Monday, January 08, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 4: (காமடி)

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4

முதல் பகுதியில் இருந்து படித்தால் தான் புரியும் ... இது 4 ஆவது பகுதி !

படம் வெளிவருவதற்குள் கதை வரக்கூடாது என்று நீதி மன்றத்தில் பொது நலவழக்கில் தடை உத்தரவு வாங்கி இருந்ததால் கொஞ்சம் தாமதமாக இந்த பகுதி வந்திருக்கிறது :)

கமல் : ஆமாம் ரவி ... கோபி.அன்னான் மேக்கப் போடும் போது இப்ப கோபி.அன்னானுக்கு இருப்பதைவிட கொஞ்சம் நரைமுடி கம்மியாக வைத்து மேக்கப் போடனும், இது அந்த மாமிக்கு க்ளுவா அமைச்சிடுது.

ரவி : எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ... உங்க ரேஞ்சை கற்பனைப் பண்ணவே முடியலை !

கமல் : உணர்ச்சி வசப்பாடாதிங்க ரவி..

ரவி : இன்னொரு பெக் போட்டுக்கட்டுமா ?

கமல் : போடுங்க... நீங்க தூங்காமல் இருக்கனும் அதான் முக்கியம்.. ம் அப்பறம் நம்ப மாமி அதே போல பாஞ்சாங்க ... ஆனால் இந்த தடவை அன்னான் வேசம் போட்ட தீவரவாதியின் காலை பாஞ்சி புடிச்சி கிறுகிறுன்னு சுத்தி சுவத்துல அடிக்கிறாங்க ... அவன் அப்படியே மயங்கி சரிஞ்சிடுறான்.. இங்கே ட்ரிபில் ஆக்ட்

ரவி : புரியுது கமல் சார் ... என்னையும் சிங்கீதம்.சினீவாஸ் ராவ் மாதிரி நெனெக்காதிங்க

கமல் : என்ன செய்றது பழக்க தோசம்

ரவி : அப்பறம் கதையை எப்படி வளர்க்கப் போறிங்க

கமல் : அதே போல் புஷ்தான் டெல்லி பார்க் ஷரடினில் தங்கியிருக்கிறான்னு நெனெச்சிக்கிட்டு ஹமாஸ் தீவிரவாதி ஒருத்தன் பாலஸ்தினாத்திலிருந்து அடுத்த ப்ளைட்டில் வந்து இறங்குகிறான்.

ரவி : அவனுக்கு யாரைப் போடலாம் ... ம் விருமாண்டியில் வில்லனா வர்றாரே பசுபதி அவுரப் போடலாமா ?

கமல் : நல்ல கதையைக் கெடுத்திங்க... இங்க அந்த பாலஸ்தின தீவிரவாதி வரப்போவது டோனிப் ப்ளையர் கெட்டப்பில்

ரவி : அப்ப அது உங்களுக்குத் தான் செட் ஆகும்

கமல் : இப்பதான் நான் சொல்லவந்ததை புரிஞ்சிக்கிட்டிங்க... இது 7 வது கெட்டப்

ரவி : இந்த முறை தீவிரவாதி எப்படி வருகிறான் ? சைரன் வச்ச காரா ?

கமல் : இல்லை தீவிரவாதி சாதாரண ஆளாகத்தான் வருகிறான் .. அப்பறம் ஹோட்டல் பாத்ருமில் தான் டோனிப் ப்ளையர் வேசம் போடுகிறான்

ரவி : அப்ப அங்கே இரண்டு வேசமா ?

கமல் : இல்லை .. ஒன்று தான் ... நேராக பாத்ரூமில் இருந்து வெளியே வருவதுபோல் ஷாட் வச்சிடுங்க... அவன் நேரா புஷ் தங்கியிருக்கிறதா நினைச்ச ரூமுக்குள் நுழைகிறான்

ரவி : இந்த முறை எப்படி வேசம் சரியாகப் போட்டாரா ?

கமல் : சரியாகப் போட்டார் அதிலும் ஒரு சஸ்பென்ஸ்

ரவி : ஆவலை அடக்க முடியவில்லை சொல்லுங்க ... மாமிதான் இந்த முறையும் கண்டுபிடித்தாரா ?

கமல் : இல்லை ... இந்த முறை நாடக நடிகரே கண்டுபிடித்துவிடுகிறார்

ரவி : ம் சொல்லுங்கள்

கமல் : அதாவது அந்த நாடக நடிகர் ... டோனி ப்ளையர் அருகில் சென்றதும் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்.. எப்படி என்றால் உயரம் .. டோனி ப்ளையர் நல்ல உயரம் ... போலி டோனி ப்ளையர் அவ்வளவு உயரம் இல்லை...! அருகில் சென்றதும் லாவகமாகப் பிடித்து ... பின்னால் தீவிரவாதியின் கைகளை மடக்குகிறார்... அப்போது மாமி சேலையில் ஒரு பகுதியை கிழித்து தீவிரவாதியின் கைகளை கட்ட உதவுகிறார்... இங்கே 4 வேசமும் ஒரே நேரத்தில் காட்டனும் .. அதாவது ஒரு நாடக நடிகர்... ஒரு ஏர்கோஸ்டஸ் மாமி.. அடிப்பட்டு கிடக்கிற போலி கோபி அன்னான் கடைசியாக ... போலி டோனி ப்ளையர்.

ரவி : நெனிச்சிப் பாக்கமுடியாத கற்பனை சார் உங்களுக்கு ... !

கமல் : இன்னும் 3 வேசம் பாக்கியிருக்கு...கிளைமாக்ஸ் பாக்கியிருக்கு

ரவி : இனி தூக்கம் வர்ராது கதை முடிவை நெருங்கிடுச்சி .. ம் சொல்லுங்க

கமல் : இதெல்லாத்தையும் டெல்லி போலிசாருக்கு போன் பண்ணி இரண்டு பேரும் சொல்லிவிடுகிறார்கள் டெல்லி பாதுகாப்பு அமைச்சர் நேரில் வருகிறார்... பாதுகாப்பு அமைச்சராக நான் .. 8 வது வேசம் !

ரவி : கெட்டது போங்கள் !

கமல் : ரவி என்ன சொல்றிங்க ...???

ரவி : மந்திரி வேசம் நெகடிவ் கேரக்டர் ஆச்சே !

கமல் : வேசம் எதுவாக இருந்தால் என்ன ... கேரக்டர் பேசப்படனும் ... அரசியல் வாதி வேசம் இதுவரை போட்டதில்லை ரவி

ரவி : ஹீரோ இசம் பேசுறவங்க இதை மறந்திடுறாங்க கமல் சார்... நீங்க ஒரு ஆள்தான் வெளிப்படையாக இருக்கிறீர்கள்

கமல் : இதுக்கு ஒரு பாட்டு வச்சிடுவோம் ... சரி கதைக்கு வருகிறேன்... தீவிரவாதிகளை மடக்கிய விசயம் எல்லா பத்திரிக்கைகளிலும் வருது.. இந்த செய்தியையும் போட்டோவையும் நாடக நடிகரோட அப்பா படித்திவிடுகிறார்... அவர் அடுத்த ட்ரைனை பிடித்து டெல்லி வருகிறார்.. அவசரத்தில் டிக்கெட் எடுக்காததால் டிக்கெட் செக்கரிடம் மாட்டுகிறார்.... டிக்கெட் செக்கரை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது... அப்பறம் விசாரித்ததில் அவர் தான் மூத்த மகன் என்று தெரிகிறது... அப்பாவும், டிக்கெட் செக்கரும் அந்த கடைசி இரண்டு வேசங்கள்.

ரவி : முடிவு எப்படி ?

கமல் : முடிவு சுபம் தான் எல்லோரும் சந்திக்கிறார்கள்... சின்ன வயசில் கொடைக்கானல் கூட்டிச் செல்லும் போது ஆற்றில் பஸ் கவிழ குழந்தைகள் பிரிந்து போனதாக சொல்கிறார்... அதில் மூவர் தீவிரவாதிகளாகவும், ஒரு பெண் ஏர்கோஸ்டஸ் மாமி, பாதுகாப்பு அமைச்சர், நாடக நடிகர், ஒரு CBI ஆபிஸர், ஒரு டிக்கட் செக்கர் (டிடிஆர்), ஒரு அப்பா என 8 வேடங்கள் சந்திக்கின்றன. தீவிரவாதிகள் எல்லோரும் தாங்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்ததும் திருந்துகிறார்கள்.

ரவி : அதோடு முடிந்ததா ?

கமல் : இல்லை ... இந்த தீவிரவாத முறியடிப்பையும், ஜார்ஜ் புஷ்ஷின் இமேஜைக் காப்பாற்றியதற்காகவும் ... அமெரிக்க அதிபர் அவர்கள் எல்லோரையும் நேரில் சந்தித்துவிருந்து கொடுக்க விரும்புகிறார்.. எல்லோரும் ஒரே ப்ளைட்டில் அமெரிக்க பறக்கிறார்கள்

ரவி : சூப்பர் கண்டிப்பாக இந்த படம் சிவாஜிக்கு நல்ல போட்டியாக முடியும்...

கமல் : எனக்கு போட்டி பிடிக்கும்...பொறமை மட்டும் பிடிக்காது

ரவி : அதை விடுங்க .. இன்னும் கதாநாயகிகளைப் பற்றி பேசவே இல்லையே

கமல் : நம்ம படத்தில் கதாநாய கிக்கா பஞ்சம் ...நாலு பேரைப் போட்டுவிடுவோம்

14 : கருத்துக்கள்:

said...

நல்ல வளமான கற்பனை உங்களுக்கு!

இந்த சுத்து சுத்தறீங்களே சாமி!

தல சுத்துது!

கோபி அன்னான்லாம் போயிட்டாருங்கோ!
வேற ஆளு வந்தாச்சு!

said...

//
SK said... கோபி அன்னான்லாம் போயிட்டாருங்கோ!
வேற ஆளு வந்தாச்சு //

எஸ்கே ஐயா இது கதைவிவாதம் ... கோபி அண்ணானுக்கு பதில் சூட்டிங்கில் புது ஆள்வருவார் !
:))

said...

கோ.வி. பேக் டூ பார்ம் கலக்கி எடுத்துட்டீங்க.. சூப்பராப் போச்சு 4 பாகமும்

said...

//தேவ் | Dev said...
கோ.வி. பேக் டூ பார்ம் கலக்கி எடுத்துட்டீங்க.. சூப்பராப் போச்சு 4 பாகமும்
//

தேவ்...!
பாராட்டுக்கு நன்றி ...! ம்
எல்லாம் சிவாஜியைப் பற்றி சீரியஸ் ஆக பேசிக் கொண்டிருக்கும் போது நம்ம தலைவரை விட்டுக்கொடுப்போமா ?
:)

said...

செம காமெடி சார்!

said...

பத்துப் பாத்திரமும் ஒவரா.
இன்ன்னும் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு ரவிக்குமார் சிரிக்கிறாரா.
ஐய்யோ பாவம்.
கண்ணன் ,
என்ன கொடுமை சரவணன் இன்னு கேக்கத் தோன்றுகிறது.

said...

//ராகவன் ஐயங்கார் said...
செம காமெடி சார்!
//

ராகவன் சார் நன்றி ! உங்க நண்பர் ராமதாஸிடமும் சொல்லிடுங்க !
:)

said...

GK,

நல்லா போகுது தொடர்..

இரசித்தேன்..

said...

//Sivabalan said...
GK,

நல்லா போகுது தொடர்..

இரசித்தேன்..

7:59 AM
//

சிபா,

படத்தோட கதையும் கிட்டத்தில் இதுபோலத்தான் இருக்கும் போல தெரிகிறது. படத்தில் கமல் நிஜமாகவே ஜார்ஜ் புஷ் வேசம் கட்டுகிறாராம்.
:)

said...

//எல்லாம் சிவாஜியைப் பற்றி சீரியஸ் ஆக பேசிக் கொண்டிருக்கும் போது நம்ம தலைவரை விட்டுக்கொடுப்போமா ?//

ஆஆஆ! என்ன ஆச்சு கோவியாரே! யார் அந்த தலைவர் ? எப்பல்ல இருந்து ? புரட்சித் தலீவர் ,சூப்பர் ஸ்டார் உங்க ஜாதியாச்சே?

said...

//ஆஆஆ! என்ன ஆச்சு கோவியாரே! யார் அந்த தலைவர் ? எப்பல்ல இருந்து ? புரட்சித் தலீவர் ,சூப்பர் ஸ்டார் உங்க ஜாதியாச்சே? //

ஜோ,

கமல் ஒரு ஜீனியஸ்...நடிகராக நிறையவே பிடிக்கும்.

கமலும் ஜாதிகளைக் கடந்தவர்தான், பரபரப்பு அரசியலில் அவர் பெயர் அடிபடுவது இல்லையே. அதனால் அவ்வாறு சொல்லவில்லை.

கமல் படங்கள் தினமும் கிடைக்கும் வீட்டு சாப்பாடு என்றால் ரஜினி படங்கள் என்றைக்கோ கிடைக்கும் ஹோட்டல் சாப்பாடு, ஒவ்வொன்றுக்கும் சிறப்பு உண்டு.
:)

said...

//கமல் படங்கள் தினமும் கிடைக்கும் வீட்டு சாப்பாடு என்றால் ரஜினி படங்கள் என்றைக்கோ கிடைக்கும் ஹோட்டல் சாப்பாடு//

புரியுது .கமல் படம்-னா வீட்டுல உக்காந்து VCD-லயோ அல்லது ஓசியில டி.வி லயோ பார்த்துட்டு "சூப்பர் படம்..ஏன் ஓடல்ல?" -ன்னு பிலிம் காட்டுறது .ரஜினி படம்ணா கால்கடுக்க வரிசைல நிண்ணாவது தியேட்டர்ல பார்த்துட்டு "போகண்ம்ண்ணு நினைக்கல்ல ..நண்பர் கட்டாயப்படுத்தி கூப்பிட்டு போயிட்டார் .ரஜினி-க்காக பார்க்கலாம்"-ன்னு சொல்லிக்கிறது.

said...

ஜோ / Joe said...
//புரியுது .கமல் படம்-னா வீட்டுல உக்காந்து VCD-லயோ அல்லது ஓசியில டி.வி லயோ பார்த்துட்டு "சூப்பர் படம்..ஏன் ஓடல்ல?" -ன்னு பிலிம் காட்டுறது .ரஜினி படம்ணா கால்கடுக்க வரிசைல நிண்ணாவது தியேட்டர்ல பார்த்துட்டு "போகண்ம்ண்ணு நினைக்கல்ல ..நண்பர் கட்டாயப்படுத்தி கூப்பிட்டு போயிட்டார் .ரஜினி-க்காக பார்க்கலாம்"-ன்னு சொல்லிக்கிறது.
//

ஜோ,

சிங்கையில் திரைக்கட்டணத்தை விட விசிடி விலை குறைவுதான்.

சுனாமியே வந்தாலும் சரி, தசவதாரம் தியேட்டரில் தான் பார்ப்பேன்.
:)

said...

//
பின்னால் தீவிரவாதியின் கைகளை மடக்குகிறார்... அப்போது மாமி சேலையில் ஒரு பகுதியை கிழித்து தீவிரவாதியின் கைகளை கட்ட உதவுகிறார்...
//
என்ன புத்திசாலித்தனம்யா மாமிக்கு!!!
:-))

//
சுனாமியே வந்தாலும் சரி, தசவதாரம் தியேட்டரில் தான் பார்ப்பேன்.
:)
//
பாத்து ஒரிஜினல் கதை இதை மிஞ்சி பேஸ்தடிச்ச மாதிரி ஆகிடப்போகுது

:-))