Thursday, January 04, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

கத்திக் கத்தி குத்துவசனம் ... (மின் அஞ்சலில் வந்தது)அனுப்பியவர் எனது நண்பர் JT Prabhu

சிட்டிசன்
அஜித் : அத்திப்பட்டின்னு ஒரு ஊர் இருந்துச்சே தெரியுமா ?
நீதிபதி : எருமைப்பட்டின்னு ஒரு ஊர் இருக்கு அது தெரியுமா உனக்கு ? தெரியாதுல்ல... அப்போ அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு !!!
அஜித் : ??? !!!

காக்க காக்க
ஜீவன் : அவளை தூக்குரண்டா... உனக்கு வலிக்கும்டா... அப்ப தெரியும்டா..
சூர்யா : எனக்கு வலிக்கிறது இருக்கடம்டா...உனக்கும் வலிக்கும்டா... ஏன்னா ... அவ 120 கிலோ

சந்திரமுகி
பிரபு : என்ன கொடுமை சரவணன் ?
சரவணன் : எது??? ஜோதிகாவை உனக்கு ஜோடியாகப் போட்டதா ?

ரமணா
விஜயகாந்த் : தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்தை 'மண்ணிப்பு'
மாணவர்கள் : சார் .. உங்க தமி(லே)ழே எல்லோரும் பிடிக்கலேங்கிறாங்க

திருமலை
விஜய் : யார்டா ... இங்கே அரசு ? நீ அரசா, நீ அரசா அல்லது நீ தான் அரசா ?
நான்காவது நபர் : இங்கெல்லாம் இல்லிங்க... குமுதம் ஆபிஸ் மவுண்ட் ரோட்டில் இருக்கு அங்கே போய் கேளுங்க

நாயகன்
கமல் : அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்
ட்ராபிக் போலிஸ் : அவன் போகும்போது பச்சை இப்போ சிவப்பு நிறுத்தலேன்னா நீதான் அடிபட்டு சாவே பரவாயில்லையா ?

முத்து ?
ரஜினி : நான் எப்ப வருவேன் ... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... வர வேண்டிய நேரத்தில கரெக்டா வந்துடுவேன்
கவுண்டர் : ஐஸ்வர்யாராயும் வருவாங்களாண்ணா ? நீயும் ஐஸ்வர்யா ராயை கூப்பிட்டு கூப்பிட்டு... பார்க்கிறே எப்படியும் வருவது மாதிரி தெரியல

சுள்ளான்
தனுஸ் : நான் சுள்ளான்டா ... சூடானா சுளுக்கெடுத்துடுவேன்
அடியாள் : அப்போ ஆறிப் போனா வழுக்கிவிழுந்துடுவியா ?

மாயாவி
சூர்யா : யார்ரா எனக்கு போட்டி ... எனக்கு யாரும் போட்டி இல்லே... நானும் யாருக்கும் போட்டி இல்லே
சத்யன் : அண்ணே இடுப்பில வேட்டி இல்ல ... அதப்பாருங்க மொதல்ல ...

படையப்பா
ரஜினி : அழகேசண்ணா ... பொண்ணுங்கள்ல மூணு வகை சாத்விகம், ப்ரஜோதகம், பயானகம்
செந்தில் : மொறைச்சிட்டு போனால் சாத்வீகம், செருப்பை கழட்டி காட்டினால் ப்ரஜோதகம், செருப்பால் கன்னத்தில் மாறி மாறி அறைஞ்சா பயானகம்னு சொல்றிங்களா ?

ரன்
அதுல்குல்கர்னி : எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா ?
விஜயன் : இது சாம்பார் சோறு ... ஆத்தா உப்பு போடவே மறந்துட்டு சப்புன்னு இருக்கு

வல்லவன்
சிம்பு : நீ அம்பானி பொண்ணைக் கட்டிக்கிட்டு பெரிய ஆளாகனும்னு ஆசைப்படுறே... நான் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படுகிறேன்
நண்பன் : டேய் ஓட்டவாயா... போர்ஜரி கேசுன்னு புடிச்சு உள்ள வச்சிடப்போறானுங்க ... பாத்துடா

தவசி
விஜயகாந்த் : புயல் அடிச்சி பொழைச்சவங்க கூட இருக்காங்களாம் ... ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லேடா
இளவரசு : பத்துப் பேரு செத்ததுக்கு யாரு காரணம்னு போலிஸ் அல்லாடிக்கிட்டு இருக்கு ...ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறிங்களோ ... செல்போன் வீடியோ எடுத்து எவனாவது போட்டுக் கொடுத்துட்டா ... செக்சன் 302 தாண்டி


இந்த சிரிப்பு துணுக்குக்களை எழுதியவர் நம் பதிவர் வெட்டிப்பயல், நெட், மின் அஞ்சல் என பெரிய அளவில் உலா வருது

15 : கருத்துக்கள்:

said...

என்னாங்கண்ணா இதெல்லாம்!

என்ன ஆச்சுண்ணா!

சொல்லு கண்ணா!

:))

said...

// SK said...
என்னாங்கண்ணா இதெல்லாம்!

என்ன ஆச்சுண்ணா!

சொல்லு கண்ணா!

:))
//

எஸ்கே ஐயா !
இறுக்கங்களைக் குறைத்து, நெருக்கங்களை வளர்த்து எல்லோரும் சிரித்து மகிழ என்னால் ஆன கைமாறு !

வருகைக்கு நன்றி !

said...

அதுசரி, படத்தை மட்டும் எதுக்கண்ணா
பயமுறுத்துறமாதிரி போட்டு வச்சிறிக்கீறீங்க?

said...

//அதுசரி, படத்தை மட்டும் எதுக்கண்ணா
பயமுறுத்துறமாதிரி போட்டு வச்சிறிக்கீறீங்க?//

சுப்பையா அண்ணே, அந்தப் பூனை சிரிக்கிதுன்னு நினைக்கிறேன்.

said...

///
கமல் : அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்
ட்ராபிக் போலிஸ் : அவன் போகும்போது பச்சை இப்போ சிவப்பு நிறுத்தலேன்னா நீதான் அடிபட்டு சாவே பரவாயில்லையா ?
///

இது சூப்பரா இருக்கு.

said...

//சேதுக்கரசி அவர்கள் சொல்லியது:
சுப்பையா அண்ணே, அந்தப் பூனை சிரிக்கிதுன்னு நினைக்கிறேன்.//

அது சாதாரண சிரிப்பாகத் தெரியவிலையே சகோதரி!

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று ஹேமநாத பாகவதராக வரும் திரு.பாலையா அவர்கள் சிரிப்பதைப் போலல்லவா இருக்கிறது!

said...

நல்லாவே இருக்கு கண்ணன்.

இன்னும் நிறைய இது மாதிரி எழுதுங்க.
இந்த மண்டை காயற வசனன்ங்அளைக் கேட்டுக் கேட்டு டி.வி. பார்க்கிரதையே நிறுத்திட்டேன்.
கூடவே ஸ்விஷ், ஸ்விஷ்னு ஒரு சத்தம் வேற,.
சாமி,!!யாரு காப்பத்தப் போறாங்க சினிமாவை:-)

said...

:-)))

said...

//குமுதம் ஆபிஸ் மவுண்ட் ரோட்டில் இருக்கு அங்கே போய் கேளுங்க//

குமுதம் ஆபிஸ் புரசைவாக்கத்தில் அபிராமி மாலுக்கு அருகில் உள்ளது... ஹிஹி.....

உங்க காமெடிய பாத்து மூடுனாதால்

ஹிஹி........

said...

வசனங்கள் எல்லாம் லொள்ளு சபா ரேஞ்சில் இருக்கு... ஆனா சூப்பரா இருக்கு
:-))))))))))))))

said...

"கத்தாதே..கத்தாதே...கத்துனா...குத்துவேன்.."

"குத்தாதே..குத்தாதே....குத்துனா...கத்துவேன்..""

said...

சூப்பர் கண்ணன்..

:)

said...

Too bad.... U 2 Kovi?????????????

This was written by me...

Everyone who have commented here are frequent visitors to my blog and none of them could figure it out...

//குமரன் (Kumaran) said...
:-))))

Good Friday...

I mean it is good to read this posting today (Friday)
//

said...

//வெட்டிப்பயல் said...
Too bad.... U 2 Kovi?????????????

This was written by me...

Everyone who have commented here are frequent visitors to my blog and none of them could figure it out...

//குமரன் (Kumaran) said...
:-))))

Good Friday...

I mean it is good to read this posting today (Friday)
//
//

பாலாஜி,

அப்படியா ? மின் அஞ்சலில் தான் வந்தது, உங்களுடையது என்று எனக்கு தெரியாது. உங்கள் பேரை பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

said...

//பாலாஜி,

அப்படியா ? மின் அஞ்சலில் தான் வந்தது, உங்களுடையது என்று எனக்கு தெரியாது. உங்கள் பேரை பதிவில் சேர்த்துவிடுகிறேன்.//

மிக்க நன்றி கோவி... நான் எழுதன காமெடி, கதைகள் எல்லாம் ஃபார்வேர்ட் ஆகி இப்ப பல வலைப்பதிவுல வேற வேற பெயர்ல இருக்குது... என்ன பண்ணனு புரியல :(