Sunday, December 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பின்னூட்டத்தில் படம் போடுவோம் வாங்க !

சென்ற இடுகையில் பின்னூட்டத்தில் படம் போட முடியும் என்று சொல்லிவிட்டு இருந்தேன் எவ்வாறு என்று இப்போது பார்ப்போம்.

ப்ளாகர் உதவியில் டாக்குமண்ட் செய்யாமல் ப்ளாக்கர் விட்டு வைத்திருப்பது பின்னூட்டத்தை திருத்துதல் (comment edit) என்ற வழிமுறை.

அதற்கான வழிமுறை வா.மணிகண்டனின்
பேசலாம் வலைப்பூவில் இருக்கிறது.

அதாவது பின்னூட்டம் மாற்றுதல் / திருத்துதல் (comment edit) என்ற வழிமுறை மூலம் பின்னூட்டத்தில் படங்களை இணைக்க முடியும்.

அது எவ்வாறு என்று பார்ப்போம்.

1. அவரவர்களுடைய வலைப்பூவில் இதைச் செய்வது மிகச் சுலபம். மற்றவர்களுடைய இடுகைகளில் போடும் பின்னூட்டத்திற்கு பின்னூட்டமிடுபவரே படங்களை இணைக்க முடியுமா ? என்று முயன்று பார்க்கவில்லை.

2. முதலில் படம் இணைக்கவேண்டிய பின்னூட்டத்தை வெளியிடவேண்டும். அல்லது ஏற்கனவே வெளியிடப்பட்ட பின்னூட்டத்திற்கு படம் இணைக்க விரும்பினால் அதிலில் இணைக்க முடியும். (படம் பார்க்க)



3. அவ்வாறு படம் இணைக்க விரும்பும் பின்னூட்டத்தில் (Dust Bin) நீக்குவதற்கான ஐகான் (குறியீட்டுப் படம்) இருக்கும். அது தெரியவில்லை என்றால் ப்ளாக்கரில் sign-in பண்ணவேண்டும். அவ்வாறு sign-in விட்டு refresh செய்தால். நீங்கள் ப்ளாகார் கணக்கின் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் அனைத்து பின்னூட்டங்களிலும் (Dust Bin) நீக்குவதற்கான ஐகான் (குறியீட்டுப் படம்) இருக்கும். குறிப்பிட்ட பின்னூட்டத்தில் உள்ள ஐக்கானை எலிக்குட்டி இடது காதைத்திருக அழுத்தி (mouse left click) கிளிக்க வேண்டும்.

4. கிளிக்கிய உடன் பின்னூட்டம் மாற்றுதல் / திருத்துதல் (comment edit) பக்கத்திற்கு செல்லும் (படம் பார்க்க) . மேலே உரல் (url) முகவரியில் (Address) இருக்கும் delete-comment.g ? க்கு பதிலாக post-edit.g? தட்டச்சு Enter பட்டனை தட்டுங்கள்.



5. இப்பொழுது ப்ளாகரில் சரி செய்ய வேண்டிய பின்னூட்டம் காணப்படும். இங்கு பின்னூட்டத்தையும் சரி செய்யலாம், படங்களையும் இணைக்கலாம். அங்கு சென்றதும் படம் சேர்க்க உதவும் ஐகானை கிளிக் செய்து படத்தை இணையுங்கள். (படம் பார்க்க)









6. சேமிக்கப்பட்ட படங்களையோ அல்லது படங்களின் உரல் (URL) கொடுத்து, upload image பட்டனை அழுத்தவும், சரியாக upload ஆனதும். படம் இப்பொழுது முகப்பில் இப்பொழுது தெரியும் (படம் பார்க்க)



7. கடைசியாக Publish Post பட்டனை அழுத்த, பின்னூட்டத்திற்கு படம் சென்று விடும்.


8. படத்தைப் பார்பதற்கு இடுகைப் பக்கத்திற்கு சென்று பக்கத்தை refresh செய்தால் படம் இப்பொழுது பின்னூட்டத்தில்.




அவ்வளவு தான்.

பி.கு : படங்களை வெளியிடும் போது காப்புரிமை விதிகளையும், வெளியிடும் படங்களின் கண்ணியம் குறித்தும் நினைவு வைத்துக் கொள்ளவேண்டும், சிறிய படங்களாக மாற்றி போடுங்கள் பக்கம் refresh ஆகும் நேரம் குறையும்.

இனி பொன்ஸ் பக்கங்களில் யானை ஊர்வலங்களையும், நாமக்கல்லாரின் கலாய்த்தல் திணையில் கடி ஜோக்குகளை படத்துடன் பார்த்தால் என்னை அடிக்க ஓடி வராதீர்கள்.

22 : கருத்துக்கள்:

said...

வெற்றி! வெற்றி !! வெற்றி ! !!

said...

test

said...

இதைச்சொல்லி நான் கடந்த பதிவில் இட்ட பின்னூட்டம் காணவில்லையே!

said...

சொல்லித் தந்தமைக்கு மிக்க நன்றி!

said...

//சிந்தாநதி said...
இதைச்சொல்லி நான் கடந்த பதிவில் இட்ட பின்னூட்டம் காணவில்லையே!
//

சித்தாந்தி,

நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். வழிமுறைக்கான இடுகையை எழுதிவிட்டு அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று வெளியிடவில்லை. ரகசியம் அம்பலம் ஆகிவிடக் கூடாதில்ல ?
:))

said...

//ரகசியம் அம்பலம் ஆகிவிடக் கூடாதில்ல ?//

அதுவும் சரிதான்:-))

said...

பின்னூட்டத்தை திருத்தும் (படம் போடும்) பட்டனை நிரந்தரமாகவே வைத்துக்கொள்ளும் வழிமுறை பற்றி பதிவு போடலாம் என்று முன்பே நினைத்திருந்தேன். ஆனால் பலரால் தவறாகப் பயன்படுத்தப் படலாம் என்பதால் நாமாக அதை பதிவிட வேண்டாமென்று விட்டு விட்டேன். இப்போது அதைப் போடலாமா வேண்டாமா என்று நண்பர்கள் சொல்லுங்க.

said...

என் நீண்ட நால் கேள்வி இது..., விளக்கியமைக்கு நன்றிகள்.
ஆனால்.. நான் மற்றவர்களுக்கு போடும் பின்னூட்டத்தில் அதற்கு வழி இல்லைதானே? அந்த பின்னூட்டம் பிரசுரமாகிய பின் தானே எடிட் செய்து படத்தை ஏற்ற முடியும்? :(

said...

போடுங்க சிந்த நதி... போடுங்க...

said...

//பின்னூட்டத்தில் அதற்கு வழி இல்லைதானே? அந்த பின்னூட்டம் பிரசுரமாகிய பின் தானே எடிட் செய்து படத்தை ஏற்ற முடியும்? :( //

பாலபாரதி,
பின்னூட்டம் வெளியிட்டால் தான் போஸ்ட் ஐடி கிடைக்கும், அதன் பிறகு தான் எடிட் செய்ய முடியும் !

said...

//நாமக்கல் சிபி said...
சொல்லித் தந்தமைக்கு மிக்க நன்றி!
//

சிபி,

எல்லாம் பித்தானந்தாவுக்கு சமர்பணம் !
:)

said...

ஏனுங்க கோவி. மத்தவங்க பதிவில போடுற பின்னூட்டத்தை நம்மால எடிட் பண்ண முடியாதில்லீங்க அதுக்கு என்னங்க பண்ணறது?

இந்த img tag வைச்சு போட முடியுங்களா? இந்த பின்னூட்டத்தில முயற்சி பண்ணிப் பாக்கறேங்க.

img tag குடுத்தா tag அனுமதிக்க மாட்டேங்குதுங்க. வேற வழி இருக்குங்களா?

said...

//செந்தில் குமரன் said...
ஏனுங்க கோவி. மத்தவங்க பதிவில போடுற பின்னூட்டத்தை நம்மால எடிட் பண்ண முடியாதில்லீங்க அதுக்கு என்னங்க பண்ணறது?
//

செந்தில் குமரன் ...!

ப்ளாக் உரிமையாளர் மட்டுமே படம் போடவோ, பின்னூட்டத்தை திருத்தவோ முடியும் !

said...

ப்ளாகர் பேட்டால முடியலியே.
வேற வழி இருக்கா?

said...

//SurveySan said...
ப்ளாகர் பேட்டால முடியலியே.
வேற வழி இருக்கா?
//

சர்வேசன்,
ஒரு பின்னூட்டம் (comments) போட்டால், அதற்கு உடனடியாக பின்னூட்ட ஐடியை (posr id) ப்ளாக்கர் தருகிறது. பிறர் பதிவில் பின்னூட்ட ஐடியை வைத்து பின்னூட்டமிட்டவர் அவருடைய பின்னூட்டத்தை மட்டுமே நீக்க முடியும். அப்படி நீக்கினால் 'நீக்கியது பற்றிய குறிப்பு இருக்கும்' முற்றிலுமாக நீக்க வேண்டுமென்றால் பதிவின் உரிமையாளர் மட்டும் தான் நீக்க முடியும்.

பின்னூட்டத்தை திருத்த பின்னூட்ட ஐடியுடன், ப்ளாக்கர் ஐடியுடன் (blog id) தேவைப்படுகிறது. அதனால் ப்ளாக உரிமையாளர் மட்டுமே பின்னூட்டத்தை மாற்றவோ, முற்றிலும் நீக்கவோ அல்லது படம் இணைக்கவோ முடியும்.

said...

//சிந்தாநதி said...
பின்னூட்டத்தை திருத்தும் (படம் போடும்) பட்டனை நிரந்தரமாகவே வைத்துக்கொள்ளும் வழிமுறை பற்றி பதிவு போடலாம் என்று முன்பே நினைத்திருந்தேன். ஆனால் பலரால் தவறாகப் பயன்படுத்தப் படலாம் என்பதால் நாமாக அதை பதிவிட வேண்டாமென்று விட்டு விட்டேன். இப்போது அதைப் போடலாமா வேண்டாமா என்று நண்பர்கள் சொல்லுங்க.
//

நீங்கள் சொல்வது ப்ளாக்கர் கணக்கின் உரிமையாளரால் மட்டுமே செய்ய முடியும். அதனால் மற்றவர்கள் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற ஐயம் தேவையில்லை.

said...

இதனால் நம்முடைய கணக்கில் மட்டுமே செய்ய முடியும்.
இதே போல் எனது பதிவில் பின்னூட்டமிடும் ஒவ்வொருவரின் படமும் சைடில் தெரியும் script இணைத்துள்ளேன்.

said...

தெய்வமே, இதென்ன சோதனை.

ப்ளாகருக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துல சேரமாட்டேகுது.

யாராவது காப்பாத்துங்கப்பா.

சென்ஷி

said...

கண்ணா!

blogger மகனால் இதை செய்யமுடியவில்லையே கண்ணா!
மகன் என்றால் எங்கட மேமன் பாஷையில் beta என்றுதான் சொல்வார்கள்.

said...

GK,

கலக்குறீங்க..

முயற்சி செய்து பார்க்கிறேன்..

நன்றி

said...

சிபா,

said...

மேட்டர் நல்லா இருக்கே.

படம் போட்டுட வேண்டியதுதான்.

தாங்ஸ் GK.