Wednesday, July 29, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

கருமையின் நிறம் !


ஆரவாரமற்ற இருட்டில்
தனிமை சூழ்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி
முற்றும் துறந்த மனதுடன்
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.

காய்ந்த மனதில்,
பொறுக்கி வைத்த சுள்ளிகளாக
கடந்து போன நினைவுகளின்
தீப் பிடித்து எரிந்து மீந்த சாம்பலாக
கடந்த காலம்

பாழடைந்த கிணற்றின்
சிதலமடைந்த சுவற்றின் விழாத நம்பிக்கையில்
பெருந்துளையில் வளர்ந்து கொண்டிருந்த
ஆல விருட்ச எண்ணங்கள்

மழை நேரத்தில் கரைந்தொழுகும்
புற்றின் ஈரமணலில் நெளிந்து துடிக்கும்
கரையான்களின் கடைசி நேர முயற்சியாக
துடித்துக் கொண்டிருந்த என் மனதில்

இதற்கும் மேல் பின் நவீனத்துவக் கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று தெரியாததால்
வெயில் காலத்து ஆற்று நடுமுதுகின் பதிந்த மணல்களை
பேய்காற்று பீய்த்தெரிந்து வரண்ட திட்டாக்கும் திட்டத்துடன்
ஒவ்வொரு முடிகளாக பிய்த்துக் கொண்டிடிருந்தது
விரல்கள் !

- இது கவிஜையான்னு கேட்கிறவங்க...முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க... தலைப்புக்கும் கவிஜைக்கும் என்ன தொடர்ப்புன்னு சொல்லுங்க...எனக்கு தெரியவில்லை :)

9 : கருத்துக்கள்:

said...

அவங்களை நிறுத்த சொல்ல அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறேன்.

:)

said...

//ஒவ்வொரு முடிகளாக பிய்த்துக் கொண்டிடிருந்தது
விரல்கள் !//

இதையெல்லாம் படிச்சுட்டு நாங்களும் அதத்தான் செய்யிறோம்.

ஏன் பெரியவா இப்டி ? ஏதோ என்ன மாதிரி முடி உள்ளவன் அத பிச்சுக்குவான். என் மாப்பி சஞ்செய் இத படிச்சா என்னதான் செய்வான் சொல்லுங்க?

said...

//(இது கவிஜையான்னு கேட்கிறவங்க...முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க)//

நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே கோவிண்ணே.. அதுக்குள்ள இப்படியா :))))

said...

அருமை... அருமை...
( வாசகர்கள் வேண்டினால் இதற்கு பொருளும் விளக்க உரையும் எனது தளத்திலே வெளியிடப்படும்)

said...

//நையாண்டி நைனா said...
அருமை... அருமை...
( வாசகர்கள் வேண்டினால் இதற்கு பொருளும் விளக்க உரையும் எனது தளத்திலே வெளியிடப்படும்)
//
நைனா நானும் வாசகர் தான் எனக்கும் வெளங்கல, உங்கப் பதிவில் விளக்குங்கள்

said...

அசத்தலான கவிதை.

வரிகள் ஒவ்வொன்றும் சந்தத்துடன் அமைத்து எழுதப்பட்டு கடைசி பத்தி மட்டுமே தனித்து நிற்கிறது.

வெறுமையினை எட்டிவிட்ட ஒரு எண்ணத்தின் வெளிப்பாடாய் தெரிகிறது. கருமையை மாற்றி நிறங்களாக மாற்றிட கருமை நிற முடிகள் தொலையட்டும் என முடித்திருக்கும் விதமும் அழகு.

அழகாக கவிதை எழுதுகிறீர்கள் கோவியாரே. மிக்க நன்றி.

said...

நல்ல கவிதை

வறுமையின் நிறம் சிவப்பு ‍_ அப்ப

ஏழையின் நிறம் ....

said...

புரிஞ்சும் புரியாம இருக்கு. அப்போ பின்நவீனத்துவம் தானா.... :)

said...

சரியான முடிவு