Thursday, March 15, 2007
உன்னால் தானே வாழ்கிறேன் !
நீ அழும்போது அழுகிறேன்,
சிரிக்கும் போது சிரிக்கிறேன்.
உறவுகள் அனைத்தாகவும்
உன்னைத்தான் பார்க்கிறேன்
மூன்று வருடங்களாக
உன் முகம் பார்த்து மகிழ்கிறேன்
என்னை இயக்கும்
ரிமோட் கண்ட்ரோல் நீ !
உன் ரகசியங்கள் அனைத்தும்
எனக்கு சொல்கிறாய் !
உனக்கு மின்சாரம் இல்லை என்றால்
புழுக்கம் எனக்கும் தான் !
சனி, ஞாயிறு காணாமல்
உன்னை நினைத்து ஏங்குகிறேன் !
அடுத்த எபிசோடுக்கு ஆளாகப்
பறக்கிறேன் !
எப்போதும் முடியாதே எனது
அருமை மெகா சீரியலே !
பி.கு : சன் தொலைகாட்சி நேயர்களுக்கு காணிக்கை !
Subscribe to:
Post Comments (Atom)
9 : கருத்துக்கள்:
//பி.கு : சன் தொலைகாட்சி நேயர்களுக்கு காணிக்கை ! //
ஒரு சிறு திருத்தம் உங்கள் அனுமதியுடன்
பெண் நேயர்களுக்கு என்று இருக்கவேண்டும்
மெகா சீரியல்களை அதிகம் பார்வையிடுபவர்கள் (75%) அவர்கள்தான்:-))))
ரொம்ப "ஆனந்தமா" இருக்கு கோவியாரே!
ஹைய்யா! எங்க வீட்டுல விஜய் டிவி!
"மூனு"க்குப் போய்கிட்டு இருக்கோம் இப்ப!
:))
சொன்னா நம்புவீங்களோ மாட்டிங்களோ!!
நான் இப்ப இருக்கும் வீட்டுகார அம்மாவுக்கு ரிமோட்டில் மெகாசீரியல் மட்டும் தான் அமுத்தி பார்க்க தெரியும்,அதுவும் யாராவது சேனை மாத்திட்டா அவுங்க படுகிற டென்ஷன் இருக்கே!! :-))
அது வேற சவுண்டை எனக்கும் சேர்த்துவைத்து,அழாத என்னை அழவைத்து பார்க்கிறாங்க.
அதை கேட்க கேட்க நமக்கு தான் அனாவசியமாக டென்சன் ஏறுது.
பார்க்காத எனக்கு இந்த நிலமை என்றால்,பார்பவர்களுக்கு????
// SP.VR.சுப்பையா said...
//பி.கு : சன் தொலைகாட்சி நேயர்களுக்கு காணிக்கை ! //
ஒரு சிறு திருத்தம் உங்கள் அனுமதியுடன்
பெண் நேயர்களுக்கு என்று இருக்கவேண்டும்
மெகா சீரியல்களை அதிகம் பார்வையிடுபவர்கள் (75%) அவர்கள்தான்:-))))
//
ஆகா மக்களே, நான் "பெண்கள் மெகா சீரியல் பார்க்கிறார்கள்" என்று சொல்லவில்லை வாத்தியார் ஐயா தான் சொல்கிறார்.
என்னான்னு கேளுங்க !
:))))))))
// SK said...
ரொம்ப "ஆனந்தமா" இருக்கு கோவியாரே!
ஹைய்யா! எங்க வீட்டுல விஜய் டிவி!
"மூனு"க்குப் போய்கிட்டு இருக்கோம் இப்ப!
:))
//
எஸ்கே ஐயா, அது வெறும் "ஆனந்தம்" இல்லை. பேரானந்தம் 4ஆவது வருசத்தை வெற்றிகரமாக கடந்து போய்கிட்டு இருக்கு.
இதுவும் கடந்து போகும் ??
:)
//வடுவூர் குமார் said...
சொன்னா நம்புவீங்களோ மாட்டிங்களோ!!
நான் இப்ப இருக்கும் வீட்டுகார அம்மாவுக்கு ரிமோட்டில் மெகாசீரியல் மட்டும் தான் அமுத்தி பார்க்க தெரியும்,அதுவும் யாராவது சேனை மாத்திட்டா அவுங்க படுகிற டென்ஷன் இருக்கே!! :-))
அது வேற சவுண்டை எனக்கும் சேர்த்துவைத்து,அழாத என்னை அழவைத்து பார்க்கிறாங்க.
அதை கேட்க கேட்க நமக்கு தான் அனாவசியமாக டென்சன் ஏறுது.
பார்க்காத எனக்கு இந்த நிலமை என்றால்,பார்பவர்களுக்கு????
//
குமார்,
உங்களுக்காக, அவுங்க வீட்டு டிவியில் சன் டிவி மட்டும் சரியாக தெரியக் கூடாதுன்னு என்னால் வேண்டிக்கத் தான் முடியும்.
:)))
GK,
Ha Ha Ha...
சூப்பர்...
விடுங்க பாவம் பார்த்துட்டு போகட்டும்..
அடிமையாகாமல் இருந்தால் சரி
எனக்கென்னமோ.. வஞ்சப்புகழ்ச்சியாக உங்க வீட்டுக்காரம்மாவைப் புகழ்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.
'தமிழ்மணத்'தைத்தான் சொல்றீங்களோவென்று நினைத்தேன். கடைசி வரியில் சீரியலாகி விட்டிருந்தது.
உங்க வீட்டுக்காரம்மா இந்த மறுமொழியைப் படிச்சிட்டு எனக்கு நன்றி சொல்லியிருந்தால் மறக்காம எனக்குச் சொல்லிருங்கோ.
Post a Comment