Friday, July 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

வானில் பறந்த வண்ணங்கள் !

ஆடை நெய்ய நீ
ஆயத்தமான போது
ஆடை கலைக்கப்'பட்டு'
ஆடை ஆகிறாய் !

அடியிலைக் கூட்டில்,
அற்புத ஓவியன்போல்
அனைத்து வண்ணமும்
அழகாய் தீட்டுகிறாய் !

அடர்ந்தக் கூட்டுக்குள் உன்
அருந்தவம் போற்றி நீ
அழகாய்மாற வரம் தந்த
ஆண்டவன் யாரோ ?

அரும்பு மொட்டுகளும்
அழகன் உன் ஏக்கத்தில்
அழகாய் பூத்து சுரப்பதுதான்
அரும்சுவை தேனோ ?

அவமான மறைவென நீ
அடைந்தது சிறையா ?
அறைந்து சொன்னாய் நான்
அடைவது சிறகென்று !

அன்றல
ர்ந்த மலர்களென
ஆகாசத்தில் பறந்த உன்னை,
அண்ணார்ந்து பார்த்து நான்
அடைந்தது பேரின்பம் !

2 : கருத்துக்கள்:

said...

//Sivabalan said...
Excellent!!

5:35 AM //
சிவபாலன்,
புதிய வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களுக்கு நன்றி !

said...

என்னே அருமையான கவிதை. மிக நேர்த்தியாக உள்ளது கோவி சார்.