Thursday, December 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அழகுக்கு மறுபெயர் மெளனம் !



அழகுக்கு மறுபெயர் மெளனம் !

ஆர்பரித்தலை விட மெளனம்
அழகாகப்படுகிறது எனக்கு !
தீண்டும் தென்றல்,
மழலையின் சிரிப்பு,
பொன்னிற விடியல்,
மஞ்சள்நிற மாலை,
அமைதியான நீரோடை,
மெலிதாக தழையசைத்து
தலையசைக்கும் பசுமை,
மரத்தடியில் உதிர்ந்து
இரைந்த பூக்கள், பூ
இதழ்மேல் பட்டாம்பூச்சி,
பகலில் பைங்கிளி,
இரவில் மின்மினி,
வண்ணம் கலைந்து
மறைந்து கொண்டிருக்கும் வானவில்,
அமைதியாக நகர்ந்து செல்லும் மேகங்கள்,
வயல்வெளிகளில் ஒற்றையடிப் பாதை,
இன்னும் எத்தனையோ
அழகு அத்தனைக்கும்
மறுபெயர் மெளனம் !

13 : கருத்துக்கள்:

said...

தலைப்பே கவிதை...இதுக்குமேல உள்ளே எதுக்கு தனியா கவிதை ???

said...

ஆர்பறித்தலை// -- ஆர்ப்பரித்தலை

//மெலிதாக தழையசைத்து
தலையசைக்கும் பசுமை//

தழையசைத்துத் தலையசைக்கும் -- அழகான , வித்தியாசமான சொல்லாடல்!

said...

//செந்தழல் ரவி said...
தலைப்பே கவிதை...இதுக்குமேல உள்ளே எதுக்கு தனியா கவிதை ???
//

ரவி,

தலைப்பைத்தவிர வேரெதுவும் படிக்கலை என்று நாசுக்காக சொல்வதா இது !
:))

said...

//சேதுக்கரசி said...

தழையசைத்துத் தலையசைக்கும் -- அழகான , வித்தியாசமான சொல்லாடல்!

9:33 PM //

சேதுக்கரசி !

பாராட்டுக்கு மிக்க நெகிழ்ச்சி.
பிழையை சுட்டியதற்கு நன்றி !

said...

அழகான கவிதை....

ரம்மியமாக வந்திருக்கிறது...

said...

மென்மையான, அழகு கவிதை கண்ணன்

said...

JTP கவிதையெல்லாம் படிபிங்களா ?
:)
இப்ப நல்லிரவை தாண்டி இருக்குமே அங்கே !

கிறிஸ்துமஸ் வாழ்த்தகள் பிரபு !

said...

கோவி,

மௌனமானக் கவிதை அழகு!!!

இங்கப் பாருங்க இதே மாதிரி ரெவ்வெண்டு வார்த்தையாக் கோத்து நானும் ஒரு கவிதை பாதி எழுதி வச்சிருக்கேன்... நீங்க முந்திக்கிட்டீங்க :(((

( ஆனா எனக்கு இந்த மாதிரி பலதையும் ரசிச்சு எழுதத்தெரியாது, எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் தான் அதுல இருக்கும் ;) )

said...

//அருட்பெருங்கோ said...
கோவி,

மௌனமானக் கவிதை அழகு!!!

இங்கப் பாருங்க இதே மாதிரி ரெவ்வெண்டு வார்த்தையாக் கோத்து நானும் ஒரு கவிதை பாதி எழுதி வச்சிருக்கேன்... நீங்க முந்திக்கிட்டீங்க :(((
//

அருள்,
இது பாராட்டா, பரிகாசமா ஒன்னும் புரியல !
:)))

said...

//செந்தில் குமரன் said...
அழகான கவிதை....

ரம்மியமாக வந்திருக்கிறது...
//

பாரட்டுக்கு நன்றி நண்பரே !

said...

கண்ணன்,
மவுனம் அழகு. நீங்க அதை சொன்னதும் அழகு மனசே சந்தோசமாக இருக்கு.

(ஆங்கில தட்டச்சு தமிழச்சில் மாற்றினேன் - கண்ணன்)

said...

'என் மௌன மொழி உனக்குப் புரியவில்லையாயின்
நான் பேசினாலும் உனக்குப்புரியப் போவதில்லை'
என்று எங்கேயோ ஒரு கவிதைப் படித்த ஞாபகம்.

அழகு மௌனமாய் சொன்னவைதானோ அவ்வார்த்தைகள்.

நல்ல கவிதை. நல்ல மொழி குறிப்பாக
சேதுக்கரசி சுட்டிய 'தழையசைத்து தலையசைக்கும் பசுமை'

said...

arumaiyaana kavidhai....keep goin frend