Friday, March 09, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

இட ஒதுக் கேடு ?


ஊருக்குள் வெளியே
சேரி மட்டும் தான், என்றோ
கொடுத்து விட்டாய்
எமக்கு இட ஒதுக்கீடு !

நாங்கள் அறிவாளிகள் என
உன்வீட்டு கணக்குப் பாடம்
கூட்டல், கழித்தல், பெருக்கல்
முழுவதும் எமக்கு மட்டுமே !

என் இடதுகை கறந்த பாலை
உம் வலது கையால் வாங்கி கண்ணில்
ஒத்திக் கொண்டு தூய்மை என்கிறாய்
என்னைத் தொடாமலேயே !

அஸ்திவாரமாக இருந்தபோது
நான் சுமந்த கற்களை எந்த
கோவிலும் வேண்டாம்
என்று சொல்லவில்லை !

நான் உடைத்த பாறையில்
செய்த சிலை
தூரத்தில் இருந்தே
எம்மை கண்டு கொல்கிறது!

நான் வெட்டிய மரங்களில் செய்த
கதவுகள் கோவில் முன்
எம்மைக் கண்டதும்
சாத்திக் கொல்கின்றன !

கேட்காமல் அனைத்து ஒதுக்கேடும்
எனக்கு கொடுக்கிறாய்
கேட்கும் ஒன்றை ஏன் மறுக்கிறாய் ?

9 : கருத்துக்கள்:

said...

GK,


//கேட்கும் ஒன்றை ஏன் மறுக்கிறாய் ? //


அப்படிப் போடு அருவாளை..

Super!!

said...

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை மனித தன்மையற்ற செயல்

பாடப் புத்தகத்தில் இருப்பதோடு சரி..ஹ்ம்ம்ம்..
இந்த வரிகள் சொல்லும் கருத்தை,நம் குழந்தைகளுக்கு நாம் நம் நடத்தையினால் புரிய வைப்பது எப்போது...

said...

உச்ச அநீதி மன்றம்,இந்திய சட்டத்துறை அமைச்சர்,அதிலே வாதாடிய வழ்க்கறிஞர்கள் எல்லோருமே இரண்டு முறை பிறந்த நூல் திருமேணிகளின் கூடாரமாக இருப்பதால்தான்.56 ஆண்டுகளாக நிறைவேற்றப்ப்டாத சட்டம். கடைசியில் நிறைவேற்ற அரசு சொன்னால் இப்போது என்ன அவசரம்? இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகட்டும் என்று சொல்லுந்திமிர்,50 விழுக்காடுதான்,கிரிமி லேயர் இதெல்லாம் எந்த அரசியல் சட்டத்திலே இருந்து வந்தது?உச்ச நீதி மன்றமா?இவாள் நடத்தும் பஞ்சாயத்தா?

said...

நல்ல கேள்விகள் கோவி.கண்ணன் அண்ணா.

இரண்டு இடங்களில் 'கொல்கின்ற' என்று வருகிறது. அந்த இடத்திற்கு 'கொள்கின்ற' என்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. ஆனால் கவிஞர் என்ன சொல்ல நினைத்தார்? 'கொல்கின்ற' என்றே சொல்ல நினைத்தாரா என்று தெரியவில்லை. அதனால் அது எ.பி. என்று சொல்ல இயலவில்லை.

said...

கோவி,

கருத்தான கவிதை வரிகள்! நியாயமான கேள்வி! பதில் சொல்பவர்கள் நீதிமான்களா என்ன?

said...

உன்னை மறுக்கும் "அவனை" நீ ஏன் "மறுக்க" மறுக்கிறாய்?
மேல் சொன்னது என்னுள் அரித்துக்கொண்டிருக்கும் நினைவு.ஏன்?
கோவியாரே நல்லா இருக்கு.
பின் குறிப்பு:கவிதைக்கும் எனக்கும் பால்வெளி தூரம்.
இதுக்கு முன்னாடி படித்த ஒரு வின்வெளி கட்டுரையின் பிரதிபலிப்பு.
:-))

said...

//கேட்காமல் அனைத்து ஒதுக்கேடும்
எனக்கு கொடுக்கிறாய்
கேட்கும் ஒன்றை ஏன் மறுக்கிறாய் ?
//

நியாயமான கேள்வி. சேரி மக்களின் துன்பங்களை அற்புதமாக படம்பிடித்து காட்டி இருக்கிறீர்கள் கண்ணன்.

said...

//உன்னை மறுக்கும் "அவனை" நீ ஏன் "மறுக்க" மறுக்கிறாய்?//

நான் அதான் செய்கிறேன் வடுவூர் குமார். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?

said...

அருமையான கவிதை.

யாருங்க எழுதுனது? நெத்தி பொட்டில் அறையற மாதிரி...

ஆனாலும் புரிய வேண்டியவங்களுக்கு புரியாது.

அப்புறம் சிங்கை வந்து சேர்ந்துட்டீங்களா?