Saturday, January 20, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

வேண்டுவது வரம் ...!(கவிதை)

நாமக்கல் சிபியார் (வாங்கி வந்த சாபம்!), ஆத்திக எஸ்கே ஐயா (உன்னுடன் நானும்!) அவர்களை தொடர்ந்து கருக்கலைப்புக்கு எதிராக மேலும் ஒரு குரல் ....

வேண்டுவது வரம் ...!(கவிதை)


வெப்ப மூச்சுகளின் உரசலுக்கு
விளைந்ததுதான் என் குறையா ?
வெளியுலகம் காணும்முன்
வெந்து, நான் இறப்பது முறையா ?

கருவில் எருவாகும் என் நிலை,
அது உன் படைப்புத் தொழிலால்
என்போன்றோர் மேல் செய்யும்
ஒரு வன் கொலை !

கடவுளே, கருவரை(றை)யிலும் நான்
கட்டிக்கொள்ள உடைகொடு
பெண் சிசு இதுவென்று, குறி'பார்த்து
கருவறுக்கும் நிலையறு !

கடவுள் வரமென்று காத்திருப்பவர்
பலர் இருக்க, இது
வேண்டாத கர்பம் என்று
வேரறுப்பவரிடம் தோற்றுவைக்காதே !

8 : கருத்துக்கள்:

said...

//பெண் சிசு இதுவென்று, குறி பார்த்து
கருவறுக்கும் நிலையறு!//
//வேண்டாத கர்பம் என்று
வேரறுப்பவரிடம் தோற்றுவைக்காதே//

ஜிகே. சிறந்த கருத்துக்கள்.

படைப்பவனிடம் கேட்பதோடு நில்லாமல் இந்த கொலைக்கு தண்டனையும் தரப்பட வேண்டும்.

தண்டணையில்லாமல் தானாய் திருந்துவார் அல்லது சொல்லித் திருத்தலாம் என்பதெல்லாம் இவ்விஷயத்தில் எந்தப் பலனும் தரப்போவதில்லை.

said...

அருமைங்க கோவியாரே!

//கடவுளே, கருவரை(றை)யிலும் நான்
கட்டிக்கொள்ள உடைகொடு
பெண் சிசு இதுவென்று, குறி'பார்த்து
கருவறுக்கும் நிலையறு !
//

சூப்பர்!

//கடவுள் வரமென்று காத்திருப்பவர்
பலர் இருக்க, இது
வேண்டாத கர்பம் என்று
வேரறுப்பவரிடம் தோற்றுவைக்காதே !
//

நியாயமான கோரிக்கை!
:(

பெற்றுவிட்டு வளர்க்கவிரும்பாமல்

"இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே" என்று பாடுவோருக்குக் கொடுக்காமல்

"எழுதுகிறேன் ஒரு கடிதம்.."
என்று பிறக்காத பிள்ளைக்கு கடிதம் எழுதும் தாய்மாருக்குத் தரலாம் அந்த வரத்தை!

said...

//அவர்களை தொடர்ந்து கருக்களைப்புக்கு எதிராக மேலும் ஒரு குரல் ....
//

கருக் களைப்பு அல்ல!

தேவையின்றி வயிற்றில் உருவாக்கிக் கொள்வோருக்குத்தான் அது களைப்பு!

காத்திருந்து வரம் பெற்றோர்க்கு
அது சுகமான சுமை!

said...

கண்ணன்,
பெற்றவளும் பெண்தான்,
தன் கருவைச் சுமப்பவளும் பெண்தான்,
வரும் வாரிசு மட்டும் பெண் வேண்டாம்//

மகள் மகனாகிப் பெற்றோரை காப்பாற்றும் நிலையும் வந்துவிட்டது.
இன்னும் வளரும்.
நிலை மாறும்.
நன்றாக இருப்போம்,
வாட்டம் வேண்டாம் மகளே/
என்று சொல்லும் நேரமும் வரும்.
நல்லதொரு நினைவுக்கு நன்றி.

said...

கருக்க'லை'ப்புக் கவிதை -- அழுத்தமாக இருக்கிறது. "குறிபார்த்து" - சிலேடையை நன்றாக உபயோகித்திருக்கிறீர்கள்.

said...

சுல்தான் ஐயா, நாமக்கல் சிபி,
உங்கள் பின்னூட்ட கருத்துக்களுக்கு நன்றி !!

said...

கண்ணன் கருத்துச் செறிவு மிக்க ஆழமானக் கவிதை... வாசிக்கும்ம் போதே உலுக்கி விட்டது...தொடரட்டும் உங்கள் கவிதைகள்..

said...

//Anonymous said...
கண்ணன் கருத்துச் செறிவு மிக்க ஆழமானக் கவிதை... வாசிக்கும்ம் போதே உலுக்கி விட்டது...தொடரட்டும் உங்கள் கவிதைகள்..

//

பாராட்டுக்கு நன்றி !