Wednesday, November 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

விடை !

நான் பதிவுலகில் நுழைந்து ஓராண்டுக்கு மேல் ஆனாலும், பதிவு எழுத துடங்கியது ஏப்ரல் முதலே ! குறிப்பிட்டு எதுவும் எழுதவேண்டும் என்று நுழையவில்லை. மேம்போக்காக எல்லாவற்றையும் தொட்டு மட்டும் எழுதினேன். இதுவரை காலம் பதிவில் 132 பதிவுகளும், காலங்கள் பதிவில் 80 பதிவுகளுக்கும் மேல் எழுதியாகிவிட்டது. எழுதிய சிலவற்றை ஏற்றவில்லை. எழுதியவரை திருப்தி இருந்தது.

பெற்றது ?
பெற்றது பெரிதாக ஒன்றும் இல்லை, தமிழோடு நெருங்கி உறவாட முடிந்தது. அதுதான் பெரியது. பல நல்ல பதிவர்களின் கருத்துக்களை அறிய முடிந்தது. சில நண்பர்கள் கிடைத்தார்கள் போனார்கள். தொடர்ந்து தட்டச்சியதில் இடதுதோள் வலி, விரல்வலி இவைகள்.

இழந்தது ?
நேரங்கள் தான் ! நிறைய நேரங்களை செலவிட்டு இருக்கிறேன். தூக்கம் கெட்டு இருக்கிறது. உணவு வேளை தப்பியிருக்கிறது. வேண்டாத பலவற்றை மனது உள்வாங்கியிருக்கிறது. அதிலிருந்து மீள சில காலம் ஆகும். குறிப்பாக சார்ந்த தொழில் பற்றி படிக்க நேரமும், கவனமும் இல்லாமல் போனதை நினைத்துப் பார்க்கிறேன். இனி சுய முன்னேற்றத்திற்காக படிப்பதற்கு கவனம் செலுத்த நினைத்துள்ளேன். வாரத்துக்கு ஐந்து பதிவுகள் எழுதி குறி சொற்களில் கோவி.கண்ணன் என்று எப்போதும் தமிழ்மணத்தில் தெரிவது, இனிவரும் வாரங்களில் இருக்காது.

குட் பை :
இதுவரை எனது பதிவுகளை படித்தும் பாராட்டியும், குட்டியும், தட்டியும் ஆதரவு கொடுத்த பதிவர் நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் படித்த அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி பதிவுகளை தொடர்ந்து படிப்பேன், கருத்துக்களுக்கு பின்னூட்டம் இடுவேன். பார்வையாளனாக தொடர்வேன் ! அத்தியும் எப்போதாவது பூக்கும் !

எனது பதிவுகளை உள்ளிட அனுமதித்த தமிழ்மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகத்தினருக்கும் நன்றி !

எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் குட் பை !

எல்லோரும் மகிழ்வுடன் இன்புற்று இருக்க வேண்டும் !

நன்றி !

அன்புடன்
கோவி.கண்ணன்

17 : கருத்துக்கள்:

said...

GK,

தங்கள் முடிவை மறு பரிசிலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இருப்பினும் தங்களைப் பற்றி ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், உங்கள் முடிவுகளில் இருக்கும் பிடித்தத்தையும் ஓரளவு அறிவேன்.

உங்களைப் போன்ற மிகச்சிறந்த பதிவரை இத்தமிழ் கூறும் நல் உலகம் மீன்டும் பெறுவது மிகக்கடினம்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நேரம் கிடைக்கும் போது இ மெயிலில் தொடர்புகொள்ளுங்கள்.

இதுவரை மிக அருமையான பதிவுகளை தந்து மகிழ்வித்தற்கு கோடான கோடி நன்றிகள்.

said...

கோவி, உங்க பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறதுண்டு.. இப்படி விடைபெற்றுப் போவது நியாயமா? தொழில் சார்ந்த படிப்பு படிக்கப் போறேங்கிறீங்க.. அதைப் பத்தியும் அப்பப்போ எழுதலாமே..

தொடர்ந்து இல்லைன்னாலும், வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுங்க!

said...

எங்கிருந்தாலும் வாழ்க! - உன்
இதயம் அமைதியில் வாழ்க!

நட்பு தொடரும்!!

said...

I am very sorry to hear... GK reconsider your decision, please!!

TheKa.

said...

வாழ்த்தி விடை தருகிறோம்.

சென்று வாருங்கள்.

:))

said...

212 பதிவுகள், கோடிக்கணக்கான பின்னூட்டங்கள் இட்டு சாதனை புரிந்திருக்கிறீர்கள். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு அவ்வப்போது எழுதுவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் அந்த அவ்வப்போது பதிவை கண்டிப்பாக எதிர்பார்த்திருப்பேன்.

said...

அவ்வப்போது வரும் பதிவுகளுக்காக காத்திருப்போம்.
நீங்கள் போட்ட பதிவுகளுக்காக நாங்கள் தான் நன்றி சொல்லவேண்டும்.

said...

அதற்குள் பை பை சொன்னால் எப்படி?
வாரத்துக்கு ஐந்தை இரண்டாக சுறுக்கிக் கொள்ளலாமே?
சுய முன்னேற்றத்துக்காக படியுங்கள். முன்னேறுங்கள் வாழ்த்துக்கள்.

said...

Oh ho, daily I spend some time on your page to refresh my self. Now, what to do, what to do????

said...

??????

said...

GK ஐயா
சும்மானாங்காட்டியும் தானே சொல்றீங்க?
என்னது இப்படி திடீர்ன்னு?

புரிகிறது, தோள் வலி!
தோள் வலிமை உள்ள உங்களை
தோள் வலி தான் அசைத்திடுமோ?
உணவும், தூக்கமும் இல்லா மந்திரம் பெற்றீர்களா, ராமனைப் போல என்று நானே வேடிக்கையாக உங்களிடம் கேட்டது உண்டு!

பார்வையாளனாய் மட்டும் இல்லாது, கருத்துக்
கோர்வையாளனாகவும் தாங்கள் வர வேண்டும் (atleast வாரம் ஒரு முறை!)

நீங்களும், உங்களுடன் நாங்களும், மகிழ்வுடன் இன்புற்று இருக்க வேண்டும் என்பதே என் அவா!

said...

அன்புள்ள கண்ணன்,

உங்கள் முடிவு துரதிர்ஷ்ட வசமானது. தயவு செய்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

அன்புடன்,
கருப்பு.

said...

GK,

என்னங்க இப்படி திடீர்னு?

அவ்வப்போது பூக்கப்போகும் அத்தியை எதிர்பார்த்திருக்கிறேன்..

வாழ்த்துக்கள்!

said...

கோவி, உங்களுக்குப் பிடித்த முடிவை எடுக்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் முடிவு உங்களுக்கு நன்மையைச் செய்யுமானால் அது நன்றே. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என்றாவது நீங்கள் திரும்பி வந்தால் வாழ்த்த மனதை இப்பொழுதே ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.

said...

என்னாச்சு GK.. கொஞ்சம் இடைவெளி விட்டுட்டு மீண்டும் வாங்க. நிச்சயமா நீங்க எழுதணும். நீங்க தப்புன்னு நினைக்கிற ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொல்லலன்ணா அந்த கருத்தே நிஜம்னு ஆகிவிடுமே..

Take a break and come back.

said...

உங்கள் முடிவு நல்ல முடிவாக இருக்கவேண்டும், வாழ்த்துக்கள்...மறுபரிசீலனை செய்யமுடியுமா பாருங்க...

டெக்னிக்கல் விஷயங்கள் கிடைத்தா கொஞ்சம் கோர்வையா எழுதி கொடுங்க...நான் என் பதிவில் வெளியிட்டுக்கறேன்...

மனம் அமைதியில் ஆழட்டும்..உங்கள் துறையில் சாதியுங்க...நீங்க மீண்டும் எப்போது வந்தாலும் வாசிப்புலகம் காத்திருக்கும்..

said...

அன்புள்ள சக வலைப்பதிவாளர்கள் அனைவரின் கனிவான மறுமொழிக்கு நன்றி !

எழுதுவதை குறைத்துக் கொண்டேன், மற்றபடி நிறுத்தப் போவதில்லை !

அத்திப் பூ பூக்கும் !
:)