Friday, July 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நாள்காட்டி !


ஓவ்வொரு நாளும் எனக்கு
புதுச் சட்டை! நான் கிழித்து
எறிந்த போது, மகிழ்ந்தது நாள்காட்டி!

ஒவ்வொரு புதிய நாளிலும் கிழிக்கும்
நான்தான், பழையவன் ஆகிக்கொண்டு
துவண்டு போகிறேன் !

சென்ற வருடங்களின் இதே
நாளை நினைவுகளிலிருந்து
தொலைத் திருக்கிறேன் !

சென்ற வருடங்களின் வேறொரு நாட்களை
இன்றும் விடாப் பிடியாக
நினைத்துக் கொண்டிருக்கிறேன் !

என்னைப் போல் அவஸ்த்தை
எந்த நாட்காட்டிக்கும் இல்லை.
எல்லா நாளும் பொன்நாளே என்றது !

சூலங்கள் திசை மாறினாலும்
நாற்காட்டியின் புதிய பயணத்திற்கு
எந்த தடையும் இருந்ததில்லை !

இராகுகாலம், எமகண்டம், குளிகை எச்சரிக்கை
வந்தாலும் எதுவும் நேரவில்லையா ? இல்லையென
காற்று அடித்தபோது தலையசைத்துக் காட்டியது !

பண்டிகைக் காலங்களிலும் கொண்டாட
அவைகள் அதிக நேரம்
எடுத்துக்கொண்டு மகிழ்வு கொள்வதில்லை !

நாளைக் காட்டும் நாள்காட்டியை
நாளையும் பார்பேனா ? என்பது
நாளைக்கு அதற்கு மட்டும் தெரியும் !

சுட்டி : தமிழ் நாள்காட்டி

4 : கருத்துக்கள்:

said...

//இராகுகாலம், எமகண்டம், குளிகை எச்சரிக்கை
வந்தாலும் எதுவும் நேரவில்லையா //
நல்ல வரிகள், யோசிக்க வைக்கும் எழுத்துக்கள். நீஙளும் இந்த website பார்க்கிறது உண்டா? நான் மட்டும்தான்னு நெனச்சுட்டு இருந்தேன்

said...

//ila(a)இளா said...
நீஙளும் இந்த website பார்க்கிறது உண்டா? நான் மட்டும்தான்னு நெனச்சுட்டு இருந்தேன் //

கவிதை எழுதிவிட்டு... படம் போடுவதற்காக தேடினேன்... தற்செயலாக தலையைக் காட்டியது

said...

//நாளைக் காட்டும் நாள்காட்டியை
நாளையும் பார்பேனா ? என்பது
நாளைக்கு அதற்கு மட்டும் தெரியும்//

அழகான யதார்த்தமான வரிகள். ப்ளாக்ல போடறதுக்காக இன்னைய தேதியை காலண்டர்லேருந்து கிழிச்சிட்டீங்க போலிருக்கு. அப்போ உங்க வீட்டுல மட்டும் இன்னிக்கு 23ஆம் தேதின்னு சொல்லுங்க.
:)

said...

//ஒவ்வொரு புதிய நாளிலும் கிழிக்கும்
நான்தான், பழையவன் ஆகிக்கொண்டு
துவண்டு போகிறேன் !//

பழையதாகிக்கிட்டே போகிறேன்னு புதிய சிந்தனை வந்துவிட்டதா? நல்ல கவிதை.