Wednesday, January 24, 2007
பிரிவும், பரிவும் ! (கவிதை)
வார்த்தை வழுக்கலில் தடுமாறி
விழுந்தது நம் நெருக்கம்,
எவர் மீது தவறு என்று
ஆராய்ந்ததில் ஞாயங்களை
விட்டு விட்டு காரணங்களை
தேடி தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு
அமைதியாய் இறுகியது மனம் !
இறுகிய பாறையினுள்ளும்
வாழும் தேரையாய்
உன் நினைவுகள் !
நாட்கள் நகர,
ஈரம் காய்ந்து
நீர்த்துளிகள் எல்லாம்
ஆவியாகி மறைந்தது
என்று நினைத்திருந்த போது,
ஏதோ ஒரு பெரிய நிழல்
என் மீது மெதுவாக
வந்து விழுந்தது !
மேலே பார்த்தேன்
நீர்துளிகள் தூய்மையாக்கப்பட்டு
மேகங்களாக அவை
மாறியிருக்கின்றன
என்பதை உணர்ந்தேன் !
மழைத் துளிகளை பிரசவிக்க வேண்டி
ஈரக் காற்றுக்காக ஏங்கும்
மேகம் காற்றில் மெதுவாக
மிதந்து கொண்டிருந்த வேளையில்
வாடைக்காற்று என் இதயத்தில்
வீச உன் வாசல் தேடி
நடந்து கொண்டிருக்கும் போது,
அங்கும் மழையோ அதிசயித்தேன்,
கண்களின் ஓரத்தில் ஒரு
ஈரத் துளியுடன்
என்னை எதிர்கொண்டு
வந்துகொண்டிருக்கிறாய் நீ !
Subscribe to:
Post Comments (Atom)
3 : கருத்துக்கள்:
GK,
நல்ல பரிவு! இறுதியல்..
நல்லா எழுதியுள்ளீர்கள்!!
உணர்வுகளை நன்றாக சித்தரித்திருக்கிறீர்கள். தலைப்பு "பிரிவும், பரிவும்" என்றிருக்கவேண்டும்.
//Sivabalan said...
GK,
நல்ல பரிவு! இறுதியல்..
நல்லா எழுதியுள்ளீர்கள்!!
//
நன்றி !
//சேதுக்கரசி said...
உணர்வுகளை நன்றாக சித்தரித்திருக்கிறீர்கள். தலைப்பு "பிரிவும், பரிவும்" என்றிருக்கவேண்டும்.
//
நன்றி !
மாற்றி இருக்கிறேன்.
Post a Comment