Monday, December 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 4) !

நேரில் வந்து சந்தித்த பதிவர் பகுதி 1 பகுதி 2 பகுதி 3

ற்கனவே புகைப்படம் கட்டுமாணத்துறை வலைப்பதிவில் பார்த்து இருந்ததால் சாலைக்கு அந்த பக்க்கம் இருந்தே இவர்தான் 'வடுவூர் குமார்' என்று கண்டுகொண்டேன். சாலையைக் கடந்து அருகில் சென்றோம். நானும் எஸ்கேவும் வடுவூர் குமாரை அதிக நேரம் முழிக்கவிடாமல் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். வடூவூரார் 6 அடியோ அல்லது அதற்கு மேலோ நல்ல உயரம். கூடவே இருந்த வடுவூராரின் நண்பர் விடைபெறவே, நாங்கள் மூவரும் பக்கத்தில் இருந்த ஆனந்த பவன் உணவகத்துக்குள் நுழைந்தோம். வடுவூரார் சற்றுமுன்பு தான் சாப்பிட்டதாக சொல்ல நானும் எஸ்கேவும் காஃபி மட்டும் சாப்பிட்டோம்.

வடுவூரார் தனைப்பற்றியும் தன் குடும்பம் பற்றி குறிப்பிட்டார் ... கூடவே வேறு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பதாக சொன்னார். மூவரின் வலைப்பதிவுகளை பற்றி சிறிது நேரம் பேச்சு நடந்தது. மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டவுடன் அந்த அரை மணிக்கும் குறைவான சந்திப்பு முடிவுக்கு வர ... விடை பெற்றோம். அதன்பிறகு பாபா படம் அன்று மாலையோ அல்லது மறுநாளோ தருவதாக சொன்ன Tushiv கடைக்குச் சென்றோம் மணி இரவு 8.30 தாண்டி இருந்ததால் கடை மூடி இருந்தது... அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த முஸ்தபா செண்டருக்கு சென்றோம். அந்த கடையின் அளவும், மலை போல் இருந்த விற்பனைப் பொருள்களையும் பார்த்த எஸ்கே பிரமாண்டமாக இருப்பதாக சொன்னார். அன்று பொருள்கள் எதுவும் வாங்கவில்லை. மறுநாள் அங்கு வர இருப்பதால் மறுநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்க வேண்டிய பொருள்களின் இருப்பிடத்தை மட்டும் பார்த்து வைத்துக் கொண்டு வெளியில் வந்தோம். அருகில் இருந்த ஆனந்த பவனுக்குள் நுழைந்து எதாவது டிபன் சாப்பிடலாம் என்று நுழைந்தோம், பின்பு வீட்டில் உணவு இருக்கும் என்பதால் பாகற்காய் சிப்ஸ் பாக்கெட் ஒன்றும் காஃபி ஆர்டர் செய்துவிட்டு, பாகற்காய் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிக் கொண்டோம். வெளியில் வந்ததும் தான் தெரிந்தது காஃபியை ஆர்டர் பண்ணி, வாங்கிக் குடிக்காமல் ஞாபக மறதியாக வெளியில் வந்ததோம் என்பதே.


பிறகு வாடகைக் கார் பயணம் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்ததும் தயிர்சாதம், ரசம், சாம்பார் சாப்பாடு முடிந்தது. பின்பு சிறிது தரையில் எல்லோரும் அமர்ந்து நேரம் என்மகள், மனைவி, எஸ்கே முவரும் பரமபதம் போன்று ஒரு விளையாட்டை விளையாட... எனது 6 வயது மகள் இருவரையும் நன்றாக ஏமாற்றி.. அவளுக்கு சாதகமாக விதிகளை மாற்றி மாற்றி ஆட... நான் ரசித்தபடி அவரது மடியில் தலை வைத்தபடி படுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் தூக்கம் நெருக்கவே... பிறகு எல்லோரும் தூங்கச் சென்றோம். எஸ்கே இரவு 3 மணிவரை நா.முத்துக் குமாரின் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததாக மறுநாள் சொன்னார்.

மறுநாள் 8 மணி வாக்கில் அவர் எழும் முன்பே மனைவி வேலைக்கும், மகள் பள்ளிக் கூடத்துக்கும் சென்று விட்டனர். காலை 9.00 மணி வாக்கில் எழுந்தேன். அவரை எழுப்புவதற்கு சென்ற போது அவர் ஏற்கனவே எழுந்து குளியல் அறைக்கு சென்றிருந்தார். குளித்துவிட்டு வந்தார், நானும் குளித்துவிட்டு, அவருக்கு காலை சாப்பாடாக காரச்சட்டினியுடன் ஆனியன் ஊத்தப்பம் செய்தேன். சாமி கும்பிட்டுவிட்டு வந்தார். ஊத்தப்ப அளவைப் பார்த்ததும் ஒன்றே போதும் என்றார். காலை சாப்பாட்டை முடித்ததும் கனனி முன்பு உட்கார்ந்தோம். அப்பொழுது தான் நினைவு வந்தது. அதாவது சிவபாலன் பதிவு வழியாக நான் எஸ்கேவின் சிங்கை வருகையை வெளியிட்டு இருந்தேன். அதில் விடாது கருப்பு தனக்கும் எஸ்கேவை சந்திக்க விருப்பம் இருப்பதாக சொல்லி இருந்தார். ஒருவேளை அவர் முதல்நாள் எங்கள் தொலைபேசி தண்ணீரில் விழுந்ததால் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட அந்த இடைப்பட்ட அந்த நேரத்தில் எங்களை சந்திக்க முயன்று அவரால் (கருப்பு) தொடர்பு கொள்ளாமல் போய் இருக்குமோ என்று நினைத்தோம். மின் அஞ்சலை திறந்ததும் கருப்பு எனது மின் அஞ்சல் முகவரிக்கு 'எஸ்கே வந்தாரா' என்று கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். ஆனால் அவரை தொடர்பு கொண்டு கேட்பதற்கு அவரது தொலைபேசி தொடர்பு எண்கள் எங்களிடம் இல்லை. எனவே அவரது மின் அஞ்சல் அனுப்பி திரும்பவவும் இன்று தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் லிட்டில் இந்தியாவில் இருப்போம் சாயங்காலம் சந்திக்க முடிந்தால் நேரில் வாருங்கள் என்று மின் அஞ்சல் அனுப்பிவிட்டு, அன்றைக்கு சிங்கப்பூரில் சில இடங்களை பார்கலாம் என்று இருவரும் வீட்டை விட்டு கிளம்பினோம். அப்போது எனது அலுவலகத்திலிருந்து சிஸ்டம் நெட்வொர்க் பிரச்சனைப் பண்ணுவதாக தொலைபேசினார்கள். எனவே அவரையும் அழைத்துக் கொண்டு எனது அலுவலகம் சென்றேன். வேலை 5 நிமிடத்தில் முடிந்தது. எனது அலுவலக அறையை காட்டிவிட்டு அங்கிருந்து சிங்கப்பூர் பொது பேருந்தில் ஏறி தோபாயோ என்ற எம்ஆர்டி நிலையத்தை வந்தடைந்தோம்.

மணி மதியம் 12.30 ஆகி இருந்தது அங்கிருந்து எம்ஆர்டி ரயில் வழியாக கடைசி நிலையமான மரீனா பே க்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பார்த்தால் சிங்கபூரின் உயர கட்டிடங்களின் அணிவகுப்பு அழகாக தெரியும், புகைப்படம் எடுக்க ஏற்ற இடம். மூன்று புகைப்படங்களை சுட்டுவிட்டு அங்கிருந்து ராபிள்ஸ் ப்ளேஸ் என்ற வியாபார மையங்கள் உள்ள இடத்திற்கு வந்தோம். அங்கும் புகைப்படங்கள் எடுத்தோம். மணி நண்பகல் 1.45 ஆகி இருந்தது. அங்கு சில இடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பசியெடுக்கவே அங்கிருந்த சரவணபவன் ஞாபகம் வர அங்கு சொல்லலாம் சரவணபவன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அப்போது மிகவும் தளர்ந்து காணப்பட்டார், உற்சாகம் குன்றி இருந்தது. நலம் குறித்து கேட்டேன். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தார். சரவணபவனை அடைந்தோம். அவர் தயிர்சாதம் மட்டும் போதும் என்றார் பிறகு ரசவடையும் சேர்த்து வாங்கினோம். எனக்கு விரைவு உணவு (குயுக் லஞ்ச்) வாங்கிக் கொண்டேன். ரசவடையும், குயுக் லஞ்சில் இருந்த கேசரியையும் பகிர்ந்து உண்டோம். பின்பு வெளியில் வந்தோம். எதிரில் இருந்தது ஜெட் ஏர்வேஸ் அலுவலகம், அங்கு சொன்று மறுநாள் சென்னை திரும்புவதற்கான பயணச்சீட்டை மறு உறுதிப்படுத்திவிட்டு வெளியில் வந்தோம். எஸ்கே ஐயா மிகுந்த சோர்வாக காணப்பட்டார். மணி மாலை 2.30க்கு மேல் ஆகி இருந்தது இதற்கு மேல் எங்கும் அழைய முடியாது எனவே லிட்டில் இந்தியா சென்று பாபா படத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்து வாடகைக் கார் பிடித்து லிட்டில் இந்தியா வந்து பாபா படத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.

எனது கைத் தொலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தேன் "unknown" நம்பர் caller id யில் தெரிந்தது. பேசும் பட்டனை அழுத்தி 'ஹலோ' என்றேன் மறுமுனையில் 'ஹலோ கோவி.கண்ணன் ...? நான் சதீஷ் பேசுகிறேன், எஸ்கே பக்கத்தில் உங்களுடன் இருக்காரா ?' - தொலைபேசியில் விடாது கருப்பு ....

உரையாடல் அடுத்த பகுதியில் தொடரும் ....

6 : கருத்துக்கள்:

said...

//அங்கிருந்து பார்த்தால் சிங்கபூரின் உயர கட்டிடங்களின் அணிவகுப்பு அழகாக தெரியும், புகைப்படம் எடுக்க ஏற்ற இடம். மூன்று புகைப்படங்களை சுட்டுவிட்டு அங்கிருந்து ராபிள்ஸ் ப்ளேஸ் என்ற வியாபார மையங்கள் உள்ள இடத்திற்கு வந்தோம். அங்கும் புகைப்படங்கள் எடுத்தோம்//

எடுக்கப்பெற்ற அந்தப் படங்களையெல்லாம் நாங்களும் பார்த்து மகிழ - யாரிடம் மனுக் கொடுக்க வேண்டும் - உங்களிடமா அல்லது எஸ்.கே சாரிடமா?

SP.VR.சுப்பையா

said...

GK,

வி.க என்ன பேசினார் என்று இப்பதிவில் சொல்வீங்கன்னு பார்த்தா?! ஏமாத்திட்டீங்களே...

சரி சரி அடுத்த பதிவை சீக்கரமா போடுங்க.. ஆர்வம் அதிகமாகிறது..

சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்..

said...

தமிழ் மணம் தேன் கூடு வழியாகக் கூட இது போல நல்ல நட்புகள் உருவாக முடியும் என்பதற்கு உங்கள் மற்றும் SK அவர்களின் நட்பு ஒரு மிகப் பெரிய உதாரணம். கருத்து வேறுபாடுகள் போன்றவைகளை பின்தள்ளி இருவர் நட்பாக முடியும் என்பதும் உங்களுடைய இந்தப் பதிவில் நன்கு சொல்லப் பட்டிருக்கிறது. எனக்கு இந்தப் பதிவின் மூலம் உங்கள் மேலும் SK அவர்கள் மேலும் மரியாதை அதிகரிப்பதுடன் ஒரு வித அமைதியைத் தருகிறது.

said...

எஸ்கேவின் சோர்வுக்கு உங்கள் காரச்சட்டினி & ஆனியன் ஊத்தப்பம் இல்லை என்று
நம்பலாமா? :-)

said...

ஆறடிக்கு கொஞ்சம் கம்மி- 173 CM.(spelling mistake)

said...

டீச்சர் சொன்னதும் தான் எனக்கும் உறைக்குது! [சட்னி அல்ல!]

அப்படியும் இருக்குமோ என!

நிஜமாவே அத மாதிரி ஒரு சைஸ் ஊத்தப்பத்தை நான் என் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை!


தங்களது நெகிழ்வான அன்பு வெளிப்படும் இப்பதிவுகளைப் பார்க்கையில், என் பயணத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது!

மிக்க நன்றி, கோவியாரே!