Monday, July 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நாயும் கடவுளும் !


போற்றுபவரை தூற்றாது தாங்குவதில்
நாயிடம் இருக்கிறது தெய்வீகம் !

திருட்டுத் தனம் உள்ளவரின் பாவங்களை
தண்டிப்பதில் நாய் ஒரு நீதிமான் !

இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் நாய்
வருத்தப்படதா ஒரு சன்யாசி !

வீட்டை சுற்றி சுற்றி வந்து காவல்
காப்பதில் நாய் ஒரு குலதெய்வம் !

மாற்று மத அன்பர் வீட்டு நாயும்,
பயமாகவே இருந்தது நான் பழகும் வரை !

நாய்கள் ஒரே இனம் தான், நாம்தான்
நாய்களை பிரித்து வைத்தே பார்க்கிறோம் !

நம் சூது அறியாது, நம்மை மகிழ்விக்க அவை
தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன !

குரைத்தாலும் நாயும் கடவுளாகத் தெரிந்தது,
குறை வைக்காத பைரவர் வடிவில் !


24 : கருத்துக்கள்:

said...

//குறைத்தாலும் நாயும் கடவுளாகத் தெரிந்தது,
குறை வைக்காத பைரவர் வடிவில் !//


ஆஹா.. அருமையா கவிதை..

நாயின் நற்குணங்களுடன் அதிகம், தாங்கள் அதை குறை(ரை)த்து
விட்டதாகவே தோன்றுகிறது.

தவளை,கழுதை, தற்பொழுது நாய் என்ன ஒரே மிருகப் பாசமா இருக்கு..?


அன்புடன்...
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said... தவளை,கழுதை, தற்பொழுது நாய் என்ன ஒரே மிருகப் பாசமா இருக்கு..?//
மனிதர்களின் குறைகளை நேரிடியாக எழுதும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. ஆகவே விலங்குகள் மேல் அதை ஏற்றி பாவம் செய்கிறேன்.

said...

//ஆகவே விலங்குகள் மேல் அதை ஏற்றி பாவம் செய்கிறேன்.//


ரெம்ப பாவம் செய்யாதீம் ஓய்...

அப்புறம் அடுத்த பிறவில எதாவது மிருகமா பிறக்கப் போறீங்க...(யாருங்க அது, இப்ப மட்டும் என்னவாம்னு கலாய்க்கிறது,கவிதப் படத்தில இருக்கிற நாயை அனுப்பனுமா? ((எவ்வளவு நாலைக்குத் தான் ஆட்டோ அனுப்புறது)))


அன்புடன்...
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said... ம்ப பாவம் செய்யாதீம் ஓய்...

அப்புறம் அடுத்த பிறவில எதாவது மிருகமா பிறக்கப் போறீங்க//

அப்படி பிறந்தால் ... கவிதைப் பக்கத்தில் உள்ள நாய் அல்ல... நானே வந்து 'கடிப்பேன்'

said...

//ஆஹா.. அருமையா கவிதை..

நாயின் நற்குணங்களுடன் அதிகம், தாங்கள் அதை குறை(ரை)த்து
விட்டதாகவே தோன்றுகிறது.//

ரொம்ப எழுதினால் நீள் கவிதையாகி படிப்பவர்களுக்கு அயற்ச்சி கொடுத்துவிடும். அதானால் முக்கிய விசயத்தைப் பற்றி சொல்கிறேன்.

said...

//நாய்கள் ஒரே இனம் தான், நாம்தான்
நாய்களை பிரித்து வைத்தே பார்க்கிறோம் //
நாம் மனிதரையே பிரித்து வைத்திருக்கிறோம். இதில நாய்யை விட்டுவைவ்போமா? :-))

said...

// U.P.Tharsan said...
நாம் மனிதரையே பிரித்து வைத்திருக்கிறோம். இதில நாய்யை விட்டுவைவ்போமா? :-))
//
நாயைவிட மனிதர்களைவிட கடவுளையும் பிரித்து வைத்துப் பார்கிறேம் என்று சொல்ல வந்தது தான் பாதி கவிதை. மீதி கவிதை நாய்க்கு சிறப்பு சேர்ப்பதற்கு :)

said...

'நாயும் கடவுளும் நல்லா இருக்கு' ஜிகே ஐயா. அதெப்படிங்க உங்க பேருலயே ஜிகே இருக்கு.

said...

//'நாயும் கடவுளும் நல்லா இருக்கு' ஜிகே ஐயா. அதெப்படிங்க உங்க பேருலயே ஜிகே இருக்கு. //

திரு குமரன் ஜி.கே என்பது கோவிந்தராஜு கண்ணன் என்பதன் சுருக்கம். அப்பா பெயர் கோவிந்தராஜ்.

கவிதையில் நாய் உண்டு ஆனால் அது உருவகம் தான் :)

said...

//ரொம்ப எழுதினால் நீள் கவிதையாகி படிப்பவர்களுக்கு அயற்ச்சி கொடுத்துவிடும்//

ஓ... அதனால் தான் குறைத்து விட்டீர்களா,
நாய் பற்றிய உங்களுடைய
குறை(ரை)ப்பு (கவிதை) அருமை...


அன்புடன்...
சரவணன்.

said...

//ஓ... அதனால் தான் குறைத்து விட்டீர்களா,//
நீங்கள் குறைத்தும் மதிப்பீடு செய்யவில்லை :)

said...

நாள் கடவுள் அல்ல. வருந்தாதே! ஏன்? கடவுளே நீயே ஒரு நாய்.

நாலு ரூபாய்க்கு உணவு போட்டு அந்த நன்றிக்கு நாளும் பொழுதும் காவல் செய்யும் எங்கள் நாய். பத்து பைசாக்கு சூடம் காட்டி பங்களா கேட்கிறோம் உன்னிடம்.

நீ நன்றியுள்ளவன். நான் பலன் கருதி உனக்கு படைத்து பின் நான் உண்டதை நன்றியுடன் நீ மறக்காது அருள வேண்டும்.

நாய்க்கு நூறு சாதி இங்கு நாய்கண்காட்சியில். உங்களுக்கோ முப்பது கோடி போதவில்லையே!!

பங்களாவில் குளிர் அறையில் வாழும் சில முதலாளிகளின் நாய்கள். மீன் கடையில் துண்டுக்கு ஏங்கும் மற்ற பாமர நாய்கள். பாலபிஷைகம், லட்டு உண்ணும் சில பணக்கார தெய்வம். ஆனால், எங்களூர் சாமி வவ்வாலுடன்தான் வசிக்கிறது.

நாயே நான் உன்னை தெய்வமாக்கவில்லை. அந்த தெய்வத்தையே நாயாக்கிவிட்டேன். வா உன்னை வணங்குகிறேன்!

நன்றி

said...

லொல்
லொல்
லொல்
நம்ம வீட்டு பைரவர் சவுண்டுங்க.
அங்கள பத்தி நீங்க எழுதி உள்ளதாக நம்ம பைரவர் சொல்லி தான் எனக்கே தெரியும்.
நல்லாவே குழைத்து இருக்கீங்க
சீ எழுதி இருக்கீங்க

said...

//பாலபிஷைகம், லட்டு உண்ணும் சில பணக்கார தெய்வம். ஆனால், எங்களூர் சாமி வவ்வாலுடன்தான் வசிக்கிறது.//
ஜயராமன் ஐயா... மிக மிக நன்றாக கவனிக்காது விடுபட்ட கோவில்களின் இழிநிலையை சொல்லியிருக்கிறீர்கள்.

இது,
எனது 'நாயும் கடவுளும்' கவிதையுடன் சேர்ந்து கொண்ட ஒரு கவி'தை' (தை - குத்தல்)

said...

//நாகை சிவா said...
லொல்
லொல்
லொல்
நம்ம வீட்டு பைரவர் சவுண்டுங்க.
அங்கள பத்தி நீங்க எழுதி உள்ளதாக நம்ம பைரவர் சொல்லி தான் எனக்கே தெரியும்.
நல்லாவே குழைத்து இருக்கீங்க
சீ எழுதி இருக்கீங்க
//
சிவா, லொள்ளை லொள்ளு பண்ணி 'லொல்' ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து நாய்கள் சங்கத்திலிருந்து மாபெரும் குரைப்புச் சத்தம் கேட்கிறது. :)

நீங்களும் குரைத்து மதிப்பிடவில்லை :)
கவிதையை

said...

GK,

//இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் நாய்
வருத்தப்படதா ஒரு சன்யாசி ! //

அருமை...

அனாலும் கடைசியில் பைரவரைப் போட்டு யாரையோ கூல் செய்த்து போல் ஒரு உணர்வு.

said...

நம்ம பைரவர் அம்புட்டு தூரமாக இருந்து குரைத்தால், லொள் என்பது என் காதில் லொல் என்று விழுந்து விட்டது.
:(

said...

//அனாலும் கடைசியில் பைரவரைப் போட்டு யாரையோ கூல் செய்த்து போல் ஒரு உணர்வு. //

நான் கூல் செய்யவில்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதை பிறகு சொல்கிறேன்.

said...

மாற்று மத அன்பர் வீட்டு நாயும்,
பயமாகவே இருந்தது நான் பழகும் வரை !//

அருமை கண்ணன்!

said...

//tbr.joseph said...
மாற்று மத அன்பர் வீட்டு நாயும்,
பயமாகவே இருந்தது நான் பழகும் வரை
அருமை கண்ணன்! //

இந்த கவிதையில் சொல் முயன்றதே அது ஒன்றுதான். பாராட்டுகளுக்கு நன்றி ஐயா !

said...

கோவி. கண்ணன் என்ன ரேன்ஞ் எங்கோயோ போய் கிட்டு இருக்கு..

said...

//பாலசந்தர் கணேசன். said...
கோவி. கண்ணன் என்ன ரேன்ஞ் எங்கோயோ போய் கிட்டு இருக்கு..

9:22 AM
//
வழக்கம் போல் ஒரு பொடியை (சின்ன பின்னோட்டம்) தூவிட்டுப் போறிங்க. பாராட்டுகிறீர்களா, வைகிறீர்களா என்றே புரியவில்லை :)

said...

உள்குத்து இருக்காப்போல தெரியுது...ஆனாலும் நல்லாத்தாம்யா எழுதுறீரு...

கண்ணாடி படத்தை மாத்தி பட்டாம்பூச்சி போட்டதுலயிருந்து ஒரே கவிதையா கொட்டுது...

:))

மனசு பறக்குதா?

said...

//ஜயராமன் said...
நாள் கடவுள் அல்ல. வருந்தாதே! ஏன்? கடவுளே நீயே ஒரு நாய்.

நாலு ரூபாய்க்கு உணவு போட்டு அந்த நன்றிக்கு நாளும் பொழுதும் காவல் செய்யும் எங்கள் நாய். பத்து பைசாக்கு சூடம் காட்டி பங்களா கேட்கிறோம் உன்னிடம்.

நீ நன்றியுள்ளவன். நான் பலன் கருதி உனக்கு படைத்து பின் நான் உண்டதை நன்றியுடன் நீ மறக்காது அருள வேண்டும்.

நாய்க்கு நூறு சாதி இங்கு நாய்கண்காட்சியில். உங்களுக்கோ முப்பது கோடி போதவில்லையே!!

பங்களாவில் குளிர் அறையில் வாழும் சில முதலாளிகளின் நாய்கள். மீன் கடையில் துண்டுக்கு ஏங்கும் மற்ற பாமர நாய்கள். பாலபிஷைகம், லட்டு உண்ணும் சில பணக்கார தெய்வம். ஆனால், எங்களூர் சாமி வவ்வாலுடன்தான் வசிக்கிறது.

நாயே நான் உன்னை தெய்வமாக்கவில்லை. அந்த தெய்வத்தையே நாயாக்கிவிட்டேன். வா உன்னை வணங்குகிறேன்!

நன்றி
//

ஜயராமன் சார்,

இப்போதெல்லாம் இந்த பக்கமே வருவதில்லையே. :(