Thursday, January 11, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

கீ.வீரமணி ஐயாவுடன் நேரடி சந்திப்பு !

11/ஜென/2007 அன்று (நேற்று) நானும் நண்பர் குழலியும் தி.க பொதுச்செயலாளர் மானமிகு கீ.வீரமணி ஐயாவை சந்தித்தோம். கடந்த சனிக்கிழமை நடந்த சமூகவியல் நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர் குழலி வீரமணி ஐயாவை சந்தித்தித்து பேச இருப்பதாக சொன்னார், என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்றேன். அவருடைய நண்பர் திரு கலைச்செல்லவன் அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

மாலை 6.30 மணிவாக்கில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி இருந்தார்கள்.அலுவலகத்தைவிட்டு கிளம்பும் போது 6 மணி ஆகியிருந்தது. நல்ல மழை. நண்பர் குழலி வாடகை காரில் சென்று கொண்டிருப்பதாக சொன்னார். போகும் போது என்னையும் பிக்-அப் செய்து கொள்ளுங்கள் என்றேன். வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் என அவர் வருவதற்குள் 6.30 மணி ஆகி இருந்தது வாடகை காரில் நானும் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு மறுபடியும் போக்குவரத்து நெரிசல் ... ஒருவழியாக 7.00 மணிக்கு போய் சேர்ந்தோம்.

கி.வீரமணி ஐயா ஆடம்பர ஹோட்டலில் தங்கி இருக்கவில்லை. அப்பார்ட் மெண்ட் (அடுக்குமாடி) வீட்டில்தான் தங்கி இருந்தார். எளிமையான தோற்றம், கனிவான பார்வை, அன்பான உபசரிப்பு இவைதான் வீரமணி ஐயாவை சந்தித்தபோது உடனடியாக அவரிடம் உணர்ந்தேன். கை கூப்பி வணக்கம் செலுத்தி அருகில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார்.

எந்த ஊர், எங்கு படித்தீர்கள், இங்கு எங்கே வேலை செய்கிறீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள் என்று இருவரிடமும் கேட்டார். சொன்னவற்றை பொறுமையாக கேட்டுக் கொண்டு. எங்கள் ஊரில் உள்ள தி.க முக்கியஸ்தர்களின் பெயரை சொன்னதும் சரியாக அவர்களைப் பற்றி மற்ற தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நல்ல நினைவாற்றல்.

பின்பு இணையத்தில் தமிழ் புரட்சிபற்றி பேசினோம். நண்பர் குழலி பெரியாரின் புத்தகங்ளில் உள்ள செய்திகளை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தார். பெரியாரின் கருத்துக்களைச் எடுத்துச் செல்ல என்ன உதவி வேண்டுமானலும் செய்கிறேன். பதிப்புரிமை சிக்கல் எதுவும் இல்லை. ஐயாவின் புத்தகங்களில் இருந்து எதைவேண்டுமானலும் இணையத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று அனுமதியளித்தார்.

இருவருக்கும் காபி கொடுத்தார்கள். பெரியாரின் அன்றைய கருத்துக்கள் தீர்கதரிசனமாக இன்றைக்கு எவ்வாறு நடைமுறையில் இருக்கிறது எனபதை விளக்கினார். பெரியார் படம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டார். தன்னைப் பற்றி அதிகம் சொல்லவில்லை அவர் பேச்சு முழுவதும் பெரியாரே ஆக்கிரமித்து இருந்தார். அடுத்தக்கட்ட தலைவர்கள் யாரும் தன்னுடைய தலைவரை மீது இவ்வளவு ஈடுபாடு வைத்திருக்க மாட்டார்கள். கலைஞர் கூட அண்ணாவை பற்றி பேச வேண்டிய இடத்தில் தான் பேசுவார். ஆனால் வீரமணி ஐயாவின் எண்ணம் முழுதும் பெரியாரே நிறைந்திருக்கிறார் என்று பார்க்கும் போது அவர் பெரியார் மீது வைத்திருக்கும் பேரன்பும், நன்மதிப்பும் அவரின் தனிச்சிறப்பாக போற்றத்தக்கது.

பொதுவாக சிலவற்றை பேசும் போது நேரமின்மை என்று சிலர் சொல்கிறார்கள். நமக்கு இது கிடைத்தே ஆகவேண்டும் என்கிற போது எல்லோருக்கும் நேரம் கிடைக்கிறது. நாம் ஈடுபாடு காட்டதவைகளுக்குத்தான் நமக்கு நேரமில்லாமல் போவதாக சொல்கிறோம். சில செயல்களில் ஈடுபடும் போது அவற்றிற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் அங்கு நேரமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஈடுபாடு இருக்கும் போது நேரம் தன்னால் கிடைக்கும் என்றார்.
முதல் சுயமரியாதை திருமணம் எங்கே எப்போது எவ்வாறு நடந்தது என்றெல்லாம் சொன்னார். அன்றைய காலகட்டத்தில் பலதாரம் திருமணம் சமூக பழக்கமாக இருந்தது. பெரியார் நடத்திய முதல் திருமணமே இருதார திருமணம். அன்றைக்கு அதை பெரியார் செய்து வைத்தாரே என்று இன்றைய காலகட்டத்தில் யாரும் இருதார திருமணத்தை நியாப்படுத்த முடியாது. சமூகம் மாறும் போது எந்த கருத்தானலும் மாறிக் கொண்டே வரும் என்றார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினோம் உற்சாகமாக பேசினார் கொள்கைகள் என்பதை உடனடியாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் படிப்படியாகத்தான் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். 10 % முதல் 100 %வரை கொள்கை உடன்பாடு என்பதில் எவ்வளவு கருத்து சென்றுள்ளது பார்க்கும் போது இன்றைக்கு 10 % என்பது 20% ஆக மாறும் என்று நினைக்க வேண்டும் அளவைபார்க்கக் கூடாது. இதுபோல் நேர் எண்ணங்களை (பாசிடிவ் திங்கிங் ) இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

சமூகவியல் பற்றிய எங்களது வலைப்பதிவு ஆக்கங்களை அவரிடம் கொடுத்தோம்.. சிலவற்றை உடனே படித்தார் ... பின்பு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றோம். மிந்தூக்கி வரை வந்து வழியனுப்பினார். வெளியில் சென்றால் சாதாரண உடையில் (கருப்பு சட்டை இல்லாமல்) பொது போக்குவரவு வண்டிகளில் (பஸ் மற்றும் இலகு இரயிலில்) தான் செல்வாராம்.

தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஒரு கட்சி தலைவரின் எளிமையும், பண்பும், விருந்தோம்பலும் என்னை வியக்கவைத்தது

பின்குறிப்பு : இங்கும் நான் அரசியல் பற்றி எழுதவில்லை. ஒரு கட்சித் தலைவரை தமிழன் என்ற முறையில் சந்தித்துப் பேசி நெகிழ்ந்ததை பகிர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அரசியல் விமர்சனங்களை இங்கு கொண்டுவராதீர்கள்.

27 : கருத்துக்கள்:

said...

வாழ்த்துக்கள்.

said...

சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!

said...

//தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஒரு கட்சி தலைவரின் எளிமையும், பண்பும், விருந்தோம்பலும் என்னை வியக்கவைத்தது//

ஜீ.கே அய்யா,

மானமிகு அய்யா, உங்களுக்கு காஃபி கொடுத்து, மகத்தான தியாகத்தை செய்ததை, நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து,படிப்பவர்கள் கண்கள் குளமாகும் வண்ணம் செய்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

அய்யா அவர்கள், எப்பவும், இரட்டை குழல் துப்பாக்கியின் ஒரு குழலாக தமிழர் நலனுக்காக வெடிப்பவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.டபுள் வாழ்த்துக்கள்.

பாலா

said...

//bala said... அய்யா அவர்கள், எப்பவும், இரட்டை குழல் துப்பாக்கியின் ஒரு குழலாக தமிழர் நலனுக்காக வெடிப்பவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.டபுள் வாழ்த்துக்கள்.

பாலா //

பெரியார் பற்றிய செய்திகளை உடனே படித்து கருத்து சொல்லும் பாலாவுக்கு நன்றி !

said...

GK,

வாழ்த்துக்கள்.. கலக்கிடீங்க..

மிக்க மகிழ்ச்சி!!

said...

//Anonymous said...
வாழ்த்துக்கள்.
//
நன்றி அனானி சார்!
//
SP.VR.சுப்பையா said...
சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!
//
நன்றி ஐயா!

said...

நட்சத்திர ஹோட்டலில் தங்காததே "எளிமையை" காட்டுகிறதே!!
சந்திப்பை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
அந்த கலைச்செல்வன் - ஒரு "ல" கூட இருக்கு போல!!

said...

சில சந்திப்புகள் நம்மால் மறக்க முடியாதவை! அதை அனைவரும் சுவையுடன் படிக்குமாறு தந்தமைக்கு நன்றி GK ஐயா!

//தன்னைப் பற்றி அதிகம் சொல்லவில்லை அவர் பேச்சு முழுவதும் பெரியாரே ஆக்கிரமித்து இருந்தார்//

உண்மையான தொண்டர்களோ, அடியவர்களோ, அவர்களின் மிக நல்ல குணங்களில் இதுவும் ஒன்று!

சென்னையில் இளம் வயதில், வீரமணி அவர்களைத் பெரியார் திடலில் உள்ள விடுதலை அலுவலகத்தில் சந்தித்துள்ளேன்! (தினத்தந்தி அலுவலகத்துக்குப் பக்கத்தில்)

அந்த நாள் ஞாபகம்...அசை போட்டுக் கொள்கிறேன்!

said...

கோவியாரே,
தற்போது சிங்கையில் இல்லாததால் அருமையான வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் .

நண்பர் குழலியும் இது பற்றி எழுதுவார் என நம்புகிறேன்.

said...

"பெரியார் கண்ட வாழ்வியல்" நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன், வீரமணி அய்யா அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலவே இருந்தது, வீரமணி அவர்கள் பார்வையாளர் வரிசைக்கு கடைசி வரிசை வந்து எல்லோரிடம் அன்பான புன்னகையுடன் வரவேற்றது என்னை நெகிழ வைத்தது - அவர் பல்லாண்டு நம்முடன் வாழ்ந்து பெரியார் தொண்டாற்ற நான் இறைவனை நம்புவதால் அவனிடமே வேண்டுகிறேன் - நன்றி - நாகூர் இஸ்மாயில்

said...

இப்பொழுது உங்களுக்கு உள்ள வயதில் 1960 களில் நான் தந்தை பெரியாரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது."வாங்க வாங்க"பழுத்த பழம் இனிய வரவேற்பு!பொறுமையாகப் பேசுவதை{நாம் சத்தமாகப் பேசவேண்டும்}கேட்பார்.திருச்சி பெரியார் மாளிகையில் மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்து படித்து எழுதிக் கொண்டிருப்பார்.எந்த பந்தாவும் கிடையாது.தனியாகச் சென்று பார்க்கலாம்,பேசலாம்.நிறையக் கேள்விகள் கேட்பார்,நாம் சொல்லி முடிக்கும் வரைப் பொறுமையாகக் கேட்பர்ர்.நன்றாகப் படிக்கச்சொல்லுவார்.அட மேடையிலே சிங்கம் போலக் கர்ச்சித்தாரே நேரிலே இப்படித் தங்கமாக இருக்கிறாரே என்று இன்பமான் அதிர்ச்சியாக இருந்தது.
ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகவும் எளிமையான்வர்.தங்குவதும் திருச்சி பெரியார் மாளிகை,வல்லம் பாலிடெக்னிக்கில் உள்ள எளிமையான ஆனால் மிகவும் தூய்மையான் விருந்தினர் விடுதி,உண்பது அங்கேயே கூட யார் யார் இருக்கிறார்களோ அவர்களுடன்.
ஆழ்ந்த அறிவு,தெளிந்த சிந்தனை இனிய வார்த்தைகள் நம்மைக் கேள்விகள் கேட்கும் எளிமை,யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளமுடியும் என்பதை நாம் சொல்வதைக் கேட்கும் உன்னிப்பு இவை நம்மை அமைதி அடையச் செய்யும்.
ஒரு முறை ஒரு அம்மையார் விமானத்தில் அருகே அமர்ந்திருந்தவர் கோபமாக இருந்தாராம்.யாருடனும் அன்புடன் பேசும் இவர் இந்த அம்மையாருக்கு நாம் ஒரு தொந்தரவும் செய்யவில்லையே என்று அவர் புத்தகத்தைப் படித்து பணிப்பெண் விசாரிப்புகளுக்கு நன்றி தெரிவித்து இருந்தாராம்.கடைசியாக அந்த அம்மையார் நீங்க அன்பா ரொம்ப நன்னவராத்தான் இருக்கேள் இருந்தாலும் உங்கள் மீது நேக்கு ரொம்பக் கோவம் என்றாராம்.ஆசிரியர் நான் ஒன்றும் பேசவும் இல்லை செய்யவும் இல்லையெ என்ன கோவம் என்றாராம்.
நீங்க என் பெண்ணோட வாழ்வையேக் கெடுத்துவிட்டீர் என்றாராம்.
அய்யோ! உங்களையும் தெரியாது உங்கள் பெண்ணையுந்தெரியாதே என்றாராம்.
இந்த இட ஒதுக்கீடு கொண்டு வந்து என் பெண்ணுக்கு இடம் கிடைக்காமல் செய்துவிட்டீர் என்றாராம்.உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துவிட்டு அம்மா மற்ற பிள்ளைகள் எல்லாம் நல்ல படிப்பு படித்து நன்றாக இருக்கிறார்கள்,ஒரு பெண்ணுக்குத்தான் இடங்கிடைக்கவில்லை.எங்கள் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் ஆண்டுக் கணக்காக இடங்கிடைக்காமல் படிக்காமல் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள் எண்ணிப்பாருங்கள் என்று சொன்னாராம்.
நீங்க சொல்றது சரிதான் ஆனாலும் உங்கள் மீது கோபந்த்தான் என்றாராம் அந்த அம்மையார்!

said...

கோவி, தமிழன்,

இருவரும் பகிர்ந்துகொண்டவை நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள்

said...

பாலா அய்யா

பதிவர் கண்ணன் என்ன பின்குறிப்பு கொடுத்துள்ளார் என்று படித்த பின்பும் பின்னூட்டமிட்ட உங்கள் அறிவுத்திறன் என்னை மிகவும் வியக்க செய்கிறது அய்யா


இங்க வேணாம் அய்யா, வாங்க நம்ம ;) பதிவுக்கு போய்டுவோம் அய்யா கும்மாங்குத்து அங்கே குத்தலாம் அய்யா

இப்படிக்கு
வரவனையான் அய்யா

said...

//Anonymous said...
வாழ்த்துக்கள்.
7:33 PM

SP.VR.சுப்பையா said...
சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்! //

Anonymous மற்றும் SP.VR.சுப்பையா ஐயாவுக்கு நன்றி !

said...

//Sivabalan said...
GK,

வாழ்த்துக்கள்.. கலக்கிடீங்க..

மிக்க மகிழ்ச்சி!!
//

சிபா.. பாராட்டுக்கு நன்றி !

said...

//வடுவூர் குமார் said...
நட்சத்திர ஹோட்டலில் தங்காததே "எளிமையை" காட்டுகிறதே!!
சந்திப்பை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
அந்த கலைச்செல்வன் - ஒரு "ல" கூட இருக்கு போல!!
//

தொடர்ந்து பதிவுகளை படித்து கருத்துக்களை பகிர்ந்துவரும் வடுவூராருக்கு நன்றி !

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சில சந்திப்புகள் நம்மால் மறக்க முடியாதவை! அதை அனைவரும் சுவையுடன் படிக்குமாறு தந்தமைக்கு நன்றி GK ஐயா!

உண்மையான தொண்டர்களோ, அடியவர்களோ, அவர்களின் மிக நல்ல குணங்களில் இதுவும் ஒன்று!

சென்னையில் இளம் வயதில், வீரமணி அவர்களைத் பெரியார் திடலில் உள்ள விடுதலை அலுவலகத்தில் சந்தித்துள்ளேன்! (தினத்தந்தி அலுவலகத்துக்குப் பக்கத்தில்)

அந்த நாள் ஞாபகம்...அசை போட்டுக் கொள்கிறேன்!
//

கண்ணபிரான் அவர்களே,

உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !!

said...

// ஜோ / Joe said...
கோவியாரே,
தற்போது சிங்கையில் இல்லாததால் அருமையான வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் .

நண்பர் குழலியும் இது பற்றி எழுதுவார் என நம்புகிறேன்.
//

ஜோ...!
உங்களையும் சிங்கையில் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஆவலாக உள்ளது. குழலி வந்ததும் சந்திப்போம் !

said...

// ஜோ / Joe said...
கோவியாரே,
தற்போது சிங்கையில் இல்லாததால் அருமையான வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் .

நண்பர் குழலியும் இது பற்றி எழுதுவார் என நம்புகிறேன்.
//

ஜோ...!
உங்களையும் சிங்கையில் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஆவலாக உள்ளது. குழலி வந்ததும் சந்திப்போம் !

said...

//nagoreismail said...
"பெரியார் கண்ட வாழ்வியல்" நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன், வீரமணி அய்யா அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலவே இருந்தது, வீரமணி அவர்கள் பார்வையாளர் வரிசைக்கு கடைசி வரிசை வந்து எல்லோரிடம் அன்பான புன்னகையுடன் வரவேற்றது என்னை நெகிழ வைத்தது - அவர் பல்லாண்டு நம்முடன் வாழ்ந்து பெரியார் தொண்டாற்ற நான் இறைவனை நம்புவதால் அவனிடமே வேண்டுகிறேன் - நன்றி - நாகூர் இஸ்மாயில்
//
நாகூர் இஸ்மாயில் அவர்களே... செய்தியை பகிர்ந்து கொண்டு ஐயாவை வாழ்த்தும் உங்கள் அன்புள்ளத்தை பாராட்டுகிறேன். நன்றி !

said...

//Thamizhan said...
இப்பொழுது உங்களுக்கு உள்ள வயதில் 1960 களில் நான் தந்தை பெரியாரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது."வாங்க ....
//

தமிழன் ஐயா,

நல்லதொரு தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

said...

//திரு said...
கோவி, தமிழன்,

இருவரும் பகிர்ந்துகொண்டவை நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள்
//

வருகைக்கு நன்றி திரு !

said...

வரவனையான் said...
//பாலா அய்யா

பதிவர் கண்ணன் என்ன பின்குறிப்பு கொடுத்துள்ளார் என்று படித்த பின்பும் பின்னூட்டமிட்ட உங்கள் அறிவுத்திறன் என்னை மிகவும் வியக்க செய்கிறது அய்யா


இங்க வேணாம் அய்யா, வாங்க நம்ம ;) பதிவுக்கு போய்டுவோம் அய்யா கும்மாங்குத்து அங்கே குத்தலாம் அய்யா

இப்படிக்கு
வரவனையான் அய்யா
//
வரவனை செந்தில் ஐயா,

பாலாவுக்கு வழிகாட்டியதற்கு நன்றி !
நல்ல மனிதர் நகைச்சுவை உணர்வுள்ளவர்.

said...

ஒரு காப்பி கொடுத்ததை எழுதிய உங்களுக்கு பாலா ஏராளமான விளம்பரம் கொடுக்கின்றார். பெரியார், கருணாநிதி என்று எங்கெல்லாம் வருகின்றதோ அங்கெல்லாம் சென்று காபி மேட்டரை பதிவிடுகின்றார். காபி அப்படி என்ன பயங்கர பொருளா?

said...

//அருண்மொழி said...
ஒரு காப்பி கொடுத்ததை எழுதிய உங்களுக்கு பாலா ஏராளமான விளம்பரம் கொடுக்கின்றார். பெரியார், கருணாநிதி என்று எங்கெல்லாம் வருகின்றதோ அங்கெல்லாம் சென்று காபி மேட்டரை பதிவிடுகின்றார். காபி அப்படி என்ன பயங்கர பொருளா?
//

அருண்மொழி அவர்களே,

பார்த்தேன்... சிரித்தேன்...ரொம்ப நல்லவரு ! பாலாவுக்கு காபி பிடிக்காது போல் தெரிகிறது.
:))

said...

singaporil thangalin santhippu kuriththu aasiriyar ayya therivitharkal. inaiyathil innum vegamaaga viraivil kalamiranguvom

said...

சந்திப்பு குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

-விழிப்பு