Friday, July 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பாடமான மூளைகள் (நூலகம்) !



திரு சிவபாலன் நூலகம் பற்றிய பதிவு எழுதியிருக்கிறார். யாருக்கும் தோழன் இல்லையென்றால் நூலுக்கு தோழனாக இருக்கலாம். நானும் நூலுக்குத் தோழன்தான் ! நூலகம் பற்றி(ல்) எழுதியது இது

பாடமான மூளைகள் !

மூளை இறந்துவிட்டால்
இறப்பென்பது சரியா ?

இல்லை என்றது
நூலகத்தில்
பாடம் செய்யப்பட்டு
பதிவு செய்யப்பட்ட
மூளைகளின் பாடங்கள் !

இறப்பைத் தாண்டி வாழுகின்றவர்கள்
இங்குதான் வாழ்கின்றனர் !

வள்ளுவனும் கம்பனும்
ஓய்வெடுப்பதும்,
ரவிவர்மாவும், டாவின்சியும்
ஓவியம் சொல்லித்தருவதும்,
கலைகளின் விதைகள் இருப்பதும்
இங்குதான் ! இங்குதான் !

காசு, பணம் தேடும்
வழிகளின் வரைபடமும்,
கல்விக் கேள்விகள் விடைபெறுவதும்,
ஆத்திகம், நாத்திகம் அருகருகே இருப்பதும்,
மதங்கள் சண்டையின்றி தோழமையோடு இருப்பதும்,
அறிவியல் கண்டுபிடிப்புகளின் அறிவிப்பை செய்வதும்
இங்குதான் இங்குதான் !

நூல்கள் இருக்கும் வரை 'வாழ்ந்து'
இறந்தவர்கள் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்
நூல்களின் வாயிலாக !


நூலகம் வெறும் நூலகம் அன்று !
அது வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்களுக்கான
நினைவு(கள்)அகம் !

7 : கருத்துக்கள்:

said...

கோவி.கண்ணன் Sir,

தெயவமே.. தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே..

said...

// நூல்கள் இருக்கும் வரை 'வாழ்ந்து'
இறந்தவர்கள் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்
நூல்களின் வாயிலாக //

அருமை.. அருமை... அருமை..

said...

//Sivabalan said...
கோவி.கண்ணன் Sir,

தெயவமே.. தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே..
//
சிபா ... இன்னிக்கு உங்கள் புண்ணியத்தில் கவிதைக்கு கரு கிடைத்தது. நான் தான் நன்றி சொல்லவேண்டும் நன்றி !

said...

Sir,

I have given a link to my page abt this blog.

said...

ஓ! இதுதான் "மரணமில்லாப் பெருவாழ்வோ"???

:)))))))))))))

[சொ.செ.வி.]

சிபா முன்னமேயே அவர் பதிவைப் போட்டிருக்கலாம்.
நீங்களும் இதை அப்பவே எழுதியிருக்கலாம்.
இன்னும் அதிக வாக்குகள் வந்திருக்கலாம்!
ஏன்! பரிசு கூடப் பெற்றிருக்கலாம்!

தற்காலத்தில் நூல் என்றால் நினைவுக்கு வருபவர் நமது பாரத குடியரசுத் தலைவர்தானே!
அதனால்தான் ஒரே 'கலாம்'!!

said...

//sk said...
தற்காலத்தில் நூல் என்றால் நினைவுக்கு வருபவர் நமது பாரத குடியரசுத் தலைவர்தானே!
அதனால்தான் ஒரே 'கலாம்'!! //

யோசிக்காமல் எழுதின கவிதை இது !
பொதுவாக கவிதை எழுதும் போது பெருசா எதுவும் யோசிப்பதில்லை. முதலில் கரு கிடைக்கும் பின்பு கருவை சார்ந்த பழமொழிகள் நினைவுக்கு வரும் அதை நேரிடியாக எழுதாமல் கொஞ்சம் மாற்றி எழுதுகிறேன். இந்த நூலக கவிதைக்கு எந்த ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை :(((((

இன்னும் எனக்கு அது குறையாகவே படு(த்து)கிறது.

said...

இறந்தவர் உடல் மட்டும் அழிந்தது
ஆக்கங்கள் அழியவில்லை
என்றென்றும் நம்மோடு உலவுகின்றது
வாழந்தவர் கோடி மக்கள் மனதில்
நிலைத்திருப்பவர் ஆயிரம் பேர் மட்டுமே