Sunday, January 07, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

பெரியார் கண்ட வாழ்வியல் (சிங்கப்பூர் நிகழ்ச்சி)

இனிய மாலைப் பொழுதில் பதிவர் நண்பர் குழலி அழைக்க பெரியார் கண்ட வாழ்வியல் குறித்து திராவிட கழக தலைவர் மானமிகு டாக்டர் கி.வீரமணி ஐயா அவர்களின் உரையை கேட்கும் நல்வாய்பு கிட்டியது.

பெரியாரையும், பெரியார் கொள்கைகளையும் கடவுள் மறுப்பு என்ற கால்கிலோ வெங்காயத்திலும், பார்பனீய எதிர்ப்பு என்ற வெள்ளைப் பூண்டுகளில் தினித்து அடைக்கப்பட்டதை மட்டுமே நுகர்ந்து வந்திருந்ததால் பெரியார் பற்றி வேறேதும் அறியாதவனாகவே இருந்தேன். வலைப்பதிவுகளைப் படிக்க தொடங்கியதும் பெரியார் பற்றிய மீள்வாசிப்பு அறிமுகம் ஆகியது. பெரியார் பற்றிய விமர்சனங்களை ஓரம் கட்டிவிட்டு பார்த்தபோது பெரிய அளவு பெரியாரின் கருத்துகளால் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவுகள் வியக்கத்தக்கதாகவே எனக்கு தெரிகிறது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ... என்ற திருக்குறள் கருத்துக் கேட்ப சிலவற்றை ஆராய்ந்தால் நமது கருத்துக்களில் தெளிவு கிடைக்கும் என்ற அடிப்படையில் பெரியாரின் சிந்தனைகளை ஒருவர் ஆழ்ந்துபடித்தால் கண்டிப்பாக சமூக நீதியில் அவருடைய பெரும் பங்கு தெரியவரும்.
நிகழ்ச்சி 'காலத்தை வென்றவன்...நீ' என்ற பாடலுக்கு ஸ்ரீ வைஷ்ணவி மற்றும் ஸ்ரீ விசாலாட்சி என்ற இரண்டு மாணவிகளின் நடனத்துடன் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியில் மேலும் சில மாணவிகளின் பாரதிதாசன் பாடல், திருக்குறள் வாசிப்பு என்ற சிறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. திரு.எம் இலியாஸ் அவர்கள் சிங்கப்பூரில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தசெய்தியுடன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து டாக்டர் சுப.திண்ணப்பன் மற்றும் கவிஞர் மா.அன்பழகன் பெரியார் கருத்துக்களில் வாழ்வியல் பற்றி அருமையாக உரையாற்றினார்கள்.

அனைவரும் எதிர்பார்புடன் இருந்த சிறப்புரையை வீரமணி ஐயா அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் ஆற்றினார்கள். ஐயாவின் வயது 74ஐ தாண்டியது என்று அறிந்தேன். தங்குதடையின்றி தண்ணீர் குடிக்காமல் ஐயா ஆற்றிய உரையை கேட்டவர்கள் மெய்மறந்தனர்.

லட்சியத்துக்கு போராடுபவர்கள் பலவித அவமானங்களைக் கடக்கவேண்டும் என்ற தந்தை பெரியாரின் செய்தியை பெரியாரின் பொதுவாழ்வில் அவருக்கு நேர்ந்த அவமான நிகழ்வுகள் (அழுகிய முட்டை வீச்சு) ஆகியவற்றை அவர் எவ்வாறு தாங்கிக் கொண்டு தொடர்ந்து முனைபாக செயலாற்றி மக்களை விழிப்புற வைத்தார் என்ற செய்தியை சொல்லி... வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அவமானங்களைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்று மிகச் சிறப்பாகப் பேசினார்.
இலவசங்களை ஏற்றுக் கொண்டு சோம்பேறிகள் ஆகிவிடக் கூடாது... சகோதரத்துவம் மலர அனைவரம் சக மனிதனை நினைக்கவேண்டும். கும்பிடுதல் பற்றி அவருக்கே உரிய பாணியில் சுவையாக சொன்னார். அதாவது 'அந்த காலத்தில் ஒருவர் ஒருவரைப் பார்த்து கும்பிட்டால் அருகில் வராமல் அங்கேயே நில்' என்பதாகவும் இருந்திருக்கிறது. கும்பிடுவதன் பெருள் இன்றைக்கு அவ்வாறு இல்லாமல் தமிழர்களின் பண்பாடு என்ற நல்நிலையை அடைந்திருக்கிறது என்பதற்காக மகிழலாம்... இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைகுலுக்கியாவது நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

பெண்களின் முன்னேற்றம் ஒரு சமூகத்தின் முன்னேற்றமாக எவ்வாறு மாறி இருக்கிறது என்பதையும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மிகத்தெளிவாக எடுத்துச் சொன்னார். புத்தியுடையவரே புத்தர் என்ற பெரியாரின் புத்தர்பற்றிய கருத்தை நிகழ்வுகளுடன் சுவையாக சொன்னார்.


நிகழ்ச்சிபற்றி மேலும் விரிவாக நண்பர் குழலி எழுதுவார்.

*******

எனக்கு புரிந்தவரை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள் முழுக்க முழுக்க வாழ்வியலுக்கானது என்பதை புரிந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்தது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


என்ற திருக்குறளும் பல உண்மைகளைச் சொல்கிறது. அதாவாது கிடைத்த வாழ்கையை நமக்கும் அடுத்தவருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டாலே போதும் அவனே தெய்வமாக போற்றப்படுவான். பலனுக்காக மாட்டுத் தொழுவத்தில் மாடுடன் மாடாக அடிமைகளாக கட்டப்பட்டு... வாழ்க்கை தொலைத்த தலித்துகளுக்கு இறைவனைக் காட்டுவதால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்களுக்கு உணர்வூட்டி வாழ்வதற்கு கற்றுக் கொடுக்க வாழ்வியலே போதும். வாழ்கையில் அவர்களுக்கு சமூக நீதி கிடைத்து கல்வி கேள்விகளில் சமமாகும் போது ...அவர்கள் குடியிருக்க வீடு பெற்ற பிறகு ... அவர்களுக்கு எப்படி இறைவனை அடைந்து வீடு பேறு அடையலாம் என்பதைப் பற்றி போதிப்பது எளிது - இது என் கருத்துபி.கு : இது பெரியார் மீதும் அவர்தம் கொள்கைகள் மீதும் மதிப்பு வைத்திருப்பவர்களுடன் பகிர்வதற்காகஏழுதப்பட்ட பதிவு. பெரியாரையோ, நிகழ்சியைப் பற்றியோ உங்கள் எதிர்வினைகள் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்பதற்கு இது அரசியல் பதிவு அல்ல. நடந்த ஒரு நிகழ்ச்சி அதைப்பற்றிய எனது பார்வை. புரிந்து கொள்ளுங்கள் !

27 : கருத்துக்கள்:

said...

அதுக்குள்ளவா , ரொம்ப பாஸ்ட் தான்
அன்புடன்
சிங்கை நாதன்

said...

GK,

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

நேரில் சென்ற அனுபவம்.. நன்றி.

இன்றய இளைஞர்களுக்கு தேவையானது இன்னும் பெரியாரிடம் நிறைய உள்ளது

said...

பரமபிதா ...!

உங்களின் பின்னூட்டம் வெளியிட முடியாது... இது எதிர்வினைக்கான பதிவு அல்ல...உங்களுக்கு பெரியாரை விமர்சிக்க நிறையபதிவுகள் உள்ளது...
அங்கு உங்களுக்கு சிகப்பு கம்பளம் இருக்கும்.

நன்றி !

said...

//

உங்களின் பின்னூட்டம் வெளியிட முடியாது... இது எதிர்வினைக்கான பதிவு அல்ல...
//

பெரியார் கண்ட வாழ்வியல் என உரையாற்றியதால், அவர் கண்ட 'அனைத்தையும்' மானமிகு வீரமணி அவர்கள் 'விளக்கினாரா' என அறியவே இதை மிக நாகரீகமாகவே கேட்டேன்.

இது இந்த பதிவிக்கு மிக தொடர்புடையதே. பதிவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிருந்தால் நானே விலக்கியிருப்பேன்.

வாழ்க உங்கள் கருத்துச் சுதந்திரம்

என்ன, யாருமே விமர்சனத்திற்கு அப்பாலில்லை எனச் சொல்லிவிட்டு, பெரியாரை விமர்சித்தால் மட்டும் நிறைய பேருக்கு காஷ்மீர் முதன் அண்டார்டிகா வரை நெறி கட்டுகிறது

பரம்ஸ்

said...

பரமபிதா அவர்களே,

உங்கள் பின்னூட்டத்தை ஏற்கவில்லை என்பதல் உங்களை தனிபட்ட முறையில் வெறுப்பதாக நினைக்கவேண்டாம்.

முதலில் பின்குறிப்பு போட நினைத்து பின்பு மருந்து குடிக்கும் போது குரங்கைப் பற்றிப் பேசக்கூடாது என்று விட்டுவிட்டேன்.

உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு பிறகு அது அவசியம் ஆகிவிட்டது. சேர்த்துவிட்டேன்.

எதிர்வினைகள் என்ற பெயரில் தவிர்க்க வேண்டிய வற்றை எடுத்துக் கொண்டுவருபவர்களுக்கு அதே முறையில் பதில் சொல்லும் அளவுக்கு திறமையோ புலமை இல்லை !

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி !

said...

நல்ல பதிவு நன்றி.பெரியாரை ஆதரிப்பவர்கள் அவருடைய தன்னலமற்றத் தொண்டை பாரட்டி ஆதரிக்கிறார்கள்.ஆனால் பெரியாரை எதிர்ப்பவர்கள் ஒன்று அவர் எதற்காகச் சொன்னார்,ஏன் சொன்னார் எந்தக்கால கட்டத்தில் எத்தனை எதிப்புக்களுக்கிடையே சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது அவருடையக் கொள்கையால் தங்கள் சுயநலம் பாதிக்கப்பட்டு அவர்களுடைய ஏமாற்று வித்தைகள் வெளியே வந்துவிட்டதே என்று ஆத்திரப்படுபவர்கள்.
பெரியார் கொள்கைகளின் அடிப்படையே மனித நேய்ந்தான்.அனைவரும் சமம்.ஆண்களும் பெண்களும் சமம்.சிக்கனமாக மதம் ,கோயில் குளம் அர்த்தமில்லாத பண்டிகைகள் செலவுகள்,மூட்நம்பிக்கையால் விளையும் வேதனைகள் என்பதையெல்லாம் நன்கு சிந்தித்துத்தான் அனைத்துக்கும் ஆணிவேராணக் கடவுள் என்பதைச் சாடினார்.மனிதனால் படைக்கப்பட்டக் கடவுள் தத்துவம் மோசதாரிகளால் மனிதனை ஏமாற்றி மடையர்களாக ஆக்குவதற்குப் பயன்பட்டுவிட்டதைக் கண்கூடாகக் கண்டார்.இதை யாரும் மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாததைப் பார்த்து அதனால் தன்க்கு வரவிருக்கும் தொல்லைகள் பற்றி அஞ்சாது துணிவுடன் எதிர்த்தார்.அவர் வாழ்நாளில் எந்த ஒரு தனி மனிதருக்கோப் பொதுச்சொத்திற்கோ ஒரு கேடும் விளையாமல் போரட்டங்கள் நடத்தினார்.காந்தியாரைவிட எழிமையாக வாழ்ந்தார் உண்மை பேசினார்.பதவிகள் வேண்டாம் தொண்டே வாழ்வு என்று கடுமையாக உழைத்தார்.
அவரைத் திட்டுபவர்கள் அவர் என்ன சொன்னார் செய்தார் என்று தெரிந்துகொண்டு பின்னர் திட்டவேண்டும் அல்லது கேள்வி கேளுங்கள் அதற்கு விடையளிக்கிறோம்.
மனித நேய்ம்தான் எதிர்காலம்,நாம் அனைவரும் சேர்ந்து உழைத்தால் அனைவர்க்கும் நல்லது.வீண் பேச்சும் வெட்டி எண்ணங்களும் உதவாது.
வாழ்க மனித நேயம்.

said...

கோவி.கண்ணன் அண்ணா. கல்லூரியில் படிக்கும் போது தந்தை பெரியாரின் நூல்கள் பலவற்றை வத்திராயிருப்பு நூலகத்திலிருந்து பெற்று தொடர்ந்து படித்திருக்கிறேன். 'உண்மை' இதழ்களையும் படித்திருக்கிறேன். பெரியாரின் பற்பல கருத்துகளுடன் உடன்பாடு அப்போது ஏற்பட்டது. 'தொண்டு செய்து பழுத்தப் பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டை சுரப்பை உலகு தொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும்' என்ற பாடல் செய்யுள் பகுதியில் பள்ளியில் படித்தது அப்போதும் இப்போதும் நன்கு நினைவில் இருக்கிறது.

பெரியாரின் கருத்துகள் பல பரிமாணங்களில் இருந்தாலும் பெரியாரின் தொண்டர்களாலும் அவரின் கருத்துகளை எதிர்ப்பவர்களாலும் (இரண்டு கட்சிகளாலுமே) பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் எதிர்ப்பும் தான் பெரும்பான்மையாக முன்னிறுத்தப்படுகின்றன என்பது என் அனுபவம். அது என் அனுபவம் மட்டுமே. உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம்.

said...

கோ.க,
நடந்த நிகழ்வை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

/* பெரியார் பற்றி வேறேதும் அறியாதவனாகவே இருந்தேன். வலைப்பதிவுகளைப் படிக்க தொடங்கியதும் பெரியார் பற்றிய மீள்வாசிப்பு அறிமுகம் ஆகியது */

உண்மை. என் நிலையும் இதே தான். பெரியார் எதிர்பாளர்களினதும், ஆதரவாளர்களினது பதிவுகளையும் பார்க்கும் போது, அவரைப் பற்றி அறிய வேண்டும் எனும் ஆவல் மேலும் வலுப்பெற்றது.

/* வாழ்க்கை தொலைத்த தலித்துகளுக்கு இறைவனைக் காட்டுவதால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்களுக்கு உணர்வூட்டி வாழ்வதற்கு கற்றுக் கொடுக்க வாழ்வியலே போதும். வாழ்கையில் அவர்களுக்கு சமூக நீதி கிடைத்து கல்வி கேள்விகளில் சமமாகும் போது ...அவர்கள் குடியிருக்க வீடு பெற்ற பிறகு ... அவர்களுக்கு எப்படி இறைவனை அடைந்து வீடு பேறு அடையலாம் என்பதைப் பற்றி போதிப்பது எளிது - இது என் கருத்து */

உங்கள் கருத்தோடு நான் முழுக்க முழுக்க உடன்படுகிறேன்.

said...

வாழ்கையை நமக்கும் அடுத்தவருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டாலே போதும் அவனே தெய்வமாக போற்றப்படுவான். பலனுக்காக மாட்டுத் தொழுவத்தில் மாடுடன் மாடாக அடிமைகளாக கட்டப்பட்டு... வாழ்க்கை தொலைத்த தலித்துகளுக்கு இறைவனைக் காட்டுவதால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. //அவர்களுக்கு உணர்வூட்டி வாழ்வதற்கு கற்றுக் கொடுக்க வாழ்வியலே போதும். வாழ்கையில் அவர்களுக்கு சமூக நீதி கிடைத்து கல்வி கேள்விகளில் சமமாகும் போது ...அவர்கள் குடியிருக்க வீடு பெற்ற பிறகு ... அவர்களுக்கு எப்படி இறைவனை அடைந்து வீடு பேறு அடையலாம் என்பதைப் பற்றி போதிப்பது எளிது - இது என் கருத்து//

அறிஞர்கள் பேசியவற்றைச் சிறப்பாக உள்வாங்கிக்கொண்டதோடு பெரியார்
சொன்ன வாழ்வியலையும் புரிந்துகொண்டு எழுதியுள்ளீர்கள் கோவியாரே!

பாராட்டுக்கள்!

said...

நிகழ்ச்சி பற்றிய உங்களின் இந்த கட்டுரை மிகவும் சுவையாகவும் சிறப்புடனும் இருந்தது.

வாழ்த்துக்கள் நண்பரே.

said...

இலவசங்களை ஏற்றுக் கொண்டு சோம்பேறிகள் ஆகிவிடக் கூடாது... சகோதரத்துவம் மலர அனைவரம் சக மனிதனை நினைக்கவேண்டும்.

When Veeramani says this it is a cruel joke.He praises DMK govt.
which is indulging in crass
populism.He targets one religion
and one group of people and condemns only them.He has repeatedly said Brahmins are
not Tamils.He spreads hatred
and intolerance but pretends
to be a humanist.He is a wolf
in sheeps clothing.

said...

பெரியாரியலின் மையக்கருத்து "மனிதநேயம்".

"கடவுளை மற" என்ற அவர் வாக்கியத்தின் முதல் பகுதி மட்டுமே பார்பனர்களால் அதிகம் பேசப்படுகின்றது. அதன் தொடர்ச்சி "மனிதனை நினை".

மனிதரில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்பதே அவரின் அவா. அவாள்கள் அதற்கு தடை போட்டதால் அவாள்களை எதிர்த்தார். கடவுளை அவாள் துணைக்கு அழைத்ததால் அதையும் எதிர்த்தார்.

said...

பெரியாரியலின் மையக்கருத்து "மனிதநேயம்".

Is that why Periyarists are spreading hatred against one
religion and one group of people.
Where is மனிதநேயம் when they
proclaim that all those who have
their mother tongue as Tamil are
not Tamils and one group is not
part of Tamilian community.The
problem started with Periyar himself.It was he who promoted
hatred in the name of rationality
and projected stereotyped images.
Where was his மனிதநேயம் when those asked for a wage hike were
brutally killed in KeezhVenmani.
Whom did he blame for it.

said...

//Where is மனிதநேயம் when they
proclaim that all those who have
their mother tongue as Tamil are
not Tamils and one group is not
part of Tamilian community.//

மனிதநேயம் என்பது மனிதர்களுக்காக. Not for the community which you are talking about. இந்த கேள்விகளுக்கு பலர் பல முறை பதில் அளித்தும் திருப்பி திருப்பி கேட்கிறீர்களே. வேறு கேள்வியே உங்களிடம் இல்லையா?

கீழ் வெண்மணி பற்றி நீங்கள் கொடுத்திருந்த சுட்டியை படித்தேன். அந்த விஷயத்தில் பெரியாரின் வாதம் சரியானதல்ல என்பது என் கருத்து.

said...

பின்னூட்டமிட்டு கருத்துக்களைக் பகிற்ந்து கொண்ட சிவபாலன், செந்தில் என்கிற சிங்கை நாதன், பரம்ஸ்,தமிழன், சுப்பைய்யா ஐயா, குமரன், விடாதுகருப்பு, ரவிஸ்ரீனிவாஸ்,அருண்மொழி ஆகிய அனைவருக்கும் நன்றி.

said...

நிகழ்ச்சியைப் பற்றிய அருமையான, சுவையான பதிவு.

ஒவ்வொருவர் வாழ்விலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய, கூடிய குணாதிசயங்கள் நிறையவே இருக்கின்றன. ப்பெரியாரிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ளலாம்!

இது பெரியாரைப் போற்றும் பதிவு எனத் தெளிவாகச் சொல்லிய பின்னர், பி.கு.வில் அந்தக் கடைசி வரிகள் மனித நேயத்தோடு அமையவில்லையே, கோவியாரே!

மட்டுறுத்தல் செய்துதானே பின்னூட்டங்களை அனுமதிக்கிறீர்கள்.

சுடச்சுட எப்படி உடனே எழுதிப் போட முடிகிறது உங்களால்!!

said...

எஸ்கே ஐயா,

பின்குறிப்பு போடாமல் தான் எழுதினேன். பின்பு வந்த பின்னூட்டங்களினால் அவற்றை சேர்க்க வேண்டியதாயிற்று ... நான் இந்த பதிவில் எந்த அரசியலும் பேசவில்லை அதையும் மீறி ஆர்வமுடன் (?) வருபவர்களுக்கு வழி சொல்ல வேண்டாமா ? பின்குறிப்பின் ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்கிவிட்டேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றி !

எனக்கும் வருத்தம் தான் .

மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி !

said...

///
பெரியாரின் சிந்தனைகளை ஒருவர் ஆழ்ந்துபடித்தால் கண்டிப்பாக சமூக நீதியில் அவருடைய பெரும் பங்கு தெரியவரும்.
///

உண்மைதான்.

நீங்களும் கருப்புவைப் பார்க்கவில்லையா?

said...

//செந்தில் குமரன் said...
உண்மைதான்.

நீங்களும் கருப்புவைப் பார்க்கவில்லையா? //

குமரன்,

நான் குழலியுடன் சென்றேன்... கருப்பு என்று யாரும் சொல்லிக் கொண்டு சந்திக்கவில்லை !

எனக்கும் ஏமாற்றமே !

said...

நல்ல பதிவு கோவி.. குழலியின் பதிவுக்காக காத்திருக்கிறேன்..

said...

"நான் குழலியுடன் சென்றேன்... கருப்பு என்று யாரும் சொல்லிக் கொண்டு சந்திக்கவில்லை !
எனக்கும் ஏமாற்றமே !"

You are too naive, sir. Fact is, Karuppu did not talk to you for the same reason he didn't turn up for the meeting with SK.

He cannot afford to meet you, that *******.

Thangamma

[ தங்கம்மா நீங்கள் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ... சம்பந்தப்பட்டவர் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடும் எனவே பெயரை எடுத்துவிட்டேன்... இது கருப்புவைப் பற்றி பேசும் பதிவல்ல !

புரிந்து கொள்ளுங்கள் !!!
:(
கோவி.கண்ணன்
]

said...

//இன்றய இளைஞர்களுக்கு தேவையானது இன்னும் பெரியாரிடம் நிறைய உள்ளது //

சிவபாலன் அய்யா,

எதை சொல்றீங்க? தாடியா?

பாலா

said...

நான் கலந்து கொள்ளாததற்காக வருந்துகிறேன். வந்திருந்தால், இந்தக் கருப்பு உட்பட, எல்லோரையும் சந்தித்திருக்கலாம்.. கோவியாரே.. உங்கள் சுடச்சுடப் பதிவிற்கு நன்றி. அடுத்தமுறை கருப்புவை நல்ல கேமராவோடு வரச் சொல்லவும். எல்லாம் மங்கலாகத் தெரிகிறது. (எனக்கு மட்டுமா??, இல்லை உங்களுக்குமா?)

said...

//bala said...
//இன்றய இளைஞர்களுக்கு தேவையானது இன்னும் பெரியாரிடம் நிறைய உள்ளது //

சிவபாலன் அய்யா,

எதை சொல்றீங்க? தாடியா?

பாலா
//

பாலா,
உட்கார்ந்து சிந்திப்பிங்களா ?
உங்கள் லீலைகளெல்லாம் வல்லிய கைகளிடம் வைத்துக் கொள்ளக் கூடாதா ? அதற்கு வலைப்பதிவில் பஞ்சமா என்ன ?

காமடி பண்ணாதிங்க !

said...

//திருவடியான் said...
நான் கலந்து கொள்ளாததற்காக வருந்துகிறேன். வந்திருந்தால், இந்தக் கருப்பு உட்பட, எல்லோரையும் சந்தித்திருக்கலாம்.. கோவியாரே.. உங்கள் சுடச்சுடப் பதிவிற்கு நன்றி. அடுத்தமுறை கருப்புவை நல்ல கேமராவோடு வரச் சொல்லவும். எல்லாம் மங்கலாகத் தெரிகிறது. (எனக்கு மட்டுமா??, இல்லை உங்களுக்குமா?)
//

திருவடியான்..!
போட்டோ மங்கலாக இருந்தால் என்ன வீர மணியோசையில் மங்களகரமாக இருக்கிறதே !
:)

அடுத்த முறை என்ன ? எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் !
பாராட்டுக்கு நன்றி !

said...

//பொன்ஸ் said...
நல்ல பதிவு கோவி.. குழலியின் பதிவுக்காக காத்திருக்கிறேன்..
//

பொன்ஸ் பாராட்டுக்கு நன்றி...
உங்களைப் போலவே குழலியின் தனித்துவ கட்டுரைக்காக நானும் காத்திருக்கிறேன்!

said...

பெரியாரின் மனிதநேயம் பற்றிக் கேட்போருக்கு-ஒரு பார்ப்பனர் பெரியாரிடம் என்க்கு ஆசியர் பயிற்சிப் பள்ளியில் இட்ந்தரவில்லை யென்றார்.உடனே பெரியார் தாளாளரைக் கூப்பிட்டு அவ்ர்களுக்கு மூன்று விழுக்காடு(3%) கொடுத்துவிடுங்கள் என்றார் 1950 களிலேயே.
பார்ப்பன எத்ர்ப்பு என்போருக்கு-
அந்தக்கால்த்துச் சென்னை மாகாணத்திலே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ச்மஷ்கிருதம்தெரிந்திருக்கவேண்டும் என்று இருந்தது ஏன் தெரியுமா?
பெரிய மருத்துவர்கள் டி.எம்.நாய்ர்,முத்துலட்சுமி போன்றவர்கள் பட்டபாடு தெரியுமா?
உயர் பதவிகளிலே எத்தனை விழுக்காடுகள் யார் ஆம் 90 விழுக்காடுகள் யார் இருந்தார்கள்?
சரி பழைய மாவே வேண்டாம்.
நீங்கள் இட ஒதுக்கீட்டினால் எங்கள் வேலைகளைப் பறிக்கலாம் ஆனால் எங்கள் மூளையைப் பறிக்கமுடியாது என்று சொன்ன இந்தியக்குடியரசின் துணைத்தலைவர்க்கு மாலை போடலாமா?
நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்கிறார்கள்.நீங்கள் தமிழர்கள் ஆகாவிட்டால்கூடப் பரவாயில்லை முதலில் மனிதர்கள் ஆகுங்கள் என்பதுதானே வேண்டுகோள்.மற்றவர்களையும் மனிதர்களாக நினைத்்து நடத்துங்கள்.
இது உங்கட்கு மட்டுமல்ல இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு சாதி இந்துக்கள் மீதி இந்துக்கள் என்று ஏமாத்தும் அனைவர்க்குந்தான்.
பெரியார் பார்ப்பனரைத்திட்டுகிறார் என்கிறீர்களே என்ன விவேகானந்தரை விடவா?விவேகான்ந்தர் சொன்னபடி இந்துமதத்தில் மாற்்ற்ங்கள் செய்துகொள்ள இந்து வெறியர்கள் விடுவார்களா?
அனைவரும் சேர்ந்து உழைப்போம் மனிதநேயம் காண்போம்.அதுதான் அனைவர்க்கும் நல்லது.
முதலில் அரசியல் ச்ட்டத்தில் சாதியை ஒழிப்போம்(இது வரை தீண்டாமையை ஒழிப்போம் என்றுதான் இருக்கிறது}.அதற்குத்தான் பெரியார் ச்ட்டத்தில் உள்ள அந்தப் பகுதியை எரித்தார்.இன்று தமிழகதிலே மொட்டை விதவைகள் இல்லையென்றால் அது யாராலே?