Tuesday, December 05, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அக்குறும்பு ! (தே.கூ டிசம்பர் மாத போட்டி):

அன்று மகனின் உடைகளை துவைக்கப் போடும் போது பாக்கெட்டில் சிகரெட் தூள்கள். அதிர்ந்தாள்

'என் பையனுக்கா சிகெரெட் பழக்கம் ?' நம்ப முடியாதவாளாக யோசித்துக் கொண்டிருந்தாள்

நம்ம குடும்பத்தில் யாரும் புகைப்பிடிப்பவர்களே இல்லையே, இவனுக்கு எப்படி அதுவும் காலேஜ் பைனல் இயர் படிக்கிற பையன் படிப்பில் கவனத்தை சிதறவிட்டுவிடுவானோ ? என்று நினைத்தவளாக,

சரி இப்போதைக்கு விட்டுவிடுவோம், இது தொடர்ந்தால் கணவரிடம் சொல்ல வேண்டியதுதான் என்று நினைத்தபடி பெரிது படுத்தாமல் விட்டுவிட்டாள்.

மற்றொருநாள்,
இரவு 1 மணி வரைக்கும் வராதவன் பின் பூனைபோல் வீட்டிற்கு வந்தவன் சாப்பாடு எதும் வேண்டாமென்று சட்டென்று மாடிக்கு சென்று படுத்துவிட்டான்,

மறுநாள் காலையில்

"அம்மா, காஃபி கொடேன் ... ஒரே தலைவலி" என்று அருகில் வந்து சொன்னவனிடமிருந்து எஞ்சியிருந்த மதுவாடை நேற்றய தாமத வருகையை சொல்லாமல் சொன்னது

சற்று அதிர்ந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் காஃபி எடுத்து வந்து தருவதாக சொல்லி சென்றுவிட்டாள்.

அதிர்ச்சியை வெளிக்காட்டாதவாறு அவரிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லனும், என்று நினைத்தவள்... அன்று மாலை அவன் வீடு திரும்பும் முன் கணவரிடம் சொல்ல ஆரம்பித்தாள்

"என்னங்க, உங்க பையனுக்கு புது புது வேண்டாத பழக்கமெல்லாம் வந்திருக்கு"

சற்றென்று நிமிர்ந்தபடி கேட்டார் கணவர்

"என்னம்மா சொல்ற, நம்ம பையனுக்கா ?"

"ஆமாங்க, அன்னிக்கு பாக்கெட்டில் சிகெரெட் தூள்கள் இருந்தது, அனேகமாக புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டான் என்று நினைக்கிறேன்"

"ஹூம்" என்று பெருமூச்சி விட்டார்

"அப்பறம் நண்பரோட அக்கா கல்யாணத்துக்குப் போனவன், நேற்று இரவு தண்ணி அடிச்சிட்டு வந்துருப்பான் போல், காலையில் வாயிலிருந்து மது வாடை"

"ஹூம் ... அதுவேறயா ?" ஆழமாக பெருமூச்சி விட்டார்

"நீங்க தான் என்ன ஏதுன்னு கேட்கனும், எனக்கு இதெல்லாம் நேர முகத்தைப் பார்த்து கேட்க என்னவோ போல இருக்கு, இந்த வருசம் அவன் காலேஜ் நல்ல படியாக முடிக்கனும் அதான் கவலையாக இருக்கு "

"சரி கவலைப்படாதே, அவன் வரட்டும் விசாரிக்கிறேன்"

அவன் வந்தான், சிறிது நேரம் கழித்து அவனை அருகில் அழைத்தார்.

"தம்பி, எதோ புது கெட்டப் பழக்கம் எல்லாம் வந்திருக்காமே"

தலையை தொங்கப்போட்டுக் கொண்டான்

""
"இந்த வயசில பசங்க செய்கிறதுதான், ஆனால் அளவோடு நிறுத்திக்கனும்"

""

"அதுக்காக அப்பாவே பர்மிசன் கொடுத்துட்டார் என்று ஆட்டம் போட்டால் உன் எதிர்காலம் தான் பாதிக்கும், நீ அறிவுள்ளவன் நல்லா படிக்கிறவன் புரியும் என்று நினைக்கிறேன்"

தயக்கமாக

"புரியுதுப்பா" என்று அவரை கட்டிக் கொண்டான்

அதன் பிறகு அவன் மேலே சென்றதும் அதற்கெனவே காத்திருந்து போல்

"என்னங்க பையனை கண்டிக்கிறேன் என்று சொல்லிட்டு..." நிறுத்துவதற்குள்

"பாரும்மா, நாம ரொம்ப கண்டிப்பாக இருந்தால், நாம இல்லாத போது அதை மீற வேண்டும் என்ற எண்ணமே இந்த வயசு பசங்களுக்கு ஏற்படும்"

"என்னமோ சொல்லுங்க"

"முதலில் சந்தர்பம் கிடைக்கும் போது தப்பு பண்ணுவார்கள், ரொம்ப ப்ரசர் கொடுத்தால் அப்பறம் சந்தர்பம் கிடைத்தால் மிஸ் பண்ணாமல் அதையே செய்வார்கள்"

""

"ரொம்ப கண்டிச்சா பழக்கம் அதிகம் ஆகிடும், இல்லையென்றால் மன உளைச்சல் அதிகமாகிடும்"

"ஹூம்"

"கவலைப்படாதே, நானும் இப்படித்தான் இருந்தேன் ... பொறுப்பை உணர்ந்தால் எந்த கெட்டப் பழக்கமும் தொடராது... சொல்லி இருக்கிறேன்"

""

"வாலிப வயசில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் இருக்கும், அதைத்தான் அவன் செய்திருக்கிறான்"

"உங்கள மாதிரின்னு நீங்களே சொல்லிட்டிங்க... ஹூம் இனி நான் என்னத்தச் சொல்ல ..."

"பெற்றவர்கள் நாம் தான் எடுத்துச் சொல்லி அளவோடு இருக்கச் சொல்லனும், அதுக்காக கூட உட்கார்ந்து ஊற்றிக் கொடுப்பதும், நெருப்பு பற்றவைத்து விடுவதும் தவறு"

மறுபடியும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் இருவரும் மவுனமாகி அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

பின்குறிப்பு : என்ன அக்குறும்பா இருக்கு கதையில்(?) 'குறும்பையே' காணுமே ?
ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?
:):)

20 : கருத்துக்கள்:

said...

குறும்பே கடைசி வரியிலதான்.

கலக்கறீங்க... !

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !

said...

//காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?
//

அதானே!

said...

பரிட்சையில் அளவோடு (அதாவது சிகரெட் அளவோடு குடி என்று தந்தையார் சொன்னபடி)
பிட் அடிப்பதையும் குறும்போடு சேர்த்துக் கொள்ளலாமா - என்னடா வாத்தியாரே இப்படிக் கேட்கின்றாரே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

said...

:-))))...

said...

மிஸ்டர் ஜி.கே இது என்ன உங்கள் சொந்த அனுபவமா?

said...

//Ranganathan. R said...
குறும்பே கடைசி வரியிலதான்.

கலக்கறீங்க... !

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !
//

ரங்கநாதன்...!
பாரட்டுக்கு நன்றி !

said...

//ஆவி அண்ணாச்சி said...
அதானே! //

அண்ணாச்சி ...!
உங்கள் பாதம் பட்டதுக்கு ...
சாரி சாரி உங்களுக்குத்தான் பாதம் கிடையாதே :)

வருகைக்கு நன்றி !

said...

//SP.VR.SUBBIAH said...
பரிட்சையில் அளவோடு (அதாவது சிகரெட் அளவோடு குடி என்று தந்தையார் சொன்னபடி)
பிட் அடிப்பதையும் குறும்போடு சேர்த்துக் கொள்ளலாமா - என்னடா வாத்தியாரே இப்படிக் கேட்கின்றாரே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
//

சுப்பையா சார்...!

தப்பு ... தப்பு ... தப்பு !
வாத்தியார் பிட் அடிப்பதை பற்றி சொல்லக்கூடாது ...

மாறாக மாணக்கர்கள் அரியர்சை அளவோடு வச்சிக்க அட்வைஸ் பண்ணனும் !
:))))

said...

குறும்பு அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !

said...

//SP.VR.SUBBIAH said...
மிஸ்டர் ஜி.கே இது என்ன உங்கள் சொந்த அனுபவமா?
//

சுப்பைய்யா சார்...!
இது பலரும் நொந்த அனுபவம் தான் அவ்வாறு தேவையில்லை லூசில் விடலாம் என்று சொல்ல முயன்றேன்.

:)

said...

\\ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?\\

அட நல்லாயிருக்கே! உங்கள் குறும்பு.

said...

//சிவமுருகன் said...
குறும்பு அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !
//

சிவமுருகன்,

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

said...

GK,

அருமை.. கலக்கல்..

கிட்டதட்ட எல்லோருடைய வாழ்விலும் நடக்கும் சம்பவம்.. நல்லா சொல்லிடீங்க...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

யதார்த்தமான கதையின் கடைசி வரிகள் ...... இது குறும்பு எனச் சொன்னதுதான் குறும்பு!

உங்க குழந்தைங்க வளர்ந்ததும் இதைச் சொல்வீங்கன்னா..... அப்போ குறும்பு!

:))

வாழ்த்துகள்... !

said...

பதிவின் தலைப்பை அக்குறும்பு என்பதற்குப்பதிலாக அகுறும்பு என்று வைத்திருக்கலாம் :-(((

said...

//லதா said...
பதிவின் தலைப்பை அக்குறும்பு என்பதற்குப்பதிலாக அகுறும்பு என்று வைத்திருக்கலாம் :-(((
//

லதா...!
ம் ... கடைசியில் அதுதான் பின்குறிப்பு போட்டு இருக்கிறேன்
:))

said...

பின் குறிப்பின் குறும்பு அபாரம். வாழ்த்துக்கள் கோவியாரே!

said...

பின்வரிகளின் குறும்பு நல்லா இருக்குது, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

குவாட்டரும் வாயில ஹீட்டரும்தான் காலேஜ் குறும்பா..
இன்னாபா இது அக்குறும்பா கீதே...

said...

குறும்பு தலைப்பில் சொல்வதற்கு எவ்வளவோ இருக்க அறிவுரை சொல்லி குறும்பு பண்றீங்க... ;))

உங்க குறும்பும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!