Saturday, December 01, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

எதற்கு காத்திருக்கிறேன் ?


புள்ளிக்குள் அடங்கியாக புள்ளியாக மாறி
புள்ளையாய் மாற எப்போது காத்திருந்தேன் ?
கனநேரத்தில் காத்திருப்பின்
கனம் உடைந்து அப்பன்
உடலுக்குள் உயிராய் வந்த
தருணங்கள் என்று வந்தது?
விடையேதும் அறியாமல் சிந்துத்து
காத்திருந்திருக்கிறேன் !

கருவில் உருவாகி, ஒருவழி உலக வாசல்
ஒன்றில் இருந்து உதிக்கும் நேரம்
எதுவென்று தெரியாமல்
இருப்பை உணர்த்தி
உதைத்துக் கொண்டு காத்திருந்தேன் !

எந்த ஊர், எந்த நாட்டில்
என்று நான் புறப்பட்ட இடத்திற்கு
மீண்டு(ம்) செல்வேன் என்று
அறியாமல் காத்திருக்கிறேன்.

கனங்கள் எல்லாமே காத்திருப்பின்
கனங்களாகவே இருக்கிறது !
என்றிங்கு வாழ்ந்தேன் ?
எல்லா நேரமும் காத்திருக்கிறேன்.

எனக்கே என் காத்திருப்பின்
காலமும் நோக்கமும் தெரியாத போது,
எதற்காக காத்திருக்கிறேன்
என்று நினைக்கும் போது ?
எனக்காக காத்திருப்பவர்
என்று எவரும் இருக்க முடியுமா ?

கடக்கும் 'காலங்களைத்' தவிர
யாருக்காவும் யாரும், எதுவும்
காத்திருப்பதில்லை !

----
அன்புடன்,

கோவி.கண்ணன்

4 : கருத்துக்கள்:

said...

எவ்வளவு காலம் காத்திருந்தாலும் விடை கிடைகாதா/தெரியாத கேள்விகள்.

said...

எல்லோருமே எதற்காக காத்திருக்கின்றோம் என்ற கேள்வியை மனதில் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம் போலும். நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.

said...

//வடுவூர் குமார் said...
எவ்வளவு காலம் காத்திருந்தாலும் விடை கிடைகாதா/தெரியாத கேள்விகள்.
//

விடைதெரியாத கேள்விகள் பல உண்டு, ஆனால் இந்த கேள்விகளை வெளியில் கேட்க முடியாது, உள்ளுக்குள் தான் கேட்கமுடியும்.

கருத்துக்கு நன்றி குமார்.

said...

//மா.கலை அரசன் said...
எல்லோருமே எதற்காக காத்திருக்கின்றோம் என்ற கேள்வியை மனதில் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம் போலும். நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.
//

கலை,
புகைப்படத்தில் குட்டிப்பாப்பாவாக இருப்பது நீங்களா ? அட்டகாசம் !

மிகச்சரியாக சொல்லி இருக்கிறார்கள். இந்த கேள்விகளை கேட்க முடிந்த பிறவி தான் வாழ்க்கையோ ?