Monday, March 12, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

ஆதவனின் காலை வேளை !


இலவச பள்ளி எழுச்சி இசையென
சோலை வனங்களில் பூபாளம் இசைத்தது
புல்லினம் !

தூக்கத்தின் அசதி,
கண்கள் சிவக்க விழித்துக் கொண்டது
விடியல் !

இன்று இதுபோதும் என்று
மின்சாரத்தை நிறுத்திக் கொண்டது
விண்மீன்கள் !

பொன் வண்ண கடல் குளியல்,
பனித்துளிக்குள் முகம் பார்த்து
அலங்கரித்து பொலிவு
பெற்றான் ஆதவன் !

காலை பசியின் உணவாக
கடற்கரை மணல் புட்டுக்களின்
ஈரங்களை உண்ணத் தொடங்கி,
பூக்களின் வியர்வையை
அருந்தியதும் உற்சாகமாக
அன்றைய வேலையை
ஆரம்பித்தான் ஆதவன் !

4 : கருத்துக்கள்:

said...

ஆதவனின் ஆதரவு இல்லாமல், நடக்கும் வேலையே , இல்லை என்பதை இங்கே வந்த சில நாட்களில் புரிந்துகொண்டேன்.

புதிய சூரியனைத் தினம் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் உங்கள் கவிதையைப் பார்த்ததும் கிடைத்தது. நன்றி கண்ணன்.

said...

ஜிகே அய்யா,

உதய சூரியனுக்கு கவிதை மூலம் ஜல்லியா?

கவிதை நன்றாக இருக்கிறது.

பாலா

said...

//வல்லிசிம்ஹன் said...
ஆதவனின் ஆதரவு இல்லாமல், நடக்கும் வேலையே , இல்லை என்பதை இங்கே வந்த சில நாட்களில் புரிந்துகொண்டேன்.
//

அம்மா, இதில் எதாவது உள்குத்து இருக்கிறதா ?
:)

//புதிய சூரியனைத் தினம் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் உங்கள் கவிதையைப் பார்த்ததும் கிடைத்தது. நன்றி கண்ணன். //

இயற்கை அழகை உணர்ந்து நின்றாலும் எழுத்தில் வடிக்க ஒரு யுகம் போதாது !

பின்னூட்டத்துக்கு நன்றி !
:)

said...

//bala said...
ஜிகே அய்யா,

உதய சூரியனுக்கு கவிதை மூலம் ஜல்லியா?

கவிதை நன்றாக இருக்கிறது.

பாலா
//

"பஞ்ச்" பாலா வாங்க,

நண்பர்களைவிட பிடிக்காதவர்களைத்தான் அதிகம் நினைப்பார்கள் என்று உங்கள் *உதய சூரியன்* விளக்கத்தில் இருந்து அறிந்து கொண்டேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி !