Wednesday, December 27, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் ...

ன்னு ஒரு பழமொழி சொல்லி பனை மரத்தில் நெறி கட்டும் என்று சொல்லுவார்கள். அதாவது எங்கேயே நடக்கிற நிகழ்வு மூலம் வேறு இடத்தில் பாதிப்பு இருக்கும். நேற்று (26/டிச/2006 கவனிக்க அதே டிச 26) தைவானில் நடந்த நிலநடுக்கம் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. சிங்கப்பூரில் நிலநடுக்கம் உணரப் படவில்லை. ஆனால் கடல் வழியாக சென்ற அதிவேக இணைய தொடர்பு நுண்ணிலை கம்பிகள் ( பைபர் ஆப்டிக்ஸ்) நில நடுக்கத்தால் அறுந்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் இணைய தொடர்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இணைய தளங்களுக்கு செல்ல முடியவில்லை.

சிங்டெல் நிறுவன தகவல் படி இணைப்பை சரிசெய்ய ஒரு வார காலம் கூட ஆகலாம் என்று சொல்லுகிறார்கள்.

வீட்டுக் கணனிகளுக்கு ஒர அளவுக்கு இணைப்பு கிடைக்கிறது. அதுவும் மிக குறைவான வேகத்தில் தான். ஜிமெயில் முற்றிலும் தொடர்பற்றதாக இருக்கிறது. அலுவலகங்களுக்கான இணைப்பில் தமிழ்மணத்தை கூட பார்க்க முடியவில்லை.

மற்றபடி ஆஸ்திரேலியா, ஹாங்காங் மற்றும் உள்ளூர் இணைய தளங்களுக்கு செல்வதில் குறைபாடு இல்லை.

ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் தொலைவு ப்ராக்சி சர்வர் இருந்தால் pkblogs போல ஒன்று இருந்தால் ஒரு வார காலத்திற்கு ஓட்டலாம். pkblogs அலுவகத்தில் வேலை செய்யவில்லை.

இணையம் இல்லையென்றால் எல்லாமும் முடங்கும் என்ற நிலைதான் அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு இப்போது எற்பட்டு உள்ளது.



6 : கருத்துக்கள்:

said...





தூக்கம் வருது...!!!

said...

அடடா! பின்னூட்டத்துல படம் போடச் சொல்லிக் கொடுத்ததோட...போட்டும் காட்டுறீங்களே..அடடா! :-)

said...

பதிவை விட பி.ஊ. படம் சூப்பர்!

சிக்கிரம் குணமாக வேண்டுகிறேன்.

வேற ஒண்ணும் பண்ண முடியலேன்னா, போய் தூங்க வேண்டியதுதானே!
:))

said...

// Mr.S.K Said:வேற ஒண்ணும் பண்ண முடியலேன்னா, போய் தூங்க வேண்டியதுதானே!//

அதிகமாகத் தூங்கிப் புகழ் பெற்றவர் நம் முன்னாள் பிரதமர் தேவ கெளடா.
அதிகமாக விழித்திருந்து புகழ் பெற்றவர்
நம் கோவியார்.

தமிழ்மணத்தில் அதிகமாகப் பின்னூட்டமிடுகிற தர்மவானும் அவர்தான்.

அதுதான் வீட்டு இணைப்புகளெல்லாம்
வேலை செய்கிறதாமே!

அவருக்கு எப்படித்தூக்கம் வரும் - எஸ்.கே சார்?

SP.VR.சுப்பையா

said...

//அதுதான் வீட்டு இணைப்புகளெல்லாம்
வேலை செய்கிறதாமே!

அவருக்கு எப்படித்தூக்கம் வரும் - எஸ்.கே சார்?

SP.VR.சுப்பையா //
சுப்பைய்யா ஐயா !

சரியாத்தான் சொன்னிங்க !
:)

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்