங்க..
அடுத்த நம்ம இந்திய தலைமுறைப் பற்றியதா?
இங்கே இது சகஜமான விசயந்தான்!!//
தனித மனித மகிழ்வே பெரிது என்று நினைப்பவர்கள் எங்கும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் சமூகத்துக்கு பயந்து கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள் !
//மங்கை said...
மனசுல சுறுக்குனு பட்டுச்சு இந்த வரிகள்
நல்லா இருக்கு//
மங்கை அவர்களே ...!
மேலும் எழுதத்துண்டும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//SP.VR.SUBBIAH said...
ஜி.கே தம்பி,
மனைவி சொன்னாளாம்
My children and your children are playing with our children!
How is it? //
சுப்பையா ஐயா...!
எதிர்காலத்தில் இந்த பழமொழி செல்லுபடியாகாது, ஏனென்றால் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பே கோர்ட் படியெறிவிடுகிறார்கள்.
:)
//SP.VR.SUBBIAH said...
கோவிந்தக் கண்ணன்
பதிவைப் போட்டுவிட்டு எங்கே போய்விட்டீர்கள்?
மறுபடியும் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டதா?
இல்லை கடைவீதிக்கா?
//
ஐயா...!
அலுவலகத்தில் வேலையும் இருக்கும் !
:)))
//உங்கள் நண்பன் said ...நாம் இன்னும் இவ்வளவு தூரம் வளர்ந்து(??!) விடவில்லை.நமக்குள்ளும் அந்தக் கலாச்சாரம் வளர்ந்து விடவில்லை.எனவே அடுத்த தலைமுறையில் வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன், ஒரு வேளை அடுத்த,அடுத்த தலைமுறையில் வரலாம்,
அன்புடன்...
சரவணன்.//
சரா..!
அந்த கலாச்சாரம் நமக்குத் தேவையில்லை, அதே சமயத்தில் தனிமனித வாழ்வும் முக்கியம். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வதும் கஷ்டம் தானே !
//த.அகிலன் said...
நல்லா இருக்கு சார்
அன்புடன்
த.அகிலன்
//
அகிலன் அவர்களே ...!
பாராட்டுக்கு நன்றி !
//ENNAR said...
தமிழர்கள் அல்லவே
அந்த காலத்தில் பாசம் அதிகமாக இருக்கும் தமிழ் நாட்டில் அதுகுறைந்து வருகிறது தற்போது.
//
என்னார் அவர்களே..!
நட்சத்திரம் என் வாசலுக்கு வந்து கருத்து தெரிவித்ததில் மகிழ்ச்சி !
முன்னொரு காலத்தில் கணவன் மனைவியைத் தள்ளி வைத்து, அவளை வாழாவெட்டியாக்கிவிட்டு தான் மட்டும் பல திருமணங்கள் செய்வான். வாழாவெட்டியாக இருக்கும் பெண் அவ்வாறே துணை இருந்து மருகுவாள். அது தந்த நெருடலைப் பார்த்தால் இப்போதைய நெருடல் வெறும் ஜுஜுபிதான். அதுவும் அது ஆணாதிக்கத்தின் எச்சமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#4800161) said...
முன்னொரு காலத்தில் கணவன் மனைவியைத் தள்ளி வைத்து, அவளை வாழாவெட்டியாக்கிவிட்டு தான் மட்டும் பல திருமணங்கள் செய்வான். வாழாவெட்டியாக இருக்கும் பெண் அவ்வாறே துணை இருந்து மருகுவாள். அது தந்த நெருடலைப் பார்த்தால் இப்போதைய நெருடல் வெறும் ஜுஜுபிதான். அதுவும் அது ஆணாதிக்கத்தின் எச்சமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
டோண்டு அவர்களே...!
இங்கு ஆண் பெண் என்று பேதம் பார்த்துச் சொல்லவில்லை நான். குடும்பம் என்ற அமைப்பு சீர்கெட்டுவிட்டது, தனிமனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல முயன்றேன்.
"நாம் இன்னும் இவ்வளவு தூரம் வளர்ந்து(??!) விடவில்லை.நமக்குள்ளும் அந்தக் கலாச்சாரம் வளர்ந்து விடவில்லை.எனவே அடுத்த தலைமுறையில் வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன், ஒரு வேளை அடுத்த,அடுத்த தலைமுறையில் வரலாம்,"
ஆனால் போனதலைமுறைகளிலேயே நான் கூறிய விஷயம் நடந்து விட்டது, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூறாது, இப்பதிவில் எழுதியது மட்டும் அடுத்தத் தலைமுறைக்குக் கூட வரக்கூடாது என்று கூறுபவர்கள் மன நிலையைப் பற்றி வேறு என்ன புரிந்து கொள்வது? ஆழ்மன அலசலுக்கு அதை உட்படுத்தினால் தெரியும் பல வண்டவாளங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Dondu said...போனதலைமுறைகளிலேயே நான் கூறிய விஷயம் நடந்து விட்டது//
டோண்டு அவர்களே...!
தீர்க தரிசனமோ !
:)
"டோண்டு அவர்களே...!
தீர்க தரிசனமோ !
:)"
இல்லை சரித்திரம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#4800161) said...
"டோண்டு அவர்களே...!
தீர்க தரிசனமோ !
:)"
இல்லை சரித்திரம்.
அன்புடன்,
டோண்டு ராகவன் //
டோண்டு அவர்களே ...!
நன்றி
Post a Comment