ஒருதலைக் காதலா இது ...?
என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை,
எதுவும் சேரவில்லை என்றால்,
எப்படி என் கவிதைகள்
உன் கருவை சுமக்கின்றன ?
என் கடித உறைகள் தொடர்ந்து கிழிவதால்,
நான் கருவடைவது வாடிக்கை ஆகிவிட்டதோ ?
நீ கிழித்துப் போடும் ஒவ்வொரு
கடிதமும் உன்னால் கருக்கலைப்பு
செய்யப் படுகிறது,
முழுதாக சுமக்க கொள்ளை ஆசை
என்றாவது ஒரு நாள் நீ உன்னை
மறக்கும் போது என் கரு மேலும் வளர்ந்து
நிச்சயம் பிரசவமாகும்.
அதுவரை,
தொடர்ந்து இதய மையால் என்பேனா
காகித புணர்வை தொடர்ந்து நடத்தும் !
பிகு : காதலர் தினத்துக்கு காதலர் காத்திருக்கலாம்... கவிதைகள் காத்திருக்குமா ?
பிதற்றல்களைத் தொடர்ந்து ... நான் இங்கே
Saturday, February 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 : கருத்துக்கள்:
கவிதையின் 'கரு' நல்லாயிருக்கு.
/தொடர்ந்து இதய மையால் என்பேனா
காகித புணர்வை தொடர்ந்து நடத்தும் !/
கோவி, அசத்தல் உவமை (உருவகம்?)!!!
ஒப்புக்கொள்ள முடியாதது என் குற்றமில்லை
எதுவும் சேராதபோது அது வெறும் விந்துதான்
கரு அல்ல!
தொடர்ந்து கிழிவது வெறும் மாதவிடாயோ அல்லது
சுய மைதுனமோ தான்!
கரு ஆகாது!
இருமனம் சேர்ந்தால்தான்,
இரு உடல் சேர்ந்தால்தான்
கரு உருவாகும்!
கரு உன்னுள் உருவாகிக் கொண்டிருக்கும் போது
என்னால் எப்படி கலைப்பு
நிகழமுடியும்?
என்னை மறக்கும் அந்நாளில்
என் மனம் எங்காவது போயிருக்கும்
அது உன்னுடன் கூட நிகழலாம்
அப்போது பிரசவம் நிச்சயம் ஆகும்!
காகிதப் புணர்வு உனக்கு நிம்மதியானால்
அது தொடர்ந்து நிகழ்வது
உன் நினைவுக்கு இழுக்கு!
காகிதம் மூலம் காதல் வளர்வது
கடந்த காலம் என் நண்பனே!
கணினி காலம் இது!
கண்ணைத் திறந்து பார்!
// சிறில் அலெக்ஸ் said...
கவிதையின் 'கரு' நல்லாயிருக்கு.
//
பாராட்டுக்கு நன்றி !
சிறில்
//அருட்பெருங்கோ said...
/தொடர்ந்து இதய மையால் என்பேனா
காகித புணர்வை தொடர்ந்து நடத்தும் !/
கோவி, அசத்தல் உவமை (உருவகம்?)!!!
//
அருட் பெருங்கோ,
இரண்டும் 'சேர்ந்தது' அது !
//தொடர்ந்து கிழிவது வெறும் மாதவிடாயோ அல்லது
சுய மைதுனமோ தான்!
கரு ஆகாது!//
எஸ்கே ஐயா,
கவிதைக்கு காதல் கரு என்ற பொருளில் எழுதி உள்ளேன்.
ஏற்றுக் கொள்ளாததால் கரு கலைந்து, திரும்பவும் உருவாகிக் கொண்டே இருக்கிறது என்று சொல்ல முயன்றேன்.
உங்கள் பதில் கவிதை உங்கள் மொழியில் மிக நன்றி !
//தொடர்ந்து கிழிவது வெறும் மாதவிடாயோ அல்லது
சுய மைதுனமோ தான்!
கரு ஆகாது!//
எஸ்கே ஐயா,
கவிதைக்கு காதல் கரு என்ற பொருளில் எழுதி உள்ளேன்.
ஏற்றுக் கொள்ளாததால் கரு கலைந்து, திரும்பவும் உருவாகிக் கொண்டே இருக்கிறது என்று சொல்ல முயன்றேன்.
உங்கள் பதில் கவிதை உங்கள் மொழியில் மிக நன்று !
Post a Comment