Monday, July 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மாயத் திரை !

டிஸ்கி : சுற்றி நடக்கும் கெடுதலான விசயங்களினால், நல்ல விசயங்களை மறந்துவிட்டோமா அல்லது கண்டு கொள்ளாமல் விட்டோமோ ? சுற்றிலும் கெடுதல் மட்டுமே நடக்கிறதா ? என்ற கேள்வியில்... நம் பார்வையை மறைப்பது எது என்று எழுத முயன்றது இது ! (டிஸ்கி போதும் இல்லையென்றால் தமிழ்மண முகபிலேயே கவிதை முழுவதும் வந்து விடும் :))

மாயத் திரை

நான் பார்க்கும் உலகம் மிகக்
கொடியதாகவே இருக்கின்றது !

எங்கும் கோபம்,
எங்கும் வெறுப்பு,
எங்கும் பொறாமை,
எங்கும் ஏமாற்றம்,
எங்கும் வஞ்சனை,
எங்கும் கள்ளம் கபடம்!

எப்படி? எப்படி ? இதெல்லாம்
சகித்துக் கொண்டு வாழ்வது !

நடை பாதையில் எங்கும் முட்கள் !
எடுத்து வைத்த
அடுத்த அடி
அயற்சியை கொடுத்தது !

இப்படி
தினம் தினம் எதோ ஒன்றால்
அயர்ந்து போன நான்,

என் அழுக்கு ஆடையை களைந்து
நிலைக்கண்ணாடி முன் நிர்வாணமாக
நின்ற போது ,
மறைக்கப் பட்டிருந்த,
என் நிர்வாணத்தை சகிப்புத் தன்மையுடன்

நான் ரசித்த போது,
உலகத்தின் மீதான என் பார்வையில்
இருக்கும் குறைபாட்டை உணர்ந்து கொண்டேன் !

16 : கருத்துக்கள்:

said...

GK,

//தமிழ்மண முகபிலேயே கவிதை முழுவதும் வந்து விடும் //

இது மறைக்க வேண்டியவற்றை மறைக்க

உள்ளே வந்து (கண்டு) படித்து இரசிக்க.

said...

//sivbalan said... இது மறைக்க வேண்டியவற்றை மறைக்க

உள்ளே வந்து (கண்டு) படித்து இரசிக்க. //

சிபா,
எல்லாம் தொழில் நுட்ப அறிவுதான் :))

கவிதையையும் ரசித்திருக்கிறீர்கள் என்வீட்டு மாயக்கண்ணாடி மானிட்டரில் தெரிகிறது :))

said...

GK,

கவிதை... அருமை.. அருமை..

said...

//Sivabalan said...
GK,

கவிதை... அருமை.. அருமை..
//
சிபா உங்கள் கடவுச் சொல் தெரிந்தால் நானே 'அருமை அருமை' என்று பின்னூட்டம் போட்டுக் கொள்வேன் :))

said...

நல்ல கவிதை. ஆழமான வரிகள். ரசித்தேன்.

said...

GK,

தனி மடல் அனுப்பவும்... ID & PWD எல்லாம் தந்து விடுகிறேன்....

இதிலென்ன இருக்கிறது நல்ல விசயங்களை பாராட்ட எதற்கும் யோசிக்க வேண்டியதில்லை

said...

டிஸ்கின்னா என்னாங்க?

said...

அழுக்கு உடலை மூடும் அழுக்கடைகள்னு அடுத்தது எழுத வேண்டியது தானே!

"புறந்தோல் போர்த்துப் புழு அழுக்கு மூடி"ன்னு மாணிக்கவாசகர், இந்த நிர்வாணமே உள்ளே இருக்கின்ற அழுக்குகளை மூடும் உடல் எனச் சொல்லுகிறார்!
உள்ளழுக்கை மூட ஒரு வெளி உடல்!
அதன் நிர்வாணத்தை மறைக்க அதன் மேலொரு ஆடை!
அதுவும் வெளி அழுக்குப் பட்டு அசிங்கமாகிறது!
இப்படியே போனால் என்ன தான் முடிவு!
உள்ளழுக்கு எதனை மூடி இருக்கிறது என்று கண்டுபிடித்து, அதை இயக்கும் சிவத்தை 'சிக்கெனப் பிடித்தலே!'
அத்தனையையும் களைந்த நிர்'வானம்'!
அதை அனுபவிக்க சகிப்புத்தன்மை தேவைல்லை!
பேரானந்தம்!
.....இல்லையேல் வெறும் சவம் தான் மிஞ்சும்.

சிந்திக்க வைக்கும் கவிதை!

பி.கு.!
எதோ = ஏதோ
கலைந்து = களைந்து

said...

//சிபா உங்கள் கடவுச் சொல் தெரிந்தால் நானே 'அருமை அருமை' என்று பின்னூட்டம் போட்டுக் கொள்வேன் :))//

:)))

said...

உங்க டைட்டிலில் எழுத்துப்பிளை உள்ளது..

உறக்க இல்லை உரக்க

கவிதை முழுவதுமாகப் புரியவில்லை. இந்த மாதிரி கவிதைகள் புரியுமளவுக்கு மனசு சீரியசாயில்லை :)

said...

//சிறில் Alex said...
உங்க டைட்டிலில் எழுத்துப்பிளை உள்ளது..

உறக்க இல்லை உரக்க

கவிதை முழுவதுமாகப் புரியவில்லை. இந்த மாதிரி கவிதைகள் புரியுமளவுக்கு மனசு சீரியசாயில்லை :) //

உரக்க - மாற்றிவிட்டேன் நன்றி

கவிதை : யாரும் என்னை கவிஞர் என்று சொல்லாத போது நானும் புரிவது போலத்தான் எழுதி வந்தேன் :))

said...

//SK said... அழுக்கு உடலை மூடும் அழுக்கடைகள்னு அடுத்தது எழுத வேண்டியது தானே!

"புறந்தோல் போர்த்துப் புழு அழுக்கு மூடி"ன்னு மாணிக்கவாசகர், இந்த நிர்வாணமே உள்ளே இருக்கின்ற அழுக்குகளை மூடும் உடல் எனச் சொல்லுகிறார்!
உள்ளழுக்கை மூட ஒரு வெளி உடல்!
அதன் நிர்வாணத்தை மறைக்க அதன் மேலொரு ஆடை!
அதுவும் வெளி அழுக்குப் பட்டு அசிங்கமாகிறது!
இப்படியே போனால் என்ன தான் முடிவு!
உள்ளழுக்கு எதனை மூடி இருக்கிறது என்று கண்டுபிடித்து, அதை இயக்கும் சிவத்தை 'சிக்கெனப் பிடித்தலே!'
அத்தனையையும் களைந்த நிர்'வானம்'!
அதை அனுபவிக்க சகிப்புத்தன்மை தேவைல்லை!
பேரானந்தம்!
.....இல்லையேல் வெறும் சவம் தான் மிஞ்சும்.

சிந்திக்க வைக்கும் கவிதை!

பி.கு.!

கலைந்து = களைந்து //

எதோ = ஏதோ : இது தொலைந்து விட்டது. நீங்கள் படித்தது திருத்தப்படாத கவிதை அதில் தற்போது சிறு மாற்றம் செய்துள்ளேன்.

மாணிக்க வாசகரை கொண்டுவந்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நீங்களே சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் :)

said...

// Sivabalan said...
GK,

தனி மடல் அனுப்பவும்... ID & PWD எல்லாம் தந்து விடுகிறேன்....
//
சிபா,
உங்கள் பெருந்தனைமையை பெருந்தன்மையோடு மறுக்கிறேன் :))

said...

//குமரன் எண்ணம் said...
டிஸ்கின்னா என்னாங்க?
//
டிஸ்கின்னா ? பி.கு ன்னு சொல்லாலாம் ஆனா நான் போட்ட டிஸ்கு மு.கு

said...

// நன்மனம் said...
நல்ல கவிதை. ஆழமான வரிகள். ரசித்தேன்.
//
எழுதும் போது குழம்பி குழம்பி தெளிவதற்கு நேரமானது :)

பாராட்டுக்களுக்கு நன்றி நன்மனம் அவர்களே !

said...

எனக்கு இருக்கும் பிரச்சினை என்னான்னா - கவிதை கடைசிவரைக்கும் புரியும்...கடைசி ரெண்டு மூனு லைன் பிரியாது...

ஆகா...கவிதை சூப்பர் என்று சொல்லுவேன்...ஆனா கடைசிவரைக்கும் புரியாது...

ஆனா இந்த கவிதை...

அட இதுவும் பிரியலீங்கன்னா...

மற்றபடி...கவிதை சூப்பர்...:))