Sunday, March 11, 2007
சு(ட்)டும் உண்மைகள் !
பெண்ணியத்தை உருக்கி
கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தேன்,
சுட்டும் வார்த்தைகளின் இருப்பு
முற்றிலும் தீர்ந்த போது,
அடங்காத எண்ணத் தீயின் பசி
வார்த்தைகளுக்காக அலைந்தது !
இந்த பசியின் இடையே,
அமைதியைக் கெடுத்தது,
அடுப்பங்கரையின் மிக்ஸி சத்தம் !
நிறுத்தச் சொல்லி,
மனைவியின் கன்னத்தில்
இறங்கியது எனது வலது கை !
Subscribe to:
Post Comments (Atom)
12 : கருத்துக்கள்:
யாரும் சண்டைக்கு வரப்போறாங்க.
நல்ல வார்த்தைப்பிரயோகங்கள்..
சென்ஷி
சிந்து பைரவி ஞாபகம் வருது.
அங்கு இசை இங்கு வார்த்தை "பசி"
"அடங்காத எண்ணத் தீயின் பசி
வார்த்தைகளுக்காக அலைந்தது !
இந்த பசியின் இடையே,
அமைதியைக் கெடுத்தது,
அடுப்பங்கரையின் மிக்ஸி சத்தம் !
நிறுத்தச் சொல்லி,
மனைவியின் கன்னத்தில்
இறங்கியது எனது வலது கை !"
அவரவர் தங்களின் இயலாமையை இன்னொருவரிடத்தில் தானே காட்டிமுடிக்கிறோம்.
அப்படியே வாழ்வையும் தொலைத்துக்கொள்கிறோம்.
ஜிகே அய்யா,
நீங்க நிமிஷத்துக்கு,நிமிஷம் பெண்ணியம் பாடும், வெளியே மிதக்கும் அய்யாவை இப்படி குட்டியிருக்கீங்கன்னு புரியுது.எனக்கென்னமோ, அந்த அம்மா செஞ்சது கொஞ்சம் தப்போன்னு தோணுது.அந்தம்மா, மிக்ஸியில, மசால்வடைக்கு மாவு அரைத்து சத்தம் எழுப்புவதற்க்கு முன்னால,ரெண்டு,மூணு பியர் பாட்டில் தொறக்கற மாதிரி சத்தம் எழுப்பியிருந்தாங்கன்னா ,நம்ம அய்யாவும் இன்னும் வேகமா பெண்ணியம் பத்தி புலம்பி கவிதை படைப்புல மும்முரமா இறங்கியிருப்பார்.
செவிக்கு உணவில்லாதபோது,சிறிதளவு வயிற்றுக்கும் ஈயலாம் என்ற வள்ளுவர் வழியில் இல்லறம் நடத்தும் உத்தம புருஷன் நம்ம பெண்ணியவாதி குடிமகன் அய்யா.
பாலா
பெண்ணியமாவது மண்ணாங்கட்டியாவது, ஏங்கல்லாம் மொட்டைப் பாப்பாத்தின்னு பட்டம் குத்தி மூளையில் குத்த வெச்சிருக்கோம் எங்காத்து பெண்களை.
ஒரிஜினல் பாலா மற்றும் இராகவன் ஐயங்கார்,
- இது கும்மி பதிவு அல்ல !
ஹீம் கை தட்டல்களுக்காகவும், பல வேறு விஷயங்களுக்காகவும் பேச்சிலும் எழுத்திலும் பிறருக்காகவும் மட்டும் பொய் முகம் வைத்து பேசுபவர்கள் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். ஹீம் நல்லா வந்திருக்குங்க.
///
பெண்ணியத்தை உருக்கி
கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தேன்
///
நல்ல சொல்லாடல்
கவிதை மிகவும் தட்டையாக வந்திருக்கிறது. பாலா என் பதிவில் வந்துமட்டும்தான் என்னைத் திட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் எந்தப் பதிவுக்குப் போனாலும் என்னுடைய நினைவாகவே இருக்கிறார்.
//மிதக்கும் வெளி said...
கவிதை மிகவும் தட்டையாக வந்திருக்கிறது. பாலா என் பதிவில் வந்துமட்டும்தான் என்னைத் திட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் எந்தப் பதிவுக்குப் போனாலும் என்னுடைய நினைவாகவே இருக்கிறார்.
//
சுகுணா திவாகர்,
அவருக்கு திரா'விடர்கள்' என்றாலே அன்புதான், அவர்களின் பின்னால் நின்றுகொண்டிருப்பார்.
சொற்களின் ஆளுமையும், சிக்கனமும் பாராட்டத் தக்கவை. களம் கொஞ்சம் புதிதாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
(நான்கு நாட்களுக்கு முன் வெளியிட்டிருக்கலாமே! ஆண்டுவிழா கொண்டாடியமாதிரி இருந்திருக்கும்)
//RATHNESH said...
சொற்களின் ஆளுமையும், சிக்கனமும் பாராட்டத் தக்கவை. களம் கொஞ்சம் புதிதாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.//
நன்றி,
கவிதைப்படி,
பெண் சமையல் அறையில் இருப்பதாக (மறைமுகமாக) குறிப்பிட்டுள்ளது ஆணாதிக்க சிந்தனை என்கிறீர்கள் சரியா ? :)
அவர்கள் ஹவுஸ் மேக்கர் !
//(நான்கு நாட்களுக்கு முன் வெளியிட்டிருக்கலாமே! ஆண்டுவிழா கொண்டாடியமாதிரி இருந்திருக்கும்)
//
இது பழசு. பின்னூட்டம் மறுமொழி இட்டத்தால் தமிழ்மணம் மறுமொழி தொகுப்பில் வந்தது.
தங்கள் கவிதையை படித்ததும் ஒன்று
நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் சன் டி.வி யில்
ஒரு நிகழ்ச்சியில் கணவன் மனைவியை கன்னத்தில் அறைந்த காட்சியைக் காட்டினார்கள். இதை சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கே உறுத்தலாக இருந்தது.
பெண்ணியவாதிகளுக்கு எப்படியோ? சில ஊடகங்களில் மட்டும் கண்டனக் குரல்கள் எழுந்தன...
அன்புடன்,
ஜோதிபாரதி.
Post a Comment