Friday, June 18, 2010

தமிழ்மணம் கருவிபட்டை

ஹைகூ......வுங்க !

சிறகுகளின் பசை !

எண்ணைப் பசை இருந்தும் தண்ணீர் மூழ்கி
எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பறவைகள் !



மரம் வளர்ப்போம் !

அழிந்த மரங்களின் காகித் கூழ்களில்
அழகான வாசகம் 'மரம் வளர்ப்போம்.....மனிதம் காப்போம்'

குக்கர் விசில் !

குயில் கறி வெந்த குக்கரும்
இனிமையாக விசலடிதது வெந்ததை அறிவிக்க !

அக்டோபர் இரண்டு !

அந்த நாளிலும் டாஸ்மாக் கதவு இடுக்கு வழியாக
கள்ளத்தனமாக நுழைந்தது காந்திப்படம்

அணையும் விளக்கு !

இறப்பின் நொடிகளை துடிப்புகளாக அறிவித்துக்
கொண்டிருந்தது ஒரு சாலை விளக்கு !

சில்லரைத் தனம் !

பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது !

27 : கருத்துக்கள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ, தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டேன். மீ த எஸ்கேப்!

ராம்ஜி_யாஹூ said...

sundar jiye escape aaaaaa

kuyil kari visil sattham arumai

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அருமை!

கவுஜர் கோவியார்!

நட்புடன் ஜமால் said...

அக்டோபரின் சில்லரைத்தனம்

இரண்டும் அருமை ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவுஜர் கோவியார்! அருமை!

துளசி கோபால் said...

படம்..........
மனசைப் பிழியுது.

மனுசன் செய்யும் அக்கிரமத்துக்கு எல்லையே இல்லை:(

- யெஸ்.பாலபாரதி said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ, தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டேன். மீ த எஸ்கேப்!
//

ரிப்பீட்டே...!

butterfly Surya said...

சூப்பர்.

ஸ்வாமி ஓம்கார் said...

வெள்ளை ஜிப்பாவில் தாடியுடன் கையில் பேப்பர் பேனாவுடன் உங்களை கற்பனை செய்து பார்க்கும் பொழுது இந்த கவிதை ...சும்மா சூப்பரா இருக்கு :)

priyamudanprabu said...

சில்லரைத் தனம் !

பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது !
///////////

mmmm
எப்ப இருந்து?

priyamudanprabu said...

ஆகா! அருமை!

கவுஜர் கோவியார்!

நிகழ்காலத்தில்... said...

நல்லா இருக்கு ஹைக்கூ

வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் said...

ஹைக்கூ சூப்பர்.

சிவராம்குமார் said...

சூப்பர்! குறிப்பா அந்த காந்தி & குக்கர்!!!

அப்பாதுரை said...

ரசித்துப் படித்தேன்

சின்ன கண்ணன் said...

மிகவும் அருமை நண்பரே. . .
பட்டைய கிளப்பிட்டிங்க போங்க . . ////

A.R.ராஜகோபாலன் said...

அற்புதமான கவிதைகள்
அபரிதமான கருத்துக்கள்
மனதார ரசித்தேன்
வாழ்த்துக்கள் சார்

இராஜராஜேஸ்வரி said...

கவிதைகள் கூவின.

இராஜராஜேஸ்வரி said...

தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

Anu said...

Very nice :)

omk said...

ஹைக்கூ அருமை. வித்தியாசக் கருத்துக்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம போல இருக்கிறது. மேலும், கவிதையை 3 வரிகளில் தெரியும்படி எழுதலாமே!

கோவி.கண்ணன் said...

பின்னூட்டமளித்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

அம்பாளடியாள் said...

அருமையான கைகூக் கவிதைகள் .
மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .........

புதிய பரிதி said...

//பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது ! //
நல்ல அருமையான கவிதை..

Thoduvanam said...

ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க ..பாராட்டுக்கள்

கோவி.கண்ணன் said...

// Kalidoss Murugaiya said...
ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க ..பாராட்டுக்கள்//

மிக்க நன்றி ஐயா

kankaatchi.blogspot.com said...

பிச்சைக்காரனுக்கு
காசு போட மனம் இல்லாமல்
கடவுளிடம் பிச்சை கேட்க
போனதற்கு தண்டனைதான்
அர்ச்சகர் தட்டில் போய்
விழும் நூறு ரூபாய் நோட்டு