Thursday, February 08, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

நீ இல்லாத நான் !


காத்துக் கொண்டிருந்த
கள்வனைப்போல
நீ சென்றதும்
துள்ளிக் குதித்தது என் தனிமை.

நீயில்லாத என்னை, எண்ணிப் பார்க்கிறேன்

பூட்டிய அறை முழுவதும்
பரவும் பூக்களின் வாசம் போல்
என்னைப் பற்றி நினைகிறேன்

பதார்த்தமிருக்கிறது,
பருகும் பானமும் இருக்கிறது,
மகிழ்வினால் பசிதான் இல்லை

தொலைக் காட்சித் தொடரில்
அழுதுவடியும் பெண்களைப் பார்த்து
சிரிக்கிறேன், உன்னிடம் நான்
அழுவதைவிட இதுபரவாயில்லை

குளியலறைச் சுவற்றில் ஸ்டிகர் பொட்டு
நகத்தால் சுரண்டி பெயர்த்தெரிகிறேன்
அங்கும் உன் நினைவு வரும் என்பதால்

மலரக் காத்திருக்கும் மொட்டைப் போல
எனக்குள் மகிழ்வாக இன்னொரு உலகம்
இருப்பதை நீ இருக்கும் போது உணரமுடியவில்லை

இன்று மட்டும்,
குளிர்சாதன பெட்டியும் கிறுகிறுப்பதேன் ?
கண்ணாடி கோப்பைகள் கண்ணடிப்பது ஏன் ?
வி.சி.டி ப்ளேயர் மட்டும் ஓடுவதேன் ?
நள்ளிரவும் பகலும் ஒன்றாக இருப்பதேன் ?

கன்னத்தில் கைவைத்து
இது எத்தனை நாளைக்கு என்று
ஏக்கப் பெருமூச்சுவிடுகிறேன்
அந்த கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
அடிக்கடி மகிழ்வைத் தடைசெய்கிறது
மகனே! இன்னும் ஒரு மாதத்திற்கு தான்
உன் ஆட்டம் என்று !

தனிமையில் இனிமை அருமை.

நள்ளிரவு தாண்டி நீ தொ(ல்)லைபேச
அத்தனை மகிழ்வும் அரை நொடியில்
மறைந்து போக, நீ பேசி முடிந்ததும்
மீண்டும் குளிர்சாதன பெட்டியை
கண்கள் அனிச்சையாகத் தேட
அந்த இரவு எனக்கு விழித்துக்கொண்டிருந்து

அப்படியே மயங்கி கிடக்கிறேன்,
கண்கள் திறக்க முயற்சிக்கவில்லை,
உன்னைப் பற்றிய நினைவுகளும்
கூட என்னை பயமுறுத்துகிறது

பின்குறிப்பு : சிறில் அலெக்ஸ் கவிதையைத் தொடர்ந்து ... ஒரு ஆறுதல் கவிதை இது இப்படித்தான் பெரும்பாலும் நடக்கிறது. :)

29 : கருத்துக்கள்:

said...

தனியா, விழுந்து விழுந்து சிரிச்சேன்..

யோவ் வார்த்தைக்கு வார்த்த எதிர்ப்பதமா ... எப்படி இப்டி..

கலக்கிட்டீங்க...இப்ப என் மனைவிக்கு இந்தக் கவிதையத் தருவதா என்னொட கவிதையத் தருவதான்னு கொழப்பமாயிடுச்சு.

:))

சூப்பர்.. சூப்பரோ சூப்பர்.

:))

said...

இதுக்குப் பேர் தான் எதிர்வினையோ? :-D

said...

//அந்த கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
அடிக்கடி மகிழ்வை தடைசெய்கிறது
மகனே இன்னும் ஒரு மாதத்திற்கு தான்
உன் ஆட்டம் என்று !//

ஆகா!! சூப்பர் வரிகள் :-D

said...

இதுக்குப் பேருதான் செய்வினை..
:)

said...

பின்னி பெடலெடுக்கறீங்க.

said...

//SurveySan said...
பின்னி பெடலெடுக்கறீங்க.
//

சர்வேசண்ண,
அடுத்த சர்வே,
மனைவி ஊருக்குப் போனால் ?
என்ற தலைப்பில் எதாவது சர்வே வருமா ?
:)))))))

said...

// சிறில் அலெக்ஸ் said...
தனியா, விழுந்து விழுந்து சிரிச்சேன்..

யோவ் வார்த்தைக்கு வார்த்த எதிர்ப்பதமா ... எப்படி இப்டி..

கலக்கிட்டீங்க...இப்ப என் மனைவிக்கு இந்தக் கவிதையத் தருவதா என்னொட கவிதையத் தருவதான்னு கொழப்பமாயிடுச்சு.

:))

சூப்பர்.. சூப்பரோ சூப்பர்.

:))
//

சிறில்,

பின்னூட்டங்களைக் காட்டாமல், 'அவன் அவன் மனைவி ஊருக்குப் போனால் எப்படி யெல்லாம் எஞ்சாய் பண்ணுகிறான்' என்று இந்த கவிதையை காட்டுங்கள்.

நான் எப்படியெல்லாம் இளைப்புக்கு வெறும் வயிற்றில் 'தேன்'குடித்த மாதிரி இருக்கிறேன் என்று உங்க கவிதையை காட்டுங்கள்.

உங்க கவிதையை காட்டுவதில் ஒரு பாதகமும் இருக்கிறது, அடுத்த தடவை 'என்னைப் பிரிந்து, நீங்க இவ்வளவு சோகமாக இருப்பதால் நான் இனி போக மாட்டேன்' என்று சொல்வதற்கும் வாய்ப்பு உண்டு !
:))))

said...

Nalla iruku seivinai :-)

"நீ இல்லாத நான் !" enta thalaipil nanum kavithai enda perila ondu eluthi irukiran.thamizmanathila title a partha udane konjam shock agidan..namaathna oru comments um publish panlaya epdi endu yosichan:-) pirkau paartha atu unga kavithai.

said...

//சேதுக்கரசி said...
//அந்த கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
அடிக்கடி மகிழ்வை தடைசெய்கிறது
மகனே இன்னும் ஒரு மாதத்திற்கு தான்
உன் ஆட்டம் என்று !//

ஆகா!! சூப்பர் வரிகள் :-D
//

பாராட்டுக்கு நன்றி சேதுக்கரசி அவர்களே!

said...

//சேதுக்கரசி said...
இதுக்குப் பேர் தான் எதிர்வினையோ? :-D
//

ம், நினச்சாலே பயமா இருக்கு, எங்கே எஙன் வீட்டுக்கார அம்மா இந்த கவிதையை படிச்சிடப் போறாங்களோன்னு !
:(

said...

// சிறில் அலெக்ஸ் said...
இதுக்குப் பேருதான் செய்வினை..
:)
//

சிறில் ... எனக்கும் சேர்த்துத்தான் !
மேலே சேதுக்கரசிக்கான மறுமொழியைப் பாருங்கள்
:)))

said...

GK,

Ha Ha Ha..

Good One!!

said...

//உங்க கவிதையை காட்டுவதில் ஒரு பாதகமும் இருக்கிறது, அடுத்த தடவை 'என்னைப் பிரிந்து, நீங்க இவ்வளவு சோகமாக இருப்பதால் நான் இனி போக மாட்டேன்' என்று சொல்வதற்கும் வாய்ப்பு உண்டு !
:))))//

ஆமாங்க.. மறந்தே போயிட்டேன்.

செய்வினைன்னு சொன்னது சேதுக்கரசியின் பின்னூட்டத்த பாத்துதான்

:)

said...

முதலில் படித்த போது ஒன்றுமே புரியவில்லை என்னடா நம்ம கோவி சன்யாசியாக முடிவு பண்ணீட்டாரான்னு குழப்பம் கீழே சிறில் கவிதைப் பார்த்த உடன் தான் நகைச்சுவை தெரிந்தது.

மீண்டும் ஒரு முறை படித்து ரசிக்க முடிந்தது. :-)))).

said...

அருமையிலும் அருமை,
மேலும் உண்மை

சிறில் கவிதை
தோற்று போனதும் உண்மையே!

வாழ்த்துக்கள்

said...

கவிதைக்கு எதிர்(?) கவிதையா?

இதுவும் நல்லா இருக்குங்க... கலக்குங்க...

said...

//சுந்தர் / Sundar said...
அருமையிலும் அருமை,
மேலும் உண்மை

சிறில் கவிதை
தோற்று போனதும் உண்மையே!

வாழ்த்துக்கள்
//

சுந்தர்,

அவர் ஏற்கனவே சோகத்தில் இருக்கிறார்...மேலும் சோகமாக்கி பிரிட்ஜை திறக்கவைத்துவிடும் உங்கள் பின்னூட்டம்
:)))

பாராட்டுக்கு நன்றி ! சிறிலுக்கு அற்பனிக்கிறேன்

said...

//அருட்பெருங்கோ said...
கவிதைக்கு எதிர்(?) கவிதையா?

இதுவும் நல்லா இருக்குங்க... கலக்குங்க...
//

அருட்பெருங்கோ,
பாராட்டு அருள் பெற்றேன் !
நன்றி !

said...

//சிநேகிதி said...
Nalla iruku seivinai :-)

"நீ இல்லாத நான் !" enta thalaipil nanum kavithai enda perila ondu eluthi irukiran.thamizmanathila title a partha udane konjam shock agidan..namaathna oru comments um publish panlaya epdi endu yosichan:-) pirkau paartha atu unga kavithai.
//

வணக்கம் சிநேகிதி அவர்களே,
அடப் பாவமே, பொருள் ஒன்று என்று சொல்லாதவரை நன்றி !

said...

//செந்தில் குமரன் said...
முதலில் படித்த போது ஒன்றுமே புரியவில்லை என்னடா நம்ம கோவி சன்யாசியாக முடிவு பண்ணீட்டாரான்னு குழப்பம் கீழே சிறில் கவிதைப் பார்த்த உடன் தான் நகைச்சுவை தெரிந்தது.

மீண்டும் ஒரு முறை படித்து ரசிக்க முடிந்தது. :-)))).

8:31 PM
//

செந்தில்,

நாமளே என்னதான் காய்சினால் சரக்கின் சுவை .. கடை சரக்கு அளவுக்கு இருக்காது.

அவரது தேன்.... என்னுடையது திராட்சை ரசம் !
:)))

said...

//சிவபாலன் said...
GK,

Ha Ha Ha..

Good One!!
//


சிபா,

பாராட்டுக்கு நன்றி !

said...

// சிறில் அலெக்ஸ் said...

ஆமாங்க.. மறந்தே போயிட்டேன்.

செய்வினைன்னு சொன்னது சேதுக்கரசியின் பின்னூட்டத்த பாத்துதான்

:)
//

சிறில்
சொந்த செலவில் சூனியம் வச்சிக்க பார்த்திங்க ! காப்பாத்திட்டேன்னு நினைக்கிறேன். அப்பறம் உங்க விருப்பம் (இஷ்டம்).

said...

\\வணக்கம் சிநேகிதி அவர்களே,
அடப் பாவமே, பொருள் ஒன்று என்று சொல்லாதவரை நன்றி ! \\

ayayo ilave ilai :-)
here is the link to ma poem

http://snegethyj.blogspot.com/2006/07/blog-post.html

said...

//சிறில் கவிதை
தோற்று போனதும் உண்மையே!//

நிச்சயமா.. தோல்விய ஒப்புக்கிறேன்.

:)

said...

சிநேகிதி..
உங்க பின்னூட்டத்த பாத்துதான் உங்க பதிவ பாத்தேன்..

ஒரே தலைப்பு..:)
இதுபோல அனுபவம் எனக்கும் இருந்திருக்குது.

said...

திராட்சையில் ரசம் பிழிந்து, அதனை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, அப்பப்போ குடிக்கிற உங்க கற்பனை அருமையா இருக்கு, கோவியாரே!

கரு[திராட்சை] கொடுத்த சிறிலுக்கும் நன்றி!

said...

test !

said...

இது இப்ப உங்க மனைவி ஊருக்கு போனதாலே நினைச்சுப் பாக்குறீங்களா...

said...

//TBCD said...
இது இப்ப உங்க மனைவி ஊருக்கு போனதாலே நினைச்சுப் பாக்குறீங்களா...
//

ஹலோ என்ன போட்டுக் கொடுக்கலாமுனு பார்கிறிர்களா ?இதெல்லாம் இங்கே நடக்காது !
:)