Thursday, March 26, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

தேர்தல் உடன்படிக்கை !

தேர்தல் வந்துவிட்டது,
எந்த அலையும் வீசவில்லை
என்கிறார் முதல்வர்
விலைபோகும் அளவுக்கு
இடைத் தேர்தல் அல்லதான் !

இலவச வலைகளால்
உங்களுக்கே வாக்குகள் கிடைக்கலாம்,
இன்னும் கூட வாக்குக்கு வழியுண்டு,

ஈழவர்களின் நலனுக்கு தீக்குளித்த
கட்சிக்காரர்களின் கருகிய படம் இருந்தால்
ஆளுக்கு 4 தொகுதிகள்
ஆளும் கட்சிக்கு கூட்டணிக்கு கிடைக்கலாம் !

தேர்தல் உடன்படிக்கைபடி
முத்துக்குமாரின் படம் யாருடைய
பிரச்சாரத்துக்கு என்கிற கேள்விக்கு
யாருக்கும் இன்னும் விடைதெரியவில்லை !

3 : கருத்துக்கள்:

said...

:-(((

said...

என்னத்தை சொல்ல

said...

"தமிழும் தமிழை சார்ந்த இடமும்
அன்பும் அன்பை சார்ந்த மனமும்"
முகப்பில் அருமையான வாசகத்தை
சொல்லி வரவு கொடுத்தீர்கள்!
வந்தேன்.தமிழனுக்கே உரிய கோபம்
கவிதையிலும் தெரிகிறது!வாழ்த்துக்கள்
கோ.வி.கண்ணன்..