Thursday, December 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஈனஸ்வரம் ?

தூரத்தில் கேட்டது ஓலம் ...
கூடவே கெட்ட கெட்ட வார்த்தைகள்
ஆபாச திட்டுக்கள்... கேட்ட
நானும், அருகில் இருந்தவர்களும்
காதுகளைப் பொத்திக் கொண்டோம் !

பக்கத்தில் இருந்த பண்பாளரிடம்,
மெதுவாக கேட்டேன் ஏனிந்த ஓலம் கேட்கிறது ?
ஏதாவது தெரியுமா ? சொல்லுங்கள் ! என்றேன் !
இது ஒரு ஈனஸ்வரம் ! எப்போதும் கேட்பதுதான் !
இவன் ஒழிந்துவிட்டால் அனைவருக்குமே நிம்மதி என்றார் !

காரணம் தெரிந்து கொள்ளும் ஆவலில்
ஓலக்குரலின் ஓசைவரும் இடம் நோக்கிச் சென்றேன்.
அருகில் சென்றதும் அதிர்ச்சி அடைந்தேன் !

அம்மனமாக்கப்பட்டு,
ஆற்றாமையால் அழுது கொண்டே
திட்டிக் கொண்டிருந்தான் மிதிபட்ட
ஒடுக்கப்பட்டவன் ஒருவன் !
அருவருப்பான தோற்றத்தில்
இருந்த அவனை பலர் மிதித்துக் கொண்டிருந்தனர் !

தைரியமாக பேசுகிறானே என்று அவர்கள்
அவனை மேலும் மேலும்
மிதித்துக் கொண்டிருந்தனர் !

அழும் குரலிலென்றாலும் ஆற்றாமையில்
இருந்த அவனிடம் நிதானம் இல்லை.
இருக்கவும் முடியாது !
கோபத்தில் அவன் வீசிய வார்த்தை வீச்சில்
அருவருப்பும் ஆபசமும் இருந்தாலும்
அருகில் நடந்ததைப் பார்த்த நான்
ஆடிப் போய்விட்டேன் !

அடிப்பவர்களை தடுக்கும் ஆற்றல் இல்லாததால்,
ஆற்றாமையில் திட்டுபவனை ஆற்றி
அடக்குவதற்கும் வழிதெரியாமல்
அமைதியாக விழித்துக் கொண்டிருந்தேன் !

தைரியமாக பேசுகிறானே என்று அவர்கள்,
'இழிபிறவியே ! ஒழிந்து போ !!', என்று
அலங்கார வார்த்தையால் அர்சித்துக் கொண்டே,
அவனை மேலும் மேலும் மிதித்துக் கொண்டிருந்தனர் !

அவனை அடித்துக் கொண்டே என்னையும்
ஏளனமாக பார்த்தவர்களைப் பார்த்து
நானும் முகம் சுளித்து திரும்பினேன் !

திரும்பிவரும் போது மனது சொல்லியது,
இவன் குரல் இன்னும் வேகமாக ஒலிக்க வேண்டும் !
இவன் தலைநிமிர்ந்து நிற்கும்வரை,
இவனை அடிப்பதை அவர்கள் நிறுத்தும்வரை,
இவனின் குரல் தான் இவனுக்கும் தைரியம் கொடுக்கிறது,
இவனைப் போன்றவர்களை மீட்க வைக்க முழங்குகிறது !
இன்னும் ஒலிக்கவேண்டும் !

இவன் சங்கிலிருந்து குரல் மேலும் பலமாக
எட்டு திக்கும் கேட்கும் வரை செல்ல வேண்டும் !
முன்பு ஈனஸ்வரமாக நான் உணர்ந்த குரல்,
இப்பொழுது சங்கு முழங்குவதாக உணர்த்துகிறது!

பின்குறிப்பு: திண்ணியத்தில் மலம் புகட்டப் பட்ட தலித்களுக்கு நேர்ந்த கொடுமைகளை முன்பு படித்து இருக்கிறேன், சமீபத்தில் ஐயா தருமி அவர்களின் LET US HIT THE NAILS RIGHT ON THEIR HEADS இந்த பதிவைப் படித்தேன். வலைப்பதிவுகளில் ஜாதி முறைகள் சரியே என்று சொல்லும் பதிவுகளைப் படித்தும் இருக்கிறேன். இவற்றினால் ஏற்பட்ட எண்ணங்களின் விளைவால் எழுந்தது இந்த புனைக் (புதுக்) கவிதை.

புத்தாண்டு வாழ்த்துக்கள் : வரும் புத்தாண்டில் நம் அனைவருக்குள்ளும் ஒற்றுமை ஓங்கி, தமிழ்வளர்சிக்கும், தமிழர் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஏற்றவிதமாக நம் எழுத்துக்களும், கருத்துக்களும் அமைந்து நம் அனைவருக்கும் பயனளிக்கட்டும் ! என்று பதிவர் அனைவரையும், மேலும் தமிழ்மணம், தேன் கூடு நிர்வாகிகளையும் வாழ்த்துகிறேன்.

28 : கருத்துக்கள்:

said...

உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோவி. கண்ணன்.

உங்களுடைய புதுக்கவிதை நன்றாக வந்திருக்கிறது. உங்களுடைய மன நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

said...

நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்

said...

//செந்தில் குமரன் said...
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோவி. கண்ணன்.

உங்களுடைய புதுக்கவிதை நன்றாக வந்திருக்கிறது. உங்களுடைய மன நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
//

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி குமரன் !

said...

//சிந்தாநதி said...
நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்
//

சிந்தாநதி ஐயா,

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும்,

நன்றி !

said...

//ஐயா,//

எனக்கா?
அவ்வளவு வயசெல்லாம் ஆகலைன்னு நெனைக்கிறேன்....

said...

//சிந்தாநதி said...
//ஐயா,//

எனக்கா?
அவ்வளவு வயசெல்லாம் ஆகலைன்னு நெனைக்கிறேன்....
//

ஹி ஹி !
அதை தெரிந்து கொள்ளத்தான் *ஐயா* போட்டேன். கோவிச்சிக்காதிங்க !
:))

said...

அடடா...அடடா...
கவுக்க்கிறீங்களே ஐயா(இது அந்த ஐயா இல்லை!)

said...

கவிதை எழுதுபவர்களை 'ஐயா' என்று அழைத்தால் தவறில்லை!

கோவி அய்யா!
உங்களுக்கும், உங்கள் உள்ளம் கவர்ந்த
உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும்
எந்து உள்ளம் கனிந்த
'புத்தாண்டு வாழ்த்துக்கள்'

அன்புடன்
SP.VR.சுப்பையா

said...

//SP.VR.சுப்பையா said...
கவிதை எழுதுபவர்களை 'ஐயா' என்று அழைத்தால் தவறில்லை!

கோவி அய்யா!
உங்களுக்கும், உங்கள் உள்ளம் கவர்ந்த
உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும்
எந்து உள்ளம் கனிந்த
'புத்தாண்டு வாழ்த்துக்கள்'

அன்புடன்
SP.VR.சுப்பையா
//

ஐயா,

நான் ஐயா இல்லை ! உங்கள் அனுபவத்திற்கு முன்பு சின்னப்*பைய்யா* ...தான் :))

உங்களுக்கு பெயரிலேயே ஒரு ஐயா இருக்கிறார். டபுள் ஐயா (சுப்பைய்யா ..வாத்தியார் ஐயா) நீங்கதான்.
:)

வாழ்த்துக்களுக்கு நன்றி !

said...

கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் யாருக்காக இந்த கவிதை எழுதினீர்களோ அவர்(கள்) இந்தக் கவிதையை படித்துவிட்டு மிக்க மகிழ்வார். ஆனால் பிறகு அவர் உங்களையும் திட்டாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

said...

முகச்சுளிப்பு மறைந்து
முகம் முழுதுமாய் மலர
புத்தாண்டில் வழி பிறக்க
வாழ்த்துகிறேன் நண்பரே!

said...

//ராஜசன் said...
கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் யாருக்காக இந்த கவிதை எழுதினீர்களோ அவர்(கள்) இந்தக் கவிதையை படித்துவிட்டு மிக்க மகிழ்வார். ஆனால் பிறகு அவர் உங்களையும் திட்டாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
//

ராஜசன் ...!

ஊதுகிற சங்கை ஊதுவோம் ! மற்றவையெல்லாம் போற்றலும் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே !
:)
கருத்துக்கு நன்றி !

said...

//SK said...
முகச்சுளிப்பு மறைந்து
முகம் முழுதுமாய் மலர
புத்தாண்டில் வழி பிறக்க
வாழ்த்துகிறேன் நண்பரே!
//

எஸ்கே ஐயா,

அல்லவைகள் என்று ஒதுக்கி கண்ணை மூடிக்கொண்டு ஓட எனக்கும் பக்குவம் வரும் என்று நம்புகிறேன் ஐயா !

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி !

said...

நல்ல கவிதை கோவி.. அற்புதமாக வந்திருக்கிறது..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

//ஆனால் பிறகு அவர் உங்களையும் திட்டாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். //
திட்டினால் வாங்கிக் கொள்ள வேண்டியது தானே.. ஒரு விதத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவனுக்கு ஆதரவாக, ஆறுதலாக உடன் சேர்ந்து குரல் கொடுக்காமல், சங்காக முழங்கட்டும் என்று வேண்டிக் கொண்டு வந்துவிட்டவர்கள் தாமே நாம்?! :(

said...

wow you are the one i wish to hugg u my GK thanks for this poem

said...

// பொன்ஸ் said...
நல்ல கவிதை கோவி.. அற்புதமாக வந்திருக்கிறது..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

திட்டினால் வாங்கிக் கொள்ள வேண்டியது தானே.. ஒரு விதத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவனுக்கு ஆதரவாக, ஆறுதலாக உடன் சேர்ந்து குரல் கொடுக்காமல், சங்காக முழங்கட்டும் என்று வேண்டிக் கொண்டு வந்துவிட்டவர்கள் தாமே நாம்?! :(
//

வாழ்த்துக்களுக்கு நன்றி பொன்ஸ் !

பல சமயங்களில் நடக்கும் சம்பவங்கள் முகம் சுளிப்பாக இருந்தாலும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பவர்களால் 'எல்லாம் அவன் செயல், நடப்பவை நன்மைக்கே !' என்று நினைக்கத்தான் முடிகிறது !

said...

கோ.க,
மிகவும் அருமையான கவிதை மட்டுமல்ல, மனதைக் கனக்க வைத்த கவிதையும் கூட.

கோ.க, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

/* வரும் புத்தாண்டில் நம் அனைவருக்குள்ளும் ஒற்றுமை ஓங்கி, தமிழ்வளர்சிக்கும், தமிழர் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஏற்றவிதமாக நம் எழுத்துக்களும், கருத்துக்களும் அமைந்து நம் அனைவருக்கும் பயனளிக்கட்டும் ! என்று பதிவர் அனைவரையும், மேலும் தமிழ்மணம், தேன் கூடு நிர்வாகிகளையும் வாழ்த்துகிறேன். */

நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

said...

//வெற்றி said...
கோ.க,
மிகவும் அருமையான கவிதை மட்டுமல்ல, மனதைக் கனக்க வைத்த கவிதையும் கூட.
//

வெற்றி அவர்களே,
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யமுடியவில்லை. குரலை மட்டுமே பதிய முடிகிறது.
:(

பாராட்டுக் நன்றி.

said...

//நெருப்பு சிவா said...
கோவி,

நன்றாக சங்கை ஊதியிருக்கிறீர்கள். ஊதுவதோடு நில்லாமல், நாம் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வரும்காலம் உதவட்டும்

நெருப்பு
//

நெருப்பு சிவா,

ஒடுக்கப்பட்டவர்களின் துன்பங்களை உணர்ந்து கொள்ளுதல் என்ற ஒரு நிலைக்கே இப்போதுதான் எல்லோரும் வந்திருக்கிறோம்.

நிலை மாறும் என்று நம்புவோம் !
பாராட்டுக்கு நன்றி !

said...

GK,

Really good one!

Wish you happy new year!

said...

நண்பர் கோவி,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு தேவை உதவியல்ல உங்கள் குரல்களே! அவை உரிமைகளுக்காக ஒலிக்கட்டும். உரிமைகள் பிறக்கும் வேளை உதவியின் அவசியம் இரா!

சுயமரியாதையும் மானமும் நிறைந்த மனிதர்களாக அனைவரையும் மதிக்கும் காலம் உருவாகட்டும்!

said...

அன்பார்ந்த நண்பரே,

ஏழை தலித்தின் அழுகுரலை கவிதையாய் வடித்து இருக்கின்றீர். அருமை, பெஸ்ட், சூப்பர் என்று ஒற்றை வார்த்தையில் பதிலிறுப்பதைவிட அவர்களின் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்.

அடக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் வீறு கொண்டு எழும்போது ஆதிக்க சக்திகள் மண்ணோடு மண்ணாகிப் போவர்.

சங்கே நீ முழங்கு, முன்னைவிட பலமாக!

said...

இவ்வளவு தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன். எல்லோரும் மனம் நிறைய பாராட்டியுள்ளார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறேன். எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்ற அளவுக்கு கொடுமைகளுக்கு எதிர் குரல் கொடுத்துள்ளீர்கள். உங்களோடு சேர்த்து பொன்ஸின் பின்னூட்டத்திற்கும் என் மனமுவந்த பாராட்டுக்கள்.

இந்த நல்ல மனித நேய இதயங்கள் - உங்களையும், பொன்ஸையும் சேர்த்தே சொல்கிறேன் - இன்னும் பல பூட்டிய மனக்கதவுகளைத் தட்டுமென்ற நம்பிக்கை உண்டு. ஈனஸ்வரம் உரத்து ஒலிக்க வேண்டுமென்கிறீர்கள்; அதற்குள் அப்படி ஒலிக்க ஆரம்பித்தால் அது தன்னை தாக்குமோ என்ற பயம் சிலர் மனத்தில் வருவதைப் பார்க்கும்போது அவர்களை என்னவென்று சொல்வது?

said...

//மகேந்திரன்.பெ said...
wow you are the one i wish to hugg u my GK thanks for this poem
//

மகி,
எங்கைய்யா போனீர் ?
ரொம்ப புகழாதிங்க கூச்சமாக இருக்கு !
:)

said...

//Sivabalan said...
GK,

Really good one!

Wish you happy new year!
//
சிபா,

நன்றி, உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

said...

//திரு said...
நண்பர் கோவி,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு தேவை உதவியல்ல உங்கள் குரல்களே! அவை உரிமைகளுக்காக ஒலிக்கட்டும். உரிமைகள் பிறக்கும் வேளை உதவியின் அவசியம் இரா!

சுயமரியாதையும் மானமும் நிறைந்த மனிதர்களாக அனைவரையும் மதிக்கும் காலம் உருவாகட்டும்!
//

திரு அவர்களே,

உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி...!

தெளிவான கருத்துக்கு நன்றி ! நீங்கள் சொல்லும் காலம் நிச்சயம் வரும் ... வந்து கொண்டே இருக்கிறது !

said...

// விடாதுகருப்பு said...
அன்பார்ந்த நண்பரே,

ஏழை தலித்தின் அழுகுரலை கவிதையாய் வடித்து இருக்கின்றீர். அருமை, பெஸ்ட், சூப்பர் என்று ஒற்றை வார்த்தையில் பதிலிறுப்பதைவிட அவர்களின் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்.

அடக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் வீறு கொண்டு எழும்போது ஆதிக்க சக்திகள் மண்ணோடு மண்ணாகிப் போவர்.

சங்கே நீ முழங்கு, முன்னைவிட பலமாக!
//

கருப்பு என்கிற சதீஷ் அவர்களே,

சாபம் எல்லாம் வேணாங்க...தேவை மனமாற்றம் !

கருத்துக்கு நன்றி !

said...

//Dharumi said...
இவ்வளவு தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன். எல்லோரும் மனம் நிறைய பாராட்டியுள்ளார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறேன். எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்ற அளவுக்கு கொடுமைகளுக்கு எதிர் குரல் கொடுத்துள்ளீர்கள். உங்களோடு சேர்த்து பொன்ஸின் பின்னூட்டத்திற்கும் என் மனமுவந்த பாராட்டுக்கள்.

இந்த நல்ல மனித நேய இதயங்கள் - உங்களையும், பொன்ஸையும் சேர்த்தே சொல்கிறேன் - இன்னும் பல பூட்டிய மனக்கதவுகளைத் தட்டுமென்ற நம்பிக்கை உண்டு. ஈனஸ்வரம் உரத்து ஒலிக்க வேண்டுமென்கிறீர்கள்; அதற்குள் அப்படி ஒலிக்க ஆரம்பித்தால் அது தன்னை தாக்குமோ என்ற பயம் சிலர் மனத்தில் வருவதைப் பார்க்கும்போது அவர்களை என்னவென்று சொல்வது?
//

தருமி ஐயா,

உங்கள் பாராட்டுக்கள் நெகிழ்ச்சியளிக்கிறது. மறைந்திருக்கும் குரல் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களைப் படிப்பதால் வெளிப்படுகிறது என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஏழ்நிலையோர் ஏற்றம் பெறவேண்டும். நலிந்தோர் நல்வாழ்வு பெறவேண்டும்.