Wednesday, July 26, 2006
தவளைச் சத்தம் !
காலங்கள் மாறி மழைக்காலம் வரும்போது
தவளைகள் சத்தமிடும் !
தவளைகளால் என்ன நன்மை என்று
யோசித்துப் பார்த்த போது ஒன்று
புரிந்தது ! இவைகளின் சத்தம் மட்டும்
இல்லாது போனால் இசையின்
இனிமை எனக்குத் தெரியாமலே
இருந்திருக்கும் !
தவளைகளுக்கும் நன்மை உண்டு !
கத்துவது தவளைத் தான் என்று
தவளைகள் இனம் கண்டு கொண்டு
ஆதரவு குரல் கொடுத்து தன் இன உணர்வை
வெளிப்படுத்துகிறது அல்லவா ?
வாலை இழந்திருந்தாலும் தவளைகளின்
சேட்டைகள் குறைவதில்லை !
அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதென்றால்
தவளைகளுக்கு அலாதி இன்பம் போல் !
பரிணாமம் பெற்று தேரையானாலும்
எதிர்ப்பாரத விதமாக எவர் முதுகிலாவது தாவி
தன்னை மகிழ்வித்துக் கொள்ளும் !
தவளைகளின் தனிச்சிறப்பென்று என்ன இருக்க முடியும் ?
தோலால் சுவாசிப்பதா ? அல்லது
கிணற்றுத் தவளைகளாக இருப்பதா ?
எனக்குத் தெரிந்தது கிணற்றுத்
தவளைகளுக்கு இருப்பது அற்ப பயம் !
கரையேறிவிட்டால் காணமல் போய்விடுமோ
என்ற வீன் பயம்விட்டு
எல்லாத் தவளைகளும் கரையேறினால்
பறந்த உலகத்தில் பரிணாமம் பெற்று
ஒருவேளை இறக்கை முளைத்துப் பறக்கலாம் !
தங்களின் சத்தம் இல்லாத வேளைகளில்
நினைத்துப் பார்க்குமா தவளைகள் ?
Subscribe to:
Post Comments (Atom)
6 : கருத்துக்கள்:
கோவி.கண்ணன் சார்
அருமை.. அருமை..
ஆனால் நீங்கள் சொல்லும் தவளை பல பேருக்கு பொருந்துவது தான் நிதர்சனம். காது கேளா தவளை கதை நியாபகத்துக்கு வந்தது.
//Sivabalan said...
கோவி.கண்ணன் சார்
அருமை.. அருமை..
ஆனால் நீங்கள் சொல்லும் தவளை பல பேருக்கு பொருந்துவது தான் நிதர்சனம். காது கேளா தவளை கதை நியாபகத்துக்கு வந்தது. //
எனக்கு தவளைகள் மேல் தான் கவலை ! காது கேளாத தவளைகள் கதை எனக்குத் தெரியாது !
முதுகில் தாவி ஏறுவது எதுக்குன்னு எனக்குத் தெரியுமே ;-))
தவளை கொண்டு மனிதம் பேசுவது போல் இருக்கிறது, எது எப்படியிருப்பினும் ஒன்றில்லாமல் பிரிதொன்று ஏது!!!
நல்ல இருந்துச்சு கோவி.
கவிதை நன்றாக உள்ளது. தவளை பற்றியது கவிதை என்றாலும், இது தவளை பற்றிய கவிதை மட்டுமில்லை என்பதினால், நீங்கள் 'பின் நவீனத்துவ ' ஸ்பெஷலிஸ்ட் ஆகி விட்டீர்கள்.
இரு மனம் கொண்டு
இரு குணம் கொண்டு
இருக்கின்ற வரையினில்
இறுமாப்பைத் துணைகொண்டு
இருக்கின்ற 'தவளைகளின்'
இறுமாப்பைக் குலைத்திடவே
இறுதிமணி அடிக்கும்
இரும்பான கவிதைகண்டு
இரும்பூது எய்துகிறேன்!
//SK said...
இரு மனம் கொண்டு
இரு குணம் கொண்டு
இருக்கின்ற வரையினில்
இறுமாப்பைத் துணைகொண்டு
இருக்கின்ற 'தவளைகளின்'
இறுமாப்பைக் குலைத்திடவே
இறுதிமணி அடிக்கும்
இரும்பான கவிதைகண்டு
இரும்பூது எய்துகிறேன்!
//
ஒருமனம் கொண்டு
ஒருமலர் வாச நறுமணம் கண்டு
ஒருபுகழ் போற்றும் திருப்புகழ் பாடும்
ஒருவர் வந்து வாழ்த்தியதில்
ஒருவாறு முழுமை பெற்றதிந்த கவிதை !
எஸ்கே நன்றிகள் :)
Post a Comment