Monday, July 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

வான் மகள் நாணுவாள் ?


வைர விண்மீன்கள் !
தங்கச் சூரியன் !
முத்து வெண்ணிலா !

இவை,
இத்தனையும் ஆபரணங்கள் மட்டுமே,
ஆடைகள் அல்ல ! என்று
எண்ணித் தன்

நிர்'வான'த்தை மறைக்க
நீலச் சட்டை
அணிந்து கொண்டது வானம் !





ஆகாயத் தீர்த்தம்!

4 : கருத்துக்கள்:

சேதுக்கரசி said...

நல்ல கற்பனை

Sivabalan said...

GK,

நல்லாயிருக்கு..

SP.VR. SUBBIAH said...

அதோடு மட்டுமா?
பூமியில் உள்ள நீர் நிலைகளைக்
கண்ணாடியாக்கித் தன் அழகை அதில்
கண்டு ரசிக்கவும் அல்லவா செய்கிறது
அந்த வானம்!

வல்லிசிம்ஹன் said...

ஆகாயத்தீர்த்தத்தில் விளையாடும் விண்மீன்கள்.
மேகங்கள் திமிங்கலங்கள்.
நீந்தும் நிலா ஒளிவிளக்கு.

இதுவும் பிம்பத்தைப் பற்றித்தான்.
என் எழுத்து இல்லை.
ராமாயணத்தில் வரும் பாட்டு.