Tuesday, January 02, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

BAD Taste ?

ஆங்கில தலைப்பு இடுகையில் வைத்தால் தமிழ் மணம் முகப்பில் தெரிய தடை என்று தமிழ்மணம் அறிவிக்குமா ? வேண்டாம் ! :) தலைப்புக்கு *வரி*ச் சலுகை தேவையில்லை !

குத்துப்பாட்டு இல்லாத படங்கள் மிக நல்ல படமாக இல்லாவிட்டால் திரையரங்கை விட்டு குத்தப்பட்டு துறத்தப்படுகின்றன. மக்கள் மன நிலை மோசமாகிவிட்டதா ?

குத்துப்பாட்டில் இரண்டுவகை இருக்கிறது. நலிந்தவர்கம் விரும்பிக் கேட்கும் *மன்மதராசா, வண்டார்குழலி* டைப் பாடல்கள். பணக்காரவர்கம் டிஸ்கோத்தே கிளப்புகளில் கேட்கும் *பொன்மேனி உருகுதே, ஆசை 100 வகை வாழ்வில் 100 சுவை வா?* டைப் பாடல்கள்.

எளியவர்களின் விருப்பம் பணக்காரவர்கத்துக்கு கீழானதாக தெரியும். எளியவர்களுக்கு பணக்காரவர்கத்தின் ஹோட்டல் நடனங்கள் கலாச்சார சீரழிவாக தெரியும்.

ஏழை எளியவர்கள் செய்யும் அலகு குத்துதல், சாமி ஆடுதல் ஆகியவற்றை சிலர் 'ஆண்டவன் வருத்திக் கொள்ளச் சொல்கிறானா ?' என்று பலர் கேள்வி எழுப்புவர். ஆனால் பணக்காரர்கள், நடுத்தர வர்கத்தினர் செய்யும் தீர்த்த யாத்திரையும், கட்டுக் கட்டாகா உண்டியலில் பணக்கட்டை போடுவதைப் பார்க்கும் ஏழை எளியவர்களும் பெருமூச்சுவிடுகின்றனர்.

டப்பாங்குத்து டான்சும், ரெக்கார்ட் டான்சும் ஏழைகளை மகிழ்விக்கிறதென்றால். ஹோட்டல்களில் நடத்தும் அரைகுறை நிர்வாண நடனமும் அதையே தானே பணக்கார வர்கத்துக்காக செய்கிறது ? ஏழைகளுக்கு மூன்று சீட்டு,பணக்காரர்களுக்கு குதிரை ரேசும். சூதாட்டமும் பொழுது போக்கு.

பீடி குடிப்பவனைப் பார்த்தால் சிகெரெட் பிடிப்பவனுக்கு இளப்பம். பாக்கெட் சாரயம் குடிப்பவனைப் பார்த்து ஓட்கா குடிப்பவனின் உளரல். கோவணம் கட்டி இருப்பவனைப் பார்த்து தொடை தெரிய அரைக்கல் டரவுசர் (shorts) போட்டிருப்பவனின் நையாண்டி. புகையிலை மெல்லுபவனைப் பார்த்து பான்பராக் மெல்பவரின் எச்சில் என ஒரு Taste மற்றொரு Tasteஐ நகைக்கிறது.

இறைவன் புகழ்பாட நேரமும் பொருளும் இருப்பவர்களுக்கு பக்தி இலக்கியம் மட்டுமே உயர்வாக தெரியும். இவற்றைப் பற்றி தெரியவாய்ப்பே இல்லாதவர்களான ஏதுமற்றவர்களின் பொழுது போக்காக சினிமாவும் கேலிக்க்கைகளும் உயர்வாக தெரியும் ! பெரும்பாலும் சினிமா ஊடகம் ஏழைகளை (சிறு துளி பெருவெள்ளம்) குறிவைத்தே பணக்காரர்களால் எடுக்கப்படுகிறது.


இது போல நிறைய சொல்லலாம் ...

இதில் ஏழைகளின் / நலிந்தவர்களின் பழக்கம் மட்டும் Bad Taste ? என்று சொல்வது சார்பு நிலைசார்ந்த ஒரு குற்றச் சாட்டு. பிட்பாக்கெட் அடிப்பவன் மட்டும் தானா திருடன் ? அன்னிய செலவானி மோசடி செய்பவனும், அரசாங்கத்தை ஏமாற்றும் ஹர்சத் மேத்தாக்களும் திருடன்கள் தான்.

கெட்ட வழக்கமாக பார்க்கப்படுவது எல்லாமே ஒரு பக்கமாக நின்று கொண்டு பார்பதால் தெரியும் ஒரு மாயத்தோற்றம். Taste பற்றிய நம் நிலைப்பாடு என்றைக்குமே நாம் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது.


அன்புடன்,

கோவி.கண்ணன்

35 : கருத்துக்கள்:

said...

//பெரும்பாலும் சினிமா ஊடகம் ஏழைகளை (சிறு துளி பெருவெள்ளம்) குறிவைத்தே பணக்காரர்களால் எடுக்கப்படுகிறது.//
ம்ம்ம்... நல்லா இருக்கு.. இன்னும் விரிவா எழுதி இருக்கலாமோ? :)

said...

ஆங்கில தலைப்பு இடுகையில் வைத்தால் தமிழ் மணம் முகப்பில் தெரிய தடை என்று தமிழ்மணம் அறிவிக்குமா ? வேண்டாம் ! :) தலைப்புக்கு *வரி*ச் சலுகை தேவையில்லை //

கோவி, நான் ஹிந்தி தலைப்பை வைத்தவனைத் தேடிக்கிட்டு இருக்கேன் :-))))))))))

said...

//ம்ம்ம்... நல்லா இருக்கு.. இன்னும் விரிவா எழுதி இருக்கலாமோ? :) //

நானும் பொன்ஸை வழிமொழிகிறேன்.

said...

இப்ப என்னதான்யா சொல்ல வரே?

said...

என்னைய வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?

said...

ஆங்கில தலைப்பு இடுகையில் வைத்தால்...

இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக் கண்ணன்.. அட! தமிழ் பதிவுல ஆங்கில தலைப்பான்னு பாக்கலாம் இல்லையா? இதுக்கு ஒரு படி மேல போயி இப்ப ஹிந்தி தலைப்பு.. இந்தியாவுலருக்கற எல்லா மொழிகள்லயும் தலைப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல:)

said...

உஷா, எப்படியோ கண்டுபிடித்து பின்னூட்டமும் போட்டீங்க போலிருக்கே ? அதுக்கு உங்களுக்கு பதிலும் வந்திருக்கு பாருங்க !!!

said...

//பொன்ஸ் said...
ம்ம்ம்... நல்லா இருக்கு.. இன்னும் விரிவா எழுதி இருக்கலாமோ? :)
//

பொன்ஸ் ! இன்னும் நிறைய எழுத நிறைய குப்பைகளை கிளர வேண்டி இருக்கும் என்பதால் அளவோடு எழுதினேன்.

கருத்துக்கு நன்றி !

said...

//ramachandranusha said...

கோவி, நான் ஹிந்தி தலைப்பை வைத்தவனைத் தேடிக்கிட்டு இருக்கேன் :-)))))))))) //

டிஸ்கி போட்டு ஆரம்பித்துவிட்டேன். தமிழில் தலைப்பு வைத்தால் இலவச பின்னூட்டம் வழங்கப்படும் என்று யாராவது வைத்தால் தலைப்பை பரிசீலிக்கிறேன்.

:))

இந்த ஆங்கில தலைப்பு இந்த பதிவுக்கு மட்டும் தான்.

said...

//மணியன் said...

நானும் பொன்ஸை வழிமொழிகிறேன். //

மணியன்,

பொன்ஸுக்கு இட்ட மறுமொழிதான் உங்களுக்கும் !
:)

said...

//Anonymous said...
இப்ப என்னதான்யா சொல்ல வரே?
//

அனானி அண்ணாச்சி,

நான் இல்லை ! ஆளை விடும் !
:)

said...

//ராகவன் ஐயங்கார் said...
என்னைய வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?
//

சாமி,

தனியாளாக வந்திருக்கிறீர், தோஸ்த் எங்கே ?
:)

said...

//tbr.joseph said...
ஆங்கில தலைப்பு இடுகையில் வைத்தால்...

இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக் கண்ணன்.. அட! தமிழ் பதிவுல ஆங்கில தலைப்பான்னு பாக்கலாம் இல்லையா? இதுக்கு ஒரு படி மேல போயி இப்ப ஹிந்தி தலைப்பு.. இந்தியாவுலருக்கற எல்லா மொழிகள்லயும் தலைப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல:)
//

ஜோசப் ஐயா,

ஐயையோ... ச்சும்மா தருமி ஐயாவை பின்பற்றி .. டெக்னிக் எல்லாம் தெரியாமல் தான் தலைப்பு வைத்தேன்.
பேசாமல் எல்லாமொழிகளிலும் ரூபாய் நோட்டு மாதிரி தலைப்புகளாக போட்டுவிடலாம் என்று யோசனை சொல்லாமல் விட்டீர்களே !

நன்றி !

:)))

said...

//செந்தழல் ரவி said...
உஷா, எப்படியோ கண்டுபிடித்து பின்னூட்டமும் போட்டீங்க போலிருக்கே ? அதுக்கு உங்களுக்கு பதிலும் வந்திருக்கு பாருங்க !!!
//

ஆகா,
என்னோட இடுகையை சாட் பாக்ஸ்சாக மாற்றிட்டாருப்பா ...!
:))

said...

ஆக Bad Taste ரெண்டு பக்கமும் இருக்குங்கறிங்க. உண்மை தானுங்க. :-) சாத்வீகன் பதிவுல நம்ம கருத்தைப் பாத்திருப்பீங்களே?!

said...

//குமரன் (Kumaran) said...
ஆக Bad Taste ரெண்டு பக்கமும் இருக்குங்கறிங்க. உண்மை தானுங்க. :-) சாத்வீகன் பதிவுல நம்ம கருத்தைப் பாத்திருப்பீங்களே?!
//

குமரன் ...!
நீங்க சொன்ன பிறகுதான் பார்த்தேன். நான் இங்கே சொல்லி இருப்பது பழக்கங்களைப் பற்றிய கருத்துமட்டுமே நடத்தைகளைப் பற்றியதல்ல.

அங்கே சொல் ஒரு சொல்லி பின்னூட்டி வந்து பார்த்தேன். இங்கே நீங்கள் ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள்.

நன்றி!!!

said...

எப்படியாவது ஆனந்தத்திற்கு வழி தேடும் நலிந்தோரைக் குறை சொல்ல முடியாது.
Bad Taste என்பது எத்தனையோ காலமாக இருக்கிறது.சிவாஜி படம் பார்த்தவர்களுக்கு வாத்தியார் ஐய்யா படம் பிடிக்காது. vise versa

யார் எதைத் தீர்மானம் செய்ய முடியும்?தனக்குப் பிடித்ததுதான் உயர்த்தினு நினைத்தால் அதுதான் Bad Taste.

said...

கோவி,

ஆளுக்கு ஆள் taste கண்டிப்பாக மாறுபடும்....

நமக்குப் பிடித்ததெல்லாம் good taste...
்ப்பபிபிடிபிடிக்காததெல்லாம் bad taste என்று சொல்வது விசாலமானப் பார்வை கிடையாது!

நீங்களும் இன்னும் கொஞ்சம் விரிவாவே அலசியிருக்கலாம் ;)

said...

நல்ல ரசனை கெட்ட ரசனை என்று எதுவும் இல்லை. ரசனையை நமது கையில் உள்ள பணம்தான் தீர்மானிக்கிறது.

நமது கையில் அதிக பணம் இருந்தால் ஐந்து நட்சத்திர ஓட்டல். இல்லாவிட்டால் கையேந்தி பவன்.

அதே நேரத்தில் காரை தொலைவில் நிறுத்திவிட்டு கையேந்தி பவனுக்கு வரும் பணக்காரர்களும் இருக்கிறார்கள்.

பணமில்லாதவர்களால் நட்சத்திர ஓட்டல்களுக்கு போக முடியாது. அவர்களுடையது பெருமூச்சு மட்டுமே.

said...

---Taste பற்றிய நம் நிலைப்பாடு என்றைக்குமே நாம் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்ததாகவே பெரும்பாலும---

ஹ்ம்ம்...

சமூகத்தில் உள்ள ஒரு சிலரால் நிறுவி அளக்கவும் படுகிறது?

said...

//Boston Bala said...
---Taste பற்றிய நம் நிலைப்பாடு என்றைக்குமே நாம் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்ததாகவே பெரும்பாலும---

ஹ்ம்ம்...

சமூகத்தில் உள்ள ஒரு சிலரால் நிறுவி அளக்கவும் படுகிறது?

//

பாலா,

உங்க பாணியில் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் உடனே எட்டிப்பார்க்கிறீர்கள்...!

Bad Taste !
:)))

said...

---ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் உடனே எட்டிப்பார்க்கிறீர்கள்...!---

எப்பவுமே எட்டிப் பார்ப்பதுதான் ; )
முழுமையாகப் படித்தது (விடுமுறை காலத்திற்குப் பிறகு) இப்போதுதான்... நிறைய விட்டுப் போச்சு. Pending ஆக இருப்பதை கூடிய விரைவில் catchup செய்து விட வெண்டும் ; )

(மறுமொழியிலும் ஆங்கிலமா என்று நீங்கள் புறப்படுவதற்கு முன்... பை... பை!)

said...

//Boston Bala said...
---ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் உடனே எட்டிப்பார்க்கிறீர்கள்...!---

எப்பவுமே எட்டிப் பார்ப்பதுதான் ; )
முழுமையாகப் படித்தது (விடுமுறை காலத்திற்குப் பிறகு) இப்போதுதான்... நிறைய விட்டுப் போச்சு. Pending ஆக இருப்பதை கூடிய விரைவில் catchup செய்து விட வெண்டும் ; )

(மறுமொழியிலும் ஆங்கிலமா என்று நீங்கள் புறப்படுவதற்கு முன்... பை... பை!)
//
பாலா... நீங்க இருக்கிற பிசியில் ..
கில்லி அடிச்சிட்டு வாங்க !
:)

said...

நல்ல பதிவு ஜி.கே சார்.

தன் மதக்குறைகள்
தாராளமிருக்க
எம்மதக்குறையோ
எடுத்துச்சொல்லும்
சிறுமதியாளர் தம்மின்
செயலும் BAD Taste!

சர்ச்சையில் உழன்று
சங்கடம் விளைத்து
நலமொன்றுமின்றி
'நான்' எனத் தெரிய
நாட்கள் நகர்த்தும்
நண்பருக்கும் BAD Taste!

இலக்கியம் இனிமை
எதுவும் வேண்டார்.
விலக்காது வெறுப்பை
வேண்டிச் சுமப்பார்.
பின்னூட்டப் பிரியர்
பலருக்கும் BAD Taste!

said...

/////
//ம்ம்ம்... நல்லா இருக்கு.. இன்னும் விரிவா எழுதி இருக்கலாமோ? :) //

நானும் பொன்ஸை வழிமொழிகிறேன்.
/////
நானும்...

said...

//தனக்குப் பிடித்ததுதான் உயர்த்தினு நினைத்தால் அதுதான் Bad Taste

இதை சொல்ல முயன்ற பதிவா? தெள்ளத் தெளிவா சொல்லாட்டி எங்க மூலைக்கு எட்டாது அப்பு.

said...

நல்ல பதிவு GK!

இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னது:

"இசைவிப்பது இசை. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். வித்வான் மேடை ஏறிப் பாடுகிற தோடியைத்தான் ஒற்றைத் தந்தி தம்புரா சுருதியுடன் பரதேசியும் பாடுகிறான். அவன் வழி வேறு. இவன் வழி வேறு; பாடுவதிலே வித்தியாசம் தெரிகிறது என்பது உண்மை. ஆனால் ஆண்டிப்பண்டாரத்தின் பாட்டிலே அந்தப் பாடகன் இசைந்து போயிருக்கிறான் என்பதும் உண்மையல்லவா? அதைக் கேட்டு ரசிக்க நாற்காலியில் வந்தமரும் நானூறு ரசிகர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது சூழ்ந்து நிற்பது உண்மைதானே? அவர்கள் 'லெவலில்' அதை அவர்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள்.

இந்தப் பண்டாரம் மேடைப் பாடகனால் துச்சமாகக் கருதப்படுகிறான். ஆனால் பண்டாரமோ மேடைப் பாடகனை வணங்கிக் கும்பிடு போடுகிறான். யார் உயர்ந்தவர்?

இசையில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று நினைப்பானேன், பேசுவானேன்? எல்லாமே இசைதான்! டப்பாங்குத்து என்று நீங்கள் கருதலாம்; அதில் ஈடுபட்டிருப்பவன் அடைகிற இன்பத்தை நீங்கள் எப்படி உணர முடியும்?"

said...

//சாத்வீகன் said...
நல்ல ரசனை கெட்ட ரசனை என்று எதுவும் இல்லை. ரசனையை நமது கையில் உள்ள பணம்தான் தீர்மானிக்கிறது.

நமது கையில் அதிக பணம் இருந்தால் ஐந்து நட்சத்திர ஓட்டல். இல்லாவிட்டால் கையேந்தி பவன்.

அதே நேரத்தில் காரை தொலைவில் நிறுத்திவிட்டு கையேந்தி பவனுக்கு வரும் பணக்காரர்களும் இருக்கிறார்கள்.

பணமில்லாதவர்களால் நட்சத்திர ஓட்டல்களுக்கு போக முடியாது. அவர்களுடையது பெருமூச்சு மட்டுமே.
//
சாத்வீகன்,

பதிவை ஒட்டிய தங்கள் கருத்துக்கு நன்றி !

//பணமில்லாதவர்களால் நட்சத்திர ஓட்டல்களுக்கு போக முடியாது. //

கையேந்திபவன்களும் நட்சத்திர ஓட்டல் தான், மழைவரமல் இருந்து அன்னாந்து மேலே பார்த்தால் கோடி நட்சத்திரம் தெரியும்

said...

//வல்லிசிம்ஹன் said...
யார் எதைத் தீர்மானம் செய்ய முடியும்?தனக்குப் பிடித்ததுதான் உயர்த்தினு நினைத்தால் அதுதான் Bad Taste.//

வல்லி அம்மா,
மொத்த பதிவின் சாரத்தின் கேள்விக்கும் 3 வரியில் அருமையாக பதில் சொல்லிவிட்டீர்கள் ! நன்றி !

said...

// அருட்பெருங்கோ said...
கோவி,

ஆளுக்கு ஆள் taste கண்டிப்பாக மாறுபடும்....

நமக்குப் பிடித்ததெல்லாம் good taste...
்ப்பபிபிடிபிடிக்காததெல்லாம் bad taste என்று சொல்வது விசாலமானப் பார்வை கிடையாது!

நீங்களும் இன்னும் கொஞ்சம் விரிவாவே அலசியிருக்கலாம் ;)
//

அருட்பெருங்கோ ... கருத்துக்கு நன்றி,
விரிவாக அலசி இருக்கலாம்... மற்றவைக்கள் குப்பையை கிளறுவது போல இருந்ததால் ஒதுக்கிவிட்டேன்.

கருத்துக்கு நன்றி !

said...

//வாசகன் said...
நல்ல பதிவு ஜி.கே சார்.

தன் மதக்குறைகள்
தாராளமிருக்க
எம்மதக்குறையோ
எடுத்துச்சொல்லும்
சிறுமதியாளர் தம்மின்
செயலும் BAD Taste!

சர்ச்சையில் உழன்று
சங்கடம் விளைத்து
நலமொன்றுமின்றி
'நான்' எனத் தெரிய
நாட்கள் நகர்த்தும்
நண்பருக்கும் BAD Taste!

இலக்கியம் இனிமை
எதுவும் வேண்டார்.
விலக்காது வெறுப்பை
வேண்டிச் சுமப்பார்.
பின்னூட்டப் பிரியர்
பலருக்கும் BAD Taste!
//

வாசகன் ஐயா,

கவிதையை வடித்து
கருத்தை சொல்லிவிட்டீர்கள்.
நன்றாக இருக்கிறது
எழுத்தும் பொருளும்.

ரசித்தேன் கவிதையையும் கருத்தையும்.

said...

//இதில் ஏழைகளின் / நலிந்தவர்களின் பழக்கம் மட்டும் Bad Taste ? என்று சொல்வது சார்பு நிலைசார்ந்த ஒரு குற்றச் சாட்டு.//

மறுபக்கத்தையும் சொல்ல மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்!

இது எல்லாரிடமும் பரவலாக இருக்கின்ற ஒன்றே!

இவனை அவன் ஏசுவதும், அவனை இவன் மட்டம் என்பதும், அவரவர் நாகரிகத்தின் படி சொல்லிக்கொண்டாலும், அனைத்தும் தவறே!

பல் விளக்கிட்டு சாப்பிட்டால், கொஞ்சம் சுவை சரியாகத் தெரியுமோ?
:))

said...

//sk said...பல் விளக்கிட்டு சாப்பிட்டால், கொஞ்சம் சுவை சரியாகத் தெரியுமோ?
:)) //

எஸ்கே ஐயா,

பல்விளக்கிவிட்டு சாப்பிட்டாலும், பல்விளக்காமால் சாப்பிட்டாலும் கெட்ட உணவு சுவைக்காது என்றே நான் கருதுகிறேன். சரிதானே ?

எல்லாவற்றிருக்குமே மறுபக்கம் இருக்கிறது அது கசப்பானது என்பதல் தானோ, நாகரீகம் என்ற பெயரில் மறைக்கவிரும்புகிறோம் அல்லது தவிர்க்கவிரும்புகிறோம் என்றாலும் அவை இல்லை என்பதை மறுக்க முடியாது. ஒப்புக் கொள்ள கசப்பதால் பேச அச்சப்படுகிறோம் என்று கொள்ளலாம் என கருதுகிறேன்.

கருத்துக்கு நன்றி !

said...

bad taste....ஒரு நல்ல கருத்து.

said...

இன்று படித்ததில் இருந்து:

Guardian Unlimited | Comment is free | The zone of faith will save us from the sovereignty of the mob: "Taste is what I like, you hate and other people want the government to ban. It has long been a marketing maxim that if you can chart the map of taste, the world will beat a path to your door. You will have found the secret of desire, acquisitiveness and profit.