Thursday, May 07, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

பட்டையைக் கிளப்பும் ஜெ, பதுங்கும் திமுக கூட்டணி

கத்திரி வெயிலில் மேலும் சூட்டைக் கிளப்பும் வகையில் ஜெ வின் பேச்சும் தேர்தல் பரப்புரை பயணமும் அமைந்திருக்கிறது. கட்சி சாராது திமுக அனுதாபிகளாக இருந்த (என்போன்றோர்கள்) ஜெ வின் பேச்சை வெகுவாக ரசிக்கின்றனர். திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜெ-வால் தான் முடியும் என்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டச் சிறப்புகளைச் சொல்லிவிட்டு, அந்த மாவட்டத்தில் அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைச் சொல்லி, திமுகவின் மீதும் தமிழக திமுக கூட்டணி தலைவர் மீது சரமாரி ஏவுகனைக் குற்றச் சாட்டு தாக்குதல் தொடுக்கிறார். 'மக்களை சந்திக்க பயந்து போய் மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார் கருணாநிதி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஓய்வு கொடுங்கள் ' என்கிற ஜெவின் அட்டாக் திமுகவினரை பெரிதாகவே தாக்கி இருப்பது ஸ்டாலின் 'நாகரீகமற்றவராக பேசுகிறார் ஜெ' என்ற பதில் பேச்சில் தெரிகிறது.

தேர்தல் பரபரப்பில் பரப்புரை (பிரச்சார) பயணம் செய்வதில் பிறகட்சியினரைக் காட்டிலும் ஜெ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். கருணாநிதி காங்கிரசுகாரர்களான காமரசரை 'காமராசரின் வாடகை வீட்டை படம் பிடித்த கருணாநிதி ஏழையின் வீட்டைப் பாரிர் என்று முரசொலியில் படம் போட்டு அவமானப்படுத்தினார், பக்தவச்சலத்தை பத்துலட்சம் பக்தவச்சலம்' என்று சொன்னார்' என்று காங்கிரசையும் திமுகவையும் பற்ற வைத்தார் ஜெ, வழக்கமாக கருணாநிதி மட்டுமே பழசை கிண்டி கிண்டி பேசுவார். ஜெவின் ஈழம் பற்றி தெளிவான பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது

ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக திணருவதைப் பார்க்கும் போது கட்சி சார்பில்லாமல், தொண்டராக இல்லாமல் இருக்கும் திமுக அனுதாபிகள் திமுகவின் நிலை குறித்து பரிதாபப்படுகின்றனர். நானும் தான் :)
ஜெ என்றால் வெற்றி என்று மீண்டும் நிருபணம் செய்துவிடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.

கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் கூட்டு சேர்ந்தது துரியோதனர்களிடம் என்பதால் தற்போதைக்கு திமுக கூட்டணி பற்றி அனுதாபம் மட்டுமே படமுடிகிறது. சோனியா தமிழக (காங்கிரஸ் மற்றும் திமுக) ஆதரவை பெரிதாக கணக்கிட்டுக் கொள்ளவில்லை, எனவே தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டிவிடுவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக சோனியாவின் தமிழக பரப்புரை பயணம் நிறுத்தப்பட்டதை வைத்து பார்வையாளர்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெ... ஜெ... என தமிழுணர்வாளர்களை இந்த தேர்தல் முடிவு உற்சாகப்படுத்தும் என்று தெரிகிறது.

(தேர்தல் முடிவு மட்டும் தானா உற்சாகப்படுத்தும் அதன் பிறகுமா ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்)

22 : கருத்துக்கள்:

said...

//கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் //

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்!
உண்மைதான்!?

அரசியல் களத்துக்குப் போய் நிலவரம் தெரிவித்தமைக்கு நன்றி!

said...

//
ஜோதிபாரதி said...
//கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் //

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்!
உண்மைதான்!?

அரசியல் களத்துக்குப் போய் நிலவரம் தெரிவித்தமைக்கு நன்றி!
//

கர்ணனை சூரியன் மகன் என்பார்கள். நான் கருணாநிதி - உதய சூரியன் பற்றிச் சொன்னேன்.

said...

தேர்தல் முடிவு மட்டும் தானா உற்சாகப்படுத்தும் அதன் பிறகுமா ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்//

இன்றைக்கு வீர வசனம் பேசி மக்களை மயக்கும் தலைவர்/தலைவிகள் தேர்தலுக்கு பிறகு எங்கெல்லாம், யாரிடமெல்லாம் கையேந்தி நிற்கப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தானே போகிறோம்.

இப்போதும் சொல்கிறேன். காங்கிரசுக்கு மாற்றும் இவர்கள்தான் என நினைப்பவர்களெல்லோரும் நாளை தங்கள் செயலுக்கு வெட்கி நிற்கத்தான் போகிறார்கள்.

தெரியாத சம்மனசுக்கு (angel) தெரிந்த சாத்தானே மேல் என்பார்கள். இதில் யார் பேய், யார் சம்மனசு என கேட்காதீர்கள்!

said...

அருமையான பதிவு Wethepeople!

said...

ஸ்ஸ்ஸபாஆஆஆ.. இந்த புது ரத்தத்தின் ரத்தம் அட்டகாசம் தாங்களையே.. ;))

//திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜெ-வால் தான் முடியும் என்கின்றனர்.//

அண்ணே.. மொதல்ல சசிகலா குடும்ப ஆட்சிக்கு ஒரு கமா புள்ளியாவது வைக்க முடியுமான்னு பணிக்கரை வச்சி பிரசன்னம் பார்க்க சொல்லுங்க.

said...

//ஜெவின் ஈழம் பற்றி தெளிவான பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது.

ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.//

ஒரே பத்தியில் வந்திருக்கவேண்டும். :-)

said...

வழக்கமா தேர்தல் முடிஞ்சு தான் கூட்டணி மாறுவாங்க அரசியல்வியாதிகள்.. இந்த முறை தேர்தல் வற்றதுக்கு முன்னாடியே இருக்குறவங்களை எப்படி கழட்டி விடலாம்னு பேட்டி கொடுத்துட்டு இருக்குற கொடுமையையும் உங்க பதிவுல சேர்த்து இருக்கலாம்...

இதோ இன்றைய புதுவரவு
http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

said...

ஸ்டாலினும் நாகரீகமில்லாமல்தான் பேசுகிறார். அடிக்கடி, திருமணமாகி இருந்தால் தெரியும் என்று சொல்வது எதில் சேர்த்தி?

said...

அன்பு அண்ணனுக்கு அனேக வணக்கங்கள்,

நலமா? எங்கே உங்களை காணும்? யாராவது அடித்து விட்டார்களா?
இருந்தாலும் உங்களால் மொக்கை போடாமல் முடியாதே. அதான் உங்கள் தவளை கச்சேரியை தொடங்கிவிட்டீர் போலும்!

பார்போம் விரைவில்!

நன்றி

said...

குடும்ப அரசியல் உலகெங்கும் நடக்கிறது.
ஆனால் GIRL FRIEND அட்டகாசம் தமிழ்நாடு தவிர உலகத்தில் எங்கேயும் இல்லை.
குடும்பமே இல்லாத தலைவியும் அவரது நண்பியும் செய்யும் அட்ட காசம் வெளியே தமிழன்னு சொன்னாலே சிரிப்பா சிரிக்குது.
பேச்சிலேயும்,தோலிலேயும் மயங்கும் ஒரே கும்பல் தமிழ் மக்கள் தான்.

said...

//
ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
//
எனக்கென்னவோ ஜெவின் பேச்சுக்கள் ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரின் பேச்சுக்களைவிடக் கேவலமாகத் தெரியுது....
ரவிசங்கர் சிடி தந்தாராம்... உடனே இவருக்கு ஈழத்துல சண்டை நடக்குதுன்னு தெரிஞ்சதாம்...


அம்மா நாமம் வாழ்க!!

said...

அட பண்ணாடைகளா! அம்மா ஆட்சிக்கு வரட்டும் எவனெவன் புலிகளை ஆதரித்து பேசினார்களோ அவர்களை அம்மா தூக்கில் போடப்போவது நிச்சயம். அதில் முதல் பலி சீமானாகத்தான் இருக்கும். இப்ப அம்மாவை ஆதரிப்பவர்களெல்லாம் அம்மா ஆட்சிக்கு வந்த பின் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடப்போவது நிச்சயம்

said...

//இப்போதும் சொல்கிறேன். காங்கிரசுக்கு மாற்றும் இவர்கள்தான் என நினைப்பவர்களெல்லோரும் நாளை தங்கள் செயலுக்கு வெட்கி நிற்கத்தான் போகிறார்கள்.

தெரியாத சம்மனசுக்கு (angel) தெரிந்த சாத்தானே மேல் என்பார்கள். இதில் யார் பேய், யார் சம்மனசு என கேட்காதீர்கள்!//

டிபிஆர் ஐயா,

கொள்ளையடித்தலிலும் திராவிடத் தலைமை கொள்ளையடித்தால் அது கண்டு கொள்ளப் படக் கூடியது அல்ல என்ற அளவுகெல்லாம் எனக்கு திராவிட வெறி இல்லை. அதனால் தெரிந்த பேய், தெரியாத பேய் பேச்சுக்கே இடமில்லை

said...

//லக்கிலுக் said...
அருமையான பதிவு Wethepeople!
//

ஹிஹி. நீங்களும் Wethepeople தான்னு தெரியும்.

பாரட்டுக்கு நன்றி !

said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஸ்ஸ்ஸபாஆஆஆ.. இந்த புது ரத்தத்தின் ரத்தம் அட்டகாசம் தாங்களையே.. ;))

//திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜெ-வால் தான் முடியும் என்கின்றனர்.//

அண்ணே.. மொதல்ல சசிகலா குடும்ப ஆட்சிக்கு ஒரு கமா புள்ளியாவது வைக்க முடியுமான்னு பணிக்கரை வச்சி பிரசன்னம் பார்க்க சொல்லுங்க.
//

SanjaiGandhi,

தற்போதைக்கு ஜெ இருக்கிற குப்பைகளில் நாற்றம் குறைந்த குப்பை எண்டு தான் சொல்லுவேன்

:)

said...

// No said...
அன்பு அண்ணனுக்கு அனேக வணக்கங்கள்,

நலமா? எங்கே உங்களை காணும்? யாராவது அடித்து விட்டார்களா?
இருந்தாலும் உங்களால் மொக்கை போடாமல் முடியாதே. அதான் உங்கள் தவளை கச்சேரியை தொடங்கிவிட்டீர் போலும்!

பார்போம் விரைவில்!

நன்றி
//

No, ஆகா ! தங்கள் அன்புக்கு மிக்க நன்றி !

said...

//Thamizhan said...
குடும்ப அரசியல் உலகெங்கும் நடக்கிறது.
ஆனால் GIRL FRIEND அட்டகாசம் தமிழ்நாடு தவிர உலகத்தில் எங்கேயும் இல்லை.
குடும்பமே இல்லாத தலைவியும் அவரது நண்பியும் செய்யும் அட்ட காசம் வெளியே தமிழன்னு சொன்னாலே சிரிப்பா சிரிக்குது.
பேச்சிலேயும்,தோலிலேயும் மயங்கும் ஒரே கும்பல் தமிழ் மக்கள் தான்.
//

உலகம் முழுவதும் மலம் பூசிக் கொண்டால் நாமும் பூசிக் கொள்வது சரி என்கிற உங்கள் தெளிவான பார்வையை பாராட்டுகிறேன். 3 பொண்டாட்டி கட்டுவது ஆண்மைக்கு பெருமை. பொம்பள பொம்பளையோடு கூடினால் தான் இழுக்கு என்கிற உங்கள் பார்வையும் மெய் சிலிர்க்க வைக்கிறது

said...

//பொன் எண்ணம் said...
அட பண்ணாடைகளா! அம்மா ஆட்சிக்கு வரட்டும் எவனெவன் புலிகளை ஆதரித்து பேசினார்களோ அவர்களை அம்மா தூக்கில் போடப்போவது நிச்சயம். அதில் முதல் பலி சீமானாகத்தான் இருக்கும். இப்ப அம்மாவை ஆதரிப்பவர்களெல்லாம் அம்மா ஆட்சிக்கு வந்த பின் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடப்போவது நிச்சயம்
//

உயர்ந்த சிந்தனைகள். எப்பவும் முதுகில் குத்துபவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள், மடியில் தூக்கி வைத்து சூடு போடுபவனை எதால் அடிப்பது ? ஓட்டு !

said...

:-|

said...

இன்னுமா இந்த போஸ்ட்டையெல்லாம் தூக்கலே? :-)

said...

//இன்னுமா இந்த போஸ்ட்டையெல்லாம் தூக்கலே? :-)//

:)))))))))

said...

//ஜெ என்றால் வெற்றி என்று மீண்டும் நிருபணம் செய்துவிடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.//
செம காமெடிப்பா இது!
//தற்போதைக்கு ஜெ இருக்கிற குப்பைகளில் நாற்றம் குறைந்த குப்பை எண்டு தான் சொல்லுவேன்//
ஸப்பா ..முடியல்ல!