Sunday, November 18, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !

நீ(ர்) ஊற்றாமல் வாடுகிறது
பூச்செடிகள்,

அணைக்க மறந்து போட்ட
விளக்குகள்,
போட மறந்த விளக்குகள்
எல்லாம் தன்னிலை
மறந்த நிலையில்.

முன்பெல்லாம்
அடிக்கடி பூ உதிர்க்கும்
சாமி படங்களும் பயத்துடன்
என்னை நினைத்து
அமைதி காக்கின்றன !

காயவைத்த காய்ந்துபோன
துணிகள், துவைக்கப்போட்டு
காய வைக்காமல் இருக்கும்
துணிகள் இன்னும் இடம்
மாறாமல் இருக்கிறது.

அமைதியாக பேசும்
தொலைக்காட்சி அணையா
விளக்காக ஆரவராம்
பண்ணிக் கொண்டிருக்கிறது

பழைய சோற்றை
பல ஆண்டுகளுக்கு
பிறகு தின்று பார்க்கிறேன் !

கழட்டிப் போட்ட
துணிகள் கவனம் பெறாமல்
குவிந்திருக்கிறது.

துடைப்பம் இருக்குமிடம்
மட்டும் தூசி இல்லாமல்
இருக்கிறது.

பாத்திரங்கள் விளக்கப்படாமலேயே
பல் இளிக்கிறது.
குளிர்சாதனப் பெட்டியில்
எல்லாம் 'உறைந்தே' இருக்கின்றன.

நீ இல்லாத உன்
இரண்டுவாரப் பயணத்தின்
முதல் மூன்றே நாளில் கண்டு
கொண்டேன்.

உன் தற்காலிக பிரிவால்,
வருந்தி இருக்கும் எனக்கு
தூக்கம் வரவேண்டுமே அதற்காக
மட்டும் அளவாக கொஞ்சம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அடிக்கடி தொலை பேசு !

30 : கருத்துக்கள்:

said...

என்ன ஆச்சு? ஊருக்குப் போயிருக்காங்களா?
:)

said...

//ஜெகதீசன் said...
என்ன ஆச்சு? ஊருக்குப் போயிருக்காங்களா?
:)
//
அப்படியெல்லாம் உடைத்து சொன்னால்
யாராவது சொல்லிவிட்டால், ஊருக்கு போனவர் மனம் வருந்தி திரும்பிவந்துவிடுவார்.

:)

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !

said...

//
பழைய சோற்றை
பல ஆண்டுகளுக்கு
பிறகு தின்று பார்க்கிறேன் !

கழட்டிப் போட்ட
துணிகள் கவனம் பெறாமல்
குவிந்திருக்கிறது.

துடைப்பம் இருக்குமிடம்
மட்டும் தூசி இல்லாமல்
இருக்கிறது.

பாத்திரங்கள் விளக்கப்படாமலேயே
பல் இளிக்கிறது.
குளிர்சாதனப் பெட்டியில்
எல்லாம் 'உறைந்தே' இருக்கின்றன
//
பாத்துங்க... யாராவது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு ன்னு சொல்லீரப் போறாங்க
:P

said...

//பாத்துங்க... யாராவது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு ன்னு சொல்லீரப் போறாங்க
:P//

ஜெகா,

கடைசி வரியை படித்துமா அப்படி சொல்வார்கள். நான் பொறுப்பானவனாக்கும்.

:)

said...

மாமு இப்படி நெஞ்சாங்கூட்ட நக்கறது நியாயமா "பாவ மண்ணிப்பு"?

:)
:))

said...

//வைக்கமால். மாறமல் . ஆரவராம். முன்றே//

எ.பி. !!:))

தாற்காலிகப் பிரிவு பதிவைக் கூட சரிபார்க்க முடியாமல் பாதிக்கிறதோ!
:)

said...

சுத்திசுத்தி நெனச்ச புள்ளிக்கு வந்துட்டீங்க! கோவி.கண்ணன்.
ஏன் வீடு பெருக்கினால் என்ன? துணி துவைத்தால் என்ன? பாத்திரம் கழுவினால் என்ன? என்ன..என்ன..?அவள் வரும் போது படு சுத்தமாக..உங்களையும் சேர்த்து இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்?

said...

//VSK said...

எ.பி. !!:))

தாற்காலிகப் பிரிவு பதிவைக் கூட சரிபார்க்க முடியாமல் பாதிக்கிறதோ!
:)
//

விஎஸ்கே ஐயா,

பிரிவு வாட்டியதால் எழுதும் போது நான் தன்நினைவில் இல்லை. :)

நினைவு வைத்திருந்து எழுத்துப் பிழையை திருத்தியமைக்கு நன்றி !

said...

//மகேந்திரன்.பெ said...
மாமு இப்படி நெஞ்சாங்கூட்ட நக்கறது நியாயமா "பாவ மண்ணிப்பு"?

:)
:))
//

பொறுக்க மாட்டிங்களே!

said...

//நானானி said...
சுத்திசுத்தி நெனச்ச புள்ளிக்கு வந்துட்டீங்க! கோவி.கண்ணன்.
ஏன் வீடு பெருக்கினால் என்ன? துணி துவைத்தால் என்ன? பாத்திரம் கழுவினால் என்ன? என்ன..என்ன..?அவள் வரும் போது படு சுத்தமாக..உங்களையும் சேர்த்து இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்?
//

நிறைய ஆண்கள் அப்படி செய்துவிட்டுதான் மனைவியிடம் மொத்து வாங்குகிறார்கள்.
:)

நான் இல்லை என்பதற்கு வருத்தப்பட்டது போல் தெரியலையே, நான் இருந்தாலும், இல்லாட்டிலும் வீடு ஒரே மாதிரி தான் இருக்கு, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைப்பார்கள்.

:)

said...

//நான் இல்லை என்பதற்கு வருத்தப்பட்டது போல் தெரியலையே, நான் இருந்தாலும், இல்லாட்டிலும் வீடு ஒரே மாதிரி தான் இருக்கு, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைப்பார்கள்.
//

கரெக்ட்.

வீட்டை படு சூப்பராவும் வெச்சிருக்க கூடாது. அதுக்குன்னு படு மோசமாவும் விட்டுட கூடாது.


:))

said...

//
அப்படியெல்லாம் உடைத்து சொன்னால்
யாராவது சொல்லிவிட்டால், ஊருக்கு போனவர் மனம் வருந்தி திரும்பிவந்துவிடுவார்.

:)
//
ம்க்கூம்... ஆசைதான் உங்களுக்கு.. 2 வாரம் நிம்மதியா இருக்கலாமுன்னு போயிருக்காங்க... நீங்க கூப்பிட்டா உடனே வந்துருவாங்களாக்கோம்..:P

said...

தற்காலிகப் பிரிவினை இவ்வளவு அழகாக கவிதையில் வடித்த கண்ணனுக்குப் பாராட்டுகள்.
// நீ(ர்) // அருமை அருமை.

தன்னிலை மறந்த நிலைமை - உண்மை.

//முன்பெல்லாம்
அடிக்கடி பூ உதிர்க்கும்
சாமி படங்களும் பயத்துடன்
என்னை நினைத்து
அமைதி காக்கின்றன !//

அவைகளுக்குத் தெரியும் - தற்காலிகப் பிரிவென்றும் யார் யாருக்கு என்ன பிடிக்குமென்றும்.

மூன்றே நாளில் பிரிவின் துயரமா ?? பிரிவைக் கொண்டாடும் பலரின் மத்தியில் கண்ணன் தனியாகத் தெரிகிறார்.
பொறுத்திருங்கள் - இன்னும் 12 தினங்கள் தானே

said...

அரைபிளேடு ஓரளவு சரியாகவே சொல்லியிருக்கிறார்.

said...

//அரை பிளேடு said...


கரெக்ட்.

வீட்டை படு சூப்பராவும் வெச்சிருக்க கூடாது. அதுக்குன்னு படு மோசமாவும் விட்டுட கூடாது.


:))
//

அரைப்ளேடு சார்,

சரிதான் மோசமாக வைத்திருந்தால் நான் அந்தாண்ட போனவுடனேயே ஆட்டமா ? ன்னு வரும் போதே கேள்வியோட நுழைவாங்க.

ரொம்ப சுத்தமாக வைத்திருந்தாலும். ஹூம் நான் இருந்தும் ஒண்ணுதான், இல்லாட்டியும் ஒண்ணுதான்னு சொல்லுவாங்க.

said...

//ஜெகதீசன் said...
ம்க்கூம்... ஆசைதான் உங்களுக்கு.. 2 வாரம் நிம்மதியா இருக்கலாமுன்னு போயிருக்காங்க... நீங்க கூப்பிட்டா உடனே வந்துருவாங்களாக்கோம்..:P//

பயமுறுத்தாதிங்க !
:))

said...

//மூன்றே நாளில் பிரிவின் துயரமா ?? பிரிவைக் கொண்டாடும் பலரின் மத்தியில் கண்ணன் தனியாகத் தெரிகிறார்.
பொறுத்திருங்கள் - இன்னும் 12 தினங்கள் தானே

6:38 PM
//

ஐயா அதான் கவலையே. இன்னும் 12நாள் தானா ?

:))

said...

//நானானி said...
அரைபிளேடு ஓரளவு சரியாகவே சொல்லியிருக்கிறார்.
//

நானானி,
இருக்கும், அவருக்கு திருமணம் ஆயிற்றா என்று தெரியலை. ஆகி இருக்கனும் இல்லாவிடில் உணர்ந்து சொல்லி இருக்க முடியாதே !

'அனானி' தெரியும் 'நானானி' என்றால் பொருள் யாது ?

said...

கோவியாரே!
கவிதை இப்போதைக்கு கச்சிதமாக எனக்கும் பொருந்துகிறது.

said...

//ஜோ / Joe said...
கோவியாரே!
கவிதை இப்போதைக்கு கச்சிதமாக எனக்கும் பொருந்துகிறது.
//

ஜோ .......!

நீங்களும் என்ஜாயா ?
நடக்கட்டும் நடக்கட்டும் !

குளிர்சாதன பெட்டி சூடாக இருக்கா ? குளிராக இருக்கா ?

ஒருமுறை சிறில் அலெக்ஸை கலாய்த்'தேன்'. அதை கொஞ்சம் படிங்க. அதே நிலமையில் தான் நீங்களா ? படித்து பாருங்கள் !

நீ இல்லாத நான் ! வெவரம் வெளங்கும் !

:))

said...

இருப்பின் நிறைவை...
வெற்றிடம் உணர வைக்கும்...
இதுவொரு ஏக்கம்!

எனக்கு இன்னொரு சிந்தையுண்டு...
சில ஆண்டுகளில்...
உங்களை சில பணிகளில் இருந்து துண்டித்து...
தனது இருப்பை நிலைநிறுத்துதல்...
மிகுந்த எதிர்ப்பைக்காட்டிக்கொண்டே, நான் உனக்கு தேவை என்பதையும் அறிவுறுத்திக்கொண்டேயிருப்பது...
(என்னவொரு ரவுடித்தனம் பார்த்தீர்களா!)

said...

//அதற்காக
மட்டும் அளவாக கொஞ்சம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.//
இதற்காக ஒரு கவிதையாய்யா?
அவங்களையும் கொஞ்சம் அளவாய்...........
எப்படி யோசனை....!
நாடு உருப்படுமாய்யா?
(சாலமன் பாப்பையா தொனியில் படிக்கவும்)

said...

அப்பப்பத் தங்கமணிகள் ஊருக்குப்போனால்தான் ரங்கமணிகளுக்கு தங்கமணிகளின் அருமை தெரியும்:-)))

said...

இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

said...

//துளசி கோபால் said...
அப்பப்பத் தங்கமணிகள் ஊருக்குப்போனால்தான் ரங்கமணிகளுக்கு தங்கமணிகளின் அருமை தெரியும்:-)))

11:25 AM//

துளசி அம்மா,

அப்படித்தான் வெளியே சொல்லிக் கொள்வோம்.
:)


//
துளசி கோபால் said...
இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/
//

மிக்க நன்றி !

நேற்று முந்தைய நாள் போடும் முன்பே நினைத்தேன். இதை நீங்கள் கண்டிப்பாக இணைப்பீர்கள் என்று !

எதிர்பார்ப்பு வீண் போகலை.

மீண்டும் நன்றி !

said...

//பாரி.அரசு said...
இருப்பின் நிறைவை...
வெற்றிடம் உணர வைக்கும்...
இதுவொரு ஏக்கம்!///

அரசு,

இது புரிகிறது

//எனக்கு இன்னொரு சிந்தையுண்டு...
சில ஆண்டுகளில்...
உங்களை சில பணிகளில் இருந்து துண்டித்து...
தனது இருப்பை நிலைநிறுத்துதல்...
மிகுந்த எதிர்ப்பைக்காட்டிக்கொண்டே, நான் உனக்கு தேவை என்பதையும் அறிவுறுத்திக்கொண்டேயிருப்பது...
(என்னவொரு ரவுடித்தனம் பார்த்தீர்களா!)
//

சத்தியமாக புரியலை

said...

//சுல்தான் said...
இதற்காக ஒரு கவிதையாய்யா?
அவங்களையும் கொஞ்சம் அளவாய்...........
எப்படி யோசனை....!
நாடு உருப்படுமாய்யா?
(சாலமன் பாப்பையா தொனியில் படிக்கவும்)
//

சுல்தான் ஐயா,

டெலிபோன் பில் எகிரிடும் என்று அளவாக தொலைபேசியில் பேசச் சொன்னேன். நீங்க தப்பா புரிந்து கொண்டீர்களோ ?
:))

said...

எத்தனை வாட்டி சொல்றது? ப்ளாக் ஆரம்பிக்கு முன் நான் அனானி தானே? அப்போ தமிழ்மணம் வாசித்து நிறைய பின்னோட்டங்கள் 'நான்.நான்' என்று போட்டு சக பதிவர் எனக்கிட்ட பெயர்தான் 'நானானி=நான்+அனானி'
அதையே ப்ளாக்குக்கும் என் பெயராக வைத்துக்கொண்டேன்.போதுமா? கோவி கண்ணன்! அப்பா...ட!

said...

//உன் தற்காலிக பிரிவால்,
வருந்தி இருக்கும் எனக்கு
தூக்கம் வரவேண்டுமே அதற்காக
மட்டும் அளவாக கொஞ்சம்///

இந்த சேதி அவுங்களுக்கு தெரியுமா??

said...

ரூபஸ் said...
//உன் தற்காலிக பிரிவால்,
வருந்தி இருக்கும் எனக்கு
தூக்கம் வரவேண்டுமே அதற்காக
மட்டும் அளவாக கொஞ்சம்
இந்த சேதி அவுங்களுக்கு தெரியுமா??

//

தொலைபேசச் சொல்வது சேதியா ?
கீழே சொல்லி இருக்கிறேன் பாருங்க !
:)