Thursday, February 01, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

புது ப்ளாக்கர் - ஒரு எச்சரிக்கை !


சாம பேத தான தண்டம் என்ற வகையில் புது பளாக்கர் கட்டாயமாக அனைவரையும் மாறச் சொல்கிறது. அது பரவாயில்லை.

பின்னூட்டம் (Post a Comments) ஒரு சில இடுகைகளுக்கு வேண்டாம் அல்லது போதும் நிறுத்தாலாம் என்று நினைத்து

Post Options
Reader Comments
Allow
Don't allow

இதில் கைவைத்து விட்டால் அதன் பிறகு அடுத்துப் போடும் இடுகைக்குக்கு நீங்கள் கமெண்ட் அனுமதித்தாலும், பின்னூட்டம் போட முயற்சிக்கும் போது ப்ளாக்கர் அலட்சியப்படுத்திவிட்டு மேலே உள்ள படம் தான் தெரியும். அதாவது

We're sorry, but we were unable to complete your request. என்று சொல்லும் !

என்ற செய்தி வரும்... அதன் பிறகு பின்னூட்ட அனுமதி இருந்தாலும் புது இடுகைகளுக்கும் யாரும் பின்னூட்டம் (Comments) போட முடியாது.

இது புது பளாக்கரின் குறைபாடு இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதற்கான தீர்வு பல்வேறு இணையப் பக்கங்களிலும் தேடிப்பார்த்தேன் இதுவரை குறைபாடு களையப்பட்டதாகச் சொல்லப்படவில்லை. மேலும் இதே போல் தொந்தரவு புது ப்ளாக்கரில் காணப்படுவதாக பல ஆங்கில ப்ளாக்கர்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஒரு இடுகைக்கை பின்னூட்டம் போதும் என்று முடிவெடுத்து நிறுத்தினேன். அதன் பிறகு புதிய இடுகைகளுக்கும் பின்னூட்டம் அனுமதித்தும் ... பின்னூட்டம் இட முடியவில்லை

:(

5 : கருத்துக்கள்:

நெல்லை சிவா said...

அடடா, மாட்டிக் கொண்டீர்களா? எச்சரிக்கைக்கு நன்றி, நண்பரே, சீக்கிரமே உங்களுக்குத் தீர்வு கிடைக்குமாகக் கடவது..

கோவி.கண்ணன் said...

//
நெல்லை சிவா said...
அடடா, மாட்டிக் கொண்டீர்களா? எச்சரிக்கைக்கு நன்றி, நண்பரே, சீக்கிரமே உங்களுக்குத் தீர்வு கிடைக்குமாகக் கடவது..
//

சிவா,

கூடவே ஸ்டெப்னி ப்ளாக்கர் வச்சிருக்கோம்ல :):)

வல்லிசிம்ஹன் said...

என்ன கண்ணன் நீங்க ,
புது ப்ளாகர் பத்தி ஆலே,தோலேனு எல்லாரும் சொல்றாங்க.
நாமளும் மாறாலாம்னா பீடாவுக்கு மாறினபோது தொலைந்த பதிவுகள் என்னைப் பரிதாபமாகப் பார்க்கின்றன.
உங்க பதிவைப் பார்த்தூ உறுதியாகி
அந்தப் பகம் போவேணாம்னு தோன்றுகிறது.

சிவபாலன் said...

GK,

என்ன கொடுமை இது!! Ha Ha Ha..

துளசி கோபால் said...

100 சதமானம் சரியானவுடன் சொல்லுங்கப்பா.

அப்புறமா மாறிக்கலாம்தானே?