Tuesday, November 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 2) !

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 1)

மணி மாலை 7.30க்கு மேல் ஆகி இருந்தது. தூரத்திலிருந்தே கைகளை அசைத்தவர் நொடிப்பொழுதில் பாதுகாப்பு இடம் கடந்து அருகில் வந்துவிட்டார். நெருக்கமான உறவினர் நம்மைப் பார்க்க வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உணர்வுகள். "ஐயா ! வாங்க வாங்க " என்பதை தவிர வேறு எதுவும் பேசும் முன்னும் அருகில் வந்து இரண்டுகைகளாலும் வளைத்து கட்டி அணைத்துக் கொண்டார். இருவருக்கும் இடையில் இருந்தது நட்பா, உறவா எதுவும் தெரியவில்லை. உணர்வுபூர்வமான ஈர்ப்பு, ஒருவரை ஒருவர் நேரிடையாக பார்பதில் மற்றற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகியவை அணைத்து மகிழ்ந்ததில் உணர முடிந்தது. முன்பே தொலைபேசி வழி 'அப்பா' என்று இவரை என் மனைவி அழைத்து வந்திருந்தாலும், இவர் தோள் தொட, ஆதரவாக இவர் கை தொட்டதும் சென்ற ஆண்டில் திடீரென தன் தந்தையை இழந்திருந்த என் மனைவிக்கு அப்பாவையே உணர்வதுபோல், பார்பதுபோல் என் மனைவியிடம் நெகிழ்ச்சி இருந்தது. பயணவிவரம் கேட்டபடி எல்லோரும் வாடகைக் காரில் வீடுவந்து சேர்ந்தோம்.

எங்கள் வழக்கப்படி வீட்டுக்கு வரும் பெரியவர்களிடம் ஆசிவாங்குவதென்பது வழக்கம். அதன்படி உள்ளே வந்ததும் பூஜை அறைக்கு சென்று வணங்கி விட்டு வந்தவரிடம் தம்பதிகளாக காலில் விழுந்து ஆசி பெற்றோம். ஒரு சில நிமிடங்களில் எனது 6 வயது மகளுக்கு இவர் தாத்தாவாகிவிட இருவரும் வெகு நாட்கள் பழகியது போல் விளையாட ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே தொலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் குழலி அவர்கள், மீண்டும் தொடர்பு கொண்டு உடனடியாக எஸ்கேவை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவதாக தொலைபேசி வழி தெரிவித்தார். அதன்படி அவருக்கு இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் குறித்து சொல்லிவிட்டு, நேராக அழைத்துவர குறிப்பிட்ட இடத்திற்கு சென்றோம். நண்பர் குழலி ஆப்பிள் பழங்களுடன் வந்தார். வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தோம். எஸ்கேவும், குழலியும் விஜயகாந்த் மற்றும் பாமக அரசியல் பற்றி பேசினார்கள். அரசியலில் தன் நிலைப்பாடு என்ன என்பதை குழலி பேசினார். பின்பு தன் குடும்பம், ஊர் இவற்றைப் பற்றி பேசினார். ஒரு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். சோயா பைட்டில் செய்யப்பட்ட குருமா இருந்தது. எஸ்கே சோயா பைட்டை அழுத்தி அழுத்திப் பார்த்தார். ஒருவேளை எலும்பு எதாவது சிக்குமா என்று பார்த்திருப்பார் போலும். நாங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பது அவருக்கு தெரியும், இருந்தும் ஒரு எச்சரிக்கையாக சோயா பைட்டை அழுத்திப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டார். அது குறித்து நான் கிண்டல் அடிக்க உணவு வேலை களைகட்டியது. இரவு உணவை முடித்துபின்பு விடைபெற்ற குழலி மறுநாள் தொலைபேசுவதாக சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு எஸ்கே தன்னுடைய மனைவிக்கு தொலைபேசியில் தான் சிங்கை வந்து சேர்ந்ததை தெரிவித்தார். இரவு 12 மணிக்கு மேலாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்துவிட்டு பின் இரவில் தூங்கச் சென்றோம்.

மறுநாள் காலை சிற்றுண்டியாக இட்டலியும், கிச்சடியும் முடித்துவிட்டு, வெளியில் சென்று சிங்கப்பூர் முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். காலை 11 மணிக்கு நான் முதலில் அழைத்துச் சென்றது லிட்டில் இண்டியா எனப்படும் நம்மவர்கள் இந்தியர் நிறைந்த இடம். அங்கு செல்லவதற்கே மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. அங்கு கோமள விலாஸ் என்னும் சைவ உணவகத்துக்குச் சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தோம். அப்பொழுது பதிவர் வடூவூர் குமார் அழைத்து மாலை 7 மணிக்கு அதே இடத்தில் சந்திப்பதாக சொன்னார். அதன்பிறகு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே 3D சாமி படங்கள் (ப்ரேம்) Tushiv என்ற கடைக்குச் சென்றோம். அங்கு நவீன தொழில் நுட்பத்தில் செய்யப்பட்ட பல்வேறு கடவுள் உருவங்கள் இருந்தன. அவருக்கு பரிசு பொருளாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று தான் அங்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு அங்கு எல்லா உருவங்கள் பிடித்திருந்தாலும் எங்கும் கிடைக்கதற்கரிய ஒன்றாக அவருக்கு தோன்றிய, அற்புதமாக செய்யப்பட்ட சத்தியசாய் 3D ப்ரேம் ஒன்றை அவரே தேர்வு செய்து, அவரே கிரிடிட் கார்டு கொடுத்து வாங்கினார். அதில் உள்ள மின்விளக்கு அமெரிக்க வோல்டேஜ் அளவானா 110க்கு மாற்றவேண்டும் அதனால் மாலையிலோ அல்லது மறுநாளோ திருவுருவ ப்ரேமை தருவதாக கடைக்காரர் சொல்ல ரசீதைப் பெற்றுக் கொண்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தோம்.

அதன்பிறகு விரைவு இரயில் எனப்படும் MRT யில் ஏறி லிட்டில் இண்டியாவில் இருந்து ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் செந்தோசா தீவு முனையத்திற்கு வந்தோம். வெளியில் வந்து புதிதாக திறக்கப்பட்ட VIVO CITY என்ற பெரிய கடைவளாகத்தைப் பார்த்துவிட்டு அதற்கு முகப்பில் இருக்கும் நீர் அலங்காரத்திற்கு முன் புகைப்படம் எடுத்துவிட்டு நேராக செந்தோச தீவிற்கு செல்லும் கேபிள் கார் கட்டிடத்திற்கு வந்தோம். அங்கு விரைவு சுற்றுலா டிக்கெட் இரண்டு வாங்கிக் கொண்டு கேபிள் காரில் ஏறி உட்கார்ந்தோம். அது மிக நல்ல அனுபவம். அன்புடையவர்களுடன் உயரத்தில் அமர்ந்து பயணம் செய்வது என்பது மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொல்லலாம். பலமுறை அதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு வரை ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை, அதன்பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு நெருக்கமாக ஒருவருடன் இனிய பயணம் என்பது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

செந்தோசா தீவை சுற்றிப் பார்த்துக் கொண்டே மீண்டும் தொடரும் ... !

இன்று நவ 29, எஸ்கே ஐயாவுக்கு பிறந்த நாள் அதையும் இங்கு நினைவு அவரை கூர்ந்து வாழ்த்துகிறேன்.

28 : கருத்துக்கள்:

said...

சந்திப்பினை அற்புதமாக விவரித்து எழுதி இருக்கிறீர்கள்.கேட்கவே சந்தோசம்.

எஸ்கே அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரைவிட வயதில் குறைந்த எனது வணக்கத்தினையும் அவரிடம் சொல்லவும்.

said...

சந்திப்பு நன்றாக உள்ளது
அதைவிட சந்திப்பைச் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இருக்கிறது!
எஸ்.கே சாருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - அவரிடம் இதை நீங்களே தெரிவித்து விடுங்கள். அவருடைய் மின்னஞ்சல் முகவரி என்னைடம் இல்லை அதனால் நீங்களே தெரிவித்து விடுங்கள்!
அன்புடன்
SP.VR. சுப்பையா

said...

எஸ்கேவுக்கு நானும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவி, அழகாக எழுதி உள்ளீர்கள்.. தொடர்ந்து படிக்க ஆசையைத் தூண்டுகிறது..

said...

அட! இன்றுதா என்.எஸ்.கே அவர்களுக்கும் பிறந்த நாள்!

எனிவே உங்கள் பதிவின் மூலமாகவும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(வாழ்த்த வயதில்லை, வேண்டுகிறேன் ஆசிகளை என்று சொன்னால் கோபித்துக் கொள்வார் :) )

said...

அட! இன்றுதா என்.எஸ்.கே அவர்களுக்கும் பிறந்த நாள்!

எனிவே உங்கள் பதிவின் மூலமாகவும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(வாழ்த்த வயதில்லை, வேண்டுகிறேன் ஆசிகளை என்று சொன்னால் கோபித்துக் கொள்வார் :) )

said...

நல்லாஇருக்கு பதிவு...ஸ்கே சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

எஸ். கே விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

//6 மாதத்துக்கு முன்பு வரை ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை, அதன்பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு நெருக்கமாக ஒருவருடன் இனிய பயணம் என்பது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.//

இளகிய மனங்கள் பார்ப்பதற்கும் முன்னரே இணைந்திருந்ததால் புதிய அனுபவம் மேலும் இனித்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

said...

//விடாதுகருப்பு said...
சந்திப்பினை அற்புதமாக விவரித்து எழுதி இருக்கிறீர்கள்.கேட்கவே சந்தோசம்.

எஸ்கே அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரைவிட வயதில் குறைந்த எனது வணக்கத்தினையும் அவரிடம் சொல்லவும்.
//

கருப்பு சார்,
உங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துவிட்டேன். அவரும் இதை படித்து தெரிந்து கொள்வார்.

நீங்களும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் !
:)

said...

//SP.VR.SUBBIAH said...
சந்திப்பு நன்றாக உள்ளது
அதைவிட சந்திப்பைச் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இருக்கிறது!
எஸ்.கே சாருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - அவரிடம் இதை நீங்களே தெரிவித்து விடுங்கள். அவருடைய் மின்னஞ்சல் முகவரி என்னைடம் இல்லை அதனால் நீங்களே தெரிவித்து விடுங்கள்!
அன்புடன்
SP.VR. சுப்பையா
//

சுப்பைய்யா ஐயா,

பெரியவர்களை சந்தித்து ஆசி பெருவதில் பெருமகிழ்ச்சி அடைவேன். உங்களையும் சந்திக்க முயல்வேன் !
:)
உங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துவிடுகிறேன் நன்றி !

said...

//பொன்ஸ் said...
எஸ்கேவுக்கு நானும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவி, அழகாக எழுதி உள்ளீர்கள்.. தொடர்ந்து படிக்க ஆசையைத் தூண்டுகிறது..
//

பொன்ஸ்,
மோதிர கையால் இல்லை இல்லை, நட்சத்திரம் அனிந்த துதுக்கையால் குட்டுபட்ட ஆனந்தம் ஏற்படுகிறது, நன்றி ! :)

எஸ்கே ஐயா உங்கள் வாழ்த்தைப் படிப்பார்.

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
அட! இன்றுதா என்.எஸ்.கே அவர்களுக்கும் பிறந்த நாள்!

எனிவே உங்கள் பதிவின் மூலமாகவும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(வாழ்த்த வயதில்லை, வேண்டுகிறேன் ஆசிகளை என்று சொன்னால் கோபித்துக் கொள்வார் :) )
//

சிபி,

பித்தானந்தாவின் ஆசிகளை ஏற்றுக் கொள்ள பாக்கியம் பெற்றார்.
:)

said...

//abdullah said...
PADIKKA PADIKKA INITTHATHU....
SK YUM PAYANAK KATTURAI EZUTHUVAR ENA ETHIRPPARKIREN..

SK KKU PIRANTHANAAL VAZTTHUM....

UNGALUKKU PAARAATTUM TERIVIKKIREN..... //

அப்துல்லா அவர்களுக்கு,

பாராட்டுக்கும், எஸ்கேவிற்கு சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துக்கும் நன்றி !

said...

//மெளல்ஸ், பெங்களூர் said...
நல்லாஇருக்கு பதிவு...ஸ்கே சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//

மெளஸ்,
மிக்க நன்றி, எஸ்கேவுக்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்தையும் சொல்லிவிடுகிறேன்.

said...

//தங்கவேல் said...
எஸ். கே விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//

தங்கவேல்,

எஸ்கே உங்கள் வாழ்த்தை படிப்பார்,
நன்றி சார்!

said...

//சுல்தான் said... இளகிய மனங்கள் பார்ப்பதற்கும் முன்னரே இணைந்திருந்ததால் புதிய அனுபவம் மேலும் இனித்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. //

சுல்தான் ஐயா,
மிக்க மகிழ்ச்சி. உங்களைப் போன்றோரின் தொடர்பும் இனிமைதான். நீங்கள் முதன் முதலில் அவருக்கு மன்னார் குறளுக்கு இட்ட பின்னூட்டத்தையும், உங்கள் புரைபைலையும் பார்த்துவிட்டு என்னிடம் அவர் சொன்னது, "சுல்தான் மிக நல்லவராக இருப்பார் என்று நினைக்கிறேன்" - இதை இந்த சமயத்தில் உங்களிடம் சொல்லி மகிழ்கிறேன். அவர் அன்று சொன்னதும், உங்களை சந்தித்து அதை அவர் உணர்ந்ததும் அதை உறுதிப்படுத்திவிட்டது.

said...

அடுத்தப் பகுதி போட்டாச்சா? நேரிலேயே சந்தித்துக் கொள்ளாமல் இருவர் இந்த அளவு நட்பு பாராட்ட முடியும் என்பதே மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தமிழ் மணம் தேன் கூடு போன்ற முயற்சிகளின் மீது புதிய நம்பிக்கையை உண்டாக்குகிறது.

said...

அழகான நடையில் எழுதி இருக்கிறீர்கள் ஜிகே. நல்ல பதிவு!!

எஸ்.கே ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

GK,

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

SK அய்யாவிற்கு பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி

said...

தனது அருமையான எழுத்துநடையின் மூலம் மீண்டும் அவ்வினிய கணங்களை அசை போட வைத்ததுமன்றி,

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை இப்பதிவின் மூலம் தெரிவித்து,

அதன் மூலமாக இத்தனை வலைபதிவர்களின் வாழ்த்துகளையும் பெற வைத்தமைக்கு,

கோவியாருக்கு நான் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் அத்துணை நல்ல இதயங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்!

இந்த நாள் ஒரு இனிய நாளாக மாறியிருக்கிறது எனக்கு...... உங்கள் அனைவரின் அன்பினாலும்!!

மீண்டும், மீண்டும் நன்றி!

எல்லாரும் வாழ்க!

[தனித்தனியே பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்!]

முருகனருள் முன்னிற்கும்!

said...

GK சார்

பல சமயங்களில் நல்ல நண்பர்களைச் சந்தித்த போது இருந்த மகிழ்ச்சியை விட, அவர்கள் விடைபெற்றுச் சென்ற பின் மனது அசை போடுமே, அது இன்னும் இனிதா இருக்கும்!

நான் இது போல சில சமயங்களில் எண்ணி எண்ணி மகிழ்ந்துள்ளேன்! உங்கள் நடை அந்த ஞாபகங்களை எல்லாம் கொண்டு வந்து விட்டது! மிக்க நன்றி!

Birthday Boy SK ஐயா, வாங்க!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
"ஆத்திகம்" அன்பருக்கு
அழகான வாழ்த்துக்கள்!
"கசடறக்" கற்றவர்க்கு
கவின்மிகு வாழ்த்துக்கள்!

said...

அருமையா எழுதியிருக்கீங்க அண்ணா.

எஸ்.கே. ஐயா.

அறிவிலாப் பிள்ளைகளோம் அன்பினால் உம்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதீர்!

அப்படியே மயிலை மன்னாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள்.

said...

// SK said...
தனது அருமையான எழுத்துநடையின் மூலம் மீண்டும் அவ்வினிய கணங்களை அசை போட வைத்ததுமன்றி,

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை இப்பதிவின் மூலம் தெரிவித்து,
//

எஸ்கே ஐயா !

நடந்ததை எழுதும் போது கற்பனைக்கு வேலை இல்லை, அதனால் எழுதிய நடை சரியாக வந்தது என்று சொல்லலாம் !

உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பின்னூட்டம் வழி நன்றி தெரிவித்ததற்கு நன்றி !

said...

//செந்தில் குமரன் said...
அடுத்தப் பகுதி போட்டாச்சா? நேரிலேயே சந்தித்துக் கொள்ளாமல் இருவர் இந்த அளவு நட்பு பாராட்ட முடியும் என்பதே மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தமிழ் மணம் தேன் கூடு போன்ற முயற்சிகளின் மீது புதிய நம்பிக்கையை உண்டாக்குகிறது.
//

சினன் குமரன் ...!

உங்கள் வரிகள் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டு நட்பு துளிக்கவேண்டும் என்பதை வழியுறுத்துகிறது,

நன்றி !

said...

//கப்பி பய said...
அழகான நடையில் எழுதி இருக்கிறீர்கள் ஜிகே. நல்ல பதிவு!!

எஸ்.கே ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
//

காப்பி பாய்,
இது ஒரு டைரிக் குறிப்பு நடந்ததை அப்படியே எழுதிவருவதால் அழகாக தெரிகின்றது என்று நினைக்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரியான் 'காலத்தில்' உரியவரிடம் சேர்ந்துவிட்டது !

said...

//Sivabalan said...
GK,

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

SK அய்யாவிற்கு பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி
//

சிபா,
முதல் பகுதியை நீங்கள் படிக்கவில்லையா ?

எஸ்கே அய்யாவுக்கு வாழ்த்து சென்று சேர்ந்துவிட்டது !

நன்றி !

said...

// குமரன் (Kumaran) said...
அருமையா எழுதியிருக்கீங்க அண்ணா.

எஸ்.கே. ஐயா.

அறிவிலாப் பிள்ளைகளோம் அன்பினால் உம்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதீர்!

அப்படியே மயிலை மன்னாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள்.
//

அன்பு குமரன்,

நீங்கள் பதிவர்களை அழைக்கும் முறை சிறப்பானது. உங்களிடமிருந்து கற்றுக் கொண்டு பதிவர்கள் நல் நட்பும் கூடவே உறவும் வளர்க்க வேண்டும் !

மன்னார், அன்னார் எல்லோரும் வாழ்த்தை ஏற்றுக்கொண்டனர் ! நன்றி சொல்லிவிட்டனர்.

தனிப்பதிவும் போட்டு அசத்திவிட்டீர்கள்.

நன்றி !

said...

தலைவா அற்புதமான விவரிப்பு, எஸ்.கே. அய்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

நன்றி