Tuesday, September 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இன்னும் இருக்கிறது ஆகாயம் ! (கவிதை)



இன்னும் இருக்கிறது ஆகாயம் !



ஒரு சிறிய வட்டம்,
அதில் நான் மட்டுமே இருந்தேன் !

வட்டத்தை கொஞ்சம் பெரிது படுத்தினேன்
என் குடும்பம் அதற்குள் வந்தனர் !

வட்டத்தை மீண்டும் கொஞ்சம் பெரிது படுத்தினேன்,
எனது மொழிப் பேசுபவர்கள் அதற்குள் இருந்தனர் !

வட்டத்தை மீண்டும் அதைவிட பெரிது படுத்தினேன்
எனது தேசத்தினர் அதற்குள் இருந்தனர் !

வட்டத்தை மிகப் பெரியது ஆக்கினேன்,
நான் வாழும் பூமி அதற்குள் இருந்தது !

அடுத்து என்ன செய்யலாம், எண்ணியே மேலே பார்த்தபோது,
'இன்னும் இருக்கிறது ஆகாயம்' என்றும்,
ஆகாய வட்டத்துக்குள் பிரபஞ்சத்தை இணைத்துவிடு' என்று
சுட்டெறித்துச் சொன்னது சூரியன் !

குறுகிய வட்டத்திற்குள் நான் மட்டுமே இருந்தேன் !
விரிந்த ஆகாய வட்டத்திற்குள் பிரபஞ்சமே இருந்தது !

எல்லைக்குள் அடக்க முடிந்தவைகளை கூறுபோட்டபின்,
நாடுகளும், நாமும் கூறுபோட முடியாமல்,
எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !


பி.கு : வ.வா சங்கம் கவிதைப் போட்டிகாக எழுதிய கவிதை இது. போட்டி நடத்திய
வ.வா சங்கத்துக்கு பாராட்டுக்கள்.

22 : கருத்துக்கள்:

said...

GK,

ரொம்ப நல்லாயிருக்கு..

நல்ல சிந்தனை...

நன்றி

said...

கோவி.கண்ணன்,

பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதாக ( ever expending universe ) விண்ணுலக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

'பிரபஞ்சம்' பற்றிய பரந்த சிந்தனை பலருக்கு வருவதேயில்லை!என்ன செய்வது...

said...

இதை எழுதியது நீங்களா? (மண்டபத்துல யாராவது எழுதித் தந்தாங்களான்னு கேட்கல)பெயரில்லாமல் படித்தபோதே பிடித்திருந்தது.

வாழ்த்துக்கள்.

said...

//Sivabalan said...
GK,
ரொம்ப நல்லாயிருக்கு..
நல்ல சிந்தனை...
நன்றி //

சிபா...!

நன்றி

said...

//Vasudevan Letchumanan said...
கோவி.கண்ணன்,

பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதாக ( ever expending universe ) விண்ணுலக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

'பிரபஞ்சம்' பற்றிய பரந்த சிந்தனை பலருக்கு வருவதேயில்லை!என்ன செய்வது...
//

Vasudevan Letchumanan ... ! ஆமாம்
பெரு வெடிப்பு (BigBang) கோட்பாட்டின் மூலம் சொல்கிறார்கள்.

மேலும் பரந்த சிந்தனை உங்கள் கருத்துக்கும் நன்றி !

said...

//சிறில் அலெக்ஸ் said...
இதை எழுதியது நீங்களா? (மண்டபத்துல யாராவது எழுதித் தந்தாங்களான்னு கேட்கல)பெயரில்லாமல் படித்தபோதே பிடித்திருந்தது.

வாழ்த்துக்கள்.
//

சிறில்...!

நான் ... நான்... நானே தான் எழுதினேன் !

//பெயரில்லாமல் படித்தபோதே பிடித்திருந்தது. //

புகழாதிங்க ...
ஹி ஹி ரொம்ப கூச்சமாக இருக்குது
:))))

நன்றி அலெக்ஸ் !

said...

கோவி அவர்களே

ஒவ்வொருவரும் இந்த குருகிய வட்டத்தில இருந்து வெளியே வந்து பரந்த ஆகாயத்த பார்க்க ஆரம்பிக்கனும்..அப்ப இந்த உலகமே ஒரு பூங்காவனம்...


யாதும் ஊரே யாவரும் கேளிர்

ரொம்ப நல்லா இருக்கு சார்

மங்கை

said...

கோவி, படம் ரொம்ப அருமை.. - கவிதையும் தான்

said...

//மங்கை said...
கோவி அவர்களே
ஒவ்வொருவரும் இந்த குருகிய வட்டத்தில இருந்து வெளியே வந்து பரந்த ஆகாயத்த பார்க்க ஆரம்பிக்கனும்..அப்ப இந்த உலகமே ஒரு பூங்காவனம்...
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ரொம்ப நல்லா இருக்கு சார்
மங்கை
//

மங்கை...!
தொடர்ந்து எனது பக்கத்து கவிதைகளை படித்துப் பாராட்டுகிறீர்கள்.

நன்றி !!!

நான் அவ்வாறு செய்யவில்லை என்று வருத்தமாகவும் இருக்கிறது.

இனியாவது முயல்கிறேன் !

said...

//பொன்ஸ் said...
கோவி, படம் ரொம்ப அருமை.. - கவிதையும் தான்
//

வாங்க பொன்ஸ்...!

உப்பு சப்பு இல்லாத மேட்டரை என் பதிவில் ஒப்பேற்ற நான் நம்புவது படங்களைத் தான் !
:)))

பாராட்டுக்கு நன்றி பொன்ஸ் அவர்களே !

said...

/// நான் அவ்வாறு செய்யவில்லை என்று வருத்தமாகவும் இருக்கிறது.

இனியாவது முயல்கிறேன் ///

ஐயோ கோவி சார்... வந்து பாராட்டற மாதிரி நான் ஒன்னும் எழுதலை.. பொழுது போகாம எதோ ஒப்பேத்தீட்டு இருக்கேன்..

நம்ம எல்லாம் below average தான்

நன்றி

said...

நல்ல கவிதை கண்ணன். எல்லைகள் விரியம் போது தான் எண்ணங்களும் ஏற்றம் கொள்ளும்.

said...

எல்லைக்குள் அடக்க முடிந்தவைகளை கூறுபோட்டபின்,
நாடுகளும், நாமும் கூறுபோட முடியாமல்,
எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !



இந்த வரிகள் சிறப்பாக இருக்கின்றன

said...

//குறுகிய வட்டத்திற்குள் நான் மட்டுமே இருந்தேன் !
விரிந்த ஆகாய வட்டத்திற்குள் பிரபஞ்சமே இருந்தது !//

கவிதை ரொம்ப நன்றாக இருந்தது. முதல் கவிதையே உங்களுடையதுதானே! தலைப்பை சொன்னவுடன் எப்டித்தான் பின்றீங்களோ கவிதையில்!

//இதை எழுதியது நீங்களா? //

//பெயரில்லாமல் படித்தபோதே பிடித்திருந்தது. //

சிறில் என்ன... பெயரோடு படிக்கும்போது பிடிக்கலன்றீங்களா? ;-)

(ஏதோ நம்மால முடிஞ்சது!)

said...

சொல்ல மறந்துட்டனே... படம் படம் போடுது!

said...

//மங்கை said..ஐயோ கோவி சார்... வந்து பாராட்டற மாதிரி நான் ஒன்னும் எழுதலை.. பொழுது போகாம எதோ ஒப்பேத்தீட்டு இருக்கேன்..

நம்ம எல்லாம் below average தான்

நன்றி //

மங்கை ...!
எழுதுப் பழகும் குழந்தைக்கு விரல் பிடித்து எழுதச் சொன்னால் நன்றல்லாவா ?
அதைத்தான் குறிப்பிட்டேன் !

said...

//எல்லைக்குள் அடக்க முடிந்தவைகளை கூறுபோட்டபின்,
நாடுகளும், நாமும் கூறுபோட முடியாமல்,
எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !//

சிறப்பான வரிகள். கவிதை, படம் இரண்டுமே அருமை.

said...

//எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !//

Beautiful!!

said...

//மா.கலை அரசன் said...
நல்ல கவிதை கண்ணன். எல்லைகள் விரியம் போது தான் எண்ணங்களும் ஏற்றம் கொள்ளும்.
//

கலை ...!
நன்றாக சொல்கிறீர்கள் 'எல்லைகள் விரியம் போது தான் எண்ணங்களும் ஏற்றம் கொள்ளும்'

பாராட்டுக்கள், வருகைக்கு நன்றி

said...

//ராசுக்குட்டி said...
கவிதை ரொம்ப நன்றாக இருந்தது. முதல் கவிதையே உங்களுடையதுதானே! தலைப்பை சொன்னவுடன் எப்டித்தான் பின்றீங்களோ கவிதையில்!

சிறில் என்ன... பெயரோடு படிக்கும்போது பிடிக்கலன்றீங்களா? ;-)

(ஏதோ நம்மால முடிஞ்சது!)
//

ராசு...!
கவிதை நல்லா இருக்கு என்று பாராட்டியிருக்கிறீர்கள். நன்றி, கவிதை தலைவர் மாதிரி, எங்கே வரும், எப்படி வரும் தெரியாது !

ஆனால் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வரும் !
:))

said...

// கைப்புள்ள said... சிறப்பான வரிகள். கவிதை, படம் இரண்டுமே அருமை. //

கைப்புள்ள ...!
நீங்கள் எட்டிப் பார்த்தது மகிழ்வாக இருக்கிறது. பாராட்டுக்கு நன்றி
:)

said...

//// SK said...
//எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !//

Beautiful!!
////

எஸ்கே ஐயா... !
நன்றி !