Wednesday, November 22, 2006
ஆப்பம் சுடுவது எப்படி ?
ஆப்பத்துக்கு தேவையான பொருள்கள் :
1 படி பச்சை அரிசி
வெந்தயம் 1 தேக்கரண்டி,
உளுந்து 1/4 படி
பலகார சோட உப்பு தேவையான அளவு
அதிகமாக போட்டால் பெரிதாக உப்பும், வாய் வெந்துவிடும்
செய்முறை :
12 மணி நேரம், அரிசி உளுந்து, வெந்தயம் போட்டு நன்றாக ஊரவைத்த பின் தோசை / இட்டிலிக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும். தேசை மாவை விட கொஞ்சம் குழைவாக இருக்கலாம். அப்பொழுது தான், ஆப்ப சட்டியில் சுற்றி எடுக்க வசதியாக இருக்கும் !
ஆப்ப சட்டி இல்லாதவர்கள் வாணலியை பயன் படுத்தலாம். நன்றாக சட்டி சூடானதும், ஆப்பமாவை ஒரு இட்டிலி அளவுக்கு மாவை எடுத்து வார்த்து, சட்டி சுழற்றி ஆப்ப வடிவத்தை ஏற்படுத்தவும், ஆப்ப மையத்தில் சிரிதளவு சர்கரையோ, வெல்லமோ வைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
தொட்டுக் கொள்வதற்கு : தேங்காய் பால் அல்லது சைவ / அசைவ பாயா நல்லது !
Subscribe to:
Post Comments (Atom)
15 : கருத்துக்கள்:
போட்டோ கிடைக்கலியா?
வாழ்க! வளர்க! ஜோதியிலே கலந்திட்டீங்களா?
தலைவா நீங்களுமா!!
You too Brutus!!!!!!!!!!!!
Ha Ha Ha...
வண்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆப்பம், தென்னங்கள் ஊற்றாமல் அவ்வளவு நன்றாக வருமா?...
:))
//பொன்ஸ் said...
போட்டோ கிடைக்கலியா?
//
பொன்ஸ் !
வாழையில் இரண்டு ஆப்பத்துடன்,தேங்காய் பால் படம் போட்டு இருக்கிறேனே !
// சுல்தான் said...
வாழ்க! வளர்க! ஜோதியிலே கலந்திட்டீங்களா?
//
சுல்தான் சார்,
ஊரோடு சேர்ந்து பொங்கல் வைப்பது மகிழ்ச்சி தானே !
:)
// Sivabalan said...
தலைவா நீங்களுமா!!
You too Brutus!!!!!!!!!!!!
Ha Ha Ha...
//
சிபா...!
சுவையான பதிவு போட நீண்ட நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறியது !
// பூங்குழலி said...
வண்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆப்பம், தென்னங்கள் ஊற்றாமல் அவ்வளவு நன்றாக வருமா?...
:))
//
இப்படி ஒரு மேட்டர் இருக்கா, சின்ன பையனாக இருந்த போது கற்றுக் கொண்டது, பெரியவங்க செஞ்ச சதியில் தென்னங்கள் விசயம் தெரியாமல் போயிற்றே.
தென்னங்கள் மாவை புளிக்க வைக்கத் தானே ஊற்றுவார்கள் ?
:)
ஆப்பம் அருமையாக இருக்கிறது கேவியாரே!
///தென்னங்கள் மாவை புளிக்க வைக்கத் தானே ஊற்றுவார்கள் ?
:) ///
அதே அதே...
:)
தென்னங்கள் ஊறிய ஆப்பத்தை தேங்காய்ப் பாலுடன் உண்டால்...
சாப்பிட்டு பாருங்கள்..
//மாயவரத்தான்... said...
:)))))
//
மாயவரத்தாரே !
இன்னிக்கு அடுப்பு மூட்டியது தாங்கள் தானே !
//நாமக்கல் சிபி @15516963 said...
ஆப்பம் அருமையாக இருக்கிறது கேவியாரே!
//
சிபி,
ஆகா பேஸ் பேஸ் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே !
:)
// பூங்குழலி said...
தென்னங்கள் ஊறிய ஆப்பத்தை தேங்காய்ப் பாலுடன் உண்டால்...
சாப்பிட்டு பாருங்கள்.. //
பூங்குழலி,
குறிப்புக்கு நன்றி !
அடுத்த முறை சொந்த ஊருக்கு போகும் போது தென்னங்கள் ஆப்பம், தேங்காய் பால் வேண்டாம், அப்படியே சாப்பிடுவேன் !
:)
ஆப்பமிட்டு மீண்டும் வலைப்பதிவில் பிரவேசம்!
வாழ்த்துகள்!
:)
புலிப்பால் போய் இப்போது தென்னங்கள்ளா?
நடத்துங்க சாமி!
//SK said...
ஆப்பமிட்டு மீண்டும் வலைப்பதிவில் பிரவேசம்!
வாழ்த்துகள்!
:)
புலிப்பால் போய் இப்போது தென்னங்கள்ளா?
நடத்துங்க சாமி!
//
ஹலோ சார்!
ஏற்கனவே தேன் கூடு போட்டிகாக எழுதி தொடங்கி வச்சாச்சி, ஆப்பம் 2 வது பதிவு தான் !
:)
புலிப்பாலை வைத்து ஆப்பம் செய்யமுடியுமா ? நாகை சிவாகிட்ட தான் கேட்கனும் !
:)
Post a Comment