Sunday, September 03, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

எனக்கு மட்டும் ? [புதுக் கவிதை]

சோம்பல் முறித்து காலையில்
எழுந்ததும் பெட் காஃபி,
இட்டெலியுடன் புதினாச் சட்டினி,
அயர்ன் பண்ணி தயாராக வைத்த உடை,
டிபன் பாக்ஸில் தயாராக மதிய உணவு,
அவ்வப்போது தொலைபேசியில்
அன்பாக அழைத்து விசாரிப்பு,
மாலை வீடு திரும்பியதும்
காலுரைகளை கழட்டும் கைகள்,
மென்று கொண்டே தொலைக் காட்சிப் பார்க்க
சிற்றுண்டியுடன் காஃபி,
அற்றாட செய்திகளை பற்றி
செய்தித் தாள்களில் ஒரு அலசல்,
இரவு தயாராக இருக்கும் உணவு
இத்தனையும் வேலைக்குச் செல்லும்
குடும்பத் தலைவியான
எனக்கு ஏன் கிடைக்கவில்லை ?

32 : கருத்துக்கள்:

said...

பரந்த சிந்தனை
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்
கோ.வி. கண்ணன்

said...

//மாதங்கி said...
பரந்த சிந்தனை
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்
கோ.வி. கண்ணன்
//

மாதங்கி அவர்களே !
நன்றி !

said...

ஆணாதிக்க உலகில்
எங்கே இது நடக்குமென்று
ஏந்திழைகள் சொல்வார்கள்!
அடி பெண்ணே!
அதை நீ நம்பாதே -
ஆணிற்கு இதைச் செய்யும் வித்தைகளை
அவன் அன்னை
சொல்லித் தந்ததில்லை
வேலைக்கு ஆள் வைத்துக்கொள்
வேண்டியது நடக்கும்!

said...

நேத்து ஞாயிறு லீவு, வீக் என்ட் இன்னிக்கு இந்த கவிதை ஜிகே எனக்கு புரிஞ்சமாதிரி இருக்கு :))

said...

//இரவு தயாராக இருக்கும் உணவு
இத்தனையும் வேலைக்குச் செல்லும்
குடும்பத் தலைவியான
எனக்கு ஏன் கிடைக்கவில்லை ?//

வித்தியாசமான சிந்தனை. கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை தான். நல்லாருக்குங்க.

said...

// SP.VR.SUBBIAH said...
ஆணாதிக்க உலகில்
எங்கே இது நடக்குமென்று
ஏந்திழைகள் சொல்வார்கள்!
அடி பெண்ணே!
அதை நீ நம்பாதே -
ஆணிற்கு இதைச் செய்யும் வித்தைகளை
அவன் அன்னை
சொல்லித் தந்ததில்லை
வேலைக்கு ஆள் வைத்துக்கொள்
வேண்டியது நடக்கும்!
//

சுப்பைய்யா ஐயா !
நல்ல யோசனைதான் ! ஆனால் வேலைக்காரி சக்களத்தி ஆகிவிட்டால் என்ன செய்வது ?
:)))

said...

//மகேந்திரன்.பெ said...
நேத்து ஞாயிறு லீவு, வீக் என்ட் இன்னிக்கு இந்த கவிதை ஜிகே எனக்கு புரிஞ்சமாதிரி இருக்கு :))
//

மகி,
பதிவுக்கு தலைப்பு கவிதைகள் என்று வைத்துவிட்டு வாரத்துக்கு ஒரு கவிதை கூட போடாவிட்டால் எப்படி ...!
அதற்குத்தான் தட்டிவிட்டேன்
:)

said...

// கைப்புள்ள said...


வித்தியாசமான சிந்தனை. கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை தான். நல்லாருக்குங்க. //

கைப்புள்ள,
நன்றி... நாளைக்கு இதையே திருப்பி போடலாம் என்று இருக்கிறேன் !
:))

said...

வித்தியாசமான கவிதை.நல்ல ஒரு சிந்தனை.மேலும் தொடருட்டும்.வாழ்த்துக்கள்

said...

nalla iruku thalaiva ...thodarungal

said...

Nalla Kavithai GK Saar.

said...

//கார்த்திக் பிரபு said...
nalla iruku thalaiva ...thodarungal
//
கார்திக் ... நன்றி !
:))

said...

// மா.கலை அரசன் said...
Nalla Kavithai GK Saar.
//

கலை அவர்களே ...!
நன்றி.

said...

// அழகான ராட்சசி said...
வித்தியாசமான கவிதை.நல்ல ஒரு சிந்தனை.மேலும் தொடருட்டும்.வாழ்த்துக்கள்
//

அழகான ராட்சசி அவர்களே !

பாரதி படம் போட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த கவிதை பிடித்திருப்பதில் வியப்பில்லை :)))

said...

GK,

சூப்பரு...

நல்லா நச்சுன்னு நடு மண்டையில் நச்சுன்னு கொட்டினமாதிரி இருக்கு..

பி.கு. நான் காலையில் 5.30 AM அலுவலகம் கிளம்பிவிடுவேன்..அதனால் No Bed Cofee.. Hi..Hi..Hi..

said...

கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் (வேலைக்குப் போகாமல் வீட்டைப் பராமரிக்கும் ஹோம் மேக்கர்ஸ்) இந்த மாதிரியெல்லாம் தம் கணவண்மார்களுக்கு இப்போது செய்ய முடிகிறதா என்ன? சினிமாவில்தான் சில காட்சிகளில் இப்படிக் காண்பிப்பார்கள்.
ரொம்ப அலுத்துக்காதீங்க குடும்பத்தலைவி!

said...

பெண்ணிய சிந்தனையுடன் கூடிய கவிதைக்கு வாழ்த்துக்கள்...

நல்லா இருக்குங்க கண்ணன்!!!

said...

// Sivabalan said...
GK,
சூப்பரு...
நல்லா நச்சுன்னு நடு மண்டையில் நச்சுன்னு கொட்டினமாதிரி இருக்கு..
பி.கு. நான் காலையில் 5.30 AM அலுவலகம் கிளம்பிவிடுவேன்..அதனால் No Bed Cofee.. Hi..Hi..Hi.. //

சிபா...!
கணவர்கள் சேர்ந்து உதவவேண்டும் என்பதுதான் கவிதையில் மறைந்துள்ள பொருள். சரியாக புரிந்து கொண்டீர்கள்.
குட்டவில்லை... கொஞ்சம் சுட்டதை சொன்னேன்.
:))
பெட் காபி குடிக்கிற பழக்கம் நல்ல பழக்கமான்னு தெரியவில்லை. அதனால் நீங்கள் காலையில் காஃபியை மிஸ் பண்ணுவதற்கு நோ கமாண்ட்ஸ்
:))

said...

// சுல்தான் said...
கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் (வேலைக்குப் போகாமல் வீட்டைப் பராமரிக்கும் ஹோம் மேக்கர்ஸ்) இந்த மாதிரியெல்லாம் தம் கணவண்மார்களுக்கு இப்போது செய்ய முடிகிறதா என்ன? சினிமாவில்தான் சில காட்சிகளில் இப்படிக் காண்பிப்பார்கள்.
ரொம்ப அலுத்துக்காதீங்க குடும்பத்தலைவி! //

சுல்தான் ஐயா .. !
நீங்கள் சொல்வதும் சரிதான்..!
வீட்டு வேலையை பராமறிக்கும் மனைவியரிடம் இதையெல்லாம் எதிர்ப்பார்த்து கேட்டாலும்..., என்னங்க சினிமா பார்த்துட்டு வந்து கேட்கிறீர்களா என்று தான் கேட்பார்கள் !
:)))

ஒரு 20-30 வருசத்துக்கு முன்பு பிறந்தவங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் !

said...

//அருட்பெருங்கோ said...
பெண்ணிய சிந்தனையுடன் கூடிய கவிதைக்கு வாழ்த்துக்கள்...

நல்லா இருக்குங்க கண்ணன்!!! //

வீட்டு அம்மாவை வேலைக்கு அணுப்புறவங்களுக்கு இந்த சிந்தனை இருக்கும் என்று நினைக்கிறேன் !
:))

said...

சோம்பல் முறித்துக் காலையில் எழுந்தேன்!

மாலை திரும்பி வருகையில்

வாங்க வேண்டிய சாமான்களின் பட்டியல்

என்னைப் பார்த்துச் சிரித்தது!

அலுத்துக் கொண்டே எழுந்து

அவசர அவசரமாய்க்

காப்பி போட்டுக் குடித்து

கிடைத்ததை எடுத்து

ஒரு பாக்ஸில் அடைத்து

அலுவலகம் போனதும்

மறக்காமல் தொலை பேசியது!

அழைத்தது என் மனையாள்!

வரும்போது அப்படியே

பொண்ணையும் கூட்டிகிட்டு வ்ந்துருங்க!

அன்பான அதிகாரக் குரலில்

ஆணையிட்டு மறைந்தாள்!

மாலையில் வந்து,

மகளைக் கூட்டி வந்து,

மறந்துபோன சாமான்களை

மறுபடி வாங்கி வந்து

மூச்சிறைக்க வந்தவனை,

மலர்ச்சியுடன் வரவேற்று,

இப்படி எல்லாம் நீங்க

செய்வதுதான் எனக்கு

உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என

ஆசையுடன் யாரும் பாராத வேளையில்

இச்சென்று முத்தமிட்டாள்

என்னுயிர்க் கண்ணம்மா!

இதோ நான் அடுத்த நாள்

வேதாளமாக ரெடி!

said...

கோவி அண்ணா,

நல்ல சிந்தனையான கவிதை. தொடர்ந்து கவிதை எழுதுங்கண்ணா.

said...

நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள்.
-அன்புடன், வயிரவன்.

said...

நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள் - அன்புடன் வயிரவன்

said...

// SK said...
இப்படி எல்லாம் நீங்க
செய்வதுதான் எனக்கு
உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என
ஆசையுடன் யாரும் பாராத வேளையில்
இச்சென்று முத்தமிட்டாள்
என்னுயிர்க் கண்ணம்மா!
இதோ நான் அடுத்த நாள்
வேதாளமாக ரெடி! //

எஸ்கே ஐயா,
ஆகா ஒரே கல்லில் பலமாங்காய்களை குடும்பத்தலைவிகள் வீழ்த்துவது இப்படித்தானா !
நமக்கு எப்பவுமே மீசையில் மண்ணு ஒட்டாது.
:)

said...

// திரு said...
கோவி அண்ணா,

நல்ல சிந்தனையான கவிதை. தொடர்ந்து கவிதை எழுதுங்கண்ணா.
//

திரு ஐயா...!
முதல்முறை வருகைக்கும் பாராட்டுதலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி

said...

//kalaiyarasi said...
நல்ல சிந்தனை, வளர்க, வாழ்த்துக்கள் - அன்புடன் வயிரவன்
//

கலையரசி அவர்களே...!
பாராட்டுதலுக்கு நெகிழ்வுற்றேன். நன்றி

said...

குடும்பத்தலைவனுக்கு மட்டுமே கிடைக்கும் இதுபோன்ற சலுகைகள் குடும்பத் தலைவிகளுக்கு ஏன் மறுக்கப்படுகின்றன? பெண்ணின் பார்வையில் நல்ல கவிதை!

ஒன்னும் பிரச்னை இல்லை.

நல்ல பணிப்பெண்ணாக பார்த்து வேலைக்கு அமர்த்திக்கொண்டால் பிராம்ப்ளம் சால்வ்டு!

said...

டும்பத்தலைவனுக்கு மட்டுமே கிடைக்கும் இதுபோன்ற சலுகைகள் குடும்பத் தலைவிகளுக்கு ஏன் மறுக்கப்படுகின்றன? பெண்ணின் பார்வையில் நல்ல கவிதை!

ஒன்னும் பிரச்னை இல்லை.

நல்ல பணிப்பெண்ணாக பார்த்து வேலைக்கு அமர்த்திக்கொண்டால் பிராம்ப்ளம் சால்வ்டு!
//

கருப்பு அவர்களே ...!
யோசனை நல்லாதான் இருக்கு...!
சில இடத்தில் முதலுக்கே மோசம் நடந்திடுதே !
:))

said...

குடும்பத்தலைவிகள் வீழ்த்துவது இப்படித்தானா !
நமக்கு எப்பவுமே மீசையில் மண்ணு ஒட்டாது///

:<)?
:) ?

said...

கோவி,

அய்யா என கூப்பிட வேண்டாம். திரு என்றே அழைக்கலாமே. நாம் நண்பர்கள். உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கிறேன்.

said...

நல்ல கேள்விங்கோ