Sunday, March 16, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

ரவியை விமர்சனம் செய்ய எனக்கு என்ன தகுதி இருக்கிறது ?

எனது இடுகைகளைப் படித்தவர்கள் பலருக்கு பரவலாக ஏற்பட்டிருக்கும் எண்ணம் 'நான் ஒரு நாத்திகவாதி'. நான் பலதரப்பட்ட பதிவுகளையும் விரும்பிப் படிப்பவன் அதுபற்றி கருத்து கொண்டிருப்பவன் என்ற போதிலும், பதிவுலகில் நுழைந்த காலகாட்டங்களில் (நீண்ட நாள் ஆனது போல் கட்டமைப்பு தான்) மிக்கவையாக கவனம் ஈர்த்தவை ஆன்மிகம், சமயம் தொடர்புடைய பதிவுகளே. அதைப்பற்றிய எழுதிய நண்பர்கள் நெருக்கமானார்கள், நெருக்கமாக இருந்தார்கள்.

ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது என்ற கருத்து... மக்கள் அனைவரும் எதோ ஒரு மதம் அல்லது சமயம் சார்ந்தவராக இருப்பதால் தெரியும் வெறும் தோற்றம். அது அப்படி அல்ல என்றே நினைக்கிறேன். ஆன்மிகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எல்லா காலகட்டங்களிலும் போராடியே வந்து கொண்டிருக்கிறது. ஆன்மிகம் வென்றிருக்கிறது என்பதெல்லாம் தனிமனித நிராசைகளை தீர்த்துவைத்த நம்பிக்கையின் அடிப்படையிலான தனித் தனி கதைகளேயன்றி ஒரு சமூகப் புரட்சி செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இருந்தது இல்லை. அப்படி எதாவது செய்திருந்தால் அது சமயமாக பரிணமித்து அடிப்படைக் காரணங்கள் நீர்த்துப் போய் மறைந்து உருமாறி ஒரு பெயரில் நிலைத்திருக்கும். காலவெள்ளத்தில் பின்னால் அழிந்தே போகும். அது காலத்தின் கட்டாயம் என்றால் மிகையல்ல.

உலகில் உள்ள எல்லா மதங்களிலும் ஏற்பட்டிருக்கும் உட்பிரிவுகள் இதனை தெளிவாகவே காட்டுகின்றன. எந்த ஒரு மதமும் பிரிவுகளாக இல்லை என்று எவராலும் உறுதியாக சொல்ல முடியுமா ?

அண்மையில் தெக்கிகாட்டான் அவர்களிடம் சாட்டில் உரையாடிய போது 'ஆன்மிகம்' பற்றிய உரையாடல் வந்தது

"ஒரு மனிதன் தன்குள்ளே உள்ள இரட்டைத் தன்மையை உடைத்தெரிவது ஆன்மிகத்தின் இறுதி நிலை அல்லவா ?" என்றார் நல்ல சிந்தனை.

"ஆன்மிகத்துக்கு வரையறை இல்லை, விழிஒளியற்றோர் (Blind) யானையைத் தடவிப் பார்த்து சொல்வது போல்தான். அவரவர் அனுபவம் பொறுத்தும், தன் ஆன்மிகத் தேடலில் போதும் என்று அவர் நிற்கும் இடத்தை பொறுத்தும் இருக்கிறது" என்று சொன்னேன்

"ஆன்மிகத்திற்கும், மதவாதத்திற்கும் வேறுபாடு இருக்கிறது" என்றார்

"முதலில் இரண்டையும் பிரிக்க முயற்சி நடப்பதே இல்லை, பின்பு எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது ?" என்றேன்

ஆன்மிகவாதிகள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் விதி, இறைவனின் லீலை, இறைச் சித்தம் இன்னும் எந்தனையோ காரணங்களைச் சொன்னாலும், ஆன்மிகத்தால் தன்னை நோக்கி 'நான் யார்....நான் ஏன் பிறந்தேன் ?' என்று ஒருவன் தன்னைத்தானே கேட்க வைக்க முடியவில்லை என்றால் ஆன்மிகவாதிகள் சொல்லும் பிறப்பு கொள்கையும், அதன்பயனென அத்தனை காரணங்களுமே பயனற்றவை. அதைக் கேட்கவைப்பதில் ஆன்மிகம் இன்னும் போராடியே வருகிறது.

மதங்களால் நன்மை ஒன்றும் இல்லை. ஒரு கோட்பாட்டில் அதில் மூட நம்பிக்கையே மிக்கவையாக இருந்தாலும் அந்த நம்பிக்கையில் அந்த மதத்தைக் கடைபிடிக்கும் மனிதனை சாகும் வரையில் வைத்திருக்கிறது அம் மதங்கள். மதங்களைப் தவிர்பவனே ஆன்மிகவாதி, அதைச் செய்வதில் நாத்திகனே முன்னிற்கிறான். என்பார்வையில் நாத்திகனே உன்மையான ஆன்மிகவாதி. :) மற்றவர்கள் சுய தேடலைத் மறந்து கடவுள் கோட்பாடென்னும் மதக் கொள்கைகளை தாங்கிப்பிடிப்பவர்களாகவே உள்ளனர்.

மாதவிப் பந்தல் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு எழுதத் தொடங்கி சற்று நீண்டுவிட்டது,

ரவியின் மாதவிப் பந்தல் பதிவு பற்றி சொல்ல வேண்டும்... தலைப்பு தவறிவிடக் கூடாதல்லவா ?

ஏற்கனவே ஒரு தொடர்கதை மற்றும் ஒரு பதிவு பற்றிய நான் எழுதிய இருவேறு விமர்சனங்களுக்கு பிறகு என்மீதான அவதூறு விமர்சனங்களைத் தொடர்ந்து ... அதன் தொடர்புடைய (முன்னாள்) நண்பர்களிடம் நல்லுறவு இல்லை. இதையெல்லாம் சென்டிமெண்டாக எடுத்துக்கொண்டு கண்ணபிரான் ரவிசங்கர் பதிவை விமர்சனம் செய்ய கொஞ்சம் தயங்கினேன். ஒருசிலவற்றில் கடந்த காலங்களின் நிகழ்வுகளை தற்காலத்துடன் ஒப்பீடு செய்வதில் உடன்பட்டவன் அல்ல, எல்லாமும் எல்லாவற்றிற்கும் எப்போதும் பொருந்தும் என்று சொல்ல முடியாது என்பதால் எனது எண்ணத்திற்கு தடைபோட்டு மாதவிப் பந்தலின் நிழலில் அமர்ந்து பார்க்கிறேன். குளுமையான நிழல், கூடவே பந்தலின் அடர்த்தி சற்று குறைவால் கீற்றாக தெரியும் சூரிய ஒளி... அது சுடவில்லை... தனியாகத் தெரிந்தது.

இவரது ஆன்மிக சிந்தனைகளில், எழுத்தில் குறைச் சொல்ல முடியுமா ? எனக்கு அனுபவமோ அறிவோ போதாது என்றே நினைக்கிறேன். என்னளவில் அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தெரிந்து கொண்டதில், ... எழுத்து அல்லது தன்னை நிலைநிறுத்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தாண்டி மிகவும் சிறப்பாகவே ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.

பால் இனிதுதான், அதனுடன் சர்கரை ஏலம் சேர்க்கும் போது, இனிமையும் மணமும் சேர்ந்து கொள்ளும், பாலின் சுவையை மேலும் இனிமை சுவை மிக்கவையாக ஆக்கிவிடும். இரவிசங்கர் எழுத்துக்களில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருந்ததில்லை. பிறரை கேலி செய்து அதை நகைச்சுவை என்றாக்கும் அபத்தங்களை இவர் செய்ததே இல்லை. எவருடைய எதிர்கருத்தையும் தன்மீதான எதிர்தாக்குதல் போலவோ, தன்னை மேதாவி என்று காட்டிக் கொள்ளும் படியோ அவர்களுக்கு பதில் கருத்துக் கூறியதில்லை. எனக்கு தெரிந்து நாகரீகமற்ற கேள்விகளைக் கூட பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, பதில் அல்லது மறுமொழி சொல்வதன் நோக்கம் கேட்டவர்களை நாணம் கொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணமில்லாமல் இவர் சொல்லும் மறுமொழியால், நாகரீகமற்று கேட்பவரும் அடுத்தமுறை இவரிடம் அதுபோல் கேட்பதைத் தவிர்பர் அல்லது இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வர்.

நானும் இவரிடம் கற்றுக் கொண்டு மென்மேலும் வளர்த்துக் கொள்ள நினைப்பது பொறுமையும், மற்றவர்களை மதிக்கும் தன்மையையும் தான். அதைதாண்டி அவர் எழுதும் ஆன்மிகத்தில் எனக்கான பயன்பாடு குறைவே.

இவர் இடுகைகளில் பின்னனிகளுடன் கூடிய அரிய தகவல்களும், அரிய புகைப்படங்களும் ஒருசேர அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. மற்றபடி அவரது ஆன்மிக எழுத்துக்களை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை.

நான் இவரிடமும் இவரைப் போன்ற ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் வலியுறுத்துவது, உருவழிபாடு என்ற ஒன்றை மட்டும் சார்ந்திருக்கும் பக்தி இலக்கியங்களைத் தாண்டியும் கொஞ்சம் மேலே செல்லுங்கள்.

ஓரிறை (இறைவன் ஒருவர்), இறையற்ற தன்மை இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். மற்றபடி உருவழிபாடு அதைச் சார்ந்த மதக் கொள்கைகள் என்னதான் புனித முலாம் பூசப்பட்டாலும் அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் வேற்றுமைகளை வெளிச்சம் போட்டு வெறுப்புகளை வளர்க்கின்றதேயன்றி சமுக மாற்றத்தை ஒருக்காலும் அவை ஏற்படுத்திவிடாது. இறை நம்பிக்கையுடையவர்கள் ஓரிறை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தால் 'ஆன்மிகம்' என்று சொல்லப்படுவதன் பயனை அனைவரும் அடைவர். பல கடவுள்கள் வெறும் பக்திக் கோட்பாடுகளேயன்றி அவை ஆன்மிகம் அல்ல. அதே போல் பல மதங்கள் சொர்கம் நரகம் என்ற நம்பிக்கைச் பயமுறுத்தல் தவிர்த்து இவை தனிமனிதனுக்கு எந்த நன்மையும் செய்தது இல்லை. எந்த ஒரு மதமும் சிறந்த மதம் கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால் எப்போதோ உலகம் முழுவதும் ஒரே மதமாக ஆகி இருக்கும்.

இந்துமதத்தில் உருவழிபாடு போற்றப்படுவதற்குக் காரணம், இல்லற வாழ்க்கைப் போலவே கடவுளுக்கும் குடும்பம் மனைவி மக்கள் அமைத்து வழிபடும் முறை இல்லறவாழ்வின் மேன்மையை புனித இடத்தில் நிறுத்திப் பார்க்கும் மன வடிவம். உருவ வழிபாடு முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இறை நம்பிக்கை என்ற பெயரில் வெறும் சடங்குகளாகவும் அதன் தொடர்பில் 'தீண்டாமை / பார்பனீயம்' போன்ற மோசமான கட்டமைப்பை கட்டிக் காக்கும் கேடயங்களாக இருப்பதால் நான் உருவவழிபாட்டை ஆன்மிகத்தின் அடையாளமாக நினைப்பது இல்லை.

அன்பு நண்பர் கண்ணபிரான் ரவி சங்கர் அவர்களே,
வைணவம், சைவம், என்று பிரித்துப் பார்த்தல், அவை அவற்றின் சிறப்புத்தன்மைக்காக தனியாகவே பார்க்க வேண்டும், ஒன்றில் உள்ள சிறப்பு மற்றதில் இல்லாதது குறையல்ல ஒருவேளை அவை தேவையற்றதாகக் கூட இருக்கும். இன்றைய தமிழக இந்துக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது திருமாலுக்கும் சிவனுக்கும் இடையே உள்ள உறவு மச்சான் (பார்வதியின் அண்ணன்) என்பதே. மோகினி - சிவன் போன்ற (கள்ள) உறவும் உண்டு. வைணவம், சைவம் என்று பிரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் பக்தியாளர்களுக்கு பயன்தராது. நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் என்று சொல்லவில்லை. பெரும்பாண்மை பதிவுகள் வைணவம் சார்ந்ததாகவே இருக்கிறது என்று நான் சொல்லி புரிந்து கொள்ள வேண்டுமா ? கண்ணபிரான் ரவிசங்கர் ஒரு வைணவர் என்று என்போன்ற பலருக்கு ஏற்பட்ட எண்ணத்தை உடைத்து எரியுங்கள்.

மேலும் ஒரு வேண்டுகோள்,

வலைவரை வந்து நெடிது வளர்ந்திருக்கும் தமிழை செழிக்க வைக்க வேண்டும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் இறைமறுப்பாளர்களா ? இறை ஏற்பாளர்களா ? இது சிறந்த புலவர் யார் இளங்கோவா ? கம்பனா ? என்று கேட்பதற்கு ஒப்பானது. இருபக்கமும் அதை நன்றாகவே செய்துவந்திருக்கிறார்கள், வருகிறார்கள். இங்கு வலையில் எழுதுகிறோம், நமது எண்ணங்களை எழுதும் போது கூடவே தமிழார்வத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் எழுதிவரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செம்மொழி தகுதி கிடைத்து இருப்பதால் தமிழருக்கு என்ன நன்மை ?என்றெல்லாம் கேட்பவர்களும் தமிழர்களாக இருக்கிறார்கள். நாம் தமிழை செம்மையாக எழுத எழுத படிப்பவர்களின் எண்ணங்களிலும் தூய தமிழ்ச் சொற்கள் பதிந்துவிடும், 1900 ஆண்டு இருந்த தமிழுக்கும் தற்பொழுது எழுத்துத்துத் தமிழுக்கும் வேறுபாடுகள் மிக்கவையாகவே இருக்கிறது. தற்பொழுது 90 விழுக்காடு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி வருகிறோம் அதை 100 விழுக்காடாக மாற்றும் முயற்சி நமது கையில் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எளிமையான, புரியும் படியான தமிழ்ச் சொற்களை பதிவில் பயன்படுத்துவது எனக்கும் கடினம் மிக்கவையாகவே இருந்தது, தற்பொழுது வேற்று மொழிச் சொற்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு எழுதுவது எனக்கு இயல்பாகிவிட்டது.

உங்கள் இடுகைகள் அனைத்தும் பெரும்பகுதி தூயத்தமிழாகவே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசியில் கருங்குருணை கிடப்பது போல் வெகு சில வேற்றுச் சொற்கள் இருக்கின்றன. எழுதும் போது ஒருமுறை படித்துவிட்டு வேற்று மொழிச் சொற்களின் மாற்றுச் சொற்களை அந்த இடங்களில் சேர்க்கலாம், சங்ககாலத் தமிழில் எழுதவேண்டும் என்று சொல்ல வரவில்லை, புழக்கத்தில் இருக்கும் சொற்களையே முற்றிலுமே பயன்படுத்த முடியும். தங்கள் எழுதும் பதிவுகள் தனித்தமிழாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். பலமொழிகள் தெரிந்த உங்களுக்கு தமிழில் உள்ள வேற்றுமொழிச் சொற்களின் அடையாளம் நன்றாகவே தெரிந்திருக்கும். அவைகளை களைந்துவிட்டு எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு தகுதி இருப்பதாக நினைத்து மாதவிப்பந்தல் பற்றி என் எண்ணங்களைப் பகிரிந்து கொள்ளக் கேட்டு வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கர் (கேஆர்எஸ்) என்றும் ரவி என்றும் அன்புடன் அழைக்கப்படும் ரவி அவர்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

விதிகள் (நண்பர்களுக்காகவும்) காலத்தால் (இடம்) மாறும்.
:):):)

--
அன்புடன்,
கோவி.கண்ணன்

44 : கருத்துக்கள்:

said...

இந்தப் பதிவு போட வைத்து, உங்களை பதிவு உலகத்துக்குள் முற்றாக இழுந்த நட்ச்சத்திர பதிவர் கே.ஆர்.எசுக்கு...என் நன்றிகள்..

பதிவு மீண்டும் எழுதியதற்கு வாழ்த்துக்கள்...

ரத்னேசு ஐயா, இதுவும் காலம் தான்..!!

என்ன, கொஞ்சம் விகுதி சேர்ந்திருக்கு..

அட்ஜிஸ் பண்ணிக்கோங்க..

said...

சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மற்றொரு அருமையான பதிவு.
நம்ம KRS என்ன சொல்கிறார் பார்ப்போம்.
நான் யார்? என்னுடைய பதிவில் வலது பக்கத்தில் ஒரு சலனப்படம் இருக்கு..தேவைப்பட்டவர்கள் பார்க்கலாம்.

said...

பதிவ படிக்க நேரமில்லை.
திரும்ப வந்தமைக்கு நன்றி.(ஒரு அணிலாவாய் இருந்து இருப்பேன் என நினைக்கிறேன்).

மாதவிப் பந்தல் ரவி பதிவை நான் படிப்பதில்லை.

said...

//

TBCD said...
இந்தப் பதிவு போட வைத்து, உங்களை பதிவு உலகத்துக்குள் முற்றாக இழுந்த நட்ச்சத்திர பதிவர் கே.ஆர்.எசுக்கு...என் நன்றிகள்

பதிவு மீண்டும் எழுதியதற்கு வாழ்த்துக்கள்...//

டிபிசிடி ஐயா
நான் ஆப்பு வாங்குவதில் ஐயாவுக்கு அம்புட்டு மகிழ்ச்சியா ? ஆப்பு எவ்வளவு கிடைச்சாலும் பங்கு பிரிச்சிகிறுவோம்
:)

ரத்னேசு ஐயா, இதுவும் காலம் தான்..!!

என்ன, கொஞ்சம் விகுதி சேர்ந்திருக்கு..

அட்ஜிஸ் பண்ணிக்கோங்க..
//

said...

//வடுவூர் குமார் said...
சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மற்றொரு அருமையான பதிவு.
நம்ம KRS என்ன சொல்கிறார் பார்ப்போம்.
நான் யார்? என்னுடைய பதிவில் வலது பக்கத்தில் ஒரு சலனப்படம் இருக்கு..தேவைப்பட்டவர்கள் பார்க்கலாம்.

5:31 AM
//

பாராட்டுக்கு நன்றி குமார், நீங்கள் சொல்லியிருக்கும் சுட்டியையும் பார்க்கிறேன்.

said...

//ILA(a)இளா said...
பதிவ படிக்க நேரமில்லை.
திரும்ப வந்தமைக்கு நன்றி.(ஒரு அணிலாவாய் இருந்து இருப்பேன் என நினைக்கிறேன்).//

எந்த படத்துக்கு கால்சீட் கொடுத்து இருக்கிங்க. அந்த பக்கம் திரும்பவும் எட்டிப்பார்காதிங்க, டவுசரை உருவுறாங்களாம். அப்பறம் உங்க இஷ்டம். :)

இளா, நீங்க அணில், நான் அனுமார் யார் இராமர். புரியல்ல.

//மாதவிப் பந்தல் ரவி பதிவை நான் படிப்பதில்லை.
//

அவசியம் படிக்கவும், ஆன்மிகம் அறிந்து கொள்ளவும் நாடவேண்டிய இடம் மாதவிபந்தல். இதுவரை படிக்கலை என்றால் பரவாயில்லை, இன்றிலிருந்து படிக்கலாம்.

said...

முதலில் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள். இதுவும் வந்து போனதாகட்டும். ஒரு கெட்ட அனுபவமாக. நிறைய எழுத வேண்டுமென்பதில்லாமல், அவ்வப்போதாவது தமிழ்மணத்தில் எழுதுங்கள்.

said...

நல்லாருந்துச்சு, வைச்சிப் படிக்க வேண்டிய பதிவு!

நம்ம பேரை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கீங்க போல :).

said...

//இளா, நீங்க அணில், நான் அனுமார் யார் இராமர். புரியல்ல.//
நீங்களுமா? தாங்காதுய்யா...

சன் தொலைக்காட்சியில் ராமாயணம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறான் இந்த திமுக விவசாயி.

KRS பதிவா? முயற்சி பண்ணலாம்.

தலைப்பு மொக்கை போல இருக்கே :)

said...

//வசந்தம் ரவி said...
:)

7:29 AM
//

ரவி,

புன்னகையின் மர்மம் புரியல்ல, தயவு செய்து விளக்கவும்.

said...

//சுல்தான் said...
முதலில் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள். இதுவும் வந்து போனதாகட்டும். ஒரு கெட்ட அனுபவமாக. நிறைய எழுத வேண்டுமென்பதில்லாமல், அவ்வப்போதாவது தமிழ்மணத்தில் எழுதுங்கள்.
//

மிக்க நன்றி ஐயா,

அவ்வப்போது எழுத எதாவது பற்றியங்கள் தேறும் போது எழுதுவேன்.

said...

//*இயற்கை நேசி* said...
நல்லாருந்துச்சு, வைச்சிப் படிக்க வேண்டிய பதிவு!

நம்ம பேரை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கீங்க போல :).
//

தெகா,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

உங்க பேரை ரிப்பேர் செய்யவில்லை.
:)

said...

//ILA(a)இளா said...
நீங்களுமா? தாங்காதுய்யா...

சன் தொலைக்காட்சியில் ராமாயணம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறான் இந்த திமுக விவசாயி.

KRS பதிவா? முயற்சி பண்ணலாம்.

தலைப்பு மொக்கை போல இருக்கே :)
//

இளா...சரி, திமுக 'சன்' டிவியின் 'சன்ஸ்' இராமயணம் பற்றி வாரம் ஒரு விமர்சனப்பதிவு எழுதுங்க.

KRS பதிவு மொக்கையா ? அப்படியே நீங்கள் வைத்துக் கொண்டாலும், நாமெல்லாம் சங்கத்துல போடாத மொக்கையா ?
:)

said...

//KRS பதிவு மொக்கையா ? //

/தலைப்பு மொக்கை போல இருக்கே :)//
இதுக்கு பேர்தான் நுண்ணரசியலா? உங்க பதிவுக்கான தலைப்பை மொக்கைன்னு சொன்னா KRS பதிவ இழுக்கிறீங்களே. அவர் பதிவ படிக்கிறதே இல்லை அப்புறம் எப்படித்தெரியும் மொக்கையா? இல்லையான்னு?

said...

//ILA(a)இளா said...
இதுக்கு பேர்தான் நுண்ணரசியலா? உங்க பதிவுக்கான தலைப்பை மொக்கைன்னு சொன்னா KRS பதிவ இழுக்கிறீங்களே. அவர் பதிவ படிக்கிறதே இல்லை அப்புறம் எப்படித்தெரியும் மொக்கையா? இல்லையான்னு?
//

இளா,

தலைப்பு மொக்கையா ?
அதுக்குத்தான் பதிவை படிக்கனும்.
பதிவு மொக்கையாக எழுதவரவில்லை என்பதற்காக தலைப்பைக் கூட மொக்கையாகப் போடக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்கப்படாது. சரி மொக்கை பயிற்சி வகுப்பில் எனக்கு இடம் உண்டா ? ஒரு துண்டு போட்டு வைங்க !

said...

//இந்தப் பதிவு போட வைத்து, உங்களை பதிவு உலகத்துக்குள் முற்றாக இழுந்த நட்ச்சத்திர பதிவர் கே.ஆர்.எசுக்கு...என் நன்றிகள்..//

ஓம் கோவி ஓம்!
(ஓம் சாந்தி ஓம்-னு மட்டும் தான் சொல்லணுமா? :-)

டிபிசிடி அண்ணாச்சி
Still I am not happy!
கோவி அண்ணா கவிதைப் பதிவைத் தான் மீள் தொறந்திருக்காரு! கோவி பதிவை மீள் தொறக்க என்ன பண்ணலாம் சொல்லுங்க?

said...

மிகச்சிறப்பான பதிவு...

என்னைப்பொறுத்தவரை இதற்கு எந்த பதில் வந்தாலும் இதற்கு சப்பைக்கட்டு போலத்தான் தோண வைக்கும் என நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்து ஆத்திகம் அதிகம் தெரிந்தவர் கடவுளாக முயற்சிகள் செய்கின்றனர்.

நாத்திகக்கருத்து சொல்பவர் அதில் தன்னையும் தலைவனாக கருதுகின்றனர்.

ஆனால் யாருமே மனிதனாக இருக்க நினைப்பதில்லை. மனிதத்தையும் தேட வைக்க எந்த கடவுள் எந்த ரூபம் கொண்டு வருவாரோ... இல்லை எந்த தலைவன் அவதாரமாய் மாறுவானோ என்றுதான் ஏங்க வேண்டும்.

வெளிப்படையான எண்ணங்களுக்கு பயந்து யாரும் வாழ்ந்ததில்லை. வாழ முடிவதுமில்லை. பொய்யான பேச்சுக்களுடனும், போலியான புன்னகைகளுடன் வாழ்வு முடிந்து விடாது. நிதர்சனம் என்ற ஜன்னலின் வழியே நிச்சயம் மனத்தின் இருட்டு சற்று ஒளி பெற்று நிற்கும். அந்த வெளிச்ச வழியில் தூசுகள் பறப்பதையும் காண இயலும்.

மனிதம் தேடி அலைகின்ற நெஞ்சங்கள் எல்லாவிடத்திலும் இருக்கிறது. ஆனால் அதில் சற்று சுயநலம் என்ற விடமும் இருப்பதுதான் வருத்தத்துக்குரியது..

நிறைய எழுத தோன்றினாலும் உங்களளவு நிறைவாய் எழுத முடியாமல் போவதால்...

அன்புடன்,

சென்ஷி

said...

அப்படியா...

ஏய்...யாரப்பா அது...அண்ணனுக்கு ஒரு சோடா சொல்லு...

திமுக விவசாயி, என்னவெல்லாம், அறுவடை செய்வார், இளா ஐயா.. :P

///
ILA(a)இளா said...

சன் தொலைக்காட்சியில் ராமாயணம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறான் இந்த திமுக விவசாயி.

///

said...

ரவி தம்பாச்சி (அண்ணாச்சி சொல்லாம், இதைச் சொல்லக் கூடாதா) ,

இது என்ன பெரிய கம்ப சுத்துற விடயமா.. (கம்பன் சூத்திர என்றும் சொல்லுறாங்க..)

நட்பிற்கு இலக்கணம் கோவி ஐயா தான்.

விதியயை உடைச்சு, காலம் - எண்ண்க கவிதைகளில் எழுதினா மாதிரி,

நண்பர்கள் வேண்டுகோள் வைச்சா, காலம் பதிவிலேயும் வரும்.

நான் முந்திக்கிறேன்..

அன்பின் கோவி ஐயா,

வெகு விரைவில், உங்கள் காலம் பதிவில் நீங்கள் எழுத ஆரம்பிக்கனும்.

டிபிசிடி கவுண்டிங்க் ஆரம்பம்..

இன்னும் 24 மணி நேரத்தில், அதில் பதிவு வரலையின்னா..

நீங்களா எழுதினா சமாதாணம்...நாங்களா எழுத வைச்சா....

என்ன சொல்லுறீங்க...

///
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

டிபிசிடி அண்ணாச்சி
Still I am not happy!
கோவி அண்ணா கவிதைப் பதிவைத் தான் மீள் தொறந்திருக்காரு! கோவி பதிவை மீள் தொறக்க என்ன பண்ணலாம் சொல்லுங்க?

///

said...

//திமுக விவசாயி, என்னவெல்லாம், அறுவடை செய்வார், இளா ஐயா.. :P/
@Tbcd
கடலைன்னு சொல்லுந்துங்களே இந்த பாவி புள்ள ஊர் ஒலகம்.

said...

எல்லாத்துக்கும் 'காலம்' பதில் சொல்லுமாமே:-)))))

ஆத்திகனைவிட நாத்திகனுக்குத்தான் கடவுளைப் பத்தி (எழுதிய புத்தகங்கள்) அதிகம் தெரியுதுபோல.

பலர் வேதம் முதலானவைகளில் இருந்து மேற்கோள் காட்டும்போது 'அட'ன்னு இருக்கு.

அதனால் மனிதம் போற்றும் நாத்திகனும் ஆன்மீகவாதின்னு சொல்லலாம்தானே?

said...

//துளசி கோபால் said...
எல்லாத்துக்கும் 'காலம்' பதில் சொல்லுமாமே:-)))))
//
துளசி அம்மா,
பெரியவங்க அப்படித்தான் சொல்றாங்க.
அதுதானே காலத்தின் தன்மை. :)

//ஆத்திகனைவிட நாத்திகனுக்குத்தான் கடவுளைப் பத்தி (எழுதிய புத்தகங்கள்) அதிகம் தெரியுதுபோல.
பலர் வேதம் முதலானவைகளில் இருந்து மேற்கோள் காட்டும்போது 'அட'ன்னு இருக்கு.
//

பிறக்கும் போது யாரும் ஆத்திகரோ, நாத்திகரோ இல்லை, பெற்றோர்களைச் சார்ந்தே அந்த வளர்ந்தது தாம் இன்னக் கொள்கையாளர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். ஒருவர் தாம் ஆத்திகர் என்ற நம்புவதால் இறை குறித்து அதிகம் கேள்வி கேட்கமாட்டார்கள், ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நாத்திகனுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை என்பதால் அதுபற்றி அதிகம் தெரிந்து கொள்ளவிழைவர். குறிப்பாக நாத்திகனுக்கு தெய்வநித்தனை என்ற சுய பயமுறுத்தல் இருக்காது. நாத்திகன் ஆத்திகனாக மாறினால் பக்திபழமாகவே மாறிவிடுவார்.

//

அதனால் மனிதம் போற்றும் நாத்திகனும் ஆன்மீகவாதின்னு சொல்லலாம்தானே?

6:02 PM
//

சரிதான் அம்மா, ஆத்திகம் - நாத்திகம் இரண்டின் நோக்கமும் மனிதம் போற்றுவதுதான்.

said...

:) மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.... விரைவில் "காலம்" பதிவும் வரும் என நம்புகிறேன்!!!

said...

அண்ணா, இதோ கடைசியா வரலாம்-னு நினைச்சு, வந்தாச்சே!

//ரவியை விமர்சனம் செய்ய எனக்கு என்ன தகுதி இருக்கிறது ?//
1 மனிதர்
2 தமிழர்
3 பதிவர்
4 நண்பர்
5 பகுத்தறிய வேண்டும் என்று அட் லீஸ்ட் எண்ணுபவர்

இம்புட்டு தகுதி போதும், வெறும்பய என்னை விமர்சிக்க! :-)

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்லவேளை 'என்னை' கடைசியில் சேர்த்தீர்கள். இல்லை என்றால் எதிர்பொருளாக மாறி எனக்கு ஆப்பு வைத்திருக்கும்.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஓம் கோவி ஓம்!//

(ஓம் சாந்தி ஓம்-னு மட்டும் தான் சொல்லணுமா? :-) சொல்லாம், எங்கும் அமைதி வேண்டும் என்பது சிறந்தது. எனக்கு பிடித்த மந்திர சொல் 'ஓம் சாந்தி ஓம்' (சாருக்கான் படம் இன்னும் பார்கல)

//டிபிசிடி அண்ணாச்சி
Still I am not happy!
கோவி அண்ணா கவிதைப் பதிவைத் தான் மீள் தொறந்திருக்காரு! கோவி பதிவை மீள் தொறக்க என்ன பண்ணலாம் சொல்லுங்க?
//

கடையை ஒருமாதம் கூட மூட விடமாட்டிங்களா, ப்ளாக்கர் திணறுது கொஞ்சம் 'அங்கு' ஓய்வு கொடுப்போம். இதுவும் என்னுடையது தானே.

said...

//ILA(a)இளா said...
//திமுக விவசாயி, என்னவெல்லாம், அறுவடை செய்வார், இளா ஐயா.. :P/
@Tbcd
கடலைன்னு சொல்லுந்துங்களே இந்த பாவி புள்ள ஊர் ஒலகம்.
//

விவசாயி ஐயா,
திருமணத்திற்கு முன்பு செய்த விவசாயம் பற்றி கேட்கவில்லை. தற்பொழுது என்ன விவசாயம் ?

said...

//TBCD said...
ரவி தம்பாச்சி (அண்ணாச்சி சொல்லாம், இதைச் சொல்லக் கூடாதா) ,

இது என்ன பெரிய கம்ப சுத்துற விடயமா.. (கம்பன் சூத்திர என்றும் சொல்லுறாங்க..)

நட்பிற்கு இலக்கணம் கோவி ஐயா தான்.

விதியயை உடைச்சு, காலம் - எண்ண்க கவிதைகளில் எழுதினா மாதிரி,

நண்பர்கள் வேண்டுகோள் வைச்சா, காலம் பதிவிலேயும் வரும்.

நான் முந்திக்கிறேன்..

அன்பின் கோவி ஐயா,

வெகு விரைவில், உங்கள் காலம் பதிவில் நீங்கள் எழுத ஆரம்பிக்கனும்.

டிபிசிடி கவுண்டிங்க் ஆரம்பம்..

இன்னும் 24 மணி நேரத்தில், அதில் பதிவு வரலையின்னா..

நீங்களா எழுதினா சமாதாணம்...நாங்களா எழுத வைச்சா....

என்ன சொல்லுறீங்க...
//

டிபிசிடி ஐயன்மீர்,

இங்கும் பதிவைப்பற்றி ஒன்னுஞ்சொல்லப் போறதில்லையா ?

நல்லா இரு !

said...

//ஜெகதீசன் said...
:) மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.... விரைவில் "காலம்" பதிவும் வரும் என நம்புகிறேன்!!!
//

ஜெகதீசன் ஐயா,
ஒரு போக்கு காட்ட விடமாட்டிங்களே.

said...

உங்களுக்கு அசைவம் எப்படியோ, அதுப்போல ஆன்மீகம்..

அதுக்குறித்து சிறப்பான வெறுப்புக் காரணம் இல்லை..

ஆனால், விட்டு வெளியே வந்துவிட்டேன்.

அதனால், இப்பதிவைப் படித்தாலும் சலிப்பையே தரும். பதிவை அப்படியே, பறந்து, பறந்து நோட்டம் விடுவதோட சரி..

பதிவைப் பற்றி பேசவில்லை என்றால், பதிவின் பொரூளடக்கம் = மாதவிப்பந்தல்= ரவி

அவரை இழுத்து பின்னுட்டத்தில் பேசியாச்சு...

விடு....ஜூட்
///
கோவி.கண்ணன் said...

டிபிசிடி ஐயன்மீர்,

இங்கும் பதிவைப்பற்றி ஒன்னுஞ்சொல்லப் போறதில்லையா ?

நல்லா இரு
///

said...

நல்ல பதிவு.

தங்கள் வருகைக்கு நன்றி,

தங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன்.

தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

ஆத்திகரோ, நாத்திகரோ அல்லது இரண்டிலும் ஈடுபாடு இல்லாதவர்களோ யாராயிருந்தாலும்,

"துடிக்கும் இதயம் தமிழ் என்று துடிக்கட்டும்
நொடிக்கும் விதையும் நற்றமிழ் கொடிக்கட்டும்
பிரிவு ஒன்று வந்தாலும் தமிழை நம் பொதுவில் வைப்போம்!

"யாப்பின்றி போனாலும் பரவாயில்லை
தமிழுக்கு காப்பில்லாமல் போய்விடக்கூடாது"

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

//அதன் தொடர்புடைய (முன்னாள்) நண்பர்களிடம் நல்லுறவு இல்லை. இதையெல்லாம் சென்டிமெண்டாக எடுத்துக்கொண்டு//

உங்களை அச்சம் கொள்ள விடமாட்டேன்! கவலை வேண்டாம்!

மிகவும் தரமான ஆய்வை முன் வச்சிருக்கீங்க கோவி அண்ணா!
ஆப்புரைசல் அருமை! கன்சல்டிங் ஃபீஸ் எல்லாம் எதுவும் வாங்காம, தன் முன்னேற்றக் கருத்துக்களை வாரி வழங்கி இருக்கீங்க! நன்றி!

சுய(தன்) தரத்தை உரைத்துப் பார்த்து மேம்படுத்திக் கொள்ளவும் நட்பு உதவும் என்பதற்கு இது நல்லதொரு சான்று!
---------------------------
உடனே நான் கவனம் செலுத்த வேண்டியது இதுவே!
//கண்ணபிரான் ரவிசங்கர் ஒரு வைணவர் என்று என்போன்ற பலருக்கு ஏற்பட்ட எண்ணத்தை உடைத்து எரியுங்கள்//

நிச்சயம் இதைச் செய்ய வேண்டும்!
என்ன தான் முருகனருள், அம்மன் பாட்டு, சிவன் பாட்டுப் பதிவுகளில் எழுதினாலும்...தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களி?, திருவாரூர் பதிவுகள் போட்டாலும்,

வைணவம் மிகுதியோ என்ற எண்ணம் வருவது இயற்கையே!
நானும் வைணவத்தைப் பரப்ப எல்லாம் எழுத வரவில்லை!
எங்க கிராம தேவதை பச்சையம்மன்! எங்க குல தெய்வம் முருகப் பெருமான்! இவர்கள் இருவருக்கும் தான் முதல் முடியிறக்கல், வீட்டில் பூசை எல்லாம்!

வைணவம் வாழ்வில் நுழைந்த கால கட்டம், கல்லூரிக் காலம் மற்றும் திராவிடர் கழகத்தில் இருந்த காலம்!
அது பற்றிச் சுருக்கமா எட்டு-பதிவில் சொல்லி இருப்பேன்!

பெருமாளுக்காக வைணவத்தை எழுதவில்லை! அதில் உள்ள
* சாதிப் பாகுபடுகள் அற்ற நடைமுறை (but not 100%)
* தமிழ் வழி வழிபாடு
* அடியார்களைச் சாதிப் பிரிவின்றி மதித்தல்
* ஆலய முறைகளில் அனைத்துச் சாதியனரையும் பங்கு கொள்ளச் செய்வது
...
இது போன்ற சமூகம்/மக்கள் அன்பு சார்ந்த ஆன்மீகம், அங்கு மற்றெங்கையும் விடத் தூக்கலாக இருப்பதால், அந்த இடத்தில் இருந்து எழுதத் துவங்கினேன். மத்தபடி வைணவப் பாசமோ, கண்மூடித்தனமான மத நம்பிக்கையோ அல்ல!
---------------------------
அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் திட்டம் இன்று தான் கலைஞர் கொண்டு வந்திருக்கார். முழுக்கக் கூட நடைமுறையில் இல்லை!
ஆனால் சுமார் அறுநூறு எழுநூறு ஆண்டுக்கு முன்னரே, ஆரிய மேலாண்மை தலை தூக்கிய நிலையில், அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம் இராமானுசரால் சாத்தியப் பட்டிருக்கு!
மேல் சாதியினர் சூழ்ச்சிகளையும் மீறி அவர் உயிரையும் பொருட்படுத்தாமல் சீர்திருத்தங்களைச் செய்து காட்டினார்.
இன்னிக்கி கூட திருக்கோவிலூர், அன்பில், திருவரங்கம் (ஒரு சில இடங்களில்) நம்மவர்கள் பெருமாளுக்கு வழி வழியாகக் கருவறை அர்ச்சகராக இருப்பதை என்னால் காட்ட முடியும்!

என்ன, சங்கு சக்கர முத்திரை பொறித்துக் கொண்டிருந்தால் மட்டும், தோளில் பூணூல் அணிந்திருப்பார்! ஆனால் ஆளைப் பார்த்தும் பேசியுமே சொல்லிவிடலாம்...அவர் ஸோ கால்ட் உயர் குலத்தினர் இல்லை என்று! இவர்கள் பிரதான அர்ச்சகர்களாய் இருந்து வழிகாட்ட, அந்தணர்கள் கீழ் அமர்ந்து பிரபந்தம் ஓதும் காட்சி கண்கூடு!

அவ்வளவு ஏன்?
பொதுவா பதிவுகளில் எங்கும் சொல்லாத ஒன்றை இங்கு, இன்னிக்கி சொல்கிறேன்.
அனைத்துச் சாதி அர்ச்சக முறைமைக்கு அடியேனே ஒரு எடுத்துக்காட்டு...

திருவரங்கத்தில் ஆசான் Dr. MAV அவர்களின் முயற்சியாலும், பாசுரத் தேர்ச்சியாலும், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்குத் தொட்டு அணி செய்து, பூசை செய்யும் நற்பேறும் அடியேனுக்குக் கிட்டியுள்ளது! உற்சவ காலங்களில் நடையாண்டு வரும் பொறுப்பும் கிட்டியிருக்கு!

என் சாதி அதற்குத் தடையாய் நிற்கவில்லை! கருவறை நுழைவு முடியாது! (அதற்கான கல்வித் தகுதிகள் என்னிடம் இல்லை! தேறுவேனா என்பது வேறு விடயம்)

இவை எல்லாம் தான் - ஸோ கால்ட் வைணவ நெடியாக என் பதிவுகளில் தெரிகிறது போலும்!
சைவத் திருமுறைகள் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்! அவற்றின் நெடியும் விரைவில் தெரியும்! :-)

எது எப்படியோ, மானுடம் தழுவிய ஆன்மீகம் தான் என் எண்ணம்! அது எம்மதமாயினும் சரி! சம்மதமே!

said...

Sambavaami Yuge Yuge! muzhuvathum padithen!

let me keep off my differences... objectively mikavum nandraaka irunthathu katturai. will read one more time in leisure and will give my opinion.

With love
Osai Chella

said...

//இம்புட்டு தகுதி போதும், வெறும்பய என்னை விமர்சிக்க! :-)//

வரி விளையாட்டா? :-))
இதோ செவ்விப்படுத்திய வரிகள்!
--இம்புட்டு தகுதி போதும், வெறும்பயலான கேஆரெஸ் என்னும் என்னை விமர்சிக்க! :-)--

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உங்களை அச்சம் கொள்ள விடமாட்டேன்! கவலை வேண்டாம்!

மிகவும் தரமான ஆய்வை முன் வச்சிருக்கீங்க கோவி அண்ணா!
ஆப்புரைசல் அருமை! கன்சல்டிங் ஃபீஸ் எல்லாம் எதுவும் வாங்காம, தன் முன்னேற்றக் கருத்துக்களை வாரி வழங்கி இருக்கீங்க! நன்றி!
//

நட்சத்திர எழுத்தின் நடுவே, இங்கு நெடிய பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள், நெகிழ்வாக இருக்கிறது. உங்களைப் போன்றோர்களின் ஆன்மிகத்தில் என்றுமே குறைகண்டதில்லை.
நான் இங்கு உங்களுக்காக சொல்லி இருப்பவை இன்னும் உங்கள் எழுத்துக்கள் மென்மேலும் சிறக்கவேண்டுமென்பதற்காக என்னால் ஆன தெரிவுகள் (அறிவுரை அல்ல).

ஒரு நட்சத்திர பதிவு ஒன்றை இங்கு பின்னூட்டமாக்கிவிட்டீர்கள் அதற்கும் நன்றி.

said...

இப்போ, இங்க என்ன அதர்மம் நடந்துப் போச்சு...?

//
OSAI Chella said...

Sambavaami Yuge Yuge! //

பு.த.செ.வி

said...

//நான் இவரிடமும் இவரைப் போன்ற ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் வலியுறுத்துவது, உருவழிபாடு என்ற ஒன்றை மட்டும் சார்ந்திருக்கும் பக்தி இலக்கியங்களைத் தாண்டியும் கொஞ்சம் மேலே செல்லுங்கள்//

உருவ வழிபாட்டைத் தாண்டி மேல் செல்ல வேண்டிய தேவையே இல்லை என்பதை தனிப்பதிவா சொல்லுறேன்! (இப்போது அல்ல!)
உருவத்திலேயே விசாரிப்பு வந்துடுச்சின்னா ஆகாச விசாரிப்புக்கு அவசியமே இருக்காது! அதை ஆலயங்கள் செய்தா நல்லா இருக்கும்! அப்படி இல்லாத பட்சத்தில் பதிவுகளில் நம்மால் இயன்றதைச் செஞ்சி வைக்கலாம்!

ரத்னேஷ் ஐயா முன்பொரு முறை என் பதிவில் சொன்னாருன்னு நினைக்கிறேன்! திருச்செந்தூர் ஆலய தரிசனமும், முருகன் தரிசனமும் நேர்ல விட பதிவில் நல்லாத் தெரிஞ்சிச்சி-ன்னு! மிகவும் நெகிழ்ச்சியா இருந்துச்சி!
---------------------------
உயர் விளிம்பு நிலை மக்களோ, பழுத்த ஆன்மீகவாதிகளோ என் பதிவுகளைப் படிப்பதில்லை! அதனால் என் பதிவில் வந்து மோட்சம் எப்படி அடையலாம் என்று அவர்கள் தேட மாட்டார்கள்! :-))

அதனால் தான் தத்துவங்களைக் குறைத்துக் கொண்டு, நடைமுறை மானிடவியல் கலந்த ஆன்மீகம் மட்டும் தற்சமயம் எழுதுகிறேன்! அதுவும் இளைஞர்கள் மத்தியில் சில நல்ல பல கருவூலங்களை, அவர்கள் விரும்புகிற மாதிரிக் கொடுக்க ஆசை!
கோடு காட்டிட்டா, ரோடு அவங்களே போடுவதில் நம்ம பசங்க படா கில்லாடிங்க! அதனால் தான் அங்கு மட்டும் தற்போது கவனம் செலுத்தறேன்!

தத்துவங்கள், அத்வைதம், விசிட்டாத்வைதம், மெய்யுணர்வு, திருமூலர் கோட்பாடுகள் எல்லாம் வாசிப்பு அனுபவம் தான் அதிகம்!

என் கிட்ட இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், வெறுமனே வாசித்தால் மட்டும் அதை எழுதி விட மாட்டேன்! அதை முதலில் நான் உணர்கிறேனா என்று பார்த்து விட்டு, எனக்கு எளிமையாப் பிடிபட்டாத் தான் அடுத்த கட்டத்துக்குப் போய் நண்பர்களுடன் பேசுவேன்! விவாதிப்பேன்! அடுத்தது தான் collective understanding அதனால் தான் என் பதிவில் தத்துவ விசாரிப்புகள் ரொம்பத் தூக்கலா இருக்காது!
----------------------------------
அன்பை விடப் பெரும் தத்துவம் சமயத்தில் இல்லை என்று நம்புவதும் ஒரு காரணமாக இருக்கலாம்! அதனால் தான் அன்பு/ இரக்கம்/அடியார்கள் என்று வாழ்வியலா இருக்கும்!

ஆனால் நீங்கள் சொல்வது போல் சமயத்துக்குத் தத்துவக் கரையும் தேவை, நடைமுறைக் கரையும் தேவை! நீங்கள் சொன்னதை இனி வரும் பதிவுகளில் கவனத்துல வச்சிக்கறேன் கோவி அண்ணா!

said...

//OSAI Chella said...
Sambavaami Yuge Yuge! muzhuvathum padithen!

let me keep off my differences... objectively mikavum nandraaka irunthathu katturai. will read one more time in leisure and will give my opinion.

With love
Osai Chella
//

நன்றி !

said...

ஓசை இசையா வரும்போது கை நீட்டுங்க!

ஆன்மிகத்தைப் பொறுத்த வரை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

இதுக்கு மேல வேறெதும் சொல்லத் தோணலை.

said...

//முகவை மைந்தன் said...

ஆன்மிகத்தைப் பொறுத்த வரை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

இதுக்கு மேல வேறெதும் சொல்லத் தோணலை.

8:37 PM
//

முகவை மைந்தன்,

அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி !

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உருவ வழிபாட்டைத் தாண்டி மேல் செல்ல வேண்டிய தேவையே இல்லை என்பதை தனிப்பதிவா சொல்லுறேன்! (இப்போது அல்ல!)
உருவத்திலேயே விசாரிப்பு வந்துடுச்சின்னா ஆகாச விசாரிப்புக்கு அவசியமே இருக்காது! அதை ஆலயங்கள் செய்தா நல்லா இருக்கும்! அப்படி இல்லாத பட்சத்தில் பதிவுகளில் நம்மால் இயன்றதைச் செஞ்சி வைக்கலாம்!

ரத்னேஷ் ஐயா முன்பொரு முறை என் பதிவில் சொன்னாருன்னு நினைக்கிறேன்! திருச்செந்தூர் ஆலய தரிசனமும், முருகன் தரிசனமும் நேர்ல விட பதிவில் நல்லாத் தெரிஞ்சிச்சி-ன்னு! மிகவும் நெகிழ்ச்சியா இருந்துச்சி!
---------------------------
உயர் விளிம்பு நிலை மக்களோ, பழுத்த ஆன்மீகவாதிகளோ என் பதிவுகளைப் படிப்பதில்லை! அதனால் என் பதிவில் வந்து மோட்சம் எப்படி அடையலாம் என்று அவர்கள் தேட மாட்டார்கள்! :-))

அதனால் தான் தத்துவங்களைக் குறைத்துக் கொண்டு, நடைமுறை மானிடவியல் கலந்த ஆன்மீகம் மட்டும் தற்சமயம் எழுதுகிறேன்! அதுவும் இளைஞர்கள் மத்தியில் சில நல்ல பல கருவூலங்களை, அவர்கள் விரும்புகிற மாதிரிக் கொடுக்க ஆசை!
கோடு காட்டிட்டா, ரோடு அவங்களே போடுவதில் நம்ம பசங்க படா கில்லாடிங்க! அதனால் தான் அங்கு மட்டும் தற்போது கவனம் செலுத்தறேன்!

தத்துவங்கள், அத்வைதம், விசிட்டாத்வைதம், மெய்யுணர்வு, திருமூலர் கோட்பாடுகள் எல்லாம் வாசிப்பு அனுபவம் தான் அதிகம்!

என் கிட்ட இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், வெறுமனே வாசித்தால் மட்டும் அதை எழுதி விட மாட்டேன்! அதை முதலில் நான் உணர்கிறேனா என்று பார்த்து விட்டு, எனக்கு எளிமையாப் பிடிபட்டாத் தான் அடுத்த கட்டத்துக்குப் போய் நண்பர்களுடன் பேசுவேன்! விவாதிப்பேன்! அடுத்தது தான் collective understanding அதனால் தான் என் பதிவில் தத்துவ விசாரிப்புகள் ரொம்பத் தூக்கலா இருக்காது!
----------------------------------
அன்பை விடப் பெரும் தத்துவம் சமயத்தில் இல்லை என்று நம்புவதும் ஒரு காரணமாக இருக்கலாம்! அதனால் தான் அன்பு/ இரக்கம்/அடியார்கள் என்று வாழ்வியலா இருக்கும்!

ஆனால் நீங்கள் சொல்வது போல் சமயத்துக்குத் தத்துவக் கரையும் தேவை, நடைமுறைக் கரையும் தேவை! நீங்கள் சொன்னதை இனி வரும் பதிவுகளில் கவனத்துல வச்சிக்கறேன் கோவி அண்ணா!
//

ரவி,
நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட விளக்கத்திற்கு நன்றி.

மதம் தொடர்பாக சிலவற்றை சொல்லி இருக்கிறேன். அதுபற்றி கருத்தெதுவும் தெரிவிக்கவில்லையே.

said...

//ஜோதிபாரதி said...
நல்ல பதிவு.

தங்கள் வருகைக்கு நன்றி,

தங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன்.

தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

ஆத்திகரோ, நாத்திகரோ அல்லது இரண்டிலும் ஈடுபாடு இல்லாதவர்களோ யாராயிருந்தாலும்,

"துடிக்கும் இதயம் தமிழ் என்று துடிக்கட்டும்
நொடிக்கும் விதையும் நற்றமிழ் கொடிக்கட்டும்
பிரிவு ஒன்று வந்தாலும் தமிழை நம் பொதுவில் வைப்போம்!

"யாப்பின்றி போனாலும் பரவாயில்லை
தமிழுக்கு காப்பில்லாமல் போய்விடக்கூடாது"

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதிபாரதி ஐயா,

தங்கள் ஆதரவுக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! நெகிழ்சியாகவும் இருக்கிறது.

said...

மீண்டு வந்து நீண்ட பதிவு தந்ததற்கு பாராட்டுக்கள்.

பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

said...

//ஜமாலன் said...
மீண்டு வந்து நீண்ட பதிவு தந்ததற்கு பாராட்டுக்கள்.

பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
//

நண்பரே,

மிக்க நன்றி.