ஆத்திகம் அறிவிழந்து மக்களின் வாழ்வியலை கேள்விக் குறி ஆக்கிய போதெல்லாம் சமணர், புத்தர் இன்னும் எண்ணற்றோர் வரிசையில் நாத்திக பெரியார்கள் தோன்றிதான் மக்களின் வாழ்வியலை செம்மை படுத்துகின்றனர். அது சிலகாலம் வரை பிரதிபளிக்கும் அதில் உள்ள நாத்திக கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு ஆஸ்திகம் வளரும் வளந்து வந்திருக்கிறது. புத்தர் சிலைகள் உடைந்த / உடைத்த இடத்தில் தான் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன.
மக்களை அடிமைபடுத்தியே வாழ்ந்துவரும் கூட்டம் ஆத்திகத்தின் அடித்தளத்தில் இருப்பதால் ஆன்மிக கருத்துக்களை இதிகாசங்களாக புனைந்து பூஜை புனஷ்காரமென அடிப்படை கருத்துக்களை புதைத்துவிட்டு மூடநம்பிக்கைகள் என்ற மரணகுழியில் மக்களை மறுபடியும் தள்ளிவிடுவர். இதுதான் காலம் காலமாக நடந்துவருகிறது. மூடநம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் சாடாமல், பெண் அடிமை என்ற பிற்போக்கு தனங்களையும் சாடி சமூக சீர்திருத்தங்களை செய்து தமிழக மக்களையே விழிப்புற செய்தவர் பெரியார். இது போன்று மக்கள் நல சீர்திருத்தங்களை செய்ததால் மகாத்மா காந்தி தேச பிதா என்று இந்திய குடிமக்களாலும், பெரியார் தந்தை பெரியார் என்று தமிழ்மக்களாலும் அழைக்கப்படுகிறார்.
பெரியாரின் கருத்துக்களை எல்லாம் நாத்திகம் என்று கூறி ஆத்திக கமண்டலத்தில் அடக்க முயன்று தோற்றுப் போனவர்கள் இன்று அவருக்கு அவமரியாதை செய்து தூண்டிவிட்டுப்பார்க்கிறார்கள். எனக்கெல்லாம் பெற்றோர் வழியாக பெரியார் நாத்திகர் என்று மட்டும் தான் போதிக்கப்பட்டு வந்தது. பெரியாரின் சீர்திருத்தமோ வெங்காயங்களோ எதுவோமே தெரிந்திருக்கவில்லை. பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது.
பெரியாருக்கு முன்பு சாதி இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழையமுடியும் அதுவும் தூர நின்றுதான் வணங்க முடியும் என்ற நிலை இருந்துவந்தது நமக்கு தெரியவருகிறது, ஆழ்வார்கள் தீண்டத்தகாத குலத்தில் பிறந்தார் என்று கூறி பெருமாள் பக்கத்தில் வைக்க தகுதியற்றது என்று சாதி வெறியில் சிலையை கூட ஆத்திக ஆதிக்க சக்திகள் தள்ளிவைத்ததெல்லாம் தாத்தாசாரியாரே நக்கீரனில் புட்டு புட்டு வைத்தார். பெரியார் சிலை ஸ்ரீரங்கத்தில் இந்துக்களை அவமானப்படுத்துகிறது என்று தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட சாதாரண இந்துக்கள் சொல்லுவார்களா ? முடியாது ஏனென்றால் தாழ்த்தப்பட்ட இந்துக்களும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் கோவிலுக்குள் செல்ல முடிகிறதென்றால் அது பெரியார் இல்லாமல் பெருமாள் வந்தா அழைத்துச் சென்றார் ? பெரியார் சிலையை கோவிலுக்கு முன்பு வைப்பதுதான் சரியான இடம். பெரியாரால் தான் தங்களால் கோவிலுக்கு உள்ளே செல்ல முடிகிறதென்று பெரியார் சிலையை பார்க்கும் போதெல்லாம் அவர்கள் நன்றி கூர்ந்து நினைத்துக் கொண்டே கோவிலுக்குள் செல்லுவார்கள். பெரியார் மட்டும் இல்லையென்றால் கோவிலுக்குள் சென்றிருக்கவே முடியாது. தாழ்த்தப்பட்ட இந்துக்கள் அனைவருமே தீண்டாமை கொடுமையிலிருந்து மீள மாற்று மதத்தை நாடி போய் இந்து மதமே அழிந்திருக்கும். பெரியார் மறைமுகமாக இந்து மதத்திற்கு நன்மையே செய்திருக்கிறார். அதற்காக இந்துக்கள் அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்.
இதெல்லாம் இந்துத்துவா வாதிகளுக்கு தெரியாதா ? தெரியும் ! பெரியார் சிலை கோவிலுக்கு முன்பு இருந்தால் தீண்டாமை கொடுமைகளும், மனு(ஸ்மிருதி)அநீதி வரலாறுகள் மறைந்துவிடாதே என்ற ஆதங்கம் தான். எதுவும் செய்ய முடியாத ஆதங்கத்தில் தான் பெரியாரை மாமா வென்று மரியாதை குறைவாக சொல்லிப்பார்க்கிறார்கள். இவர்களால் மறைந்து கொண்டு மட்டும்தான் இவற்றைத்தான் செய்ய முடியும். இவர்களின் தன்னிலைமறந்த சொற்களால் தூண்டப்பட்டு கோபப்படுபவர்களால் மூலம் அடிவாங்குபவர்கள் எவரென்றால் அஞ்சுக்கும் பத்துக்கும் கடற்கரையில் உட்கார்ந்து தெவசத்துக்கு மந்திரம் சொல்லும் பூனூல் போட்ட ஏழை பிராமனர்தான்.
சிலைக்கு சக்தி உண்டென்று ஒப்புக் கொள்கிறீர்களா ? கேட்கிறார்கள் ! சிலைக்கு சக்தி இருக்கிறதோ இல்லை என்று கூட சொல்லாம் ஆனால் அதைவைத்து மரியாதை செய்பவர்களுக்கு சக்தி அதிகமாகவே உண்டு அதுதான் வண்முறையாக வெடிக்கிறது. எங்கள் முப்பாட்டனார் செய்த தீண்டாமைக்கு எங்களை ஏன் திட்டுகிறாய் ? நல்ல கேள்வி. இன்றை தேதியில் இணையத்தில் எழுதி கொண்டு இருக்கும் எவருக்கு பூனூல் அறுக்கப்பட்டது ? பெரியார் என்றால் ஏன் இன்னும் இந்த சிறியோர்கள் வண்மம் பாராட்டி அவப்பெயரும் அவமரியாதையும் செய்யவேண்டும் ?
Wednesday, December 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
59 : கருத்துக்கள்:
அருமையான கருத்து.மனதில் நினைத்தது அப்படியே உங்கள் எழுத்துகளில்.
நன்றி
மீனாட்சி அருண்
GK,
பெரியாரை மாமா என்று கூறும் மூடர்களை கண்டித்து தனிப் பதிவிடலாம் என்றிருந்தேன்.
நீங்கள் அருமையான பதிவை தந்து மகிழ்வித்துவிட்டீர்கள்.
உங்கள் கருத்து ஏற்புடையதே..
பதிவுக்கு நன்றி
கண்ணன் அண்ணா. உங்கள் கருத்தை நன்கு சொல்லியிருக்கிறீர்கள். ஆங்காங்கே தவறான பொருள் தரும் சொற்றொடர் அமைப்புகள் இருக்கின்றன. கொஞ்சம் சரி செய்யுங்கள்.
எடுத்துக்காட்டாக
'மூடநம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமில்லாது பெண் அடிமை என்ற பிற்போக்கு தனங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து தமிழக மக்களையே விழிப்புற செய்தவர் பெரியார். '
//குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. உங்கள் கருத்தை நன்கு சொல்லியிருக்கிறீர்கள். ஆங்காங்கே தவறான பொருள் தரும் சொற்றொடர் அமைப்புகள் இருக்கின்றன. கொஞ்சம் சரி செய்யுங்கள்.
எடுத்துக்காட்டாக
'மூடநம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமில்லாது பெண் அடிமை என்ற பிற்போக்கு தனங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து தமிழக மக்களையே விழிப்புற செய்தவர் பெரியார். '
//
குமரன்,
இரவு தூங்கப் போகும்முன் எழுதியதால் திரும்ப படித்துப் பார்க்க நேரமில்லாமல் போனது. தவறுகளை(ய) சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
பதிவைப் பற்றிய கருத்துக்கும் நன்றி !
ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு வரவர அதற்கு ஆதரவும் சில சமயம் வந்துடும். பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்தார் தெருவுக்குத் தெரு இப்போ பிள்ளையார் கோவில்கள் இருக்கு. நாத்திகப் பிரசாரம் செய்தார். இளைஞர்கள் ஆவேசத்துடன் ஆத்திகப் பிரசாரம் செய்றாங்க.
அதனாலே பெரியார் சிலையையும் கண்டுக்காம போயிருந்திருக்கலாம். என்ன ஆயிருக்கும் அதனாலே. இப்போ தேவையில்லாத சர்ச்சை.
கட்டபொம்மன்
பெரியாரைத் திட்டிய பன்னாடைகளை நானே ஒரு காய்ச்சு காய்ச்சினேன். இணையத்தில் ஒளிந்து கொண்டு எழுதும் அம்பிகள் என் கைகளுக்குக் கிடைத்தால் சட்னிதான்.
//பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது.
//
இன்று இணையத்தில் பலருக்கும் பெரியார் இப்படித்தான் ஊடுறுவியுள்ளார்.... மீதி பின்னூட்டத்தை பிறகு எழுதுகிறேன்
நன்றி
//கட்டபொம்மன் said...
ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு வரவர அதற்கு ஆதரவும் சில சமயம் வந்துடும். பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்தார் தெருவுக்குத் தெரு இப்போ பிள்ளையார் கோவில்கள் இருக்கு. நாத்திகப் பிரசாரம் செய்தார். இளைஞர்கள் ஆவேசத்துடன் ஆத்திகப் பிரசாரம் செய்றாங்க.
அதனாலே பெரியார் சிலையையும் கண்டுக்காம போயிருந்திருக்கலாம். என்ன ஆயிருக்கும் அதனாலே. இப்போ தேவையில்லாத சர்ச்சை.
கட்டபொம்மன்
//
கட்டபொம்மன் அவர்களே,
சரிதான் ! பெரியார் பற்றி இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாமல் இருந்தது. பல்வேறு எதிர்புகளால் பெரியார் *பற்றிய* விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலையை உடைத்ததால் தெருவுக்கு தெரு பிள்ளையார் சிலை வந்தது என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. மக்கள் தொகைபெருக்கம், நகரங்களின் விரிவாக்கம் ஆகியவைக்களுக்காக புதிய வழிபாட்டு தளங்கள் அவசியம் என ஏற்பட்டன. கோவிலுக்குள் செல்ல முடியாத பிற்படுத்தப்பட்டோர் சிறுதெய்வ வழிபாடு என்னும் கோட்பாடாக பல பிள்ளையார் கோவில்களை தங்களொக்கென தனியாக ஏற்படுத்திக் கொண்டனர்.
இது என்னுடைய சொந்தபதிவாக இருப்பதால் இந்த பின்னூட்டத்தை கோவி.கண்ணன் தான் இட்டான் என்று வேறெங்கும் காட்டத்தேவையில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
கோவி.கண்ணன்
//Anonymous said...
பெரியாரைத் திட்டிய பன்னாடைகளை நானே ஒரு காய்ச்சு காய்ச்சினேன். இணையத்தில் ஒளிந்து கொண்டு எழுதும் அம்பிகள் என் கைகளுக்குக் கிடைத்தால் சட்னிதான்.
//
அனானிமஸ் தவறு,
கருத்தியல்களை ஆனித்தரமாக சொல்லி மறுக்க வேண்டும். சூழ்ச்சிகளை வன்முறையால் வெல்லாம் என்று கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
கருத்துக்கு நன்றி !
//MeenaArun said...
அருமையான கருத்து.மனதில் நினைத்தது அப்படியே உங்கள் எழுத்துகளில்.
நன்றி
மீனாட்சி அருண்
//
மீனாட்சி அருண்,
முதன்முறை என்பதிவுக்கு வருகையா ? நன்றி !
இன்றைய சூழலில் பலரது கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. பாராட்டுக்களுக்கு நன்றி !
//Sivabalan said...
GK,
பெரியாரை மாமா என்று கூறும் மூடர்களை கண்டித்து தனிப் பதிவிடலாம் என்றிருந்தேன்.
நீங்கள் அருமையான பதிவை தந்து மகிழ்வித்துவிட்டீர்கள்.
உங்கள் கருத்து ஏற்புடையதே..
பதிவுக்கு நன்றி
//
சிபா,
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரலாறுகளை அறியாது யார் மீதுவேண்டுமானலும் புழுதிவாரி தூற்றவேண்டும் என்ற காழ்புணர்வுதான் அப்படியெல்லாம் சொல்லவைக்க முடிகிறது. விழிப்புணர்வு ஊட்டும் அவர்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
மேலும் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி !
//சிலைக்கு சக்தி இருக்கிறதோ இல்லை என்று கூட சொல்லாம் ஆனால் அதைவைத்து மரியாதை செய்பவர்களுக்கு சக்தி அதிகமாகவே உண்டு//
GK ஐயா,
மிகவும் ஆழ்ந்துணர்ந்து சொல்லி உள்ளீர்கள் இதை! இது இரு கட்சிக்கும் அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.
ஒரு வாசகம் என்றாலும் இதுவே திருவாசகம்!
அப்புறம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது,
பிரதிபளிக்கும்=பிரதிபலிக்கும்
புனஷ்காரமென=புனஸ்காரமென
Very good post. Whatever you said are true.
Very good post. The whole thing is true. Periyar's works saved the Hindu religion. I personaly beleive Periyar could be one of the propet in Hiduism like Budha,Mahavir etc...
I totally agree whatever you said in this post.
"மக்கள் தொகைபெருக்கம், நகரங்களின் விரிவாக்கம் ஆகியவைகளுக்காக புதிய வழிபாட்டு தளங்கள் அவசியம் என ஏற்பட்டன. கோவிலுக்குள் செல்ல முடியாத பிற்படுத்தப்பட்டோர் சிறுதெய்வ வழிபாடு என்னும் கோட்பாடாக பல பிள்ளையார் கோவில்களை தங்களுக்கென தனியாக ஏற்படுத்திக் கொண்டனர்."
ஒண்ணு நிச்சயம். ஆகக்கூடி பெரியாரோட நாத்திகப் பிரசாரம் பலிக்கலங்கற விஷயத்தை நீங்களே ஒப்புக்கொண்டதாகத்தான் ஒங்க பதில் அமைஞ்சிருக்கு. இல்லேன்னா ஏன் கோவில் எல்லாம் கட்டிக்கணும்?
கட்டபொம்மன்
கண்ணன், கருத்து அழகாக, ஆனித்தரமாக உள்ளது.
கருப்புகள், கற்கவேண்டும் உங்களிடம் :)
//கட்டபொம்மன் said... ஒண்ணு நிச்சயம். ஆகக்கூடி பெரியாரோட நாத்திகப் பிரசாரம் பலிக்கலங்கற விஷயத்தை நீங்களே ஒப்புக்கொண்டதாகத்தான் ஒங்க பதில் அமைஞ்சிருக்கு. இல்லேன்னா ஏன் கோவில் எல்லாம் கட்டிக்கணும்? //
3000 ஆண்டுகளாக நடந்துவரும் மோசடிகளை பெரியாரின் 60 ஆண்டுகளின் பொதுவாழ்க்கையினால் வெற்றி கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. பெரியாரின் தாக்கம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு இருக்கும். அதைப்பற்றி *ஐயம்* கொள்ளத் தேவையில்லை. பெரியார் கோவில் நுழைவு போராட்டம் நடத்தவில்லையென்றால் பிற்படுத்தப்பட்டோர் இன்றும் கோவிலுக்குள் சென்று வரமுடியாத நிலை இருந்திருக்கும். அந்த நிலை மாறிவிட்டதல்லவா? இது பெரியாரின் செயல் இல்லாமல் பெருமாளின் அருளா ? எல்லாம் அந்த *மகரநெடுங்குழைக்காதன்* பள்ளிகொண்ட பெருமாளுக்கு தெரியும். கோவிலுக்குள் நுழைய முடியாதவர்கள் தங்களுக்கென கோவில் அமைத்துக் கொண்டதை ஆத்திக கண்ணோட்டோதோடு பார்த்து நல்லதே என்று நினைக்க வேண்டும். வெற்றி தோல்விகளைப் பற்றியெல்லாம் பேச வேண்டியதில்லை.
அன்புடன்
கோவி.கண்ணன்
கோவியாரே,
நல்ல பதிவு!
"இது என்னுடைய சொந்தபதிவாக இருப்பதால் இந்த பின்னூட்டத்தை கோவி.கண்ணன் தான் இட்டான் என்று வேறெங்கும் காட்டத்தேவையில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்"
"3000 ஆண்டுகளாக நடந்துவரும் மோசடிகளை பெரியாரின் 60 ஆண்டுகளின் பொதுவாழ்க்கையினால் வெற்றி கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. பெரியாரின் தாக்கம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு இருக்கும். அதைப்பற்றி *ஐயம்* கொள்ளத் தேவையில்லை. பெரியார் கோவில் நுழைவு போராட்டம் நடத்தவில்லையென்றால் பிற்படுத்தப்பட்டோர் இன்றும் கோவிலுக்குள் சென்று வரமுடியாத நிலை இருந்திருக்கும். அந்த நிலை மாறிவிட்டதல்லவா? இது பெரியாரின் செயல் இல்லாமல் பெருமாளின் அருளா ? எல்லாம் அந்த *மகரநெடுங்குழைக்காதன்* பள்ளிகொண்ட பெருமாளுக்கு தெரியும்"
இந்த பதில் அழகாக பல உண்மைகளைக் கூறுகிறது.
ந்ன்றாகச்சொன்னீர்கள்,வாழ்த்துக்கள்.
முற்றத்தில் இருந்த காந்தியாரே உள்ளே
அய்யங்கார் வீட்டுக்குள் சென்றதே பெரியார் வந்த பிறகுதான்.
பார்ப்பானர்கள் மாறிிவிட்டார்கள் என்று பட்டமும் படிப்பும் பெற்றுவிட்ட இன்றும் இந்திய அரசியல் சட்டத்திலே சூத்திரர்களாக இருக்கும் நமது உடன்பிறப்புகளுக்கு இந்த ஈனர்களின் பதிவுகள் கண்திறக்கும் என நம்புகிறேன்.
உலகெங்கும் கோயில் கட்டுகிறீர்களே அங்கு உங்களுக்கு என்ன மரியாதை?
சிதம்பரத்திலே உள்ளே சென்று தமிழிலே திருவாசகம் பாடக்கூட முடியாதே!
மானமும் அறிவும் வேண்டுமென்றாரே எங்கே நமக்கு வந்துவிடுமோ என்றுதானே அலறுகிறார்கள்?
//குழலி / Kuzhali said...
இன்று இணையத்தில் பலருக்கும் பெரியார் இப்படித்தான் ஊடுறுவியுள்ளார்.... மீதி பின்னூட்டத்தை பிறகு எழுதுகிறேன்
நன்றி //
வாங்க குழலி,
விடிவான அளசலுடன் வருவீர்கள் என நினைக்கிறேன். வருக மறு மறுமொழிதருக !
:)
//kannabiran, RAVI SHANKAR (KRS)
GK ஐயா,
மிகவும் ஆழ்ந்துணர்ந்து சொல்லி உள்ளீர்கள் இதை! இது இரு கட்சிக்கும் அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.
ஒரு வாசகம் என்றாலும் இதுவே திருவாசகம்!
அப்புறம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது,
பிரதிபளிக்கும்=பிரதிபலிக்கும்
புனஷ்காரமென=புனஸ்காரமென //
KRS,
உங்க ஆன்மிக பதிவுகளின் ரசிகன் நான். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு எப்பவுமே உண்டு !
நீங்கள் அடுத்த பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டிய *நந்தனார்* பற்றி எழுதியதில் இருந்த பிழையை சரி செய்துவிட்டேன்.
மிக்க நன்றி !
//anbuselvaraj said...
Very good post. The whole thing is true. Periyar's works saved the Hindu religion. I personaly beleive Periyar could be one of the propet in Hiduism like Budha,Mahavir etc...
I totally agree whatever you said in this post.
//
Anbuselvaraj,
Thank you very much for your 2 feedback to support this article.
தூக்கக் கலக்கத்தில் எழுதினேன் என்று சொன்னாலும் கருத்துகள் ஆணித்தரமாகத்தான் விழுந்திருக்கின்றன.... அந்த கடைசி வரிகளைத் தவிர!
அங்குதான் கொஞ்சம் பிழன்றிருக்கிறீர்கள், கோவியாரே!
அந்த உவமானம் சரியாக வரவில்லை.
பல்லாண்டுகளுக்கு முன் தீண்டாமை பாராட்டியவர்களுக்காக எங்களை ஏன் சாடுகிறீர்கள் என்பவர்க்கும், சிலைகளை உடைத்த பெரியாரை இன்றும் சொல்வதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது, கோவியாரே.
அவர் சீடர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் இன்றும் அதே காழ்ப்பைத்தானே காட்டுகிறார்கள், இன்று தீண்டாமையைப் பாவிக்காத இவர்களிடம்?
மற்றபடி, நேர்மையான பதிவு.
எ.பி.களைச் சரி செய்தமைக்கு நன்றி.
//JTP said...
கண்ணன், கருத்து அழகாக, ஆனித்தரமாக உள்ளது.
கருப்புகள், கற்கவேண்டும் உங்களிடம் :)
//
பிரபு,
கருத்துக்களுக்கு நன்றி ! இப்படி அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க. அப்பறம் உங்க ப்ளாக்கையும் எழுத ஆரம்பிச்சிடுங்க.
முதல் முறையாக சற்று கோபமான ஒரு கோவி. கண்ணணை இங்கு பார்க்கிறேன்.
நன்கு எழுதி இருக்கிறீர்கள்.
பெரியாருக்கு எதிராக இன்று எழுதப் பட்டு வரும் பல கருத்துக்கள் ஒரு வித வயிற்றெரிச்சலிலேயே எழுதப் பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.
காலங்காலமாக யார் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் தனி ஒரு அதிகாரம் ஆதிக்கம் கொண்டிருந்த சிலரில் பெருபான்மை தங்களுடைய அதிகாரங்கள் இன்று குன்றி விட்டதாகவும் அந்த அதிகாரம் குன்றியதற்கு முக்கியக் காரணமாக பெரியாரையும் கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் தான் வயத்தெரிச்சல்.
இன்று சிலரில் பெருபான்மையினரிடையே நிலவி வரும் சுப்பீரியாரிட்டி காம்பிளக்ஸே இதற்கு நல்ல உதாரணம்.
அதிகாரம் குன்றியதால் துவேசங்களை தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி மீண்டும் அதிகாரம் பெற்று விடலாம் என்றும் முயற்சி செய்து வருகிறது இந்தக் சிலரில் பெருபான்மை.
மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் இது போன்ற சிலரில் பெருபான்மையின் உண்மை முகத்தை அறிந்து சிலரில் பெருபான்மையிடம் இருந்து விலகிப் போய் விடுவதே நல்லது. இதனை செய்யாவிட்டால் மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்து விடுவார்கள் இவர்கள்.
சாத்தான் சொல்லை புனிதமாக கருதும் இந்த கும்பலிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
//சிலைக்கு சக்தி இருக்கிறதோ இல்லை என்று கூட சொல்லாம் ஆனால் அதைவைத்து மரியாதை செய்பவர்களுக்கு சக்தி அதிகமாகவே உண்டு//
அதை இரு சாராரும் உணர்ந்து அவரவர் வழியில் போவதுதான் ந்ல்லது
எழு கோடி தமிழர்கள் இருக்கையில், பதிவர்கள் (சுமார் 300 பேர்கள் இருக்கலாம்) ஏன் தங்களுக்குள் அடித்துக் கொள்ளவேண்டும்? அதனால் அவரவர் நிலைப்பாட்டில் என்ன பெரிதாக மாற்றம் ஏற்பட்டுவிடும்?
அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டுகிறேன்
நல்லெண்ணத்துடன்
SP.VR. சுப்பையா
கோவிக அவர்களே: பெரியார் செய்த ஆலயப் பிரவேசம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஆனால் அதைப் பெரியார் மட்டும் தான் செய்தாரா? ராமானுஜர் செய்யவில்லையா? ராஜாஜி செய்யவில்லையா? காந்தியடிகள் வலியுறுத்தவில்லையா? அன்றைய காலகட்டத்தில் இது ஒருவகைப் புரட்சி நாடெங்கிலும். பல்வேறு பிராமணர்களும் அதை ஆதரித்து முன்னின்று நடத்தினார்கள். அதை பெரியாரின் தனி சாதனையாகச் சித்தரிப்பது நியாயமாகாது.
அதேபோல் இன்றைய நிலையில் பெரியாரின் சீடர்கள் என்று கூறிக் கொள்வோர் அவரின் விவாதிக்கத்தக்க 'ஹிந்து' நாத்திகக் கொள்கையை மட்டுமே நம்புகின்றனர். ஆதிக்க ஹிந்துக்களாக இருந்த பிராமணர்கள் வெகு சொல்பம். மற்ற ஜாதி இந்துக்களே இன்றும் தீண்டாமையை பின்பற்றி வருகின்றனர். பெரியாரின் இன்றைய சீடர்களில் எத்துணை பேர் அவரது மற்ற கருத்துக்களைப் பின்பற்றுகின்றனர் - உதாரணத்திற்கு பெண்ணடிமைத்தனம்! இது இன்று எந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது? அதை எதிர்த்து அவரது சீடர்கள் என்ன செய்துவிட்டார்கள்?
இப்படி உண்மையிலேயே பகுத்தறிந்து பார்த்தால், நாத்திகக் கொள்கையுடைய ஒருவருடைய சிலை இருக்க வேண்டியது அவரது சிலைக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு கிடைக்கும் இடத்திலேயே! அப்படி இல்லாமல் கோவில்களின் முன்னும், முச்சந்தியிலும் அவரை நிற்க வைப்பது, அவரை அவமானப் படுத்துவதாகவே எனக்குப் படுகிறது. ஏன் திகவினரின் கட்சி அலுவலகங்களிலோ, அதையொட்டிய பகுதிகளிலோ அவரது சிலையை நிறுவி, அவரது பெயரில் ஒரு நூலகமோ அல்லது பிறருக்கு பயனளிக்கும் வகையிலோ அவரது கருத்துக்களைக் கொண்டுசெல்வதில் இவர்களது உழைப்பைக் காட்டக்கூடாது?
இது சற்றே அனைவராலும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயம்.
//srinidhi said...
There were many reformers before Periyar.Iyotheesas Pandithar was
one such persons.He took up the cause of Dalits.Bharathi called for
reforms within Hinduism. So to think that what all good has happened is due only to Periyar is another superstition.
//
ஸ்ரீநிதி,
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். அயோத்தி தாசபண்டிதர் பற்றி நான் கொஞ்சம் படித்து இருக்கிறேன். பெரியாருக்கு அவர் தான் முன்னோடி என்று சொல்கிறார்கள். முன்னோடிகள் பலர் உழுது வைத்த நிலத்தில் எளிமையான கருத்துக்களுடன் பெரியார் பகுத்தறிவு பயிர் நட்டார்.
கருத்துக்களுக்கு நன்றி !
//ஜோ / Joe said...
கோவியாரே,
நல்ல பதிவு!
//
பாராட்டுக்கு நன்றி ஜோ!
//இந்திரன் said...
இந்த பதில் அழகாக பல உண்மைகளைக் கூறுகிறது. //
இந்திரன் நன்றி !
சில உண்மைகளை மறைக்கலாம்,
பல உண்மைகளை மறைக்க முடியுமா ?
முடியாது என்று தான் நினைக்கிறேன்.
// SK said...
தூக்கக் கலக்கத்தில் எழுதினேன் என்று சொன்னாலும் கருத்துகள் ஆணித்தரமாகத்தான் விழுந்திருக்கின்றன.... அந்த கடைசி வரிகளைத் தவிர!
அங்குதான் கொஞ்சம் பிழன்றிருக்கிறீர்கள், கோவியாரே!
அந்த உவமானம் சரியாக வரவில்லை.
பல்லாண்டுகளுக்கு முன் தீண்டாமை பாராட்டியவர்களுக்காக எங்களை ஏன் சாடுகிறீர்கள் என்பவர்க்கும், சிலைகளை உடைத்த பெரியாரை இன்றும் சொல்வதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது, கோவியாரே.
அவர் சீடர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் இன்றும் அதே காழ்ப்பைத்தானே காட்டுகிறார்கள், இன்று தீண்டாமையைப் பாவிக்காத இவர்களிடம்?
மற்றபடி, நேர்மையான பதிவு.
எ.பி.களைச் சரி செய்தமைக்கு நன்றி.
//
எஸ்கே ஐயா...!
உங்களிடம் சாட்டில் பேசிய கருத்துக்கள் தான்.
அவர் சீடர் என்று சொல்பவர்கள் மட்டுமா காழ்ப்பை காட்டுகிறார்கள்.
மற்றவர்களெல்லாம் செய்யவில்லையா ?
மஞ்சள் துண்டு தலைவரைப் பற்றி தன் பதிவுகளில் தினம் தினம் காழ்ப்பை காட்டும் இன்றைய காலத்தினருக்கு மஞ்சள் துண்டுக்காரார் என்ன செய்தார் தீங்கு செய்தார் ?
காழ்ப்புகள் பலவிதம், எனக்கு காழ்பாக தெரிவது உங்களுக்கு அப்படி தெரியாமல் இருக்கலாம்.
பதிவை பாராட்டியதற்கு நன்றி !
பெரியாருக்கு முன்பு சாதி இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழையமுடியும் அதுவும் தூர நின்றுதான் வணங்க முடியும் என்ற நிலை இருந்துவந்தது நமக்கு தெரியவருகிறது,///
அண்ணே.. ராஜா சேதுபதி பண்ணதா படிச்சேனே... அது பத்தியும் எழுதுங்களேன் ?
பெரியாரின் கருத்துகளை விhர்சனம் செய்யலாம். அதை விடுத்து இறந்து விட்ட அவரை ஏன் கேலி செய்ய வேண்டும். தன்னை கையாலாகாதவன் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அடுத்து,
கடவுள் இல்லையென்று வாதிட்ட புத்தரை கடவுளின் ஒரு அவதாரமாக்கி விட்டார்கள். அதை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயலுகிறார்கள். உங்கள் பதில் பின்னூட்டத்தில் அதைப்பற்றி எழுதுவீர்கள என நினைத்தேன்.
/*
பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது.
*/
me too my friend :)
செந்தில் குமரன் said...
முதல் முறையாக சற்று கோபமான ஒரு கோவி. கண்ணணை இங்கு பார்க்கிறேன்.
நன்கு எழுதி இருக்கிறீர்கள்.
பெரியாருக்கு எதிராக இன்று எழுதப் பட்டு வரும் பல கருத்துக்கள் ஒரு வித வயிற்றெரிச்சலிலேயே எழுதப் பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.
காலங்காலமாக யார் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் தனி ஒரு அதிகாரம் ஆதிக்கம் கொண்டிருந்த சிலரில் பெருபான்மை தங்களுடைய அதிகாரங்கள் இன்று குன்றி விட்டதாகவும் அந்த அதிகாரம் குன்றியதற்கு முக்கியக் காரணமாக பெரியாரையும் கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் தான் வயத்தெரிச்சல்.
இன்று சிலரில் பெருபான்மையினரிடையே நிலவி வரும் சுப்பீரியாரிட்டி காம்பிளக்ஸே இதற்கு நல்ல உதாரணம்.
அதிகாரம் குன்றியதால் துவேசங்களை தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி மீண்டும் அதிகாரம் பெற்று விடலாம் என்றும் முயற்சி செய்து வருகிறது இந்தக் சிலரில் பெருபான்மை.
மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் இது போன்ற சிலரில் பெருபான்மையின் உண்மை முகத்தை அறிந்து சிலரில் பெருபான்மையிடம் இருந்து விலகிப் போய் விடுவதே நல்லது. இதனை செய்யாவிட்டால் மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்து விடுவார்கள் இவர்கள்.
சாத்தான் சொல்லை புனிதமாக கருதும் இந்த கும்பலிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
//
குமரன்,
என்னைப் போல் பலருக்கும் கோபம் வருவதைப் பார்க்க முடிகிறது. மாமாவுக்கு விளக்கம் சொல்லி சப்பை கட்டுபவர்கள் தே...மகன் என்று எவரையாவது சொல்லி அவர் தேவர் அடியாரின் மகன் என்று *உயர்ந்த* பொருளில் சொல்கிறென் என்று சொல்வார்கள்.
காழ்புணர்வுகளுக்கு காரணம் கடவுள் மறுப்பல்ல கேள்வி கேட்கும் திறனையும், எதிர்த்து நிற்கும் துணிவையும் வெள்ளைத் தாடிக்காரார் தூண்டிவிட்டாரே என்ற ஆத்திரம்தான். பெரியாரை அவமரியாதை செய்யும் படி எழுதும் பலர் அவருடைய கடவுள் மறுப்புக்காக எதிர்க்கவில்லை என்பது கண்கூடு. இவர்கள் எதிர்பதும் அதே கடவுள்தான் ஆனால் சின்ன வேறுபாட்டுடன் மாற்று மதத்தின் கடவுள் எதிர்க்கிறார்கள்.
நீ பாட்டுக்கு கத்துவதை கத்து என்று காதில் வாங்கிக் கொள்ளாமல் எல்லோருமே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலான விசயம்.
//Krishna (#24094743) said...
இது சற்றே அனைவராலும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயம்.
//
பலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்று உங்களைப் போல் நானும் நம்புகிறேன். கருத்துக்கு நன்றி !
// Jeeves said...
அண்ணே.. ராஜா சேதுபதி பண்ணதா படிச்சேனே... அது பத்தியும் எழுதுங்களேன் ?
//
Jeeves,
எனக்கு தெரிய வருவதைப்பற்றி தான் எனது புரிதல்களுடன் எழுதுகிறேன். நீங்கள் சொல்பவரைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.
//சுல்தான் said...
பெரியாரின் கருத்துகளை விhர்சனம் செய்யலாம். அதை விடுத்து இறந்து விட்ட அவரை ஏன் கேலி செய்ய வேண்டும். தன்னை கையாலாகாதவன் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அடுத்து,
கடவுள் இல்லையென்று வாதிட்ட புத்தரை கடவுளின் ஒரு அவதாரமாக்கி விட்டார்கள். அதை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயலுகிறார்கள். உங்கள் பதில் பின்னூட்டத்தில் அதைப்பற்றி எழுதுவீர்கள என நினைத்தேன்.
//
புத்தரின் போதனைகளை மறுக்கும் அளவுக்கு இந்து மதம் உன்னத கருத்துக்களை கொண்டிருக்கவில்லை என்பது புத்தமதம் வேகமாக பரவியதிலிருந்து தெரிகிறது. அதானால் இந்து மத வீழ்ச்சியை தடுக்க புத்த மத தத்துவங்களை இந்துமதம் உள்வாங்க வேண்டியது அவசியம் இருந்தது. புத்தரின் நிர்வாணம் தான் ப்ரம்மம் என்று அதிசங்கராரால் உருமாற்றம் செய்யப்பட்டு இந்துமதம் உள்வாங்கிக் கொண்டது. நிர்வாணம் என்றால் சூனியம் எதுவுமே இல்லாதது. ப்ரம்மம் என்றால் எங்கும் நிறைந்திருப்பது. ஆழ்ந்து பார்த்தால் சூனியம் ப்ரம்மம் எல்லாம் ஒன்றுதான் இரண்டிலுமே எங்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும். ஒன்று இல்லாதது மற்றொன்று இருப்பது, அதை மக்கள் ஏற்றுக் கொண்டால் புத்தமதத்தை அழிக்க முடியாது என்பதால் சங்கரர் செளந்தர்ய லகரி பாடல்களை உருவவழிபாட்டை திரும்ப கொண்டுவருவதற்காக எழுதினார். சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது ( உருவ வழிபாடு கீழ்நிலை என்று நான் சொல்லவில்லை இந்து மதத்தில் அவ்வாறு தான் இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்)
நல்ல பதிவு.. இந்தப் பதிவை தவறவிட்டிருந்தேன் .. 'கும்மிப்பதிவு' என இந்தப் பதிவைக் கூறி எனக்கு இந்த பதிவை அறிமுகப்படுத்திய பதிவர்க்கு நன்றி;) ..
// -L-L-D-a-s-u said...
நல்ல பதிவு.. இந்தப் பதிவை தவறவிட்டிருந்தேன் .. 'கும்மிப்பதிவு' என இந்தப் பதிவைக் கூறி எனக்கு இந்த பதிவை அறிமுகப்படுத்திய பதிவர்க்கு நன்றி;) ..
//
நன்றி !
நான் பெரியாருக்கும் அவரது சமூக சீர்திருத்த கருத்துக்களுக்கும் அயராத உழைப்புக்கும் வணங்குகிறேன். என் கேள்வி அதுபற்றியதல்ல.
தாங்கள் கூறியுள்ள இந்த வரிகள் சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து
கோவிக்கண்ணன் அவர்கள் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்கள்.
//சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது ( உருவ வழிபாடு கீழ்நிலை என்று நான் சொல்லவில்லை இந்து மதத்தில் அவ்வாறு தான் இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்)
//
யாரந்த "இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள்" என்று தெரிந்துகொள்ளலாமா?
நான் சொல்லவில்லை என்றால் என்ன பொருள்? உங்களுக்கு இந்துத்தத்துவங்கள் தெரியாது என்று பொருளா? உங்கள்க்கு இந்து தத்துவங்கள் தெரியாது என்றால், எப்படி புத்தமதத்திலிருந்து இந்துமதம் காப்பி அடித்தது என்று எழுதினீர்கள்?
உபநிஷதங்களில் பிரம்மம் பேசப்படவில்லை என்று கருதுகிறீர்களா?
நட்புடன் எழில்
//யாரந்த "இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள்" என்று தெரிந்துகொள்ளலாமா?//
எழில்,
நண்பர் வஜ்ராசங்கர் எழுதியுள்ள குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-2 என்ற பதிவில் பின்னூட்டங்களை படித்தால் ஓரளவுக்கு தெரியும். குறிப்பாக நண்பர் நேச குமாரின் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள்.
பி.கு: நண்பர் வஜராங்கரின் பெயரும் அவருடைய பதிவும் இங்கு குறிப்பிட்டுள்ளதை அவர் ஆட்சேபித்தால் இந்த பின்னூட்டம் நீக்கப்படும்
//வாய்சொல்வீரன்
http://potteakadai.blogspot.com/2006/12/blog-post_14.html
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று ஆவலாக இருக்கிறது நடுநிலைமையாரே!
//
வாய்சொல்வீரர்,
பெரியார் என்ற மறைந்த மாபெரும் தமிழ் தலைவரை கொச்சைப்படுத்தி பேசியதாக சில பதிவுகளை படிக்க நேர்ந்த போது அதுகுறித்து எனது கருத்தை எனது பதிவில் பதித்தேன். நான் நடுநிலைவாதி என்று நான் எங்கும் சொல்லிக் கொள்ளவில்லை.
அவர் பதிவை பற்றிய கருத்தை அவரிடம் கேளுங்கள். அவர் பதிவு பற்றியோ, வேறு எவர் பதிவை பற்றியோ கருத்து சொல்லும் அளவுக்கெல்லாம் விசயஞானமோ, பெரிய மூக்கோ எனக்கு இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
கோவி சார்,
கடவுள் தூணிலும் இருக்கான், துரும்பிலும் இருக்கான். ஏன் ஆன்மீக வாந்திகள் கோயிலையும் தர்காஅவையும் சர்ச்சினையும் தேடி ஓடனும்? அது அவங்க நம்பிக்கை. அந்த கோயிலில்தான் இருக்கார்னு ஒரு இறை நம்பிக்கை.
அதேபோல பெரியார் சிலைமேல தீவிர பற்றும் பாசமும் கொண்டவர்கள் பகுத்தறிவு வாதிகள்.
எனவே பெரியாரை கொடுஞ்சொல் சொல்பவரும் சிலையை உடைத்தவர்களும் துச்சமென மதிக்கத் தகுந்தவரே!
// விடாதுகருப்பு said...
கோவி சார்,
கடவுள் தூணிலும் இருக்கான், துரும்பிலும் இருக்கான். ஏன் ஆன்மீக வாந்திகள் கோயிலையும் தர்காஅவையும் சர்ச்சினையும் தேடி ஓடனும்? அது அவங்க நம்பிக்கை. அந்த கோயிலில்தான் இருக்கார்னு ஒரு இறை நம்பிக்கை.
அதேபோல பெரியார் சிலைமேல தீவிர பற்றும் பாசமும் கொண்டவர்கள் பகுத்தறிவு வாதிகள்.
எனவே பெரியாரை கொடுஞ்சொல் சொல்பவரும் சிலையை உடைத்தவர்களும் துச்சமென மதிக்கத் தகுந்தவரே!
//
திரு வி.க,
பதிவை ஒட்டிய கருத்துக்கள் நன்றி !
கோவிகண்ணன். அந்த இணைப்புக்கு நன்றி. அங்கு எங்குமே, நேசக்குமாரின் பின்னூட்டம் உட்பட எங்கும் சிலைவழிபாடு கீழானது என்று சொன்னதாக தெரியவில்லை.
இந்து மதத்தை பொறுத்தமட்டில் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் இறை சிலையில் இல்லாமலா இருக்கும்? ஆகவே உருவ வழிபாடு என்பது இந்து தத்துவத்துக்கு முரணானது அல்ல. மேலும் இந்து தத்துவத்தில் கீழான வழிபாடு மேலான வழிபாடு என்று ஏதும் இல்லை.
மேலும் பெரியார் சிலையை பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியான ஒன்றுதான்.
பெரியார் பெரியார் சிலையில் இல்லை. ஆகவே பெரியார் சிலையை உடைப்பது பெரியாரை உடைத்ததாகாது என்று உங்களுக்கும் தெரியும் உடைத்தவர்களுக்கும் தெரியும். ஆக அது ஒரு குறியீடு.
ஆனால் குறியீடு இல்லாமல் பேசவோ எழுதவோ ஏன் சிந்திக்கவோ கூட முடியாது.
அல்லா, பிரம்மம், கோவிகண்ணன் என்ற பெயர் ஆகிய அனைத்தும் அப்படிப்பட்ட உருவங்களே.
அல்லா என்ற பெயரில் இறைவனை வணங்குவதும் ஒரு உருவ வழிபாடுதான்.
மேலும் எழுதுவது, இந்த பதிவின் நோக்கத்தையும் திசையையும் திருப்பிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
நன்றி
எழில்
//நிர்வாணம் என்றால் சூனியம் எதுவுமே இல்லாதது. ப்ரம்மம் என்றால் எங்கும் நிறைந்திருப்பது. ஆழ்ந்து பார்த்தால் சூனியம் ப்ரம்மம் எல்லாம் ஒன்றுதான் இரண்டிலுமே எங்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும். ஒன்று இல்லாதது மற்றொன்று இருப்பது, அதை மக்கள் ஏற்றுக் கொண்டால் புத்தமதத்தை அழிக்க முடியாது என்பதால் சங்கரர் செளந்தர்ய லகரி பாடல்களை உருவவழிபாட்டை திரும்ப கொண்டுவருவதற்காக எழுதினார். சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது//
சங்கரர்க்கு முன்பாக பகவான் கண்ணனே பகவத் கீதையில் "பிரம்ம நிர்வாண" எனும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் ஐயா.
சூன்யம் என்கிற நிர்வாணம் என்கிற இல்லாமையும் பரப்பிரம்மம் என்கிற இருப்பதும் பிரிக்க இயலாதது.
எளிய உதாரணமாக ரூம் எனப்படும் அறை என்பது இல்லாமை என்கிற வெற்றிடத்தை இருத்தல் என்கிற சுவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
உங்களது சுபாவத்துக்கு/உணர்தலுக்கு ஏற்றபடி வெற்றிடத்தை உணர்கிறீர்களா இல்லை வெற்றிடத்தை நிர்ணயிக்கும் சுவர்களை உணர்கின்றீர்களா என்பது!
இந்துமதத்தின் உபநிடங்களின் உயரிய சாராம்சமாகிய பகவத் கீதை இறைநிலையை இல்லாமை-இருத்தல் இரண்டையும் உள்ளடக்கிய
"பிரம்மநிர்வாணம்" என்றே கூறுகிறது!
பெரியார் சிலை திறந்து வைக்கப்பட்டுவிட்டது !
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி !
பெரியாழ்வார் மீண்டும்!
அரங்கன் முன்னே!
மறுபடியும்!
// SK said...
பெரியாழ்வார் மீண்டும்!
அரங்கன் முன்னே!
மறுபடியும்!
//
எஸ்கே ஐயா,
அப்படியே சிலையை சேதப்படுத்தியவர்கள் விழுந்து கும்பிடலாம் என்றும் அது சரி என்று சொன்னவர்கள் பாவ நிவர்த்தி பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லி இருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் !
கோவி.கண்ணன்,
அருமையான பதிவு,
// பெரியாரை எதிர்ப்பவரகள் எதற்காக அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பெரியாரைப் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். இவர்கள் எதிர்க்காவிட்டால் எனக்கும் பெரியாரைப் பற்றி தெரிந்திருக்காது //
எனக்கும் இதுவேதான். சமீப நாட்களில் பெரியார் பற்றிய பதிவுகளை அதிகம் தமிழ்மணத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு கண்டிப்பாக பெரியாரை எதிர்ப்பவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
//எங்கள் முப்பாட்டனார் செய்த தீண்டாமைக்கு எங்களை ஏன் திட்டுகிறாய் //
எனக்கு என் ஜாதியை எவ்வளவு திட்டினாலும் கோபம் வராது. தாழ்த்தபட்டவர்களை மதியாத/மேலுயர்த்த மறுக்கும்/இந்த அவல நிலைக்கு தள்ளி விட்ட/ அதே கருத்துகளை தாங்கி பிடித்து கொண்டு இருக்கும் எந்த ஒரு மனிதனும்/ஜாதியும்/மதமும் மதிகப்பட வேண்டியவர்களே இல்லை. இதில் எனது மூதாதையர்கள் தவறு செய்திருந்தால் உண்மையான மனிதாபிமானம் கொண்டவர்களுக்கு அவர்கள் மீது கோபம் மட்டுமே வரும்.
பெரியார் கருத்துகளின் வளர்ச்சி பொருக்காதவர்கள் பொருமும் வரை, பெரியாரின் கருத்துகள் மேலும் வலுப்பெரும்.
நன்றி
வசந்த்
பெரியாராழ்வாரைப் புனிதராக்கிய அவர் சீடர்களும் விழுந்து கும்பிடலாம்.
மனிதரையும் வணங்குபவரெல்லாம் ஆத்திகரே!
அவ்வகையில் ஆத்திகத்திற்குப் போராடிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
ஆலயத்திற்குள் நுழைய உதவிய ஆயிரமாயிரம் தொண்டரில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, அதனைப் பறைசாற்றும் விதமாய் அங்கேயே சிலை வடிவாய் அரங்கனை வணங்கி நிற்கும், பெரியாழ்வாருக்கு என் பணிவான வணக்கங்கள்!
//sk said.. பெரியாராழ்வாரைப் புனிதராக்கிய அவர் சீடர்களும் விழுந்து கும்பிடலாம்.
மனிதரையும் வணங்குபவரெல்லாம் ஆத்திகரே!
அவ்வகையில் ஆத்திகத்திற்குப் போராடிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
ஆலயத்திற்குள் நுழைய உதவிய ஆயிரமாயிரம் தொண்டரில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, அதனைப் பறைசாற்றும் விதமாய் அங்கேயே சிலை வடிவாய் அரங்கனை வணங்கி நிற்கும், பெரியாழ்வாருக்கு என் பணிவான வணக்கங்கள்!//
எஸ்கே ஐயா,
பெரியாரை ஆத்திகர் என்று சொல்வது உங்களது தனிப்பட்ட நம்பிக்கை ! அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இங்கு பெரியார் ஆத்திகரா? நாத்திகரா ?என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.
ஆத்திகரர்கள் நாத்திகர்களையும் ஆத்திகராகவே நினைக்கவேண்டும் நினைக்கமுடியும் என்று நானும் சொல்கிறேன். ஆத்திகம், நாத்திகம் எல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஆத்திகர்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
ஆகவே பெரியாரை துவேசிப்பவர்களுக்கு தாங்கள் உணர்ந்ததை வைத்து அறிவுரையாக சொல்லி ஆண்டவனிடம் மண்ணிப்பு கேட்கச் சொல்லுங்கள் !
உண்மைதான் கோவி கண்ணன்.
மறத்திற்கும் அஃதே துணை
பெரியாரைநான் துவேஷிக்கவில்லை.
//பெரியாரை துவேசிப்பவர்களுக்கு தாங்கள் உணர்ந்ததை வைத்து அறிவுரையாக சொல்லி ஆண்டவனிடம் மண்ணிப்பு கேட்கச் சொல்லுங்கள் ! //
அதைத்தான் ஆத்திகருக்கு நீங்கள் கூறி விட்டீர்களே!
பிறகு நான் எதற்கு?
அதனால்தான், நீங்கள் ஆத்திகர்க்குச் சொன்னது போல, பெரியாழ்வார் பெயரைச் சொல்லி கல்லெறிபவர்களை, சாமி சிலைகளை உடைப்பவர்களை, மண்டையை உடைப்பவர்களை, அதற்கும் மன்னிப்பு கேட்கச் சொன்னால்,
உங்களது நடுநிலைமை விளங்கும்!
அதனால்தான், அதைச் சொன்னேன் உங்களிடமும்!
நீங்களும், வழக்கம் போல், அடுத்தவரிடம் சாட்டிவிட்டு அக்கடா என உட்கார்ந்து விட்டீர்கள்!
இனி இது பற்றி உங்களிடம் இதைப் பற்றிப் பேசி பயனில்லை, ....எனக்கு!
உங்கள் நடுவுநிலைமை புரிகிறது!
வணக்கம்!
கோவி. கண்ணன்,
சிறப்பான பதிவுக்கும், செறிவான பதில்களுக்கும் நன்றி.
கடந்த வார பூங்காவில் வெளிவந்த யை வாசித்திருப்பீர்கள். இரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்: "பெரியார் சிலை வழிபாட்டிற்குரியதல்ல, அது வழிகாட்டுவதற்குரியது". உண்மையான பெரியார் ஆதரவாளர்கள் அவரை வழிகாட்டியாகத் தான் கொள்வர். பெரியார் சிலையும் அந்த மாபெரும் வழிகாட்டியின் குறியீடே.
எஸ்கே அவர்கள் சந்தடி சாக்கில் பெரியாரை பெரியாராழ்வார் ஆக்குவதும், பெரியார் ஆதரவாளர்களை மனிதர் சிலையை வழிபடும் ஆத்திகர்களாக சித்தரிக்க முயல்வதும் விஷமத்தனமானது.
//விஷமத்தனமானது//
// SK said...
சின்ன வயசுலேர்ந்து நமக்கெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது, "இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே!
அக்கண்ணோட்டத்தில் பார்த்தால், பெரியார் சிலையை இங்கு வைத்தது பொருத்தமே!
இருவிதக் கருத்துகளும் இந்நாட்டில் இருக்கின்றன எனபதை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒரு அபூர்வ சின்னம் இது!
கடவுளை மறுத்த பெரியார், அரங்கன் கோவில் முன் நின்று, அறிவுரை வழங்குவதாக கழகக் கண்மணிகளும்,
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், இன்று சிலையாக கால் கடுக்க அரங்கன் முன் நின்று பிராயச்சித்தம் தேடிக் கொள்வதாக ஆத்திக அன்பர்களும் எண்ணிக்கொண்டு அவரவர் வழியில் செல்லலாம்.!!
சண்டையை நிறுத்துங்கப்பா!
போய், பொழைக்கற வழியைப் பாருங்க!
சிலையை உடைக்கவும் வேண்டாம்!
பூணுலை அறுக்கவும் வேண்டாம்!
:))//
மதிப்புற்குரிய திரு. சுந்தரமூர்த்தி,
மேற்கண்ட பின்னூட்டம் நான் செந்தழலாரின் பதிவில் டிசம்பர் 8-ம் தேதி இட்டது.
ஆத்திகனாகிய நான் பெரியாரை ஒரு ஆழ்வாராகவே பார்க்கிறேன்.
அன்றொரு நாள் இராமானுஜர் கோவில் மேல் ஏறி, நாராயணன் நாமம் சொல்லி, அரிசனங்களையும் வைணவராக்கி, கோயிலுக்குள் செல்ல வைத்தார்.
பெரியாரும் அதே போலப் போராடி, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்லப்படுபவரையும், ஆலயப்பிரவேசம் செய்வதில் முதன்மையில் ஒருவராய்த் திகழ்ந்தார்.
அவரை நான், ஆத்திகனாகிய நான், பெரியாழ்வாராகப் பார்ப்பது என் உரிமை.
இதை விஷமத்தனமானது எனச் சொல்வது வருந்தற்குரியது!
வணக்கம்.
Post a Comment