Friday, December 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 3)

முந்தைய பகுதிகள்...
நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 1)
நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 2)

செந்தோசா தீவில் உள்ளே நுழையும் போது பிற்பகல் 2.45 ஆகியது. சுற்றுலா வழிகாட்டி மாலை 3.15க்கு அழைத்துச் செல்வதாக வரேவேற்பு அறையில் தெரிவித்தார்கள். 45 நிமிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். அங்கு அருகில் இந்தியர் ஒருவர் மலைப்பாம்பு வைத்துக் கொண்டு அதனுடன் புகைப்படம் எடுக்க 5 வெள்ளிகள் பலகை எழுதி வைத்திருந்தார். அங்கு புகைப்டம் எடுக்க அதிகம் யாரும் வரவில்லை. அந்த பாம்புகாரரிடம் சென்று எஸ்கே பாம்பை வெளியில் காட்ட 50 காசுகள் என்று சொன்னால் உங்களுக்கு அதிக சில்லரை தேறும் என்று யோசனை தெரிவித்தார். குறிப்பிட்ட நேரம் வரவே சுற்றுலா பேருந்து வரவே ஏறி உட்கார்ந்தோம கூடவே ஒரு 30 பேர் பயணித்தனர். அதில் வந்த வழிகாட்டி நல்ல நகைச்சுவையாக பேசினார். பேருந்து மூலம் நாங்கள் முதலில் செல்ல வேண்டிய இடம். ஆழ் நீர் உலகம் (அண்டர் வாட்டர் வேர்ல்ட்). வழிகாட்டி மீன்களை கையால் தொட்டு பார்க்க ஒரு முகப்பில் ஒரு தொட்டி இருக்கிறது அதில் பலவித மீன்கள் இருக்கும் தொட்டுபார்பவர்கள் தொட்டுப்பார்கலாம் என்றார்.

அண்டர் வாட்டர் வேர்ல்ட் உள்ளே நுழைந்ததும் ஆவல் அதிகரித்து நான் நீர் தொட்டியில் கையை நுழைக்க, கலுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எனது செல் போனுக்கும் அந்த ஆசைவர நீரில் உள்ளே இறங்கி சட்டென்று சத்தமில்லாமல் உயிர்விட்டது. தொலைபேசி வழி தொடர்புகளின் எண்கள் எல்லாம் திடீரென்று காணமல் போய்விட்டது. வடுவூர் குமாருடன் எப்படி மாலை எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து செல்போனை எவ்வளவோ தரிகனத்தோம் போட்டும் அது ஒரு ரிங் டோனைக் கூட காட்டவில்லை. ஹூம் என்று பெருமூச்சி விட்டபடி மீன் அருங்காட்சியகத்தில் பலவித மீன்களின் அழகை ரசித்தோம், புகைப்படம் எடுத்தோம். அனைவரும் பார்க்கவேண்டிய காட்சிகள் அவை. கடலுக்குள் இருக்கும் அத்தனை மீன் வகைகளும் கண்ணாடியில் நம் தலைக்கு மேல் நீந்திச் சென்றது.

மீன் அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு பக்கத்தில் கடற்கரைக்கு சென்று அருகில் வாலிபால் விளையாடும் பீச் பாய்ஸ் / கேர்ள்சை பார்த்துவிட்டு வரவும் அடுத்த இடத்துக்கு செல்ல பேருந்து தயாராக இருக்கவும் சரியாக இருந்தது. அடுத்து நாங்கள் சென்ற இடம் டால்பின் லகூன் எனப்படும் டால்பின்கள் செய்யும் சாகச காட்சிகளுக்கான இடம். உள்ளே சென்று 15 நிமிட காத்திருத்தலுக்கு பிறகு அழகான பிங் டால்பின்கள் துள்ளிக் குத்தித்து காட்சி கொடுத்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி அசத்தியது. அதுவும் ஒரு 30 நிமிட நிகழ்ச்சிதான். அது முடிந்ததும் அதே பேருந்தில் சினிமேனியா என்ற வெர்சுவல் ரியாலிட்டி காட்சி அரங்குக்குக்கு கூட்டி செல்லப்பட்டோம். திரையில் காட்சிகளுக்குள் நாம் பயணம் செய்வது போன்ற நல்ல அனுபவம் கிடைத்தது. மாலை 6.30 ஆகிவிட்டது.

இன்னும் பார்க்க இடங்கள் இருந்தாலும் மாலை சந்திப்பதாக தெரிவித்த வடுவூர் குமாரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதால் தீவை விட்டு வெளியில் செல்ல முடிவெடுத்து பேருந்தில் ஏறி தீவின் இழுவை கார் முகப்புக்கு மறுபடியும் வந்துவிட்டோம். மங்கிய மாலை அதில் விளக்குகள் ஒளிர ஆகாயத்தில் அழகான ஊஞ்சல் ஆடுவது போல் இழுவை கார் (கேபிள் கார்) பயணம முடிந்து தீவைவிட்டு வெளியில் வந்தோம். அங்கிருந்து மறுபடியும் லிட்டில் இந்தியா வந்து சேர மாலை 7.15 ஆகி இருந்தது. அங்கே இருந்த சிங் கடை ( சிங் கடை அதைப்பற்றி பிறகு எப்போதாவது சொல்கிறேன்) புது கை தொலைபேசி வாங்கி சிம் கார்டை இணைத்தேன். கை தொலைபேசியை உயிர் ஊட்டியதும் எதிர்பார்த்த படி இடையில் அனுப்பிய வடுவூர் குமாரின் குறுந்தகவல் முதலில் வந்தது. உடனடியாக அவரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அருகில் தான் இருப்பதாகவும் சந்திக்க காத்திருப்பதாகவும் சொன்னார்.


அவரை சந்திக்கச் செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் வர உள்ளே நுழைந்து சம்பிரதாய சாமி கும்பிட்டுவிட்டு உடனே குமார் வரச் சொன்ன இடத்துக்குச் சென்றோம். அவர் அங்கு இல்லை. கை தொலைபேசியில் திரும்பவும் தொடர்பு கொண்டேன் சாலைக்கு எதிர்பக்கம் இருப்பதாக சொன்னார்.

பதிவின் நீளம் காரணமாக அடுத்த பதிவில் வடுவூர் குமார் சந்திப்பு, அடுத்த நாள் விடாது கருப்பை எப்படி தொடர்பு கொண்டு அவருடன் பேசினோம் ? ஏன் தொடர்பு கொண்டோம், நானும் எஸ்கேவும் விடாதுகருப்பு விடம் என்ன பேசினோம் ? என்பதை சொல்கிறேன்.

11 : கருத்துக்கள்:

said...

GK,

ஆக, ஒரு செல் போன் காலி.. இல்லை புது போன் வாங்க வேண்டும் என்பதற்காக நைசா தண்ணிரீல் போட்டுடீங்களா!! Ha Ha Ha..

சுவாரசியமாக செல்கிறது தொடர்..

அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளது.

said...

//அந்த பாம்புகாரரிடம் சென்று எஸ்கே பாம்பை வெளியில் காட்ட 50 காசுகள் என்று சொன்னால் உங்களுக்கு அதிக சில்லரை தேறும் என்று யோசனை தெரிவித்தார்//

குறும்பு? :-))
SK ஐயா, அதற்கு அந்தப் பாம்புக்காரர் என்ன சொன்னார் என்று சொல்லவே இல்லீயே!

said...

பாவம்ங்க!
வர்றவர் போறவர் எல்லாம் பார்த்துவிட்டுப் போனார்களே தவிர, ஒருவராது 5 வெள்ளி கொடுத்து பாம்பைத் தோளில் போட்டு படம் எடுக்க முன்வரவில்லை. [நாங்கள் உட்பட]

பரிதாபப் பட்டு அவரிடம் தெரிவித்த ஆலோசனைதான் அது!

அவர் ஒரு பாகிஸ்தானியர்!

சிரித்தபடி நல்ல யோசனை என்று சொன்னார்.
கோவியார்தான் மறுபடியும் அங்கு சென்று, இது அமல் படுத்தப் பட்டிருக்கிறதா எனச் சொல்ல வேண்டும்!!

அப்புறம் இன்னொரு ரகசியம்!

அந்த பீச்வாலிபால் இடத்திலிருந்து, கோவியாரைத் தள்ளிவர நான் பட்ட பாடு!......!!:))

பஸ்சை தவற விட்டிருப்போம்!!

said...

பீச் வாலிபாலா?

ரொம்ப குஜாலா இருந்திருக்குமே!!!

சொக்கா சொக்கா அது எனக்கில்ல,.,.

said...

//Sivabalan said...
GK,

ஆக, ஒரு செல் போன் காலி.. இல்லை புது போன் வாங்க வேண்டும் என்பதற்காக நைசா தண்ணிரீல் போட்டுடீங்களா!! Ha Ha Ha..

சுவாரசியமாக செல்கிறது தொடர்..

அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளது.
//

சிபா...!
தண்ணீரில் விழுந்தது கேமரா கைதொலைபேசி ... அப்பறம் வாங்கியது சாதரண கைதொலைபேசி ம் குடுத்துவச்சது அவ்வளவுதான் :(

அடுத்தபதிவு ... எழுதிடுவோம் !
:))

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குறும்பு? :-))
SK ஐயா, அதற்கு அந்தப் பாம்புக்காரர் என்ன சொன்னார் என்று சொல்லவே இல்லீயே!
//

ஆமங்க கண்ணபிரான்...! அவர் குறும்புகாரார்தான் ... அவருடன் நல்ல கலகலப்பு ... நண்பராக அடைந்ததற்கு புண்ணியம் செய்திருக்கிறேன்.

உங்கள் கேள்விக்கு அவரே பதில் சொல்லிவிட்டார்.

நன்றி கண்ணபிரான் அவர்களே !

said...

// SK said...
பாவம்ங்க!
வர்றவர் போறவர் எல்லாம் பார்த்துவிட்டுப் போனார்களே தவிர, ஒருவராது 5 வெள்ளி கொடுத்து பாம்பைத் தோளில் போட்டு படம் எடுக்க முன்வரவில்லை. [நாங்கள் உட்பட]

பரிதாபப் பட்டு அவரிடம் தெரிவித்த ஆலோசனைதான் அது!

அவர் ஒரு பாகிஸ்தானியர்!

சிரித்தபடி நல்ல யோசனை என்று சொன்னார்.
கோவியார்தான் மறுபடியும் அங்கு சென்று, இது அமல் படுத்தப் பட்டிருக்கிறதா எனச் சொல்ல வேண்டும்!!

அப்புறம் இன்னொரு ரகசியம்!

அந்த பீச்வாலிபால் இடத்திலிருந்து, கோவியாரைத் தள்ளிவர நான் பட்ட பாடு!......!!:))

பஸ்சை தவற விட்டிருப்போம்!!
//

ஆகா எஸ்கே ஐயா !

கூலிங் கிளாசைப் போட்டு மைனாராக நீங்க அங்கே சுற்றி சுற்றி வந்ததை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

அடுத்தமுறையாவது பீச்சில் அதிக நேரம் செலவளிக்க என்னை விடுங்கள் !
:))

said...

// விடாதுகருப்பு said...
பீச் வாலிபாலா?

ரொம்ப குஜாலா இருந்திருக்குமே!!!

சொக்கா சொக்கா அது எனக்கில்ல,.,.
//

கருப்பு அவர்களே,

தொலைபேசி தண்ணீரில் விழாமல் இருந்திருந்திருந்தால், நீங்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது உங்களுக்கு நேரடி வர்ணனை சொல்லி இருப்போம் !
:))

said...

வலைப்பூக்கு வருகை தந்தமைக்கு நன்றி கண்ணன்.

said...

அந்த பீச்வாலிபால் இடத்திலிருந்து, கோவியாரைத் தள்ளிவர நான் பட்ட பாடு!......!!:))
பஸ்சை தவற விட்டிருப்போம்!!
ஆகா எஸ்கே ஐயா!
கூலிங் கிளாசைப் போட்டு மைனாராக நீங்க அங்கே சுற்றி சுற்றி வந்ததை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அடுத்தமுறையாவது பீச்சில் அதிக நேரம் செலவளிக்க என்னை விடுங்கள்!:))

ஆஹா! என்ன நடக்குது இங்கே!

said...

///
சுவாரசியமாக செல்கிறது தொடர்..

அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளது.
///

வழிமொழிகிறேன் எதிர்பார்க்கிறேன்.

:-)))))