Sunday, September 09, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

தன்நலமே பொதுநலம் ?



தன்நலமே பொதுநலம் ?

கண்ணை மூடிக்கொண்ட வானத்தின்
நடுப்பொழுதில் விழித்துக் கொண்டது
சில நினைவுகள், எண்ணங்கள்.

மனிதர் தன்நலமிக்கவர்களா ?
நான் தன்நலன் மிக்கவனா ?
சில செயல்களைப் பார்த்தால்
அப்படித்தான் தெரிகிறதே ! என்று
உள்மனம் சொல்லியது.

இன்னும் யோசித்தேன்.
தவறுகளை மறைக்க நினைப்பது
தன்நலமா ?

இல்லையே, அவை
தமக்குத் தாமே, உள்ளத்துக்கு
செய்து கொள்ளும்
கேடுகள் என்றது ஆள்மனம் !

எப்படி ? எப்படி ? கேட்டேன் நான்.
உண்மைகளை மறைக்கலாம்,
தற்காக்கலாம், ஆனால்
தூயமனம் என்ற உள்ளுணர்வு
பழுதாகி இருப்பதை சிறிதேனும்
உணர்கிறோம் அல்லவா ?

உடல்சார்ந்த, இன்பம் சார்ந்த,
தம்மீது பழிச்சொல் விழாது தற்காப்பது
என்ற நலம் மட்டும்தான் தன்நலமா ?
மறுபடியும் எதிர்கேள்விகள் !

இல்லை அவை உண்மையாக இருக்க முடியாது
அவை தற்காலிக வடிகால்,
அதில் காயப்பாடுவது உள்மனமே
இரணம் இருந்தாலும்,
சொறியும் ஒரு சுகம் போல்
வெளிப்பகட்டில் ஆசை கொள்வது
இத்தகைய தன்நலம்.

உண்மையான தன்'நலம்' என்பது
உள்ளத் தூய்மையே ! இந்த
தன்நலத் தேடலில் இருக்கிறது...
அதைக் காப்பதன் பொருட்டில்
வாய்மை வழிநடப்பதில் இருக்கிறது
கூடவே பொதுநலமும் !

உள்ளத் தூய்மையான
தன்நலமே இறக்கும் தருவாயிலும்,
தாம் எவருக்கும் தீங்கு செய்யவில்லை,
நிம்மதியுடன் கண் மூடலாம்,
என்ற உணர்வை தரவல்லது.

இறுதியாக புரிந்த போது
தூங்கிப் போனேன் !

4 : கருத்துக்கள்:

said...

நல்ல மெசேஜ் சொல்லும் கவிதை. நன்றி!!!

said...

இதையும் படியுங்கள்..

http://naayakan.blogspot.com/2007/08/blog-post.html

said...

//உண்மையான தன்'நலம்' என்பது
உள்ளத் தூய்மையே ! இந்த
தன்நலத் தேடலில் இருக்கிறது// சுத்தம் நம் வீட்டுக்குள் இருந்து துவங்கினால் தானெ நல்லது. அதுதான் சரியும் கூட‌

said...

//உள்ளத் தூய்மையான
தன்நலமே இறக்கும் தருவாயிலும்//

உள்ளம் தூய்மை என்றால் அங்கே தன்நலம் எவ்வாறு வந்தது?

ஒருவரின் உள்ளம் தூய்மையென்றால் அது தனக்கு மட்டுமல்லாது பிறருக்கும் நண்மை பயக்கும் பொது நலமாகத் தானே இருக்கும்..?