Friday, December 08, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

காதல் வந்துடுச்சி ... (தே.கூ.போட்டி)

லாரி வந்து நிற்கும் சத்தம், சன்னல் வழியாக பார்த்தேன் மாடியில் படித்துக் கொண்டிருந்த என் கவனம் சட்டென சிதற...

எதிர்த்தவிட்டுக்கு புதிதாக லாரி சாமாண்களுடன் வந்திருந்தது ஒரு குடும்பம், ஒரு தொப்பையுடன் சொட்டை தலை அப்பன் , அவர் மனைவி, அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்பது போல் அப்படி ஒரு மகள்.

'ஆக, நான் தேடிக் கொண்டிருந்த சிட்டுக் குருவி இதுதானோ ? ம் மடக்கிட வேண்டியதுதான்' மனதுக்குள் மல்லிகை பூ வாசததுடன் பூத்தது.

அன்று இரவு 'அவள் எனக்குத்தான், அதற்கு என்ன வேலையோ அதை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்' என்று பலவாறு நினைத்துக் கொண்டு புரண்டு படுத்திருந்தேன்.

மறுநாள் காலையில்,

"அம்மா, எதிர்த்தவீட்டில் யாரோ புதுசா குடிவந்திருக்காங்க போல..."

"ஒரு பொண்ணு வந்திருக்கா, பாத்திருப்பியே... அவள் இன்னிக்கு காலையில் கிளம்பி போய்டா ... பழைய ஊரில் ஒரு வாரம் ஹாஸ்டலில் தங்கிருந்திட்டு சனிக் கிழமைதான் வருவாளாம்"

'அம்மா நான் என்ன கேட்கப் போகிறேன் என்று எப்படி நினைத்தார்கள் ...?' நினைத்து

"ஹி ஹி அப்படியா ...? " அசடு வழிந்தேன்.

அன்று மாலை,

'மச்சி சூப்பர் பிகரு விட்டுக்குப் பக்கத்தில் குடி வந்திருக்கு' அடுத்தநாள் நண்பர்களிடம் சொன்னேன்

'டேய்... பொண்ணுங்களைப் பார்த்தாலே பொண்ணுமாதிரி வெட்கப் படுகிற நீ பிகருன்னு சொல்றது ஆச்சிரியமாக இருக்கிறது' காலாய்த்தார்கள், ரசித்தேன்

'அட... ஆயிரம் பொண்ணப் பார்த்தாலும், மனசுக்கு பிடிச்சிருந்தாதானே நினைக்க முடியும் ?, இது தான் நான் தேடிய ஆளாக இருக்கும்'

'ம்... ஒனக்கும் லவ் வந்திருக்கு.. நடத்துடா, ஆனா கர்சிப் இல்லாமல் போய்விடாதே ?'

'ஏன் ? ஏன் ? போனா என்னவாம் ?"

"சளி மூக்குன்னு சொல்லிடப் போவுது"

**************

அவுனுங்க சொல்றதிலும் விசயம் இருக்கு,

சின்ன வயசிலேர்ந்தே எனக்கு மூக்கில் சளி அவ்வப்போது கொட்டும், ஸ்கூல் படிக்கிற காலத்திலேர்ந்து பசங்க அதை வச்சு

'சளி மூக்கன் வரான்டா, டேய் சளி மூக்கு'
என்று கண்டபடி கிண்டல் செய்து வெறுப்பேற்றுவார்கள், அப்படிச் சொல்லும் போது கோபம் மண்டைக்கு ஏறி அடித்து துவைத்துவிடுவேன். ஆனாலும் அவுனுங்க இந்த நாள் வரைக்கும் திருந்தினதா தெரியலை.'செல்வா' என்கிற என்பெயரை அவர்கள் மறந்தும் நினைப்பதில்லை. அதும் பொண்ணுங்களுக்கு முன்னால் கிண்டல் பண்ணினால் தொலைந்தார்கள். பத்தடி தள்ளி நின்னு சொல்லிட்டு ஓடிடுவானுங்க.

இவனுங்கலெள்ளாம் எனக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே நண்பர்கள், நாங்கள் ஐந்தாம் வகுப்பு படித்தபோது

ப்ரியான்னு சப்இன்ஸ்பெக்டரோட பொண்னு, அதை எல்லா பசங்களும் 'தக்காளி, தக்காளி' ன்னு கூப்பிடுவாங்க, நானும் கூப்பிடுவேன்

எனென்றால் மதியம் சாப்பிட்ட பிறகு ப்ரியா தினமும் ஒரு தக்காளியை பச்சையாக தின்னும்.

ஒரு நாள் அது வீட்டுப்பாடம் எழுதாம வர டீச்சர் திட்டினாங்கன்னு ... அந்த பொண்ணு அழ,

இண்டர்வல் நான் 'டேய் அழுகின தக்காளிடா வருதுடா' என்று சொல்ல, அந்த பொண்ணுக்கு பயங்கர கோவம்

"டேய் மூக்குசளி, இருடா எங்க அப்பாகிட்ட சொல்றேன்" என்றது

எனக்கு பதிலுக்கு கோபம் வர, அவள் கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் அறைந்தேன், அதன் பிறகு என்னை டீச்சர் சாயங்காலம் வரைக்கும் பெஞ்சு மேல் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் நான் பயந்து கொண்டு பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டேன்.

மறுநாள் அவளோட இன்ஸ்பெக்டர் அப்பா ஸ்கூலுக்கே வந்தாராம், டீச்சரிடம் பசங்கள ஒழுங்க நடந்துக்கச் சொல்லுங்க, கன்னத்தில் விரல்கள் பதிந்து அவளுக்கு ராத்திரியெல்லாம் ஜுரம், நாளைக்குத் தான் ஸ்கூலுக்கு வருவா' என்று சொல்லிவிட்டு சென்றார் என்று பசங்க சொன்னானுங்க.

டீச்சர் எனது பெற்றோருக்கு சொல்லி அனுப்ப, அடுத்த நாள் பலமான சாத்துப்படி எனக்கு வீட்டில் நடந்தது.

அதன் பிறகு பிரியாவும் நானும் பேசிக் கொள்வது இல்லை.

ஐந்தாம் வகுப்பு முடிந்தும் அவள் அப்பாவுக்கு மாற்றலாகி வேறு எதோ ஊருக்கு சென்றுவிட்டாள். இந்த நிகழ்ச்சி காலேஜ் வரை என்னுடன் படிக்கும் சில நண்பர்களுக்கு தெரியும். அவுனுங்கதான் அடிக்கடி அதைச் சொல்லி சொல்லி என்னை 'சளி மூக்கன்' என்று நிரந்தர பெயர் ஆக்கிவிட்டனர்.

**********

'டோய் என்னடா யோசிக்கிற...?'

'அடப்போடா, நான் அவளுக்கு எப்படி லவ் லெட்டர் கொடுக்கிறதுன்னு யோசிச்சிக் கிட்டே இருக்கிறேன்'

"டேய் மூக்கா, லவ் லெட்டரெல்லாம் பழைய டெரெண்ட், அதை விட்டு விட்டு வேறு எதாவது முயற்சிப் பண்ணு"

ஒரு வாரம் ஆகியது.

வைரமுத்துவின் காதல் பற்றிய கவிதைகள் நினைவுக்கு வந்தது. கண்ணாடி முன் நின்று எனக்குள்ளே சிரித்தேன்.

அன்று சனிக்கிழமை.

எதிர்த்தவீட்டை மாடியில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சீரியஸ் ஆக படிப்பதாக அவ்வப்போது காஃபி, ஸ்னாக் உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. அவளோட அம்மா மட்டும் மதியம் எங்க அம்மாகிட்ட வந்து எதோ பேசிவிட்டு சென்றதாக தெரிந்தது. அம்மாவிடம் 'அவ வீட்டில் தான் இருக்கிறாளா, கேட்கலாமா ... ம் ஹூம் வேண்டாம்... அப்பறம் வழியிரேன்னு நினச்சிடுவாங்க'

மாலை ஆறு மணிக்கு, கீழிருந்து குரல் எனக்கு மாடிக்கு கேட்டது

'செல்வா ! எதிர்த்த வீட்டில் போன் இன்னும் வரலையாம், அந்த அம்மா வந்து சொல்லிட்டுப் போச்சு ....அவுங்க வீட்டுப் பொண்ணு ஒரு போன் பண்ண நம்ம வீட்டுக்கு வரும், நான் பக்கத்து தெரு பிள்ளையார் கோவில் வரைக்கும் போய்டு வந்துவிடுகிறேன், ரொம்ப அசடு வழியாமல் ... நல்ல பிள்ளையாக ... அந்த பொண்ணு வந்தா நடந்துக்க ' என்று சொல்லிவிட்டு அம்மா கிளம்பி விட்டார்

'ஆக சரியான சந்தர்பம், இன்னிக்கு எப்படியாவது அவகிட்ட பேசி ப்ராகெட் போட வேண்டியதுதான், நம்ம வீட்டில் தான் காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு இல்லையே' என நினைத்துக் கொண்டே ... 'என்ன பேசலாம்' என்று பலவாறு சிந்தனையில் இருந்தேன்.

காலிங் பெல் அடித்தது, அதற்காகவே காத்திருந்த எனக்கு கோவில் மணி ஓசையாக கேட்டது. இறங்கி வந்து

கதவை திறந்தேன், சுடிதாரில் அவள்... வெட்கச் சிரிப்பு சிரித்தாள்

'படியும் போல' மனதுக்குள் நினைத்தேன், அடுத்த நொடியில்

"டேய் சளி மூக்கா... என்னைத் தெரியல... நான் தான் உன் கூட ஐந்தாம் வகுப்பு படித்த ப்ரியா' என்று ஒருவிரலைக் காட்டி கையை என்னை நோக்கிக் காட்டி கலகலவென சிரித்தாள்.

ஆச்சிரியத்தில் கண்களை விரித்த எனக்கு சுதாரிப்பதற்குள் நொடிகள் கடந்தது..

என்னைப் பார்த்து சிரித்தது வெட்கச் சிரிப்பல்ல... கேலிச் சிரிப்புதான் என்பதே.... சாமாளித்து அசடு வழிவதற்குள்

பதிலுக்கு காத்திராமல் டெலிபோனை எடுத்து டயல் செய்தவளின் முகத்தில் இன்னும் இருந்தது அந்த கேலிச் சிரிப்பு.

_______/\________

17 : கருத்துக்கள்:

said...

GK,

Ha Ha Ha....

Excellent!! Excellent!! Excellent!!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!


பி.கு.
சொந்த அனுபவமா?!!

said...

// Sivabalan said...
GK,
Ha Ha Ha....
Excellent!! Excellent!! Excellent!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
பி.கு.
சொந்த அனுபவமா?!!
//

சிபா,
பாராட்டுக்கு நன்றி !

அனுபவம் கண்டது தான்
:)

said...

ம்... சூப்பர்தான்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

//'படியும் போல' மனதுக்குள் நினைத்தேன், அடுத்த நொடியில்//

நல்ல அனுபவம் போல...

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோ வி

said...

படியும் போல வெற்றிக்கு.

வாழ்த்துக்கள்.

said...

// ஒரு குடும்பம், ஒரு ***தொப்பையுடன்*** சொட்டை தலை அப்பன் //
இதைவிட வேறு க்ளூ வேண்டுமா என்ன ?

said...

அன்பவக் கதை! மிக நன்று!

வாழ்த்துக்கள் கோவியாரே!

said...

\\நாங்கள் ஐந்தாம் வகுப்பு படித்தபோது\\

ஓ.. ஓ.. அஞ்சாப்பு படிக்கும் போதே ஆரம்பிச்சாச்சா?.

அழுகுன தக்காளி நிகழ்ச்சி அருமை.

வாழ்த்துக்கள்

said...

ஹி..ஹி.. நல்ல கதயா கீது

அப்பால இன்னாபா ஆச்சு..
கத அம்போன்னு நிக்கற மாதிரி... லவ்வும் அம்போன்னு பூடுச்சா...

said...

தக்காளி சாப்பிட்டா அதிகம் சளி பிடிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ;)))

நல்லாருக்கு கதை!!!

said...

// சத்தியா said...
ம்... சூப்பர்தான்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//

சத்தியா அவர்களே !
பாராட்டுக்கும் வாழ்த்துக்கு நன்றி !

said...

//மங்கை said...
நல்ல அனுபவம் போல...

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோ வி
//

மங்கை,

அனுபவம் ... பார்த்ததுண்டு !
ஹி ஹி

பாராட்டுக்கு நன்றி !

said...

பொண்ணு ப்ரியாதான் குறும்பு.
உங்கள் எழுத்தை சுவாரசியமாய் படிக்க முடிகிறது.
நல்ல கதை. அனுபவத்திலிருந்தா?

said...

//'செல்வா ! எதிர்த்த வீட்டில் போன் இன்னும் வரலையாம், அந்த அம்மா வந்து சொல்லிட்டுப் போச்சு ....அவுங்க வீட்டுப் பொண்ணு ஒரு போன் பண்ண நம்ம வீட்டுக்கு வரும், நான் பக்கத்து தெரு பிள்ளையார் கோவில் வரைக்கும் போய்டு வந்துவிடுகிறேன், ரொம்ப அசடு வழியாமல் ... நல்ல பிள்ளையாக ... அந்த பொண்ணு வந்தா நடந்துக்க ' என்று சொல்லிவிட்டு அம்மா கிளம்பி விட்டார் //

இந்த மாதிரி அம்மா மட்டும் ஏன் எங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது?

வெற்றிபெற வாழ்த்துக்கள்...

said...

//முஸ்லிம் said...
படியும் போல வெற்றிக்கு.

வாழ்த்துக்கள்.
//

முஸ்லிம் அன்பரே,

வாழ்த்துக்களுக்கு நன்றி !

said...

//பாலராஜன்கீதா said...
// ஒரு குடும்பம், ஒரு ***தொப்பையுடன்*** சொட்டை தலை அப்பன் //
இதைவிட வேறு க்ளூ வேண்டுமா என்ன ?
//

பாலராஜன்கீதா !

முதலிலேயே க்ளூவை கண்டுபிடிச்சிட்ட்ங்களா ? பாராட்டுக்கள் !

said...

//நாமக்கல் சிபி said...
அன்பவக் கதை! மிக நன்று!

வாழ்த்துக்கள் கோவியாரே!
//

சிபியாரே,

ஓட்டும் மறந்திடாமா போட்டுடுங்க !
நன்றி !