Tuesday, January 23, 2007
காற்றுள்ள போதே ...! (கவிதை)
உலகம் கண்களை எப்போதும்
திறந்து வைத்துதான் இருக்கிறது,
ஏன் பிறந்தோம் என்று நினைக்கும் பிறப்புகளின்
கவனம் அதன் திறந்த கண்களால்
ஈர்க்கப்படுவதில்லை !
அதன் கண்கள்,
சில சிறப்பான பிறப்புகளின் பிறப்பு நாட்களை
சிறப்பு நாட்க்கள் ஆக்கி பார்கிறது !
சில சிறப்பான பிறப்புகளின் இறப்பு நாட்களை
நினைவு நாட்கள் ஆக்கிப் பார்க்கிறது !
பல பிறப்புகளின் இறப்புகள் இறுதிநாளில்
எல்லாவற்றையும் முடித்துக்கொள்கிறது !
சில இறப்புகள் மட்டுமே நினைவு நாட்களாகின்றன !
எந்த நொடியிலும் எதோ ஒன்று செய்கிறோம்,
அதில் 'ஏன் இதைச் செய்கிறோம்?'
என்ற கேள்வியுடன் தொடங்கினால்
நொடிகள் படிகள் ஆகும் !
மூச்சுக் காற்று உள்ள போதே...
முடிந்தவரை சிறப்புகளை உருவாக்கி
உயர முயற்சிப்போம், யார் கண்டது ?
நம் பிறப்பும் இறப்பும் பொருள் பொதிந்தாக
மாறக் கூடும் !
பின்குறிப்பு : அறிவுரை சொல்லும் கவிதைகள் என்றால் எனக்கு அலர்ஜி... இதில் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை ! :)
Subscribe to:
Post Comments (Atom)
4 : கருத்துக்கள்:
கண்ணன் பொருள் பொதிந்தக் கவிதை.. காலையிலே நல்ல சிந்தனையோடு வேலையை ஆரம்பிக்க உதைவி விட்டீர்கள் உங்கள் கவிதை மூலம்....நன்றி.
rsithu padiththane..thodrattum..
"மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு"
கவிஞர் வாலி- எம்ஜிஆர்-வேட்டைக்காரன்
நல்லா இருக்கு!
GK,
நல்லாயிருக்குங்க...
Post a Comment