Saturday, July 29, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உள்ளத்தில் குழந்தையடி !



மாங்கல்யம் தந்து நானே
மகிழ்வாய் பெற்ற வர மடி நீ
என் தலை அணைக்கு !

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
தாழ் உடைத்த அன்பில் நாம் பெற்றது
நம் அன்பு(செல்வங்)கள் !

பச்சிளம் குழந்தைப் போல் நீ !
புடைவைக் கடையில் உன் பிடிவாதம்
சட்டைப் பையில் நீ போட்டது கடிவாளம் !
நகைக் கடையில் உன் கடைக் கண்
காணாமல் போனது என் நகக் கண் !
எவருக்கு நான் சொந்தம் ? என்ற
தட்டிப் பறிப்பு விளையாட்டில்
வேறுவழியின்றி விட்டுக் கொடுத்த
உன்(னிடம்) தோற்ற என் தாய்,
இவையெல்லாம் சேர்ந்து
நீ ஒரு குழந்தை என்று காட்டியது !

இருவரும் சேர்ந்து
உன் பாலன்பும், என் பாலன்பும்
இணைந்த விளையாட்டில்
என்னை நீ வீழ்த்தினாலும்
நானே வெற்றி பெற்றதாக
உணர்கிறேன் !

என்னைக் குழந்தையாக்கிய
உன் அணைப்பில் நான் அடைந்தது
மற்றொரு தாய !

நீ குழந்தையா ?
நான் குழந்தையா ?
தெரியாமல் குழம்புகிறேன்!
என்னைக் கிள்ளி விளையாடும் கள்ளி,
உன் கள்ளச் சிரிப்பைக்
கண்டு கொண்ட பிறகும் நான் !

பிகு: திரு எஸ்கே கொடுத்த தலைப்பில் விளையாட்டாக எழுதப்பட்டது இது ... நன்றி எஸ்கே !


மறுமொழி இடுகைக்கு அனுமதி இன்னும் வழங்கப்படாத்தால், பின்னூட்டமிடும் அன்பர்கள் அவ்வப்போது வந்து மறுமொழியை பார்த்துச் செல்ல வேண்டுகிறேன் !

11 : கருத்துக்கள்:

said...

///
மாங்கல்யம் தந்து நானே
மகிழ்வாய் பெற்ற வர மடி நீ
///
நல்லா இருக்குங்க இது

said...

நானிட்ட தலைப்பென்று நன்றிதனைச் சொன்னாலும்
நீரிட்ட கவிதையிது நிகழ்வாகிப் போனதிங்கு!
ஆமென்று கூறுவதே அல்லாமல் வேறென்ன சொல்லுவது!
ஒவ்வொருவர்க்கும் அவர் மனைவி குழந்தையே!

சிறப்பான வரிகளையே தொடுத்திங்கு போட்டுவிட்டீர்!
மறுக்காமல் ஒப்புகொள்வேன் ஒவ்வொரு வரிதனையும்! -- கூடப்
பிறக்காத உறவான மனையாளை வாழ்த்தலன்றி
வேறொன்றும் யாம் அறியோம், பராபரமே!!

வாழ்த்துகள்!

பி.கு.:உங்கள் மனைவி திரும்பி விரைவினில் ஊரிலிருந்து திரும்பிவர வாழ்த்துகிறேன்!

said...

இளமையில் நாங்களும் அப்படித்தானிருந்தோம் பிள்ளைகள் இரண்டு மூன்று வந்த பின் அல்லவா தெரிந்தது தெளிந்தது என் நெஞ்சம்

said...

//குமரன் எண்ணம் said...
மாங்கல்யம் தந்து நானே
மகிழ்வாய் பெற்ற வர மடி நீ
நல்லா இருக்குங்க இது//

மாங்கல்யம் 'தந்து நானே' - தமிழில் சொல்லிப் பாருங்கள் மாங்கல்யம் கொடுத்து நான் என்ற பொருளில் வரும்.

வர மடி - வரத்தினால் கிடைத்த மடி

உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் !

said...

//ENNAR said...
இளமையில் நாங்களும் அப்படித்தானிருந்தோம் பிள்ளைகள் இரண்டு மூன்று வந்த பின் அல்லவா தெரிந்தது தெளிந்தது என் நெஞ்சம் //

முதலில் இரட்டையர், அடுத்து ஒன்றா ?

எல்லாம் ஐம்பது வயசுக்கு மேல சரியாகிப் போய்டும். தவறுகள் உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள் :)

said...

GK,

கவிதை அருமை..

//அன்பர்கள் அவ்வப்போது வந்து மறுமொழியை பார்த்துச் செல்ல வேண்டுகிறேன் !//

இது Marketing Strategyயா?

said...

// Sivabalan said...
GK,

இது Marketing Strategyயா? //
சிபா அதெல்லாம் ஒன்றும் மில்லை. இந்த கவிதைப் பதிவுகள் இன்று தான் மறுமொழி இடுகைக்கே தமிழ்மணத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது நாள் வரை நீங்கள் பின்னூட்டம் போட்டிருந்தாலும் அது இடுகையில் தெரியாது. அதனால் நினைவு படுத்துவதற்காக அந்த ஒன் லைன்.

said...

//SK said... உங்கள் மனைவி திரும்பி விரைவினில் ஊரிலிருந்து திரும்பிவர வாழ்த்துகிறேன்! //

மனைவி ஊரிலிருந்து வரும்வரை தான் இது போல் முற்போக்காக கவிதை எழுதமுடியும் :) அதுக்கப்பறம்... அதுக்கப்பறம் ... நேரம் கிடைக்காதுன்னு சொல்ல வந்தேன்.

//சிறப்பான வரிகளையே தொடுத்திங்கு போட்டுவிட்டீர்!
மறுக்காமல் ஒப்புகொள்வேன் ஒவ்வொரு வரிதனையும்! -- கூடப்
பிறக்காத உறவான மனையாளை வாழ்த்தலன்றி
வேறொன்றும் யாம் அறியோம், பராபரமே!!//

கேட்டவர் நீரே சிறப்பென்றால் அச்சிறப்பு உமக்கும் உரியது :)

said...

கொஞ்சம் பெரிய மனுஷத்தனமான விஷயம்.. ஆனால் யோசிக்க தகவல்கள் இருக்கின்றன. நன்றி. கருத்து சொல்ல விரும்ப வில்லை

:)

said...

பி.கு.:உங்கள் மனைவி திரும்பி விரைவினில் ஊரிலிருந்து திரும்பிவர வாழ்த்துகிறேன்!

:)

முன்ன போட்ட பின்னூட்டம் கூட பொருந்தும். ஆனால் அது வேறொரு பதிவுக்காக எழுதியது...மாற்றி இதில் போட்டு விட்டென் ;)

said...

//Vaa.Manikandan said...
கொஞ்சம் பெரிய மனுஷத்தனமான விஷயம்.. ஆனால் யோசிக்க தகவல்கள் இருக்கின்றன. நன்றி. கருத்து சொல்ல விரும்ப வில்லை

:)
//
வாங்க மணிகண்டன்... பெரிய மனுசத் தனமா ? புரியவில்லை. பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். புரிந்தால் மாற்றிக் கொள்கிறேன். அந்த பின்னூட்டத்தை வெளியிடாமல் இருந்து விடுகிறேன். இப்படி சொல்லவந்ததை சொல்லாமல் போனால், எனக்குள் ஏதோ நினைத்து என் கருத்துக்களுக்கு கடிவாளம் ஆகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. தயவு செய்து விளக்குங்கள்.