Friday, December 05, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்பேச்சுக் கவிஞர்கள் !



வறுமைகள் கூட இவர்கள் வரிகளின் பொற்காசுகள் !
சிறுமைகள் கூட இவர்களின் கவிதை அலங்காரங்கள் !

துன்பவேளையை கவிதை யாழாக இசைப்பவர்கள்,
இன்ப வேளையை கவிதையில் ஏளனம் செய்பவர்கள் !

நாட்டுப்பற்றும் இவர்களால் நக்கல் செய்யப்படும் !
வீட்டுப்பற்றும் இவர்களால் சிக்கல் ஆகிவிடும் !

சோற்றுக்கு வழிதேடாமல் தூற்றலால் பசியாறுவார்கள் !
மாற்றுக்கு துணியில்லாவிட்டாலும் காற்றுக்கு ஆடை தைப்பார்கள் !

நெருப்பு சுடுவதுதான் இயற்கையா ? எங்கள் சொற்களின்,
வெறுப்பு சுடாவிட்டால் நீர் இயற்கை எய்தியவர் என்பர் !

வெடிகுண்டு வெடித்துவிட்டால் வெகுண்டெழு(த) - வரி
அடிகொண்டே அனைத்தையும் அடக்கிவிட நினைப்பர் !

பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !

அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டர் என்பர், சோம்பியிருந்தே
அரிசிகூட இவர்கள் கவிதையால் வெந்துவிடுமென்பர் !

வரிகளை வரிசை மாற்றிப் போட்டுவிட்டு, போற்றிக் கொடுக்கும்
பரிசுக்கு என் கவிதை பெற வாய்ப்பில்லை என்பர் !

கற்கண்டு இனிப்பதெல்லாம் இனிப்பா ? என்
சொற்கண்டால் அவை வெறும் இளிப்பே என்பர் !

சமூக அவலம் இவர்களின் எழுத்துக்கு தீனி, அதைப் போக்கி
சுமூகமாக்க இவர்கள் இறங்கியிருக்கிறார்களா நானி ?


பின்குறிப்பு : கவிஞர் நெல்லக் கண்ணன் நடத்தும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக்கும் இந்த கவிதைக்கும் தொடர்ப்பு இல்லை :)

9 : கருத்துக்கள்:

said...

///பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !//

ஹா ஹா ஹா... நச்சுனு இருக்கு...

said...

பின் குறிப்பில என்ன உள்குத்து? எனி மைக்ரொ பாலிடிக்க்ஸ்?

உங்க கவிதை அவங்க கவிதைய விட பெட்டர்.

said...

இவுக யாரு முற்போக்கு கவிஞர்களா?
பிற்போக்குக் கவிஞர்களா?
பின் நவீனத்துவக் கவிஞர்களா?
முற்போக்கு வாதிகளா?
வெறி பிடித்த வெங்காயங்களா?
தேடலில் தவிக்கும் தேங்காய் மூடிகளா?
புரிதலில் குழம்பும் புண்ணியவான்களா?
விளக்குங்கள் கவிஞர் கோவியாரே!
நெல்லைக் கண்ணனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்!?

said...

நல்ல கவிநயம் கவிஞரே உங்களுக்கு!!!

said...

//VIKNESHWARAN said...
///பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !//

ஹா ஹா ஹா... நச்சுனு இருக்கு...
//

விக்கி நன்றி !

said...

//வடகரை வேலன் said...
பின் குறிப்பில என்ன உள்குத்து? எனி மைக்ரொ பாலிடிக்க்ஸ்?
//

அண்ணாச்சி, மைக்ரோ, மேக்ரோ பாலிட்டிக்ஸ் எதுவும் இல்லை. கவிஜை எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது, மறந்துடப் கூடாதுன்னு எழுதினேன்.

//உங்க கவிதை அவங்க கவிதைய விட பெட்டர்.
//

:) இல்லை ! அவங்களும் நல்ல எழுதுகிறார்கள்

said...

வலிக்கின்ற போது வருகின்ற வார்த்தைகள் கவியாம்.
மனம் சிலிர்க்கின்ற போதும் வருவதும் கவியாம்.
இது என்ன வலியா, சிலிர்ப்பா?

said...

///பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !//

யாரை எள்ளி நகையாடுகின்றீர்கள் . எனக்கு புரியவில்லை, தமிழ் வளர்ப்போம் என்றும் அவர் வளர்ந்த கதைகளையா? தமிழுக்கு தனது உயிர் கொடுத்த வள்ளல்களையா? சோம்பித் திரியும் அல்லகைகளை பற்றியா?


தமிழ் வாழ்க

said...

கவிநயமாக
எழுதியுள்ளீர்கள்!!!

தேவா..