Wednesday, November 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

திரு எஸ்கே ஐயாவுக்கு பாராட்டுக்கள் !

மதிப்பிற்குறிய எஸ்கே ஐயா அவர்கள், நண்பர் திரு சிவபாலன் பாலியல் குறித்த பதிவில் பலருக்கும் ஏற்பட்ட தாக்கத்தைத் தொடர்ந்து, திரு சிவபாலன் மற்றும் பல நண்பர்கள் அழைப்பை ஏற்று, பாலியல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளை தொடர் கட்டுரையாக எழுதி ஒவ்வொரு வாரம் இருமுறையாக செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து 10 வாரங்களாக 18 பகுதிகளாக சிறப்பாக எழுதி முடித்திருக்கிறார்.

அதில் அவர் சொல்லிய செய்திகள் மிகந்த எச்சரிக்கையுடன் எளிமையான வார்தைகளை பயன்படுத்தி, ஆபாசத்தை சிறிதும் தொடாமல் சொல்லவேண்டிய, புரியவேண்டியவற்றை அவருக்கே உரிய நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்.

பதிவை படித்த வளரும் குழந்தைகளை உடைய என்னைப் போன்ற பெற்றோரை வெகுவாக ஈர்த்தது அந்த பயனுள்ள பதிவு. இடை இடையே பலருக்கும் ஏற்பட்ட சந்தேகங்களை பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கி இருந்தார்.

ஒவ்வொரு தலைப்புக்கு கீழும் கருத்துள்ள பாடல் வரிகளை அமைத்து சுவைபட எழுதியிருந்தது பதிவுக்கும் மேலும் சிறப்பு.

"கவிதைகளும், ஆன்மிக இலகியங்கள் திறம்பட எழுதும் உங்களுக்கு கட்டுரை எழுத வராதா ?" என்று கேட்டதற்கு 'எழுதலாமே' என்று சிரித்தார். 18 பகுதியாக வெளிவந்த தொடர் கட்டுரையையின் அமைப்பைபயும், கருத்துக்களையும் பார்த்த போது நான் அவரை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறேன் என்று தெரிகிறது.

திரு எஸ்கே ஐயா, அமெரிக்காவில் பல்வேறு தமிழ் பண்பாட்டு அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றில் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தி இருக்கிறார் என்று தெரிய வந்தது. ஐயா அவர்களின் வயதும், தொழில் சார்ந்த அனுபவமும், செய்த பொதுச் சேவைகளை கேள்விப்பட்ட போது அவரால் இதுபோன்ற சிறந்த இலக்கிய கட்டுரைகளை ஆக்க முடியும். திரு எஸ்கே ஐயா தமிழில் மேலும் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வழங்கவேண்டும் என்று என்னைப் போன்றவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

குறுகிய காலத்தில் அறிமுகம் ஆகி இதுவரை 100த் தாண்டிய பதிவுகளாக ஆன்மிக கட்டுரைகள், அழகு தமிழில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் விளக்கம், சென்னை வட்டாரா மொழியில் சுவைபட 'மன்னார் திருக்குறள்', கவிதைகள், போட்டி ஆக்கங்கள் ஆகியவற்றை திறம்பட படைத்து இருக்கிறார். திரு எஸ்கே ஐயாவின் தமிழ் பதிவுச் சேவையை அவர் தொடர்ந்து செய்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் பயனளிக்க வேண்டும் !

அவருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் அவர் வணங்கும் முருகன் அவருக்கு கொடுப்பாராக !

பதிவர் உலக பாரதியார் எஸ்கே ஐயா வாழ்க வாழ்க !
வளர்க அவரது தமிழ்ச் சேவை !

குமரன் அருள் கூடவே வரும் !

எஸ்கே ஐயாவின் பதிவு தொடுப்புகள் :

1.
ஆத்திகம் (திருப்புகழ், மன்னார் திருக்குறள், கவிதைகள் பதிவு)
2.
கசடற (பாலியல் விழிப்புணர்வு பதிவு)

17 : கருத்துக்கள்:

said...

சுல்தான் said...

//பதிவை படித்த வளரும் குழந்தைகளை உடைய என்னைப் போன்ற பெற்றோரை வெகுவாக ஈர்த்தது அந்த பயனுள்ள பதிவு. இடை இடையே பலருக்கும் ஏற்பட்ட சந்தேகங்களை பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கி இருந்தார்.//

நானும் வாழ்க பல்லாண்டென்று அவரை வாழ்த்தி இதை வழிமொழிகிறேன்.

said...

GK,

SK அய்யா நல்லதொரு தொடரை கொடுத்து தமிழுக்கு நல்லதொரு சேவையை செய்துள்ளார்.

அவரது சேவைக்கு எனது பாராட்டுகள்!! வாழ்த்துக்கள்!!

மேலும் இது போல் பல மருத்துவ தொடர்களை தர வாழ்த்துக்கள்.

அவரை வாழ்த்தி பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.

நன்றி

said...

அந்தக் குமரனின் அருளும் இந்தக் குமரனின் பணிவுடன் கூடிய வணக்கங்களும் என்றுமே எஸ்.கே. ஐயாவிற்கும் கோவி.கண்ணன் ஐயாவிற்கும் உரியன.

said...

பதிவெழுதத் தூண்டி,
அறிவிப்பும் அழகுறச் செய்து,
இப்போது முத்தாய்ப்பாய்
முடிவுரையாக ஒரு பதிவும் போட்டு,
என்னை திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள், கோவியாரே!

எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த இந்தத் தொடரின் வெற்றியில் உங்களுக்கும் கணிசமான பங்குண்டு என்பதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்து, உங்கள் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

பி.கு.: சிபா பாணியில் சொல்லணும்னா, இப்படி ஒரு பதிவைப் போட்டு, எல்லாரையும் இந்தப் பக்கம் திருப்பி, ஹைஜாக் பண்ணிட்டீங்க!

சிபா, விளையாட்டுக்குச் சொன்னேன்!
கோவிக்க வேண்டாம் !!
:))

கொஞ்சம் எல்லாரும் அங்கேயும் வந்துட்டு போங்க!

said...

//சுல்தான் said...நானும் வாழ்க பல்லாண்டென்று அவரை வாழ்த்தி இதை வழிமொழிகிறேன். //

சுல்தான் ஐயா !
பாராட்டில் பங்குபெற்றதற்கு பாராட்டுகள் மற்றும் நன்றி !

said...

// Sivabalan said...
GK,

SK அய்யா நல்லதொரு தொடரை கொடுத்து தமிழுக்கு நல்லதொரு சேவையை செய்துள்ளார்.

அவரது சேவைக்கு எனது பாராட்டுகள்!! வாழ்த்துக்கள்!!

மேலும் இது போல் பல மருத்துவ தொடர்களை தர வாழ்த்துக்கள்.

அவரை வாழ்த்தி பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.

நன்றி
//

சிபா...!

நீங்க போட்ட தார் குச்சியினால் தான் அவர் இந்த தொடரை எழுதினார்.

மேலும் அவர் இதுபோல தொடர்புகளை எழுதுவதில் அதிக நேரம் செலவிடுவேண்டும் என்று உங்களைப் போல நானும் கேட்டுக் கொள்கிறேன் !

பாராட்டில் கலந்து கொண்டதற்கு நன்றி !

said...

//குமரன் (Kumaran) said...
அந்தக் குமரனின் அருளும் இந்தக் குமரனின் பணிவுடன் கூடிய வணக்கங்களும் என்றுமே எஸ்.கே. ஐயாவிற்கும் கோவி.கண்ணன் ஐயாவிற்கும் உரியன.
//

குமரன் உங்கள் பாராட்டு வணக்கங்களுக்கு நானும் வணங்குகிறேன். நன்றி !

நான் 'ஐயா' இல்லை, அவர்தான் ஐயா ! நான் 'பையா' தான், ஆனால் கொஞ்சம் பெரிர்ர்ர்ர்ர்ரிய பையா !
:)

said...

பெற்றவர்கள் அவசியம் சிந்திக்கவேண்டிய, அறியவேண்டிய பல கருத்துக்கள் கொண்ட இத்தொடரைத் தந்த SK அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.

அவரது தமிழ்சேவை இனிதே தொடர வாழ்த்துக்கள்.

வாழ்த்திப் பதிவிட்டமைக்கு நன்றி கோவி கண்ணன் அவர்களே.

said...

//SK said...
பதிவெழுதத் தூண்டி,
அறிவிப்பும் அழகுறச் செய்து,
இப்போது முத்தாய்ப்பாய்
முடிவுரையாக ஒரு பதிவும் போட்டு,
என்னை திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள், கோவியாரே!

எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த இந்தத் தொடரின் வெற்றியில் உங்களுக்கும் கணிசமான பங்குண்டு என்பதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்து, உங்கள் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
//

விழா நாயகர் எஸ்கே ஐயா ...! சிறப்பு பின்னூட்டத்திற்கு நன்றி ! மேலும் நல்ல விசயங்களை / கட்டுரைகளை தொடர்ந்து எழுதவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் !

said...

பதிவர் உலக பாரதியார் எஸ்கே ஐயா வாழ்க வாழ்க!
அவரால் பதிவுலகில் தமிழ்ச்சேவையும்
வாழ்க வளர்க!!

பதிவர் உலகத் தூண்டுகோல் ஜிகே ஐயா வாழ்க வாழ்க!
அவரால் பதிவுலகில் தமிழ்ஒளி
தூண்டியே ஒளிர்க!!

தார் குச்சி போட்ட சிபா ஐயா(?) அவர்களுக்கும் இந்நேரத்தில் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும்!

SK ஐயா மேலும் இது போல் துறை சார்ந்த சமூகப் பதிவுகள் தர முருகன் அருள் முன்னிற்கும்!

GK ஐயா,
ஞான வேலன் படம் = இளமை + அழகு.

said...

//ஜெயஸ்ரீ said...
பெற்றவர்கள் அவசியம் சிந்திக்கவேண்டிய, அறியவேண்டிய பல கருத்துக்கள் கொண்ட இத்தொடரைத் தந்த SK அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.

அவரது தமிழ்சேவை இனிதே தொடர வாழ்த்துக்கள்.

வாழ்த்திப் பதிவிட்டமைக்கு நன்றி கோவி கண்ணன் அவர்களே.
//

ஜெயஸ்ரீ,

எஸ்கே ஐயாவை வாழ்த்துவதில் பங்கு பெற்றதற்கு நன்றி !

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பதிவர் உலக பாரதியார் எஸ்கே ஐயா வாழ்க வாழ்க!
அவரால் பதிவுலகில் தமிழ்ச்சேவையும்
வாழ்க வளர்க!!
//

கண்ணபிரான் ரவி சங்கர் !

எஸ்கே ஐயாவுக்கு 'பதிவர் உலக பாரதியார்' பட்டம் கொடுத்தாகிவிட்டது. இனி அவரை அவ்வாறே அழைக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் !

வந்து வாழ்தியதற்கு நன்றி !

said...

ஆமாம் நல்ல பதிவு தான்.
பலருக்கும் முன்மொழிந்தேன்.

said...

//வடுவூர் குமார் said...
ஆமாம் நல்ல பதிவு தான்.
பலருக்கும் முன்மொழிந்தேன்.
//

வடுவூராரே !

எஸ்கே ஐயாவின் பதிவுகளை முன்மொழிந்ததற்கு பாராட்ட்டுக்கள் !
நன்றி !

said...

எஸ்.கே அவர்களுக்கு நடக்கும் இந்த பாராட்டுவிழாவில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அருமையான தொடரைக் கொடுத்தார்.

said...

இன்னிக்குத்தான் 'வலை உலக காந்தி'ன்னு ஒருத்தரைச் சொன்னேன்.
இங்கே வந்து பார்த்தா 'பாரதி' யும் இருக்கார்:-)

said...

//துளசி கோபால் said...
எஸ்.கே அவர்களுக்கு நடக்கும் இந்த பாராட்டுவிழாவில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அருமையான தொடரைக் கொடுத்தார்.
//

வாங்க துளசியம்மா ...!

பாராட்டுவிழாவில் பங்கேற்றதற்கு நன்றி !
போடுவதற்கு பொன்னாடை சால்வை எடுத்துவரவில்லையா ?
:)

//
8:49 PM
துளசி கோபால் said...
இன்னிக்குத்தான் 'வலை உலக காந்தி'ன்னு ஒருத்தரைச் சொன்னேன்.
இங்கே வந்து பார்த்தா 'பாரதி' யும் இருக்கார்:-)
//

துளசியம்மா !
பாரதிக்கு உள்ள பல நற்பண்புகள் இவரிடம் இருப்பதால் பட்டம் சரியானதுதான் !
நான் முன் மொழிந்தேன் ...நீங்க தான் வழிமொழியனும் !
:)