Monday, October 15, 2007
அழகு குறிப்புகள் [1]... !
கண்ணாடிக் கூண்டுக்குள் கருநாகம்
படமெடுத்தால் பார்பதற்கு
பதைக்க வைக்கும் அழகோ அழகு !
சீறிவரும் காளையதன் திமிளை
சிலுப்பி ஓடிவரும் வீரம்
சேர்ந்து பார்தால் அழகு !
அடை மழைவிழுந்தும்
அசைந்து கொடுக்காமல் அசைபோடும்
எருமையின் பொறுமை அழகு !
சங்கிலியில் பிணைக்கப்பட்ட
குட்டி நாயின் நம்மைப் பார்த்த
குறைப்பொலியும் குறையில்லா அழகு !
சலங்கையின்றி சதிராட
சண்டித்தனம் செய்யாமல்
குதித்தாடும் குதிரை அழுகும் அழகு !
கூண்டுக்குள் அடைபட்ட
ஆத்திரத்தில் பச்சையாக அலகைபிளந்து
பேசும் பசும் பைங்கிளியின் குரலழகு !
சிறிய வாலை சிலிர்புடன் ஆட்டியபடி
தாய் ஆட்டின் மடியை
முட்டிக் குடிக்கும் குட்டியாடும் அழகு !
ஓடும் காலளவு நீரில்
ஆடாது அசையாது நீண்ட காலில்
ஒன்றை தூக்கி தவமிருக்கு கொக்குமழகு !
தெளிந்த நீரோடையில் குட்டி
மீன்களுடன் இறைதேடி வலம்வரும்
குரவை மீன்களின் அசைவுகள் அழகு !
அழகு குறிப்புகள் அவ்வப்போது தொடரும் ...
அன்புடன்,
கோவி.கண்ணன்
குறிசொற்கள்
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 : கருத்துக்கள்:
இந்த பாம்புன்னா உங்களுக்கு ரெம்பபப பிடிக்குமோ..இதுக்கு முன்ன கூட ஒரு தடவை பாம்பின் தக தக படம் போட்டு பயமுறுத்தீனீங்க..இபப் என்னாடான்னா அழகு குறிப்பில சேர்த்திருக்கீங்க..
காளையும் ஆட்டுக்குட்டியும் மீனும் தான் எனக்கு அழகா தெரியுது...:-)
இதை படிச்சோன்னதான் இத்தனை அழகுகளை இதுவரை ரசிக்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றுகிறது..
நம்மை சுற்றி இருக்கும் சின்ன சின்ன அழகை எல்லாம் கவிதையாய் வடித்திருப்பது மிகவும் அழகாய் இருக்கிறது..
Post a Comment