Tuesday, December 26, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

கடன் பெற்றார் நெஞ்சம் (மகாலெட்சுமி)

மகாலெட்சுமியின் தந்தையிடம் பேசிய போது, "என் மகளைப் படிக்கவைக்க கிடைக்கப் போகும் பணம் இனாமாக வேண்டாம் சார். கடனாக கிடைத்தால் போதும். இயன்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னார். வறுமையிலும் தன்மானத்தோடு வாழ நினைக்கும் அந்த தமிழனைப் பற்றி பெருமைபட்டுக்கொண்டேன்.

ஆகவே, வலைப்பதியும் நண்பர்களே! கிடைத்த பணத்தை அவருக்கு வட்டி இல்லா கடனாக வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். அவர் சிறுகச்சிறுக திரும்பக்கொடுத்த பின், உண்மையில் அவதிப்படும் வேறு யாருக்கேனும் அந்தே பணம் மீண்டும் உதவ பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.

மேலும் படிக்க ...

4 : கருத்துக்கள்:

Anonymous said...

மகாலட்சுமியை விமர்சித்த நண்பர்களுக்கு மிகச்சரியாக பதிலடி கொடுத்திருக்கிறார் அந்த எளிய தந்தை.அவரது தன்மானத்திற்கு தலை வணங்குகிறேன்.

Osai Chella said...

நான் வழி மொழிகிறேன்!
இணைய நாடோடி செல்லா

VSK said...

நல்ல எண்ணங்களினின்று பிறக்கும் நல்ல முயற்சிகள் தோற்பதில்லை!

நன்றி, கோவியாரே!

சேதுக்கரசி said...

//அவர் சிறுகச்சிறுக திரும்பக்கொடுத்த பின், உண்மையில் அவதிப்படும் வேறு யாருக்கேனும் அந்தே பணம் மீண்டும் உதவ பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.//

இது நல்ல யோசனையே.